(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Showing posts with label HAJ. Show all posts
Showing posts with label HAJ. Show all posts

Thursday, June 30, 2011

ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும்- தேவ்பந்த்

தேவ்பந்த் : வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பாக சவூதி அரசுக்கு தாருல் உலூம் சமர்பித்துள்ள மனுவில் “ இஸ்லாத்தை மறுக்கும் அஹமதியாக்கள் முஸ்லீம்களை போல் ஹஜ்ஜுக்கு வருவதால் அவர்கள் உண்மையான முஸ்லீம்களை குழப்பி வழி கெடுக்கின்றனர் என்றும் அவர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிர்ஸா குலாம் அஹ்மது என்பவரை பின்பற்றுபவரே அஹ்மதியாக்கள் அல்லது காதியானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். முஸ்லீம்களின் மத நம்பிக்கை படி முஹம்மதை இறைவனின் இறுதி தூதராகவும் இருதி காலத்தில் மஹதி வருவார் என்றும் நம்புகின்றனர். ஆனால் காதியானிகள் மிர்ஸா குலாமை மஹதி என்றும் முஹம்மதுக்கு பின் மிர்ஸா குலாமையும் நபியாக நம்புவதால் பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அம்ரிஸ்டர் அருகே உள்ள காதியான் எனும் ஊரில் தலைமையகத்தை வைத்துள்ள அஹமதியாக்களின் ஆன்மிக குரு கிலாபத்துல் மஸிஹ் மிர்ஸா மஸ்ரார் அஹ்மது லண்டனில் வசிக்கிறார். 1979-ல் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் அஹமதியாக்கள் முஸ்லீம்கள் அல்லர் என்று எடுத்த தீர்மானத்தை நினைவூட்டி ஹஜ் உம்ரா வருபவர்கள் அதற்கான விண்ணப்பத்தில் முஹம்மதை கடைசி இறை தூதராக ஏற்று கொள்கிறேன் என்று கையொப்பமிட வேண்டும் என்றும் சவூதி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

நன்றி : இந்நேரம்

Wednesday, March 16, 2011

2011 ஹஜ் பயண விண்ணப்பங்கள் இன்று முதல் கிடைக்கும்!

"2011 ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வழங்கப்படும்" என்று தமிழ் நாடு அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
"தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ் 2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை(நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர்,  மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம். அல்லது விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து அச்சு எடுத்துக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.


ஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில்,
* ஒரு குழு/உறையில் விண்ணப்பங்கள், ரத்த-உறவு முறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும்.  இவ்வுறையி/குழுவில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது.
* விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில ஹஜ் குழுவிடம் விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மாநில ஹஜ் குழுவில் பலமுறை விண்ணப்பித்தாலோ, அவ்வாறான விண்ணப்பங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதுடன் எந்தவொரு மாநில ஹஜ் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
* பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், கடவுச் சீட்டின் நகலை இணைத்து விண்ணப்பப் படிவங்களை 30 ஏப்ரல் 2011-ற்குள் மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
தங்கள் வசம் பாஸ்போர்ட் இல்லாதவர்கள், முதலில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திடமிருந்து பெற்ற ரசீதின் நகலை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்: 31634038682-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் பன்னாட்டு பாஸ்போர்ட் இருப்பின் அதன் நகலை அல்லது பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தால் மண்டல  பாஸ்போர்ட் அலுவலக ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-4-2011 ஆகும். ஹஜ் 2008, 2009 மற்றும் 2010-ல், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக தெரிவு செய்யும் திட்டத்தைத் தொடர்வது என மத்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது.
ஹஜ் 2011-ல் இச்சலுகையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சக பயணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக விண்ணப்பித்த உறை எண் விபரங்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். (இவ்வாறு வைக்கப்படும் விண்ணப்ப உறைகளில் புதிய விண்ணப்பதாரர்கள் எவரையும் சேர்க்கக்கூடாது). இவ்விண்ணப்பதாரர்கள் குலுக்கல் இன்றி தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்ற தகுதியைப் பெறுவார்கள். இவ்வாறு சிறப்பு வகையில் நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும் மற்றும் ஹஜ் 2011-ற்கு விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பங்களை பெறும் கடைசி நாள் வரையில், சிறப்பு வகை விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருந்தால், மீதமுள்ள இருக்கைகள் பொதுவகையில் அளிக்கப்பட்டு, அவ்விருக்கைகளுக்கு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்தி தேர்வு செய்யும்.
மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக சிறப்பு வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் மாநில ஹஜ் குழு, சிறப்பு வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குலுக்கலை நடத்தும்; பொது வகையில் புதியதாக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  மத்திய ஹஜ் குழுவால் நிர்ணயிக்கப்படும் ஒதுக்கீட்டின் அடிப்படையில், கணினி மூலமாக குலுக்கலை நடத்தி தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகளுக்குத் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவிக்கும். குலுக்கல் மூலமாக பயணிகள் தேர்வு செய்யப்படுவது முற்றிலும் தற்காலிகமானது.
குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட ஹஜ் பயணிகள், பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் புகைப்படத்தை இணைத்து, அந்த பாஸ்போர்ட்டுடன் ரூ.31,000/- செலுத்தியதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து 15.6.2011-க்குள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்"
என்று தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 9, 2010

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.



குர்பானி கொடுக்கும் நாட்கள்

குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.

அறிவிவப்ப்வர் பரா (ரலி)

நுல் புகாரி (955,5556)

இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)

பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அறுக்கும் முறை

குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.

கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)

நுல் முஸ்லிம் (3637)

முஸ்லிம் நுலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் அதா பின் யஸார்,

நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

அறிவிப்பவர் அலீ (ரலி)

நுல் புகாரி (1718)

ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி

மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)

நுல் முஸ்லிம் (2323)

எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்

விநியோகம் செய்தல்

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)

இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானிப் பிராணிகள்

ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் பரா (ரலி)

நுல் நஸயீ (4293)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

குர்பானிப் பிராணியின் வயது

ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி)

நுல் முஸ்லிம் (3631)

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)

நுல் நஸயீ (4285)

நாமே அறுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

(www. tntj.net)

Monday, November 8, 2010

ஹஜ்ஜின் பெயரால் வியாபாரங்களும், கொள்ளைகளும் எச்சரிக்கை !!

புகைப்படத்தை கிளிக் செய்து பார்க்கவும்.
























ஜசக்கல்லாஹ் : ஆன்லைனபிஜே.காம்

Monday, November 30, 2009

மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்

மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ?

மதீனா முனவ்வராவுக்குப் பயணம் செல்லும் பெரும்பாலோர் அதன் நோக்கத்தைப் புரியாமலே சென்று வருகின்றனர். சிலர் அதை ஹஜ்ஜூ வணக்கங்களில் ஒன்றாகவே கருதுகின்றனர்.

மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ? அல்லது அதன் ஸூன்னத்தான வணக்கங்களைச் சார்ந்ததா? ஹஜ்ஜூக்காக வந்து மதீனாவுக்குச் செல்ல வில்லையெனில் ஹஜ்ஜூ நிறைவேறாதா? போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு இன்றும் எழுகின்றன. கேட்கவும் செய்கின்றனர்.


மதீனா ஸியாரத் என்பது ஹஜ்ஜூ நிறைவேறுவதற்குரிய கடமைகளில் ஒன்றல்ல. அதன் ஸூன்னத்தான ஒரு வணக்கமுமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.


பின் எதற்காக அங்கே செல்ல வேண்டும் ?

‘தொழுவதற்காக’ என்ற எண்ணத்தில் (நிய்யத்தில்) மட்டுமே மஸ்ஜிதுன் நபவீக்குப் பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்.நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-

இந்த என் பள்ளியில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத்தவிர உள்ள ஏனைய பள்ளிவாசல்களில் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு மேலானது. (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.)

மேலும் தெரிவித்துள்ளார்கள்:

மூன்று பள்ளிவாசல்களுக்கே தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக்கூடாது. ஒன்று (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம். மற்றொன்று (மதீனாவிலுள்ள) எனது பள்ளிவாசல். புpறிதொன்று (ஜெரூஸலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் பள்ளிவாசல்.

இந்த இரு நபிமொழிகளின் மூலம் 'மூன்றே முன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அதுவும் நன்மையை நாடி, தொழுகை என்னும் வணக்கத்தை நிறைவேற்றுதற்காகவே செல்ல வேண்டும். ஸியாரத் செய்யும் நோக்கத்துடன் அல்ல’ என்பது தெளிவாகிறது.

இதிலிருந்து ’ஹஜ்ஜூக்கு முன்னரோ பின்னரோ மதீனா ஸியாரத்துக்குச் செல்வது ஹஜ்ஜூக் கடமையைச் சார்ந்ததல்ல’ என்பதையும் ‘ஹஜ்ஜூக்கும் இதற்கும் தொடர்பில்லை’ என்பதையும் நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.

மஸ்ஜிதுந்நபவிக்குச் சென்றால் நமது கடமைகள் என்னென்ன?


1. மஸ்ஜித் நபவியில் தொழுவது

ஏனைய பள்ளி வாசல்களில் கடைப் பிடிப்பதையே இங்கும் கடைப் பிடிக்கவேண்டும்.
1. வலது காலை முன்வைத்து உள்ளே நுழைய வேண்டும்.
2. உள்ளே செல்லும்போது ‘ பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹி, அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக்க’ என்ற துஆவை ஓதவேண்டும்.
3. பின்னர் இரண்டு ரகஅத்துகள் தஹிய்யத்துல் மஸ்ஜிது தொழவேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
உங்களில் யாரேனும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) , ஆதாரம் : புகாரி-1163)

உள்ளே சென்றதும் ஃபர்ளான தொழுகைக்கு ஜமாஅத் ஆரம்பிக்கப் பட்டு விட்டால் நேராகச் சென்று அதில் சேர்ந்து கொள்ளவேண்டும்.

அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?


2. ஸியாரத் செய்வது.

தொழுகை முடிந்ததும் நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கும் அவர்களின் அருகே அடக்கமாயிருக்கும் அவர்களின் இரு தோழர்களான அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோரின்ன் இரு கப்ருகளுக்கும் சென்று ஸலாம் சொல்வது முஸ்தஹப்- விரும்பத் தக்கதாகும்.

எவ்வாறு ஸலாம் சொல்ல வேண்டும்?

"அஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹி, வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ!" என்று நபி (ஸல்) அவர்களுக்கும்,

அடுத்து, அங்கு அடங்கப் பட்டிருக்கும் அவர்களின் தோழர் அபூபக்ரு அவருகளுக்கு, "அஸ்ஸலாமு அலைக்க யா அபாபக்கருஸ் ஸித்தீக் கலீஃபத்த ரஸூலில்லாஹி,
வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ !" என்றும்,

அடுத்து "அஸ்ஸலாமு அலைக்க யா உமர் ஃபாரூக் கலீஃபத்த ரஸூலில்லாஹி, வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ!" என்று உமர் (ரலி) அவர்களுக்கும் ஸலாம் கூறிவிட்டு அங்கிருந்து திரும்பிவிட வேண்டும்.

பெருமானார் (ஸல்)அவர்களின் ஒவ்வொரு செயலையும் வழிமுறைகளையும் அணுவளவும் பிசகாது பின்பற்றிவந்த அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்துள்ளார்கள் என்பதை ஆதாரபூர்வமான ஹதீஸ் நூல்களிலே காணமுடிகிறது.

இதுவே ஸியாரத் செய்யும் முறையாகும்.

அங்கே நீண்ட நேரம் நிற்பதோ, அவர்களிடம் துஆ கேட்பதோ, குரலை உயர்த்திக் கோரசாக துஆக்களை ஓதிக்கொண்டிருப்பதோ கூடாது.

கிப்லாவை முன்னோக்கி நமது தேவைகளை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும்.

அங்கே ரவ்லாவுக்கருகே நின்று தொழுவதோ, தொட்டு முத்துவதோ கூடாது.


ஸியாரத்தின் நோக்கம் - நினைவிற் கொள்க!

1. மதீனா ஸியாரத் ஹஜ்ஜூக் கடமைகளில் ஒன்றல்ல.
2. பெருமானார் (ஸல்) அவர்களின கப்ரை ஸியாரத் செய்யும் நோக்கத்தை முன்வைத்து அங்குச் செல்வது கூடாது.
3. தொழுவதற்காகவே செல்லவேண்டும்.

மஸ்ஜிதுத் தக்வா-குபா பள்ளி வாசலில் தொழுவது

அடுத்தபடியாக, மதீனாவுக்கு வந்திருப்போர் மஸ்ஜிது குபாவுக்குச் சென்று தொழுவது நபி வழியாகும். இது, "தக்வா அடிப்படையில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல்" என்று இதற்கு ஓர் அங்கீகாரத்தையும் வழங்கி இறைவன் சிறப்பித்துள்ளான். (குர்ஆன்:9:108).

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
"யார் தமது வீட்டில் உளுச் செய்துவிட்டு, பின்னர் குபா பள்ளிவாசலுக்கு வந்து இரு ரகஅத்துகள் (இன்னொரு அறிவிப்பில் ஒரு தொழுகையை) தொழுகிறாரோ அவருக்கு ஒரு உம்ரா செய்த நன்மைகிடைக்கும்"(ஆதாரம்:அஹ்மது,நஸயீ,அப்னுமாஜா,ஹாக்கிம்)

நபி (ஸல்) அவர்கள் சனிக்கிழமை தோறும் வாகனத்திலோ, கால்நடையாகவோ இங்கு வந்து செல்வார்கள்.

ஜன்னத்துல் பகீஃ, உஹது ஷுஹதாக்களை ஸியாரத் செய்வது.

நபி (ஸல்) அவர்கள் உஹதுக்குச் சென்று ஸியாரத் செய்து அவர்களுக்காக துஆ செய்து வருவார்கள்.

நபி (ஸல்) அவர்கள், மக்கள் கப்ருகளுக்குச் செல்வதன் நோக்கத்தைப் புரியாமலிருந்ததால் ஆரம்பத்தில் தடை செய்திருந்தார்கள். பின்னர் அதற்கு அனுமதி வழங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
"கப்ருகளுக்குச் சென்று ஸியாரத் செய்வதை தடை செய்திருந்தேன். இப்போது (அதன் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொண்டதால்) ஸியாரத் செய்து வாருங்கள்" ஆதாரம்: முஸ்லிம்.

கப்ருகளுக்குச் சென்றால் எவ்வாறு ஸியாரத் செய்வது.? அங்கு என்ன செய்யவேண்டும் ? என்பதை நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு மிகத் தெளிவாகவே கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

ஃபாத்திஹா ஓதச் சொல்லவில்லை. யாஸீன் ஓதச் சொல்லவில்லை. இறந்தவர்களிடம் துஆ கேட்கச் சொல்லவில்லை. பின் என்ன சொன்னார்கள் ?


பின் வரும் துஆவை மட்டும் ஓதச் சொன்னார்கள்:-

‘அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியார் மினல் முஃமினீன வல் முஸ்லிமீன்! வ இன்னா இன்ஷா அல்லாஹூ பிக்கும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலக்குமுல் ஆஃபியா’ - ஈமான் கொண்டு முஸ்லிமாக வாழ்ந்து அடக்கமாகியிருக்கும் நல்லடியார்களே! நிச்சயமாக விரைவில் நாங்களும் (மரணமடைந்து) உங்களோடு சேரவிருக்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் நன்மையை வழங்க அல்லாஹ்வை வேண்டுகிறோம். ஆதாரம்: முஸ்லிம்.


இதைத்தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. பாத்திஹா ஓதுவதோ, யாஸீன் ஓதுவதோ, நேர்ச்சை நேருவதோ, இறந்தவர்களிடம் துஆ கேட்பதோ கூடாது.
இதையடுத்து உஹது சுஹதாக்களின் கப்ருகளுக்குச் சென்று இதைப்போன்றே ஸியாரத் செய்யவேண்டும்.


செய்யக் கூடாதவை:-


1. ஆண்களுக்கு மட்டுமே ஸியாரத் அனுமதியே தவிர பெண்களுக்கல்ல.
2. நமது தேவைகளுக்காக நபிகள் நாயகத்திடம் பிரார்த்திப்பது கூடாது.
3. கப்ரு திசையை நோக்கிப் பிரார்த்திப்பதும் கையை உயர்த்துவதும் கூடாது.
4. அங்கே நீண்ட நேரம் நிற்பதும் கூடாது.
5. அங்கு நுழையும்போதோ, உள்ளே சென்ற பிறகோ குறிப்பிட்ட துஆக்கள், விசேச துஆக்கள் ஓதவேண்டுமென்பது எதுவும் கிடையாது.
6. கூட்டாக (கோரஸாக) துஆ ஓதுவதும் கூடாது.
7. ஒவ்வொரு முறையும் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் கப்று ஸியாரத் செய்யவேண்டும் என்பதும் கிடையாது.
8. ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கப்று ஸியாரத் என்பதும் இல்லை.
9. பெருமானாரின் கப்ருக்கருகே (மட்டுமல்ல; எந்தக் கப்ருக்கருகிலும்) தொழுவது கூடாது.
10. மிஹ்ராபில் தொழவேண்டும் என்பதும் அங்கே முண்டியடித்துக் கொண்டு தொழுவதும் கூடாது.
11. ரவ்லா தூண்களின் எல்லைக்குள்தான் தொழுது தீரவேண்டும் என்பதும் கிடையாது.


அங்கே எங்கு வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். இந்த இரு இடங்களிலும் தொழுவதற்காக மக்கள் முண்டியடித்துக் கொள்வதையும் தாமும் சரிவரத் தொழாது பிறரையும் தொழவிடாது சிரமப்படுத்தும் செயல்களையும் மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பிறருக்குத் துன்பம் விளைவிப்பது ஹராமாகும். ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு ஹராமைச் செய்ய வேண்டுமா? நாம் சிந்திக்கவேண்டும்.

பெருமானார் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டதும் கை நகம் தொட்டு முத்தி நுகர்ந்து கண்களில் ஒற்றிக் கொள்வதும் மார்க்கத்தில் அனுமதி கிடையாது.

வேறு ஸியாரத் செய்யவேண்டிய முக்கியமான இடங்கள் ஏதேனும் உண்டா? என்றால் எதுவும் இல்லை.

நன்றி : அல் பாக்கவீ டாட் காம்.

Saturday, November 28, 2009

புனித காவ்பதுல்லாஹ் உள்ளே !!!!? எடுக்கப்பட்ட வீடியோ

புனித காவ்பதுல்லாஹ் உள்ளே !!!!?

புனித காவ்பதுல்லாஹ் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ >






3D INSIDE KABAA




இன்ஷால்லாஹ் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரில் காணும் பாக்கியத்தை தருவானாக !
NAGOREFLASH

Friday, November 27, 2009

அரஃபா நோன்பு - ஐயமும் தெளிவும்

ரமலான் மாதக் கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான நோன்பு அரஃபாதின நோன்பாகும். ரமலானைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரஃபா தினமாகும்.



அதாவது ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கியக் கடமைச் செயற்பாடுகளுள் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும். இந்நாளில் ஹஜ்ஜுக்குச் செல்லாத மற்ற உலக முஸ்லிம்கள் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்.


"நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் (பிறை)ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார் (ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்"

அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.

அரஃபா நோன்பை அவ்வருடம் ஹஜ்ஜிற்கு செல்லாதவர்கள் மட்டும்தான் நோற்க வேண்டும். ஏனெனில் துல்ஹாஜ் பிறை ஒன்பது அரபா நாள். அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழுமியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயி.





