(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Showing posts with label சத்தியமார்க்கம். Show all posts
Showing posts with label சத்தியமார்க்கம். Show all posts

Saturday, August 9, 2014

நான் இஸ்லாத்தை தழுவ வேண்டும் .. ஆனால்...?

சில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர்,  இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்……
முன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமோ? என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை.
இந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக. இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.
அவர் சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன் நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை காணவும்).

பணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான் இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால்……………………….
“எனக்கு தெளிவாகி விட்டது. குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகின்றது.
இப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும் மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை,
என் மனைவியும் இஸ்லாத்தை தழுவ வேண்டும்.
அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும்.
எனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை தீர வேண்டும்.

என்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென முடிவெடுத்தேன்.
இது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.
என்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,
“எனக்கென்னவோ நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது”
இதனை கேட்டவுடன் பேசுவதை சற்று நேரம் நிறுத்திவிட்டேன்.
ஆம்… நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே பிரதிபலித்தது.
“ஆம், நான் ஏற்றுக்கொண்டேன்”
அவ்வளவுதான்…அந்த சமயத்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன்.
மனதால் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன், அதிகாரப்பூர்வமாக இன்னும் இல்லை என்பது தான் என்னுடைய விளக்கமாக இருந்தது. ஆனால் என்னுடைய இந்த அணுகுமுறை அவருக்கு மேலும் குழப்பத்தையே தந்தது. அவரை இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டுமென்ற என்னுடைய முயற்சியும் இதனால் தள்ளிப்போனது.
நாட்கள் சென்றன….
இந்த நேரத்தில் முஸ்லிம்களுடன் தொழக்கூடிய வாய்ப்பு அமைந்தது. அது ஒரு வார இறுதி நாள். ஷாப்பிங் முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த மசூதியில் இருந்து தொழுவதற்கான அழைப்பு விடப்பட்டது. அவ்வளவு தான், கடைகள் அடைக்கப்பட்டன. தெருவோர கடைகளின் பொருட்கள் துணிகளால் மூடப்பட்டன. வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் மக்கள் மசூதியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அது என்னை மிகவும் கவர்ந்தது.
முஸ்லிம்களின் தொழுகை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்வதென முடிவெடுத்து விட்டேன்.
பள்ளிவாசலுக்கு சென்றவர்களை பின்தொடர்ந்தேன். நான் போவதற்குள் தொழுகையில் இரண்டு வரிசைகள் பூர்த்தியாகி விட்டன. வரிசையில் மக்கள் தோளோடு தோளாக நெருங்கி நின்றார்கள். அவர்களுடன் நானும் என்னை ஐக்கியப்படுத்தி கொண்டேன். அந்த வரிசையில் என்னோடு பல சிறுவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.
எனக்கு அருகில் இருந்தவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்று ஓரக்கண்ணால் கவனித்தபடியே இருந்தேன். அவர்கள் எப்படி குனிந்து நிமிர்ந்தார்களோ அப்படியே நானும் செய்தேன். அவர்களை அப்படியே பின்பற்றினேன்.
எனக்கு நன்றாக தெரியும், இவர்கள் என்னை விட அதிகமாக மனதை ஒருநிலைபடுத்துகின்றார்கள் என்று. அவர்கள் தொழுகையில் தங்களுக்குள் என்ன சொல்லிக்கொள்கின்றார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு மனதில் அப்போது என்ன வார்த்தைகள் தோன்றினவோ அதனைக்கொண்டு இறைவனை தொழுதேன்.
“இறைவா, என் விருப்பம் நிறைவேற உதவி செய். என்னுடைய மனைவிக்கு நேர்வழி காட்டு. உன்னிடத்தில் மட்டுமே நான் உதவி கோருகின்றேன். உன்னால் படைக்கப்பட்டு இன்று கடவுள்களாக இருக்கின்றனரே, அந்த மனிதர்களிடத்தில் அல்ல”
இதனை நான் ஒரு மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடன் தொழுது கொண்டிருந்தார்களே அவர்கள் அளவுக்கு நான் இறைவனிடத்தில் தொடர்பு கொண்டிருந்தேனா என்று தெரியாது. ஆனால் தொழுகை முடிந்தவுடன் ஒருவிதமான மன அமைதியை உணர்ந்தேன்.
