(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Showing posts with label அமைதி. Show all posts
Showing posts with label அமைதி. Show all posts

Monday, February 8, 2010

மார்க்க சகோதரர்களே அல்லாஹ்வுக்காக! தங்கள் வளைத்தள வதந்திகள் தவிர்த்திடுங்களேன்

ஒருவரையொருவர் அவதூறு பரப்பாதீர்கள்?

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே மார்க்க விஷயத்தை அறிந்துக்கொள்ள நாம் இணையதளங்களை நாடுகிறோம் ஒருபக்கம் நசாராக்கள் இஸ்லாத்தின் பெயரால் அவதூறு பரப்புகிறார்கள் மறுபக்கம் மாற்றுமதத்தவர்கள் இஸ்லாத்தை பற்றி அவதூறு பரப்புகிறார்கள் அவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பதே தெரியாமல் இருக்கிறார்கள் எனவே நாம் அவர்களை அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்று விட்டுவிடுகிறோம்

ஆனால் நம்முடைய கண்ணியமிக்க இஸ்லாத்தை பரப்பும் மார்க்க இணையதளங்களை பார்வை யிட்டால் அங்கே மார்க்க அறிஞர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி வசை பாடிக்கொண்டும், கிண்டல் அடித்துக்கொண்டும் கேவலமான ஒரு சமுதாய சிந்தனையை தூண்டுகிறார்களே இது நபிகளார் காட்டித்தந்த முறையா? இதற்காகத்தான் இவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து மார்க்க கல்வி போதிக்கப்பட்டதா?


ஏதோ ஒரு மார்க்க சகோதரனோ அல்லது அவனது தோழர்களோ தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையை உரைக்கிறார்கள் தவறை எதிர்த்து குரள்கொடுக்கிறார்கள் அவர்கள் கூறுவது தவறாக இருந்தால் நேரடியாக அவர்களை அணுகி தகுந்த ஆதாரங்களுடன் அழகிய முறையில் விவாதம் நடத்தாலாம் ஆனால் வாதியோ பிரதிவாதியோ நேரடியாக விவாதத்திற்கு வர மறுத்தாலோ அல்லது காலம் தாழ்த்தினாலே தங்கள் மீது சுமத்தப்பட்ட கலங்கத்தை மக்களுக்கு எடுத்துக்கூறுவதில் தவறில்லை

ஆனால் அதை தங்களுடைய இணையதளங்களில் கண்ணியமற்ற முறையில் அசிங்கமான ஏன்? நாக்கு கூசும் விதமாக கேடுகெட்டவன், பொய்யன், புரோகித மவ்லவி, புத்திதடுமாறிடிச்சி, நினைவு திரும்பிடிச்சி, கிறுக்குப் பையன், மடையன் என்று ஈனத்தனமான வார்த்தைகள் பிரயோகம் எதற்கு? இப்படிப்பட்ட வார்த்தைகள்தான் 7 ஆண்டுகள் பயிலும் ஆலிம்கல்வியல் போதிக்கப்படுகிறதா? இதையெல்லாம் கூறுவது மார்க்க சிந்தனைவாதிகளுக்கும், ஏகத்துவவாதிகளுக்கும் கூடுமா? மாற்றுமதத்தவர்க்ள நம்முடைய கூத்துக்களை கண்டால் ஆனந்தமாக ரசிப்பார்களே என்று கூட நினைவுக்கு வருவதில்லையே இவர்களுக்கு நினைவு திரும்பவில்லையா?! சாதாரண மனிதன் குர்ஆன்-ஹதீஸ்களை படித்தாலேயே பிறரை திட்டக்கூடாது வசைபாடக்கூடாது என்பதை உணர்கிறானே ஆனால் இந்த மார்க்க அறிஞர்களுக்கு மட்டும் புரியாமல் போவது ஏன்?

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல்குர்ஆன் 104-1)

இதோ அவதூறு பரப்புவது பற்றி அல்லாஹ்வின் எச்சரிக்கைகள்

ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார். (அல்குர்ஆன் 33-69)


அவதூறு பரப்புபவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம்

இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). (அல்குர்ஆன் 4-156)


புறம்பேசி மனிதனின் மாமிசத்தை சாப்பிட வேண்டாமே!