அரஃபா மைதானம் என்பது மறுமையில் இறைவன் முன் மனிதர்கள் விசாரணைக்காக எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் மஹ்ஷர் மைதானத்திற்கு இவ்வுலகில் இறைவன் காண்பிக்கும் ஓர் உதாரணமாகும். இதனை அரஃபா மைதானத்தில் ஒரு முறையாவது ஹஜ்ஜிற்காகச் சென்று ஒன்று கூடியவர்கள் கண்ணாரக் கண்டு உணர்ந்திருப்பார்கள். இலட்சக்கணக்கான மக்கள் ஓர் இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதும் தன்னைப் படைத்தவனிடம் இருகரமேந்தி பாவமன்னிப்புத் தேடுவதும் பல மணிநேரம் இவ்வுலகச் சிந்தையின்றி இறை தியானத்தில் இருப்பதும் இத்தினத்தில் அரஃபா மைதானத்தில் நிகழ்கிறது.


அதே தினம் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களும் இறை தியானத்தில் தங்களையும் ஈடுபடுத்த, நோன்பு வைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ஏவியிருப்பது பல்வேறு அர்த்தங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே இத்தினத்தில் ஹஜ்ஜிற்குச் செல்லாத மற்ற முஸ்லிம்கள் அவசியம் நோன்பு வைத்து, தங்களையும் ஹஜ்ஜாஜிகளோடு இறைதியானத்தில் ஒன்றிணைக்க முயல வேண்டும்.


அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதற்குக் கூடுதலாக முஸ்லிம்களில் சிலர் துல்ஹஜ்ஜின் ஆரம்ப பத்து நாட்கள் நோன்பு நோற்கிறார்கள். அரஃபா தினம் அடங்கிய துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளதுதான் இதற்குக் காரணமாகும்.


"அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அதற்கு நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா?" என்று வினவ, "ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிட; என்றாலும் ஒரு வீரன் தன்னுடைய உயிர், உடமைகளோடு சென்று அதில் ஒன்றைக் கொண்டும் அவன் திரும்பவில்லை எனில் அது மிகவும் சிறந்த செயலே" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி.


இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பத்து நாட்களின் சிறப்பைக் கருதி முஸ்லிம்களில் சிலர் இப்பத்து நாட்களிலும் நோன்பு நோற்கின்றனர். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் இந்நாட்களில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதைக் கண்டதில்லை என்று மறுத்துரைக்கின்றார்கள்.

"நான் நபி (ஸல்) அவர்களை (இந்தப்)பத்து நாட்களில் நோன்பு நோற்றதாகப் பார்த்ததே இல்லை" அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.


மற்றவரைவிட எல்லாவிதத்திலும் முன்னிலையில் இறை தியானங்களில் ஈடுபடுவதை அதிகம் விரும்பி, தன்னை எல்லாவிதமான இறைதியானங்களிலும் ஈடுபடுத்தி முன்னுதாரணமாக விளங்கிய நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று இருந்தால் அதைப்பற்றியும் அறிவிப்புகள் வந்திருக்க வேண்டும். ஹதீஸ்களில் எந்த ஒரு நபித்தோழரும் அவ்வாறு அறிவித்தாக நாமறிந்தவரை செய்திகளைக் காண முடியவில்லை. எனவே இந்த அரஃபா நோன்புக்கு முந்திய தினங்களில் வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். மற்ற நாட்களைவிட இந்த நாட்களில் அல்லாஹ்வைத் துதிப்பதில் அதிகக் கவனம் செலுத்த முயல வேண்டும்.

நோன்பு நோற்பது இறைவனிடம் மிகப்பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் செயலாக இருந்தாலும் ரமலான்மாதக் கடமையான நோன்பைத் தவிர துல்ஹஜ் மாதத்தில் தொடர்ச்சியாக நோன்பு வைக்க முஸ்லிம்களின் வழிகாட்டியான நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத, செய்து காண்பிக்காத எந்தச் செயலையும் மார்க்கத்தில் நல்லமலாக அங்கீகரிக்க இயலாது. ஆனால் அதேநேரம் குர்ஆன் ஓதுதல், திக்ருகள், தேவையுடையவருக்கு உதவுதல், இரவுத் தொழுகை, அல்லாஹ்வைப் புகழ்தல், இஸ்திக்ஃபார் (பாவமன்னிப்பு தேடுதல்), ஸதகாத் (தர்மங்கள் செய்வது) போன்ற ஏனைய இறை அருளை பெற்றுத்தரும் காரியங்களில் ஈடுபடலாம்.

ஐயமும் தெளிவும்

தூதர் அவர்கள் பிறை பார்த்துதான் மாதத்தை அறிந்தார்கள். துல்ஹாஜ் ஒன்பது அரபா நாள் என்று அறிவித்து , அந்த ஒன்பது பிரைப்படிதான் அன்று நோன்பு நோற்றார்கள். அதே நேரம் அரபா அன்று எல்லா தேசங்களிலும் உள்ளவர்கள் ஒரே நாளில் நோன்பு இருக்க வாய்ப்பே இல்லை.. தூதர்,அவர்களுக்கு நிச்சயமா தெரிந்திருக்கும் அரபா ஒரே நாளில் எல்லோருக்கும் வராது என்று….

பல நூறு மைல்கு அப்பால் இருந்தவர்கள், அரபா நாளுக்கு அடுத்த நாளும் , அவர்களுக்கு அது பிறை ஒன்பது ஆக இருந்து, அன்றே நோன்பு பிடித்து இருப்பார்கள்…

அரபாவில் கூடும் நாளில் தான் நோன்பு நோற்க வேண்டும் என்று எண்ணி இருந்தால் அதை அறிந்து செயல் பட முயற்சியாவது செய்திருப்பார்கள் ...மதீனாவில் இருந்த அவர்களுக்கு இது சாத்தியம் தான்.இஸ்லாத்தில் எந்த ஒருவணக்கமும் எளிதாகவும் , எல்லோராலும் பின்பற்ற கூடியதாக இருக்கும்.

ஆகவே உலகம் முழுவதும் ஒரே நாளில் அரபா தினத்தை அடையவது சாத்தியமற்றது . நேர வேற்றுமையால் நாட்களும் வேறுபடுகின்றது .. எல்லா வற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் தூதர் உலகம் முழுவது ஒரே நாள் விதியை பின்பற்றவில்லை.

ஒன்பது ஆண்டு காலம் மதினாவில் இருந்த நபி அவர்கள் - எந்த ஒரு அரபா தினத்தையும் ,மக்காவில் அல்லது வேறு எங்கும் தென் பட்ட பிறையின் அடிப்படையில் செயல் படுத்த முற்படவில்லை .மதினாவில் பார்த்த பிறையின் அடிப்படையில் தான் செயல் படுத்தினார்கள் . மதினாவில் பிறை பார்த்து மட்டுமே மாதத்தை தீர்மானித்தார்கள்
பிறை பாக்கும் அடிப்படையில் , பிறை ஒன்பதை , அரபா நோன்புக்காக நிர்ணயித்து சொல்லி உள்ளார்கள் என்று நன்கு சிந்திக்கும் பொது விளங்குகிறது…

என்ன தான் நாம் பிறை ஆரம்பிக்கும் அந்த மைக்ரோ வினாடியை கண்டுபிடித்து அறிவித்தாலும் (எல்லோரும் ஒரே தினத்தில் , நோன்பு , பெருநாள் ,அரபா தினம் எடுக்க வேண்டும் என்பதற்காக ) இவ்வுலக நாடுகள் எந்த ஒருநாளையும் ஒரு சேர அனுபவிக்க முடியாது அதன் நேர -நாட்கள் வித்தியாசம் நமக்கு அறிவிக்க வில்லையா இதன் சூட்சமத்தை .( மக்ரிபில் நாட்கள் ஆரம்பம் இஸ்லாமிய முறைப்படி ) அனுமானத்தை விடுத்து எதார்த்தத்தை புரிந்து நடப்பது தான் இஸ்லாம் நமக்கு காட்டி தரும் வழி.
இதையெல்லாம் தாண்டி நம் செய்வது தவறு என்று வைத்துகொள்வோம் (இன்ஷால்லாஹ் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை ) அல்லாஹ் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான் இன்ஷால்லாஹ் இதுவே நபி பின்பற்றிய முறை என்பதனால் .
குழப்பங்கள் அதிகரிக்கும் போது - அல்லாவின் பக்கமும் ,அவனின் தூதரின் பக்கமும் சென்றுவிடுவது சால சிறந்தது .. நபி அவர்கள் உம்மி நபி .., நாமும் ஒரு வகையில் உம்மி சமுதாயம் தான் இல்லையென்றால் நபி அவர்கள் செயல்படுத்திய விஷயத்தில் நம் மன இச்சைகளை புகுத்தி இருக்க மாடோம் .

நபி அவர்கள் செயல் படுத்தியது நமக்கு போதுமானது என்பதே இந்த கருத்து மோதல்களுக்கு தீர்வாக அமையும்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத, செய்து காண்பிக்காத எந்தச் செயலையும் மார்க்கத்தில் நல்லமலாக அங்கீகரிக்க இயலாது.

அல்லாஹ் மிக அறிந்தவன்.


அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரின் நல் அமல்களையும் பிரார்த்தனைகளையும் ஏற்று நல்லருள் புரிவானாக... ஆமீன்.

தியாகப் பெருநாள் சிந்தனை

தியாகப் பெருநாள் சிந்தனை

பாரான் பள்ளத்தாக்கில் கிடத்தப் பட்ட ஒரு பாலகன், அப்பாலகனின் பெற்றோர் ஆகிய மூவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், உலகம் முழுவதும் வாழ்ந்த/வாழும்/வாழப் போகிற முஸ்லிம்களுக்கு மாறாத படிப்பினையாகவும் அம்மூவரது செயல்பாடுகளில் சில முஸ்லிம்களின் கடமையான வழிபாடுகளாகவும் மாறிப் போயின.

ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் - எண்ணியெண்ணி வியக்கும் அந்த வரலாறு,

"எங்கள் இறைவா! விவசாயமற்ற இப்பள்ளத்தாக்கில், மாண்புமிகு உன் இல்லத்தை அடுத்து என் வழித்தோன்றலை (குடும்பத்தாரை) வசிக்க விட்டிருக்கிறேன். தொழுகையை நிலைபெறச் செய்வதற்காகக் குடியேற்றி இருக்கிறேன். எனவே, எங்கள் இறைவா! ஆதரவுள்ளம் கொண்ட மக்களை இவர்களுக்கு ஏற்படுத்துவாயாக! இவர்கள் உனக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, கனிகளைக் கொண்டு இவர்களுக்கு உணவளிப்பாயாக!" (அல்-குர்ஆன் 14:37) என்று தொடங்குகிறது.

தன் வாழ்க்கைத் துணைவியையும் வயோதிக காலத்தில் தனக்கு வாரிசாகப் பிறந்த பால்குடி மாறாப் பாலகனையும் பாலைவனத்தில் விட்டுச் செல்ல அண்ணல் இபுறாஹீம் நபி (அலை) எப்படித் துணிந்தார்கள்?

அதுதான் தியாகம்! அல்லாஹ்வின் கட்டளைக்காக அனைத்தையும் துறக்கத் துணிந்த தியாகம்!

"இறைவன்தான் இந்தப் பாலைவனத்தில் எங்களை விட்டுச் செல்லுமாறு உங்களுக்குக் கட்டளையிட்டான் எனில், அவனே எங்களைப் பாதுகாப்பான்" என்று உறுதியோடு உரைக்க அன்னை ஹாஜராவுக்கு எப்படி மனம் வந்தது?

அல்லாஹ்வின் மீதுள்ள அளவு கடந்த நம்பிக்கையில், வானமே கூரையாக சுட்டெரிக்கும் பாலையிலும் வாழ்ந்திடத் துணிந்த தியாகம்!

மகன் மட்டும் தியாகத்தில் சளைத்தவரா?

"... என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உன் கருத்து என்ன என்பதை யோசித்துச் சொல்"

"என்னருமைத் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப் பட்டதோ அதையே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால், (எதையும்) சகித்துக் கொள்ளக் கூடியவர்களுள் ஒருவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்" (அல்-குர்ஆன் 37:102).

இங்குக் கொடுத்திருக்கும் இஸ்லாத்துக்கே சொந்தமான தியாக வரலாற்றின் மிகச் சில வரிகள் வாசிப்பதற்கு மட்டுமா? என்ற கேள்வியை நாம் நம்மையே கேட்டுக் கொள்ள இந்நாளில் கடமைப் பட்டிருக்கிறோம்.

தியாகத்திருநாளை இரு ரக்அத் சிறப்புத் தொழுகையுடனும் நபி இபுறாஹீம் குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுபடுத்தும் ஒரு குத்பா கொண்டாடுவதோடு நம் தியாகங்களும் முடிந்து விட்டன என்ற தவறான எண்ணத்திலிருந்து விடுபட்டு... இத்தியாகத் திருநாளில் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம்.

தியாகம் நினைவுபடுத்துவதற்கோ நினைவுகூர்வதற்கோ மட்டும் அல்ல; ஒவ்வொருவரின் வாழ்விலும் செயல்படுத்துவதற்கும் சேர்த்தேதான்!

உலகம் முழுதும் இஸ்லாத்துக்கு எதிரான திட்டமிட்ட, பல்முனைத் தாக்குதல்கள் பெருகி வரும் காலமிது. குறிப்பாக ஊடகத்துறையில் இஸ்லாத்தைப் பற்றிய பொய்களும் பூஞ்சைத் தனமான குற்றச்சாட்டுகளும் தற்போது தமிழ் இணையத்திலும் பெருகி வருகின்றன. தடுத்துச் சற்றே கையை உயர்த்தினாலே பொடியாகிப் பறந்து விடும் என்ற கருத்தில்தான் 'பூஞ்சைத் தனமான' குற்றச் சாட்டுகள் என்று இங்குக் குறிப்பிடப் படுகிறது.

கை உயர்த்துவதற்குத்தான் ஆட்கள் தேவை. வெறும் கையைன்று; எழுதுகோல் எனும் ஆயுதம் ஏந்திய கைகள்!

அண்ணல் இபுறாஹீம் எதிர் கொண்ட சோதனைகள் இன்று நமக்கில்லை. அன்னை ஹாஜரா தாங்கிக் கொண்ட வேதனைகள் நமக்கில்லை. அண்ணல் இஸ்மாயீல் ஏற்றுக் கொண்ட 'சுயபலி'யும் நமக்கில்லை. நமக்குள்ள நேரத்தைக் கொஞ்சம்போல் தியாகம் செய்தால் போதும். எழுத்துலகுக்கு இன்னும் இன்னும் இன்னும் முஸ்லிம்கள் வேண்டும்.

கையை உயர்த்துங்கள் - எழுதுகோல் ஆயுதத்தோடு!

சகோதர, சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காமின் நெஞ்சம் நிறைந்த தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்!

ZAZAKALLAHAIRUN TO SATYAMARKAM.COM

Saturday, November 21, 2009

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டி தந்த ஹஜ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒன்பது ஆண்டுகள் ஹஜ் செய்யாது தங்கியிருந்தனர்.பிறகு பத்தாம் ஆண்டில் இந்த ஆண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜை



நிறைவேற்றச் செல்கின்றார்கள்’ என்று மக்களிடம் அறிவிக்கச் செய்தார்கள்.
உடனே அதிகமான மக்கள் மதீனாவிற்கு வந்தனர். வாகனத்திலோ அல்லது நடந்தோ வர சக்தி பெற்ற எவரும் மதீனா வரத் தவறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்ல வேண்டும் என்பதற்காக மக்கள் (மதீனா) வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அவர்கள் (ஹஜ்) செய்வது போல் தாங்களும் (ஹஜ்) செய்ய வேண்டும் என்று நாடிய வண்ணம் இருந்தனர்.



மதீனாவாசிகளின் இஹ்ராம் எல்லை துல்ஹுலைஃபா’ என்றும், ஷாம்வாசிகளின் இஹ்ராம் எல்லை ஜுஹ்ஃபா’ என்றும், இராக்வாசிகளின் இஹ்ராம் எல்லை தாது இர்க்’ என்றும், நஜ்த்வாசிகளின் இஹ்ராம் எல்லை கர்ன்’ என்றும், யமன்வாசிகளின் இஹ்ராம் எல்லை யலம்லம்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் (இஹ்ராம் கட்டும் எல்லைகள் பற்றிக்) குறிப்பிட்டார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்கஃதா 25 அல்லது 26ல் புறப்பட்டார்கள். அவர்கள் (தம்முடன்) பலிப் பிராணிகளைக் கொண்டு வந்தார்கள். நாங்களும் அவர்களுடன் புறப்பட்டோம். எங்களுடன் பெண்களும், குழந்தைகளும் இருந்தனர்.
நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின் அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்.
“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள். “நீ குளித்து விட்டு, இரத்தத்தை உறிஞ்சுகின்ற துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு இஹ்ராம் கட்டிக் கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள்.(தல்பியா எதுவும் சொல்லாமல்) மவுனமான நிலையில் பள்ளியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

இஹ்ராம் அணிதல்


பிறகு கஸ்வா (என்ற தமது ஒட்டகத்தின்) மீது ஏறினார்கள். அவர்கள் ஏறிய ஒட்டகம் பாலைவனத் தரையில் நிமிர்ந்து நின்றதும் நபி (ஸல்) அவர்கள் (லப்பைக் ஹஜ்ஜன் – ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்து விட்டேன் என்ற) ஹஜ்ஜுக்கான தல்பியா கூறி (இஹ்ராம் கட்டி)னார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் ஹஜ்ஜுக்காக மட்டுமே இஹ்ராம் கட்டினார்கள்.



அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் வாகனத்தில் அமர்ந்தும், நடந்தும் வருவதை நான் (ஜாபிர்) கண்டேன். அது போன்றே அவர்களது வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும், அவர்களது பின் பக்கத்திலும் (மக்கள் வருவதைக்) கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மத்தியில் இருக்கும் போது அவர்களுக்குக் குர்ஆன் அருளப்படும். அவர்கள் அதன் விளக்கத்தை அறிந்து கொள்வார்கள். (அதன் அடிப்படையில்) அவர்கள் செய்கின்ற வணக்கத்தை நாங்களும் அப்படியே செய்வோம்.

“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லாஷரீக்க லக்” என்ற அல்லாஹ்வை ஒருமைப்படுத்தும் தல்பியாவை நபி (ஸல்) அவர்கள் (இஹ்ராமின் போது) சொன்னார்கள். மக்களும் இதைச் சொல்லிக் கொண்டு இஹ்ராம் கட்டினர். “லப்பைக் தல் மஆரிஜ் லப்பைக் தல் ஃபவாழில்” என்று கூடுதலாகவும் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதில் எதையும் மறுக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தல்பியாவை விடாது முழங்கிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் – லப்பைக்கல்லாஹும்ம – லப்பைக்க பில் ஹஜ் என்று உரத்துக் கூறினோம். நாங்கள் ஹஜ்ஜையன்றி வேறெதனையும் மனதில் உறுதி கொண்டிருக்கவில்லை. ஹஜ்ஜுடன் நாங்கள் உம்ராவைக் கலக்கவில்லை. நாங்கள் (ஹஜ்ஜுடன் சேர்த்து) உம்ரா செய்வதை அறிந்திருக்கவில்லை. (அதனால்) தனி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினோம்.
ஆயிஷா (ரலி) உம்ரா செய்வதற்காக வந்து கொண்டிருக்கையில் சரிப் என்ற இடத்தை அடைந்ததும் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டது.
மக்காவில் நுழைதல்

முற்பகல் நேரம் உயரும் போது நாங்கள் மக்காவில் நுழைந்தோம். துல்ஹஜ் மாதம் நான்காம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்களுடன் கஅபாவிற்கு (அருகில்) வந்தோம்.
அதன் பின் நபி (ஸல்) அவர்கள் பள்ளியின் வாசலுக்குச் சென்று தமது வாகனத்தைப் படுக்க வைத்து விட்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள்.
கஅபாவின் மூலையை – ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட்டார்கள்.