என்னுடைய காலணிகளை அணிய சென்றேன். ஷூவையும், சாக்சையும் எடுத்த போது இரு சிறுவர்கள் என் முன்னால் வந்து நின்றார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, எனக்கு அருகில் நின்று தொழுதவர்கள்.
“Anta Muslim? Limada tusalli? ‘adam wa’dha al yedduka al yameen ala shimal.” (நீங்கள் முஸ்லிமா? நீங்கள் எதற்காக தொழுகின்றீர்கள்? தொழும்போது வலது கையை, இடது கைக்கு மேல் வைக்க வேண்டும்)
ஆம், அந்த சிறுவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நான் முஸ்லிமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விட்டது.
பிறகு அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்தார்கள். எப்படி ருக்கூ (How to Bow) செய்ய வேண்டுமென்று, எப்படி சஜிதா (How to Prostrate) செய்ய வேண்டுமென்று மற்றும் எப்படி கால்களை வைக்க வேண்டுமென்று. அவர்கள் அதோடு விடவில்லை. அவர்களை பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்தார்கள். எனக்கு இன்னும் நிறைய பயிற்சி வேண்டுமென்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.
அவர்களது வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்கள். நான் வீட்டின் வெளியிலேயே நின்று விட்டேன். சங்கடம் தான் காரணம். முன்னே சென்றே அந்த சிறுவர்களில் ஒருவன் நான் தயங்கி நிற்பதை பார்த்து என்னருகில் வந்து “come on” என்று சைகை செய்து என்னை உள்ளே அழைத்து சென்றான். அங்கே 15-16 வயது மதிக்கத்தக்க டீனேஜ் இளைஞர் ஒருவர் என்னை வரவேற்றார். அவர் இந்த சிறுவர்களின் அண்ணனாம்.
என்னை மிக அன்பாக உபசரித்தார். அரேபிய காபியும், சில பேரித்தம் பழங்களையும் கொடுத்தார். ஆனால் எனக்கு புரியவில்லை, என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தார்கள் என்று. வீட்டை சுற்றிமுற்றி பார்த்தேன். இந்த சிறுவர்களை தவிர வேறு யாருமில்லை. பேச்சை ஆரம்பித்தேன்.
“உங்கள் தாய், தந்தையர் எங்கே?”
நான் கேட்ட கேள்விக்கு அவரால் சைகையால் பதில் சொல்ல முடியவில்லை. சற்று பொறுங்கள் என்பது போன்று சைகை செய்தார். நான், இருவரும் வெளியே போயிருப்பார்கள் போல என்று நினைத்து கொண்டேன்.
அப்போது மற்றொரு டீனேஜ் இளைஞர் வீட்டிற்கு வந்தார். இவரும் அவர்களது சகோதரர் தான். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். பின்னர், உள்ளே வந்த அந்த இளைஞர் என்னைப் பார்த்து கேட்டார்.
“அமெரிக்கி?” (அமெரிக்கரா?)
“இல்லை, நான் பிரிட்டிஷ்”
“காபி அருந்துகின்றீர்களா?”
இல்லை, நான் ஏற்கனவே அருந்தி விட்டேன் என்று சொல்வது போல தலையசைத்தேன்.
“Tawadha” (உளு செய்யலாம் வாருங்கள்)
உளு (Wudu is the Islamic act of washing parts of the body using water) செய்ய சொல்லிக்கொடுத்தார்.
“வாருங்கள் தொழப்போகலாம்”…
மாலை நேர தொழுகைக்காக கிளம்பினோம்.
“கையை உயர்த்துங்கள்” என்று சொல்லியபடியே என்னுடைய வலது கையை மேலே எழுப்பினார். “பிறகு இப்படி வையுங்கள்” என்று என்னுடைய இடது கையின் மேல் வலது கையை வைத்தார். பிறகு இரு கைகளையும் மார்பில் படியுமாறு மேலே தூக்கினார்.
நாங்கள் நடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம். ரோட்டின் நடுவில் நின்று கொண்டே அடுத்த பாடத்தை சொன்னார், “நான் செய்வதை போல செய்யுங்கள்” என்று இரு கைகளையும் உயர்த்தி காதுகளுக்கு அருகில் வைத்து கொண்டார்.
பள்ளிக்குள் நுழைந்தோம். அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டேன். இப்போது முன்பை விட சரியான முறையில் தொழுதேன்.
பள்ளியிலிருந்து திரும்பியவுடன் இரவு நேர உணவு பரிமாறப்பட்டது. நான் மறுபடியும் கேட்டேன்,
“உங்கள் அம்மா எங்கே?”
அவர் தலையசைத்து விட்டு, தூங்குவது போல சைகை காட்டி கீழே பூமியை காட்டினார்.
“Baba wa mama fiy mout, yarhamhummullah. Sister make” (மரணம் எங்கள் பெற்றோரை தழுவிவிட்டது. அவர்கள் இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டுமாக. என் சகோதரி தான் உணவு தயாரித்தார்”
அப்போது தான் புரிந்தது, இவர்கள் பெற்றோரை இழந்த சிறுவர்கள் என்று. குடும்பத்தை காக்கவேண்டிய பொறுப்பை இந்த இளைஞரும் அவருடைய சகோதரியும் தான் ஏற்றிருக்கின்றார்கள். அந்த இளைஞனின் ஆங்கிலம் தெளிவாக இல்லை. அதனால் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.
“உங்களுக்கு இஸ்லாம் பிடித்திருக்கின்றதா?” அவர் கேட்டார்.
“ஆம்”
“பிறகு ஏன் நீங்கள் முஸ்லிமாகவில்லை”
“எனக்கு டைம் தேவை”
அவர் எனக்கு என் வீடு வரை லிப்ட் கொடுத்தார்.
“உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் கேளுங்கள். எங்கள் வீட்டிற்கு எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்”
நான் அவருக்கு நன்றி கூறினேன்.