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புதம்முடையவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் 49-12)


என் கண்ணியமிக்க மார்க்க சகோதரர்களே நபிகளார் (ஸல்) சஹாபாக்களுடன் செய்துக்கொண்ட அழகான ஒப்பந்தத்தை பாருங்களேன்!

‘அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது.

மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாம் விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 2, எண் 18)


முடிவுரை

கண்ணியமிக்க என் மார்க்க அறிஞர்களே! இனியாவது திருந்திக் கொள்ளுங்கள் மார்க்க அறிவுள்ள உங்களுக்க மார்க்க அறிவற்ற மக்கள் அறிவுரை கூறும் விதமாக நடந்துக் கொள்ளாதீர்கள், உங்கள் உரிமைக்குரளை வெளிப்படுத்தவும் உங்கள் மீது கூறப்பட்ட அவதூறுகளையும் எடுத்துக்கூற எந்தவித தடையுமில்லை ஆனால் தடையை மீறி வார்த்தைப் பிரயோகம் செய்யாதீர்கள் உங்கள் எழுத்துக்களால் உங்கள் சுவனத்தின் பாதைகளை அடைத்துக்கொள்ளாதீர்கள் இதே ஒரு அழகிய நபிமொழியின் மூலம் இந்த கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்!


நான் அபூ வாயிலிடம் முர்ஜிஆ பற்றிக் கேட்டபோது, ‘ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம்; அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறை நிராகரிப்பாகும்‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்‘ என அப்துல்லாஹ் வழியாக என்னிடம் கூறினார்” என ஜுபைத் அறிவித்தார்.

(குறிப்பு) இறை நம்பிக்கையாளர் செய்யும் எந்தப் பாவத்திற்கும் தண்டனை கிடையாது என்று சொல்லும் வழி கெட்ட பிரிவினர் முர்ஜிஆ எனப்படுவர். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 2, எண் 48)