பிறகு (கஅபாவை தமது இடது பக்கம் ஆக்கியவாறு) தமது வலது பக்கமாகச் சென்றார்கள். மீண்டும் அதன் பால் திரும்ப வரும் வரை மூன்று முறை வேகமாக நடந்தார்கள். நான்கு முறை அமைதியாக நடந்தார்கள்.பிறகு மகாம் இப்ராஹீமை நோக்கிச் சென்று, “வத்தஹிதூ மின் மகாமி இப்ராஹீம முஸல்லா” என்று மக்களுக்குக் கேட்கச் செய்யும் விதமாக தமது குரலை உயர்த்திக் கூறினார்கள். தமக்கும் கஅபாவிற்கும் இடையில் மகாம் இப்ராஹீமை ஆக்கிய வண்ணம் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களிலும், குல்யா அய்யுஹல் காஃபிரூன்’ மற்றும் குல்ஹுவல்லாஹு அஹது’ ஆகிய அத்தியாயங்களை ஓதினார்கள்.

பிறகு ஜம்ஜமை நோக்கிச் சென்று அதிலிருந்து குடித்தார்கள். தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள். பிறகு கஅபாவின் மூலைக்கு வந்து முத்தமிட்டார்கள்.

ஸஃபா, மர்வாவில்…



ஸஃபா (செல்லும்) வாசல் வழியாக ஸஃபாவை நோக்கி வந்தார்கள். ஸஃபாவை நெருங்கியதும், “இன்னஸ் ஸஃபா வல் மர்வத மின் ஷஆரில்லாஹ்” என்று ஓதினார்கள். அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் நான் ஸஃபாவைக் கொண்டே துவக்குகின்றேன் என்று சொன்னார்கள். அதன் படி ஸஃபாவிலிருந்து (தமது ஓட்டத்தை) துவங்கும் விதமாக அதன் மீது ஏறி கஅபாவைப் பார்த்தார்கள்.



கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை மூன்று முறை ஒருமைப் படுத்தி தக்பீர் சொல்லிப் புகழ்ந்தார்கள்.
“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு அன்ஜஸ வஃதஹு, வநஸர அப்தஹு, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு”

(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணையானவன் இல்லை. அவனுக்கு ஆட்சியதிகாரம் சொந்தமானது. அவனுக்கே புகழும் சொந்தம். அவனே உயிர்ப்பிக்கின்றான். அவனே மரணிக்கச் செய்கின்றான்.

அவன் அனைத்திலும் ஆற்றல் பெற்றவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் இல்லை. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுத்தான். அவன் தன் அடியாருக்கு உதவி செய்தான். (எதிரிகளின்) படைகளை அவனே தோற்கடித்தான்) என்று சொன்னார்கள். பிறகு இதற்கிடையே அவர்கள் துஆவும் செய்தார்கள். அவர்கள் இவ்வாறு மூன்று தடவை சொன்னார்கள்.

பிறகு இறங்கி மர்வாவை நோக்கி நடக்கலானார்கள். அவர்கள் இறங்கி பத்னுல்வாதியில் கால் வைத்தவுடன் ஓடலானார்கள். அவர்கள் மர்வாவில் கால் வைத்து ஏறத் துவங்கி மர்வாவை அடையும் வரை நடக்கலானார்கள். இறுதியாக மர்வாவுக்கு வந்து அதன் மீது ஏறி கஅபாவைப் பார்த்தார்கள்.ஸஃபாவில் செய்தது போன்றே மர்வாவிலும் செய்தார்கள்.
மாற்றல் உத்தரவு


மர்வாவில் ஏழாவதாக அமைந்த அவர்களது கடைசி ஸஈ முடிவுற்றதும், “மக்களே! இப்போது நான் அறிந்து கொண்ட (ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவும் செய்வது கூடும் என்ற) விபரத்தை முற்கூட்டியே அறிந்திருந்தால் நான் பலிப் பொருட்களைக் கொண்டு வராமல் இருந்திருப்பேன். (ஹஜ்ஜுக்குப் பதிலாக) அதை உம்ராவாக ஆக்கியிருப்பேன். எனவே உங்களில் பலிப் பிராணிகளைக் கொண்டு வராதவர் இஹ்ராமைக் களைந்து விட்டு இதை உம்ராவாக ஆக்கிக் கொள்வாராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இன்னோர் அறிவிப்பின் படி – நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுங்கள். கஅபாவில் தவாஃப் செய்யுங்கள், ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸஈ செய்யுங்கள். முடியைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

(மக்காவில்)இஹ்ராமிலிருந்து விடுபட்டவர்களாகத் தங்கிக் கொள்ளுங்கள். துல்ஹஜ் பிறை 8ம் நாள் அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுங்கள். இதற்கு முன்னர் செய்ததை – முதலில் உம்ரா செய்து இஹ்ராமைக் களைந்து விட்டு மீண்டும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி ஹஜ் செய்யும் – தமத்துஃ வகை* ஹஜ்ஜாக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.)

இப்படி நபி (ஸல்) அவர்கள் சொன்னதும் மர்வாவின் அடியில் நின்று கொண்டிருந்த சுரகா பின் மாலிக் பின் ஜுஷ்அம் என்பார், “அல்லாஹ்வின் தூதரே! எங்களது உம்ரா, எங்களது இந்த (முதலில் உம்ரா செய்து இஹ்ராமைக் களைந்து விட்டு மீண்டும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி ஹஜ் செய்யும்) தமத்துஃ வகை ஹஜ் இந்த ஆண்டில் மட்டும் தான் கடமையா? அல்லது இனி என்றைக்குமா?” என்று வினவினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இனி என்றைக்கும் தான் என்று காட்டும் விதமாக) தமது கைவிரல்களை ஒன்றை இன்னொன்றோடு கோர்த்துக் காட்டினார்கள். மேலும் “கியாமத் நாள் வரை ஹஜ்ஜில் உம்ரா நுழைந்து விட்டது. இந்த ஆண்டிற்கு மட்டுமல்ல! மாறாக என்றைக்கும் தான்! இந்த ஆண்டிற்கு மட்டுமல்ல! மாறாக என்றைக்கும் தான்!” என்று மூன்று முறை கூறினார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இப்போது தான் படைக்கப் பட்டிருக்கின்றோம் என்பது போல் (கருதி) எங்களுக்கு எங்கள் மார்க்கத்தை விளக்குங்கள். இன்றைய தினம் செய்யும் அமல் எந்த அடிப்படையில்? ஏற்கனவே எழுதுகோல் எழுதி முடிந்து போன விதியில் அடிப்படையிலா? அல்லது இனி நமக்கு நடக்கப் போகும் விஷயங்கள் அடிப்படையிலா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(இனி நடக்கப் போகும் விஷயங்கள் அடிப்படையில்) அல்ல! ஏற்கனவே எழுதுகோல் எழுதி முடிந்து போன விதிகளின் அடிப்படையில் தான்!” என்று பதிலளித்தார்கள்.

“அப்படியானால் அமல் ஏன் செய்ய வேண்டும்?” என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் அமல் செய்யுங்கள். ஏனெனில் ஒருவர் எதற்காகப் படைக்கப் பட்டிருக்கின்றாரோ அதை நோக்கி அவர் எளிதாக இழுத்துச் செல்லப் படுவார்” என்று பதிலளித்தார்கள்.
நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டதும் பலிப்பிராணிகளைப் பலியிடுமாறும், பலிப்பிராணி இல்லாதவர் (மக்காவில்) மூன்று நோன்புகளும் ஊர் திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும் என்றும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். எங்களில் உள்ள ஆட்கள் பிராணிகளைப் பலி கொடுப்பதில் கூட்டு சேர்ந்து கொண்டனர். எங்களில் ஏழு பேர்கள் ஓர் ஒட்டகத்திற்கு என்ற கணக்கில் பங்கு சேர்ந்தோம்.

(நபி (ஸல்) அவர்கள், இஹ்ராமிலிருந்து விடுபடுங்கள் என்று சொன்னதும், இஹ்ராமின் போது தடுக்கப் பட்ட காரியங்கள் எத்தனையோ உள்ளன. அதனால்) எந்தக் காரியத்திலிருந்து நாங்கள் விடுபடுவது? என்று கேட்டோம். எல்லாக் காரியங்களிலிருந்தும் விடுபடுதல் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.(இஹ்ராமிலிருந்து விடுபட்டு புனித பூமியிலேயே மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடலாம் என்ற) இந்த அனுமதி எங்களுக்குப் பெரும் கஷ்டமாக ஆனது. இதன் காரணமாக எங்கள் உள்ளங்கள் நெருக்கடிக்கு உள்ளாயின.