அந்த குடும்பத்தின் அன்பு என்னை விட்டு விலகவில்லை. அவர்கள் என் மீது காட்டிய அக்கறையால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். எனக்கு நேர்வழி காட்ட அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டினேன்.
இதற்கு பிறகு என் வாழ்வில் நுழைந்த மனிதர் என்னால் மறக்க முடியாதவர். அவர் பெயர் அலி ஜமீலி. ஈரான் நாட்டை சேர்ந்த அமெரிக்கர். உம்ரா (The Umrah is a pilgrimage to Mecca performed by Muslims that can be undertaken at any time of the year) செய்வதற்காக சவுதி அரேபியா வந்திருந்தார்.
எனக்கு இஸ்லாத்தை பற்றி தெரியுமா? என்று கேட்டார். உங்கள் புனித நூலை நான் படித்திருக்கின்றேன் என்று கூறினேன்.அவரது அடுத்த கேள்வி நான் எதிர்பார்த்ததுதான்…
“நீங்கள் முஸ்லிமாகவில்லையா?”
என்னுடைய மூன்று நிபந்தனைகளைப் பற்றி கூறினேன்.
“உங்களுக்கு என்ன பைத்தியமா?, அல்லாஹ்விடம் நிபந்தனைகள் விதிக்க கூடாது. இப்போதே சஜிதா செய்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். இஸ்லாம் தான் இறைவனின் மார்க்கம் என்பதில் உங்களுக்கு ஐயங்கள் இல்லையென்றால் இப்போதே ஷஹாதா (Shahada is the testimony of faith indicating belief in one God, Allah, who has no partners and belief that the Prophet Muhammad (peace be upon him) is his final prophet and messenger) சொல்லுங்கள்”
“நான் ஏன் நிபந்தனைகள் போடக்கூடாது?, என் குடும்பமும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அது தவறா?”
“இங்கே பாருங்கள். இறைவன் யாரை நாடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுகின்றான். உங்கள் குடும்பத்தை காரணமாக காட்டி அவனுடைய வழிகாட்டுதலை அலட்சியப்படுத்துகின்றீர்களா?. இவ்வளவு ஏன்…நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கூட இறைவன் நேர்வழி காட்டவில்லையே!!! நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்ட பிறகும் கூட அவர்களது தந்தையின் சகோதரர் முஸ்லிமாகவில்லையே”
எனக்கு தெளிவாக விளக்கினார் ஜமீலி. ஆனால் நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.
“நான் என் குடும்பத்தினருடன் பேச வேண்டும்”
“நீங்கள் அதற்கு முன்னே இறந்து விட்டால் என்ன செய்வீர்கள்?. நீங்கள் இஸ்லாம் என்னும் மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்ட பிறகு அதனை நிராகரித்து விட்டு இறந்தால் நீங்கள் செல்லும் இடம் நரகம் தான். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர் என்பது உங்களுக்கு புரியவில்லையா? உங்களை போல எல்லோருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவதில்லை என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை புறக்கணிக்க போகின்றீர்களா?”
அவருடைய அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது சரிதான். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் நான் ஒரு முட்டாள்.
உடனடியாக நான் அடுத்த அடியை எடுத்து வைத்தேன். இஸ்லாமிய தாவாஹ் சங்கத்திற்கு சென்று, அதிகாரப்பூர்வமாக இஸ்லாத்தை தழுவ என்ன செய்யவேண்டுமென்று கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.
என்னுடன் டேவிட், ஜான் என்ற இரு சகோதரர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள்.
இஸ்லாத்தை தழுவ நினைப்பவர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இஸ்லாம், உங்களுக்கான ஆன்மீக அடைக்கலம்.
இறைவன், நம்பிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான சோதனைகளை தருவான். இவ்வுலகின் உங்கள் பிரச்சனைகளானது தானியங்கியாக தீர்ந்து விடாது. ஆனால் இறைவனின் உதவி இருந்தால் அவை ஒன்றன் பின் ஒன்றாக விலகிவிடும்.
அதனால் உங்களை அர்ப்பணியுங்கள், பிறகு பொறுமையோடு காத்திருங்கள், இறைவன் உங்களுக்கு அதிகமாக அருளை கொடுப்பானென்று”
சுபானல்லாஹ். இந்த பதிவின் மூலம், நான் இஸ்லாத்தை தழுவும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புவது…நீங்கள் இஸ்லாத்தை நன்றாக ஆய்வு செய்யுங்கள். அது தான் உண்மை என்ற நிலைக்கு வந்து விட்டால் எக்காரணத்தை கொண்டும் உங்கள் முடிவை தள்ளிப் போடாதீர்கள். முதலில் உங்களை அர்ப்பணித்து விடுங்கள், பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமென்று துஆ செய்யுங்கள். உங்களுக்காக நாங்களும் துவா செய்வோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
சகோதரர் ஜெறோம் பௌல்டரை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் பின்வரும் முகவரியில் அவரை நீங்கள் சந்திக்கலாம்…
Jerome Boulter,
LTAP Language Teacher,
English Language Centre,
Faculty of Academic Services,
Taibah University,
PO Box 344
Medina 42353,
Kingdom Saudi Arabia
cel. +966 54 3328708
jerboulter@gmail.com