அல்லாஹ் மிக அறிந்தவன்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

NAGOREFLASH// thanks 2 http://islamicparadise.wordpress.com

Monday, November 9, 2009

இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்



மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன. "இவ்வாறு இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள் இருப்பது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச் சக்தியாகத் திகழ்கிறது" என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையான இஸ்லாத்தை பிரிட்டிஷ் வெள்ளையர்களுக்கு விளக்கிச் சொல்லும் பெரு முயற்சியில் உள்ள பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்ஸில், பிரிட்டனின் முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் அஹ்மத் டோப்ஸன் என்பாரைத் தமது புதிய குழுவின் தலைவராக நியமித்துள்ளது.
முன்னாள் பிபிசி இயக்குனர் யஹ்யா பிரிட் (ஜொனாதன் பிரிட்), கிருத்துவத்தில் இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் பற்றிய தமது தொடர் ஆய்வுகள் மூலம் இஸ்லாத்தைத் தழுவிய புதிய முஸ்லிம்கள் எண்ணிக்கை மொத்தம் 14,200 என்று தீர்மானித்துள்ளார். இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பற்றிக் சென்ற வாரம் குறிப்பிடுகையில், "அமெரிக்காவில் மால்கம் எக்ஸ் (Malcom X) இஸ்லாத்தில் இணைந்து அமெரிக்கக் கருப்பினத்தவர்களுக்கு நலன் சேர்த்தார். மேலும், இஸ்லாத்தைத் தற்போது இங்குப் பார்க்கப் படும் அந்நியத் தன்மை போலல்லாமல், ஒரு தேசிய அளவிலான மார்க்கமாக அங்கு மாற்றியிருந்தார். அதுமட்டுமின்றி, இஸ்லாத்தின் சமநிலையான சீரமைப்பு, உறுதியான நம்பிக்கை, அதன் அழுத்தமான ஆன்மீகம் ஆகியன தமக்கு எவ்வாறு மனநிறைவைத் தந்தன என்பதையும் அவர் விளக்கிச் சொன்னார். பிரிட்டனிலுள்ள வெள்ளையர்களை இஸ்லாத்தின்பால் இலகுவாகக் கொண்டுவர அவரைப் போன்ற ஒரு தலைவர் இங்குத் தேவை" எனும் கருத்தை பிரிட் வலியுறுத்தினார்.
ஹெர்பர்ட் ஹென்ரியின் கொள்ளுப் பேத்தியான எம்மா கிளார்க்கும் இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். முன்பு வேல்ஸ் இளவரசரின் தோட்டங்களின் வடிவமைப்புப் பொறுப்பில் இருந்த இவர், தற்போது ஒரு பள்ளிவாசல் தோட்டத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் உரையாடும்போது, "நான் இஸ்லாத்தை ஏற்றது சந்தேகத்தின் பிடியில் சிக்கியிருந்த மேற்கத்தியக் கலாச்சர நெறிமுறைகளில் இருந்து மிகவும் வெறுப்புற்றதாலும் அதனைச் சுற்றியுள்ள அசிங்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே" என்று குறிப்பிட்டார். இவருடைய பாட்டனார் ஹெர்பர்ட் 1908 முதல் 1916 வரை பிரிட்டனுடைய பிரதமராக இருந்து, முதல் உலகப் போரில் பிரிட்டனுடைய வெற்றி வாகைக்குத் தலைமை வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இஸ்லாத்தைத் தழுவியவர்களில் பெரும்பாலோர் சார்ல்ஸ் ஈஸ்டன் எழுதிய 'Islam and the Destiny of Man' (இஸ்லாமும் மனித விதியும்) எனும் புத்தகத்தினால் மிகவும் ஈர்க்கப் பட்டவர்கள் ஆவர். "எனக்கு வரும் ஆயிரக்கணக்கான கடிதங்களில், மனிதர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றிடும் சமகாலக் கிருத்துவத்தின் நடைமுறையில் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அதுவல்லாத இதைப் போன்ற ஓர் உண்மை மார்க்கத்தைத்தான் தேடினோம் என்ற கருத்து பரவலாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது" என்று ஈஸ்டன் கூறுகிறார்.
இஸ்லாத்தைத் தழுவிய The earl of Yarbrough (எர்ல் ஆஃப் யார்ப்ரௌஹ்) எனும் லின்கன்ஷைரிலுள்ள 28000 ஏக்கர் நிலச்சுவான்தார் ஒருவர் பத்திரி்கையாளர்களிடம் பேசும்போது, "நான் எனது பெயரை அப்துல் மத்தீன் என்று மாற்றியுள்ளேன். இஸ்லாத்தை ஆய்வு செய்யுங்கள்; அதன் அழகிய தன்மையை நீங்கள் உணர்வீர்கள் என்பதே நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தியாகும்" என்று கூறினார். மாண்புமிகு அரசியவர்கள் பக்கிங்கம் ( Buckingham Palace) அரண்மனையில் வேலை செய்பவர்களுக்கு வெள்ளிக்கிழமைத் தொழுகையை நிறைவேற்றிட நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் என்பது மகிழ்வளிக்கும் தகவலாகும்!.
இங்குக் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் பிரிட்டன் அரசாங்கத்தின் நேரடித் தொடர்பில் உயர்பதவிகளும் அந்தஸ்துகளும் தலைமைத்துவமும் அதிகாரமும் பெற்று நாடாளுமன்ற ஆட்சி அவைகளில் அமர்ந்திருந்த செல்வந்த மூதாதையரின் வழிவந்தவர்கள் ஆவார்கள். அவர்களது நாடு எப்போதும் வேறு யாராலும் ஆட்சி செய்யப் படாத ஒரு நாடு. அப்படிப் பட்டவர்களின் வழித்தோன்றல்களுக்கு என்னதான் நேர்ந்தது? அவர்களை அதிகாரம் மூலம் பலவந்தமாக இஸ்லாத்தைத் தழுவிட எவரும் நிர்ப்பந்திக்க வில்லை!
"எங்களுடைய உள்ளங்களுக்குக் கிடைக்கப்பெற்ற விவரிக்க இயலாத மன நிறைவின் வெளிபாட்டின் விளைவே எங்களது இஸ்லாத்தின் தேர்வாகும். இவ்வளவுக்கும் பின்னர் வெட்கம், பச்சாதாபம், தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களோ பிறர் என்ன நினைப்பார்கள் என்ற அச்ச உணர்வோ எனது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விடும் என்ற எண்ணமோ என்னை சக ஊழியர்களுக்கு மத்தியில் ஜும்மா தொழுகை நிறைவேற்றிடாமல் தடுத்திட முடியாது - அதுவும் அரசாங்கத் தலைமையகமாகிய பக்கிங்கம் பாலஸில் எனக்குத் தொழுகின்ற வசதி செய்து கொடுக்கப் பட்டு இருக்கின்றது எனும் நிலையில்" எனக் கூறுகின்றார் அரண்மனை ஊழியர்களில் ஒருவர்.
கள ஆய்வு : முஹம்மத் மாலிக் முஹம்மத் ஆரிஃப்
தமிழாக்கம் : இபுனு ஹனீஃப்