பத்ஹாவில் தங்குதல்

நாங்கள் (தங்குவதற்காக பொடிக் கற்கள் நிறைந்த ஓடைப் பகுதியான) பத்ஹாவுக்குச் சென்றோம். “இன்றைய தினம் என் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி உள்ளது” என்று எங்களுடன் உள்ளவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஹஜ்ஜை மட்டுமே நாடி வேறெதனையும் குறியாகக் கொள்ளாமல் ஹாஜிகளாகப் புறப்பட்டு வந்தோம். நமக்கும் நாம் அரஃபா செல்வதற்கும் நான்கு அல்லது ஐந்து இரவுகள் இருக்கின்றன. அதற்குள்ளாக நம்முடைய மனைவியரிடம் இல்லறத்தில் ஈடுபடும்படி நமக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு விட்டார்களே! பெண்களிடம் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டு இந்திரியத் துளிகள் சொட்டிய (பின் குளித்து முடித்த) வண்ணம் நாம் அரஃபாவிற்கு வருவது முறையாகுமா? என்று நாங்கள் கூறிக் கொண்டோம்.

(மேற்கண்ட இந்தச் செய்தியை அறிவிக்யில், ஜாபிர் (ரலி) கையசைத்தவாறு கூறிய அந்தக் காட்சியை இப்போதும் நான் நேரில் பார்ப்பது போல் உள்ளது என்று அறிவிப்பாளர் கூறுகின்றார்) நாம் ஹஜ் என்று குறிப்பிட்டு வந்திருக்கும் போது இதை எப்படி (முதலில் உம்ரா செய்து இஹ்ராமைக் களைந்து விட்டு மீண்டும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி ஹஜ் செய்யும்) தமத்துஃ வகை ஹஜ் ஆக ஆக்கிக் கொள்ள முடியும்? என்றும் நபித்தோழர்கள் வினவினர்.

(நாங்கள் பேசிக் கொண்ட) இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து விட்டது. இது அவர்களுக்கு வஹீ மூலம் தெரிந்ததா? அல்லது மக்கள் மூலமாகவே தெரிந்ததா? என்று எங்களுக்குத் தெரியாது.ஆணைக்குக் கட்டுப் படுமாறு ஆற்றிய உரை
நபி (ஸல்) அவர்கள் இதைத் தெரிந்து கொண்டதும் எழுந்து நின்று உரையாற்றுகையில் அல்லாஹ்வைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.

“மக்களே! நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி என்னிடமே பாடம் நடத்துகின்றீர்களா? உங்களில் அல்லாஹ்வை மிக அஞ்சுபவன் நான்! உங்களில் மிக உண்மை சொல்பவன் நான்! உங்களில் மிக நல்லவன் நான் என்பதை நன்றாகவே நீங்கள் அறிந்து வைத்திருக்கின்றீர்கள். உங்களுக்கு நான் உத்தரவிடுவதை அப்படியே செய்யுங்கள். நான் மட்டும் பலிப்பிராணிகளைக் கொண்டு வரவில்லை என்றால் நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டது போல் நானும் விடுபட்டிருப்பேன்.
ஆனால் (நான் பலிப்பிராணிகளுடன் வந்துள்ளதால் அந்த) பலிப்பிராணிகள் உரிய இடத்தில் போய் சேரும் வரை நான் இஹ்ராமிலிருந்து விடுபட முடியாது. இப்போது நான் தெரிந்து கொண்டிருக்கும் (ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவும் செய்வது கூடும் என்ற) செய்தி முற்கூட்டியே தெரிந்திருந்தால் நான் பலிப் பிராணிகளைக் கொண்டு வந்திருக்க மாட்டேன். எனவே இஹ்ராமிலிருந்து நீங்கள் விடுபடுங்கள்.

(இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட காரியங்களை இப்போது செய்து கொள்ளுங்கள்)” என்று குறிப்பிட்டார்கள்.
நாங்கள் எங்கள் மனைவியரிடம் இல்லறத்தில் ஈடுபட்டோம். நறுமணம் பூசிக் கொண்டோம். நாங்கள் எங்களது (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்து கொண்டோம். நாங்கள் செவியுற்றோம். (நபியவர்களின் கட்டளைக்குக்) கட்டுப்பட்டோம்.

நபி (ஸல்) அவர்களும், தம்முடன் பலிப் பிராணிகளைக் கொண்டு வந்தவர்களும் தவிர மற்ற மக்கள் அனைவரும் முடியைக் குறைத்துக் கொண்டு இஹ்ராமைக் களைந்தனர்.அவ்வாறு பலிப் பிராணிகளைக் கொண்டு வந்தவர்களின் பட்டியலில் நபி (ஸல்) அவர்களையும் தல்ஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாருமில்லை.

யமனிலிருந்து அலீ (ரலி) வருகை

அலீ (ரலி) அவர்கள் யமனிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்குரிய (பலிப் பிராணிகளான) ஒட்டகங்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

அப்போது ஃபாத்திமா (ரலி) இஹ்ராமைக் களைந்து, தலை சீவி, வண்ண ஆடை அணிந்து கண்ணுக்கு மை தீட்டியிருந்தார்கள். இந்த நிலையில் அவரைக் கண்ட அலீ (ரலி), அந்தச் செயல் தமக்குப் பிடிக்கவில்லை என்பதை அவரிடம் தெரிவித்து, “உன்னை இவ்வாறு செய்யக் கட்டளையிட்டவர் யார்?” என்று கேட்டார். “என்னுடைய தந்தை தான் இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டார்கள்” என்று ஃபாத்திமா (ரலி) கூறினார்கள்.இந்நிகழ்ச்சியை அலீ (ரலி) அவர்கள் இராக்கில் இருக்கும் போது சொல்லிக் கொண்டிருந்தார்கள். (அப்போது அவர் குறிப்பிட்ட விபரம் வருமாறு) ஃபாத்திமா (ரலி) இவ்வாறு பதிலளித்ததும் அவர் செய்த இந்தச் செயலைக் கண்டிக்கும் விதமாகவும், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஃபாத்திமா (ரலி) குறிப்பிட்ட கட்டளை தொடர்பாக விளக்கம் கேட்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். ஃபாத்திமா செய்த செயல் தனக்குப் பிடிக்கவில்லை என்று அவர்களிடம் தெரிவித்த போது என்னுடைய தந்தை தான் இவ்வாறு செய்யும் படி கட்டளையிட்டதாக அவர் பதில் சொல்கின்றார் என்று நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள், “ஃபாத்திமா உண்மை சொன்னார். ஃபாத்திமா உண்மை சொன்னார். ஃபாத்திமா உண்மை சொன்னார். நான் தான் ஃபாத்திமாவுக்கு அவ்வாறு கட்டளையிட்டேன்” என்று பதில் சொன்னார்கள்.

“நீ ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியும் போது என்ன சொன்னாய்?” என்று அலீ (ரலி)யிடம் விசாரித்தார்கள். அதற்கு அலீ (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தது மாதிரியே நானும் ஹஜ் செய்கின்றேன் என்று கூறினேன்” என்று பதிலளித்தார்.
“என்னுடன் பலிப் பிராணிகள் உள்ளன. (நான் இஹ்ராமைக் களையாமல் இருப்பது போல்) நீ இப்போது இஹ்ராமைக் களையாமல் இருந்து விடு” என்று சொன்னார்கள்.
யமனிலிருந்து அலீ (ரலி) கொண்டு வந்த பலி ஒட்டகங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து கொண்டு வந்த ஒட்டகங்களின் எண்ணிக்கை மொத்தம் நூறாகும்.
ஆக, நபி (ஸல்) அவர்களும், இன்னும் யாரிடம் பலிப் பிராணிகள் இருந்தனவோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு முடியைக் குறைத்துக் கொண்டனர்.

இஹ்ராம் அணிந்தவர்களாக மினாவை நோக்கிப் பயணம்
துல்ஹஜ் பிறை 8 ஆனதும் மக்கா எங்கள் பின்புறமாக அமைந்திருக்க மினாவை நோக்கி மக்கள் சென்றனர். (அவர்கள் தங்கியிருந்த) பத்ஹாவிலிருந்து ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி)யிடம் சென்றார்கள். அப்போது அவர் அழுது கொண்டிருப்பதைக் கண்டதும், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். “எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள். நான் இன்னும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.

கஅபாவை தவாஃபும் செய்யவில்லை. இப்போது மக்கள் ஹஜ்ஜுக்காக சென்று கொண்டிருக்கின்றார்கள்” என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இதை ஆதமின் பெண் மக்கள் மீது (இயற்கையாகவே) விதித்திருக்கும் விஷயமாகும். நீ குளித்து விட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொண்டு ஹஜ் செய்! ஹஜ் செய்பவர் செய்யும் எல்லா வணக்கத்தையும் செய்! ஆனால் நீ தவாஃப் செய்யாதே! தொழாதே! அது போலவே தவாஃப் செய்யாமல் (மற்றும் தொழாமல்) ஹஜ்ஜுடைய மற்ற அனைத்து வணக்கங்களையும் செய்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிச் சென்று லுஹர், அஸர், மக்ரிப், இஷா, ஃபஜ்ர் ஆகியவற்றை மினாவிலேயே தொழுதார்கள்.
சூரியன் உதிக்கின்ற வரை கொஞ்ச நேரம் அங்கு தங்கினார்கள்.
கம்பளியால் அமைந்த கூடாரத்தை (அரஃபாவுக்கு அருகிலுள்ள) நமிராவில் அடிக்கும் படி உத்தரவிட்டார்கள்.அரஃபாவை நோக்கிப் பயணம்

(ஒன்பதாம் நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவை நோக்கி) சென்றார்கள். குறைஷிகள், அறியாமைக் காலத்தில் தாங்கள் செய்து கொண்டிருந்த அதே வழக்கப்படி* நபி (ஸல்) அவர்களும் முஜ்தலிஃபாவில் உள்ள மஷ்அரில் ஹராமில் நிற்பார்கள்! அவர்களின் தங்குமிடமும் நிச்சயமாக அங்கு தான் அமையும் என்று உறுதியாக எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் (அதற்கு மாற்றமாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஜ்தலிஃபாவில் தங்காமல்) கடந்து சென்று அரஃபாவுக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். நமிராவில் அவர்களுக்குக் கூடாரம் அமைக்கப் பட்டு தயார் நிலையில் இருக்கக் கண்டு அங்கேயே தங்கினார்கள்.