Wednesday, October 7, 2009

அமைதி எங்கே?

நீரின்றி அமையாது உலகம் !

ஆனால் போரின்றி அமையவில்லையே அது ஏன்?

அநீதிக்கு ஆதரவாய் போர் தொடுக்கும்

இனத்தின் வேர் அறுக்க யார் எழுந்தாலும்

அது வெற்றியின் எழுச்சியே !

புனித பூமியைப் படைத்த இறைவன்,

பொறுமையையும் சேர்த்துதானே படைத்தான் !

பொல்லாத உலகத்தில் முள்ளாக பல மதங்கள்,

இல்லாத போதனையை எடுத்துரைக்கும் அவலத்தால்,

சொல்லாலும் செயலாலும் சுயபுத்தி இழந்துவிட்டு,

பல்லாயிரம் கலவரங்கள் பாருக்குள் ஊடுறுவ,

எல்லா விதத்திலும் இயன்றவரை ஊதிவிட்டு,

கல்லா மாக்களாகி கடவுள் பயம் சிறிதுமின்றி,

நல்லோர் பலரை நாட்டினிலே மாய்த்துவிட,

போருக்கு வழிவகுத்து பொன்னான உயிர் பறித்து

போர்க்களத்தின் தர்மத்தை புதைகுழிக்குள் தள்ளி விட்டு,

புகலிடம் தேடும் இப்பூவுலக மானுடமே !

இனியேனும் சிந்தித்து இதற்கொரு தீர்வு செய்வீர் !

இறை படைத்த இவ்வுலகில் இருக்கும் அனைவருமே,

"இறைவன் ஒருவன்" என்ற ஏகத்துவ கொள்கையினை,

இங்கிதமாய் பின்பற்றி இணைந்து வாழ்ந்தால்,

எல்லோரும் சோதரராய் இணையற்ற குடும்பமாகி,

ஒருமித்த கருத்துடனே ஒற்றுமை புன்னகையில்,

ஓர் தாய் மக்கள்போல் உவகை துள்ளும் வண்ணம்

உன்னதமாய் வாழ ஒரு வழியும் பிறந்திடுமே !

இம் மனமாற்றம் என்றேனும் நிகழ்ந்து விட்டால்,

இவ்வுலக வளமெல்லாம் எல்லோருக்கும் சொந்தமாகி,

ஏற்றத் தாழ்வற்ற இறைகூறும் நல்லுலகம்,

எளிதாய் தோன்றிவிடும் இறையருள் எவர்க்கும் கிட்டும்!

மனித நேயம் மலர்ந்து மக்கள் எல்லாம் ஒன்றாகி,

மமதையெனும் போர் ஒழிந்து மகிழ்ச்சியுள்ள உலகமாகி,

ஆர்ப்பரிக்கும் கடலடங்கி அன்றாடம் கரையைத்தொட்டு,

அமைதியை தேடுதல்போல் -- இந்த அவனியிலே ,

அமைதி தென்றல் வந்து அனைவரின் மனம் தொட்டால்,

அமைதி கிட்டிடுமே ! அறவழியும் தழைத்திடுமே ! !

எம்.அப்துல் ரஹீம், கோவை.
Related Posts Plugin for WordPress, Blogger...