*(குறைஷிகள் தங்களை ஹரமைப் பரிபாலணம் செய்யும் உயர் குலத்தார் என்று கருதிக் கொண்டு, மற்றவர்களைப் போல் அரஃபாவில் போய் தங்காமல் முஜ்தலிஃபாவிலேயே தங்கிக் கொள்வர். இதையே நபி (ஸல்) அவர்களும் செய்வார்கள் என்று எதிர்பார்த்தனர்)
சூரியன் சாயத் தொடங்கியதும், ஒட்டகத்தைக் கொண்டு வரும் படி கட்டளையிட்டார்கள். அது பயணத்திற்குத் தயார் ஆக்கப் பட்டவுடன் அதில் பத்னுல்வாதிக்கு வந்தார்கள். (பத்னுல்வாதி என்பது உர்னா என்ற ஓடையாகும். ஆனால் இது அரஃபா எல்லையில் இல்லை)

அரஃபா பேருரை




இப்போது மக்களுக்கு உரையாற்றத் துவங்கி அவர்கள் கூறியதாவது:
(புனித மிக்க) இந்த ஊரில், இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அது போல் உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் (உங்கள் மானம், மரியாதைகளும்) புனிதம் வாய்ந்தவையாகும். அறியாமைக் காலத்து அனைத்துக் காரியங்களும் என் இரு பாதங்களுக்கடியில் போட்டுப் புதைக்கப் படுகின்றன. அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப் படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப்படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும்.
ரபீஆ அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப் படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப் படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்) அறியாமைக் காலத்து வட்டி (இன்று) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் நான் ரத்து செய்யும் வட்டி (எனது பெரிய தந்தை) அப்பாசுக்கு வர வேண்டிய எங்களுடைய வட்டியாகும். (இன்று) அந்த வட்டி அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றது. பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை அமானிதமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். (திருமணம் முடியுங்கள் என்ற) அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே அவர்களது கற்புகளை அனுபவிக்கின்றீர்கள்.

நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. இது உங்கள் மனைவியர் உங்களுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். இதற்கு மாற்றமாக அவர்கள் நடந்தால் காயம் ஏற்படுத்தாத வகையில் அவர்களை அடியுங்கள். நீங்கள் நல்ல முறையில் உணவும் உடையும் உங்கள் மனைவியருக்கு வழங்க வேண்டும். இது நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். உங்களிடம் ஒன்றை விட்டுச் செல்கின்றேன். அதை நீங்கள் கடைப்பிடிக்கும் போதெல்லாம் வழி கெடவே மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்.

“நீங்கள் (மறுமையில்) என்னைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அப்போது நீங்கள் என்ன (பதில்) சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள். “உங்கள் தூதுச் செய்தியை எடுத்து வைத்து விட்டீர்கள். அதை நிறைவேற்றி விட்டீர்கள். உங்கள் சமுதாயத்திற்கு நன்மையை நாடினீர்கள். உங்கள் மீதுள்ள பொறுப்பை ஆற்றி விட்டீர்கள் என்று நாங்கள் சான்று பகர்வோம்” என்று பதிலளித்தனர்.

அப்போது அவர்கள் தமது ஆட்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தியும் பின்னர் அதை மக்களை நோக்கி தாழ்த்தியும், “யா அல்லாஹ்! நீயே சாட்சி! யா அல்லாஹ்! நீயே சாட்சி!” என்று சொன்னார்கள்.சேர்த்துத் தொழுதல் மற்றும் அரஃபாவில் தங்குதல்
பிறகு பிலால் (ரலி) ஒரே ஒரு முறை பாங்கு சொன்னார். பிறகு இகாமத் சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுதார்கள். பிறகு பிலால் இகாமத் சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் அஸரைத் தொழுதார்கள்.இவ்விரண்டிற்கும் இடையே வேறெதையும் அவர்கள் தொழவில்லை.

பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் ஏறி (ஜபல் ரஹ்மத்திற்கு அருகிலுள்ள) இடத்திற்கு வந்தார்கள். ஒட்டகத்தின் வயிற்றுப் பகுதியை (ஜபல் ரஹ்மத்தின் அடிவாரத்தில் உள்ள) பாறைகளை நோக்கியும், நடந்து செல்லும் மக்கள் கூட்டத்தை தமக்கு முன்னாலும் ஆக்கியவாறு கிப்லாவை நோக்கி நின்றார்கள்.சூரியன் மறையும் வரை நின்று கொண்டிருந்தார்கள். அப்போது சூரியனின் மஞ்சள் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கி அதன் முழு வட்டமும் மறைந்து விட்டிருந்தது.
“நான் இந்த இடத்தில் நின்றேன். (இங்கு தான் எல்லோரும் நிற்க வேண்டும் என்று கருதி விடக் கூடாது) அரஃபா முழுவதுமே (தங்கி) நிற்கும் இடமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.உஸாமா பின் ஸைதை தமக்குப் பின்னால் உட்கார வைத்திருந்தார்கள்.

அரஃபாவிலிருந்து கிளம்புதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக (அரஃபாவிலிருந்து) திரும்பினார்கள். (ஒட்டகம் விரைந்து செல்லக் கூடாது என்பதற்காக) ஒட்டகத்தின் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்தார்கள். அதன் விளைவாக அதனுடைய தலை, ஓய்வுக்காக காலை மடக்கி வைக்கும் பகுதியைத் தொட்டது. “மக்களே! அமைதி! அமைதி!” என்று தமது வலது கையின் உள்ளங்கை வானத்தை நோக்கி அமைந்திருந்தவாறு சைகை செய்தார்கள்.திட்டுத் திட்டாக அமைந்திருக்கும் மணல் திட்டுக்கு அவர்கள் வரும் போது ஒட்டகம் ஏறுகின்ற வரை அதன் கடிவாளத்தைத் தளர்த்தினார்கள்.

முஜ்தலிஃபாவில் இரவு தங்குதல் மற்றும் சேர்த்துத் தொழுதல்
இவ்வாறு அவர்கள் முஜ்தலிஃபாவை அடைந்ததும் அங்கு ஒரு பாங்கு இரண்டு இகாமத்துகள் சொல்லப்பட்டு மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்.
அவ்விரு தொழுகைகளுக்கு இடையே வேறெதையும் தொழவில்லை.
பிறகு ஃபஜ்ர் உதயமாகின்ற வரை ஒருக்களித்துப் படுத்துக் கொண்டார்கள்.
ஃபஜ்ர் நேரம் தெளிவானதும் ஒரு பாங்கு, ஒரு இகாமத்தைக் கொண்டு ஃபஜ்ர் தொழுதார்கள்.

மஷ்அருல் ஹராமில் நிற்குதல்
பிறகு ஒட்டகத்தில் அமர்ந்து மஷ்அருல் ஹராமுக்கு வந்தார்கள். அதன் மீது ஏறினார்கள்.கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். தக்பீர் சொன்னார்கள். “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு” என்று கூறினார்கள்.காலை நன்கு வெளுக்கின்ற வரை நின்றார்கள்.
“இந்த இடத்தில் நான் நின்றிருக்கின்றேன். முஜ்தலிஃபா முழுவதும் நிற்கக் கூடிய இடமாகும்” என்று சொன்னார்கள்.

முஜ்தலிஃபாவிலிருந்து கல்லெறியச் செல்லுதல்
சூரியன் உதிப்பதற்கு முன்னால் அமைதியான நிலையில் முஜ்தலிஃபாவிலிருந்து கிளம்பினார்கள்.தமக்குப் பின்னால் ஃபழ்ல் பின் அப்பாஸை அமர்த்தி வைத்திருந்தார்கள். அவர் அழகிய முடியுடையவராகவும் வெள்ளை நிறம் கொண்டவராகவும் கவர்ச்சியானவராகவும் இருந்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செல்லும் போது அவர்கள் அருகே பெண்கள் கடந்து சென்றனர். ஃபழ்ல் பின் அப்பாஸ் அந்தப் பெண்களைப் பார்க்க முற்பட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை ஃபழ்லின் முகத்தில் வைத்து அதை மற்றொரு பக்கம் திருப்பினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பக்கத்திலிருந்து கையை மாற்றிக் கொண்டு வந்து ஃபழ்ல் பின் அப்பாஸின் முகத்தில் வைத்து அந்தப் பகுதியிலிருந்து அவர் பார்க்காதவாறு திருப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறு பத்ன் முஹஸ்ஸிர் என்ற இடத்தை அடைந்ததும் சற்று வேகமாகச் சென்றார்கள்.அமைதியாகச் செல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.கல் எறிதல்
பிறகு ஜம்ரத்துல் குப்ரா (கல்லெறியும் பெரிய இடத்தை) நோக்கிச் செல்லும் மையப் பாதையில் சென்று மரத்திற்கு அருகில் உள்ள கல்லெறி இடத்திற்கு வந்தார்கள்.
முற்பகல் நேரத்தில், அதில் சுண்டி விடும் அளவிற்குள்ளான ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல் எறியும் போதும் தக்பீர் சொன்னார்கள்.

பத்னுல் வாதி என்ற இடத்திலிருந்து (ஜம்ரத்தில் உகபாவில்) வாகனத்தில் இருந்த வண்ணம் (அவ்வாறு) கல்லெறியும் போது, “உங்களது ஹஜ் மற்றும் உம்ரா வணக்கங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த எனது ஹஜ்ஜுக்குப் பிறகு ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.நஹ்ருடைய (10ம்) நாளைக்குப் பிறகு தஷ்ரீக் (எனும் 11, 12, 13 ஆகிய) நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்த பிறகு கல்லெறிந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து கொண்டிருக்கையில் அவர்களை சுரக்கா பின் மாலிக் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதரே! இது எங்களுக்கு மட்டும் உரியதா? அல்லது இனி எல்லோருக்கும் பொதுவானதா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இது இனி என்றைக்கும் (எல்லோருக்கும்) உரியதாகும் என்று பதிலளித்தார்கள்.

பலியிடுதலும் மழித்தலும்





பிறகு பலியிடுமிடத்திற்கு திரும்பிச் சென்று 63 ஒட்டகங்களை தமது கையால் அறுத்தார்கள்.மீதமுள்ளவற்றை அலீ (ரலி)யிடம் கொடுத்ததும் அவர்கள் அதை அறுத்தார்கள். தமது பலிப் பிராணிகளில் அலீ (ரலி) அவர்களைக் கூட்டு சேர்த்துக் கொண்டார்கள்.

(அறுக்கப் பட்ட) ஒவ்வொரு ஒட்டகத்திலிருந்தும் ஒரு துண்டை கொண்டு வரச் செய்தார்கள். அவை ஒரு சட்டியில் போடப் பட்டு சமைக்கப் பட்டது. அதன் இறைச்சியை அவ்விருவரும் சாப்பிட்டு, அதன் ஆனத்தையும் இருவரும் குடித்தனர்.

தமது மனைவியர் சார்பில் ஒரு மாட்டைப் பலியிட்டார்கள். (ஆதாரம் புகாரி-5122)
நாங்கள் ஒட்டகத்தை அறுத்தோம். ஒட்டகம் (ஒவ்வொரு) ஏழு பேர்கள் சார்பில் அறுக்கப் பட்டது. அதுபோல் மாடும் (ஒவ்வொரு) ஏழு பேர்கள் சார்பில் அறுக்கப் பட்டது. நாங்களும் (அது போல்) ஒட்டகத்தில் ஏழு பேர்களாகக் கூட்டு சேர்ந்து கொண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், “மாட்டில் கூட்டு சேரலாமா?” என்று கேட்கப் பட்ட போது, “(இந்த விஷயத்தில்) மாடும் (கூட்டுச் சேர்ந்து கொடுக்கப் படும்) பலிப் பிராணி தான்” என்று பதிலளித்தார்கள்.

நாங்கள் மினாவில் உள்ள மூன்று நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பலியிடப்பட்ட ஒட்டகம் மற்றும் மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடாமல் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களுக்கு (சாப்பிட) அனுமதியளித்து, “சாப்பிடுங்கள், சேமியுங்கள்” என்று சொன்னார்கள். அது போன்று நாங்கள் சாப்பிட்டோம். மதீனா வரும் வரை சேமித்து வைத்தோம்.குற்றமில்லை! குற்றமில்லை!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலியிட்டு விட்டு, தலை முடியை மழித்துக் கொண்டார்கள். மக்கள் பலியிடும் வரை பலியிடும் தினத்தில் மினாவிலேயே இருந்தார்கள். அன்றைய தினம் ஏதாவது ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக செய்து விட்ட மற்றொரு செயலைப் பற்றி அவர்கள் வினவிய போதெல்லாம் அவர்கள், “குற்றமில்லை, குற்றமில்லை” என்று பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.
அவ்வாறிருக்கையில் அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் பலியிடுவதற்கு முன்பு தலையை மழித்து விட்டேனே?” என்று கேட்டார். “குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.
வேறொருவர் வந்து “நான் கல்லெறிவதற்கு முன்பு தவாஃப் செய்து விட்டேன்” என்று வினவினார். “குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.
“நான் பலியிடுவதற்கு முன்பு தவாஃப் செய்து விட்டேன்”’ என்று வினவினார். “நீ இப்போது பலியிடு, குற்றமில்லை” என்று கூறினார்கள்.

பிறகு வேறொருவர் வந்து, “கல்லெறிவதற்கு முன்னர் பலியிட்டு விட்டேன்” என்று வினவினார். “(இப்போது) கல்லெறி, குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், “நான் இந்த இடத்தில் அறுத்திருக்கின்றேன். இந்த (இடத்தில் தான் அறுக்க வேண்டும் என்றில்லை) மினா முழுவதுமே அறுக்குமிடம் தான்” என்று சொன்னார்கள்.
மக்காவுடைய அனைத்து அகன்ற பாதைகளும் பாதை தான். பலியிடக்கூடிய இடம் தான். எனவே நீங்கள் உங்கள் கூடாரங்களிலிருந்தே அறுத்துக் கொள்ளுங்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பத்தாம் நாள் பேருரை
நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (10ம்) நாளில் உரையாற்றினார்கள். அப்போது, “எந்த நாள் மாபெரும் புனிதம் நிறைந்த நாள்?” என்று கேட்டார்கள். “இந்த நாள் தான்” என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர். “எந்த மாதம் மாபெரும் புனிதம் நிறைந்த மாதம்?” என்று வினவினார்கள். “இந்த மாதம் தான்” என்று தோழர்கள் பதிலளித்தனர். “எந்த ஊர் மாபெரும் புனிதம் நிறைந்த ஊர்?” என்று வினவினார்கள். “இந்த ஊர் தான்” என்று தோழர்கள் பதிலளித்தனர். “(புனிதமிக்க) இந்த ஊரில், இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அது போல் உங்கள் உயிர்களும், உங்கள் உடைமைகளும் புனிதம் வாய்ந்தவைகளாகும். நான் (தூதுச் செய்தியை) எடுத்துச் சொல்லி விட்டேனா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ஆம் என்றனர். “யா அல்லாஹ், நீயே சாட்சியாக இரு” என்று சொன்னார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் அமர்ந்து கஅபாவிற்கு வந்தார்கள். அனைவரும் தவாஃப் செய்தனர்.
(ஹஜ் கிரான் அடிப்படையில் இஹ்ராம் அணிந்த) அவர்கள் ஸஃபாவிற்கும் மர்வாவிற்கும் இடையில் ஸஈ செய்யவில்லை.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் லுஹர் தொழுதார்கள்.
பின்னர் ஜம்ஜம் நீரை புகட்டிக் கொண்டிருந்த அப்துல் முத்தலிப் கிளையாரிடம் வந்து, “அப்துல் முத்தலிப் கிளையினரே, (தண்ணீரை) இறையுங்கள். (நானும் நீர் புகட்ட விரும்புகின்றேன். ஆனால் நான் நீர் புகட்டுவதைக் கண்டு இதையே வணக்கம் என்று கருதி மக்களும் போட்டி போட்டுக் கொண்டு நீர் புகட்டத் துவங்கி விடுவார்கள்) நீர் புகட்டுவதில் மக்கள் உங்களை மிகைத்து விடுவார்கள் என்று நான் அஞ்சவில்லையெனில் உங்களுடன் சேர்ந்து தண்ணீர் இறைத்திருப்பேன்” என்று சொன்னார்கள்.
அப்துல் முத்தலிப் கிளையினர் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு வாளி தண்ணீர் கொடுத்தார்கள் அதிலிருந்து அவர்கள் பருகினார்கள்.

ஆயிஷா (ரலி) சம்பவத்தின் முழு விபரம்

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. தவாஃபைத் தவிர ஹஜ்ஜின் மற்ற அனைத்து வணக்கங்களையும் செய்தார்கள்.ஆயிஷா (ரலி) துப்புரவானதும் கஅபாவில் தவாஃப் செய்து ஸஃபா, மர்வாவில் ஸஈ செய்தார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் சேர்த்து முடித்து விட்டு இஹ்ராமைக் களைந்து விட்டாய்” என்று (ஆயிஷா-ரலி-யிடம்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் கொண்டு செல்கையில் நான் உம்ராவை மட்டும் கொண்டு செல்ல வேண்டுமா?” என்று ஆயிஷா (ரலி) வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களுக்குக் கிடைக்கின்ற (ஹஜ், உம்ராவுக்கான) நன்மை உனக்கும் உண்டு” என்று சொன்னார்கள்.“நான் (உம்ராவுக்கான) தவாஃப் செய்யவில்லை. அதற்குள் ஹஜ்ஜை முடித்து விட்டேனே என்று என்னுள் ஓர் உறுத்தல் இருந்து கொண்டிருக்கின்றது” என்று ஆயிஷா (ரலி) சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மென்மையான மனிதராகத் திகழ்ந்தார்கள். ஆயிஷா (ரலி) எதையும் விரும்பினால் (மார்க்கத்துக்கு முரணில்லாத) அவரது விருப்பத்துக்குத் தக்க நடந்து கொள்வார்கள்.(ஆயிஷா (ரலி)யின் சகோதரரிடம்) “அப்துர்ரஹ்மானே! ஆயிஷாவை அழைத்துச் சென்று தன்யீமிலிருந்து உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அழைத்து வா” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே ஆயிஷா (ரலி) ஹஜ்ஜுக்குப் பின் உம்ரா செய்த வண்ணம் (மக்கா) வந்தார்கள். இது தஷ்ரீக் (எனும் 11, 12, 13 ஆகிய) நாட்களின் கடைசி இரவில் நடந்ததாகும்.
மக்கள் நபி (ஸல்) அவர்களை நெரிசலில் சிக்க வைத்த காரணத்தால் மக்கள் தம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் (மக்களை) கண்காணிப்பதற்காகவும், மக்கள் தம்மிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்பதற்காகவும் தமது கைத்தடியால் ஹஜ்ருல் அஸ்வதைத் தொட்டு(முத்தமிட்டு)க் கொண்டு தமது வாகனத்தில் அமர்ந்தவாறே தவாஃப் செய்தார்கள்.

ஒரு பெண் தன்னுடைய குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிக் காட்டி, “அல்லாஹ்வின் தூதரே! இந்தக் குழந்தைக்கும் ஹஜ் இருக்கிறதா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம், உனக்குக் கூலி உண்டு” என்று பதிலளித்தார்கள்.

எம். ஷம்சுல்லுஹா(THANKS 2 TNTJ.NET)
Related Posts Plugin for WordPress, Blogger...