இதனை எழுதும்போது டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களின் ஒரு உரையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது, நீங்களும் பார்த்திருக்கலாம்.
அந்த உரையின் கேள்வி பதில் நேரத்தில் ஒரு சகோதரி,
“குரான் இறைவேதமென்றால், இஸ்லாம் தான் உண்மையென்றால் அதனை ஏற்க ஏன் மக்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றார்கள்?” என்று கேட்க,
அதற்கு டாக்டர். ஜாகிர் நாயக் அவர்கள் பதில் கூறி விட்டு அந்த சகோதரியை பார்த்து கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வியை,
“சகோதரி, நீங்கள் என்னைப் பார்த்து கேட்டீர்கள், இப்போது நான் உங்களைப் பார்த்து கேட்கின்றேன். இஸ்லாத்தை ஏற்கவிடாமல் உங்களை தாமதப்படுத்துவது எது?” என்று கேட்க, அதன் பிறகு நடந்தது உணர்வுப்பூர்வமான நிகழ்வு. அதனை நீங்களே கீழே பார்க்கலாம்.
இறைவன் ஒருவருக்கு நேர்வழி காட்ட நினைத்து விட்டால் யார் தடுப்பது?
இறைவா, இஸ்லாத்தை ஏற்கும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு மனபலத்தை தந்தருள்வாயாக…ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
Please Note:
சகோதரர் ஜெறோம் பௌல்டர் குறித்த இந்த மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. பதிவிற்கு தேவைப்பட்ட தகவல்கள் மட்டும் அவரது வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிற்கு வந்த விதம் குறித்த அவரது கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரது இணையதள முகவரியை பயன்படுத்தவும்.
Reference:
1. Why I became Muslim – http://www.jboulter.com/index_files/Page987.htm

ஆஷிக் அஹ்மத் அ. – எதிர்க்குரல்

Sunday, July 6, 2014

ISIS‬ கிலாபா அறிவிப்பு – நிஜங்களும் நிழல்களும்



************************************************************************
1.தற்போது இஸ்லாமிய உலகின் பிரதான பேசு பொருளாக ஏன் சர்வதேச ஊடகங்கள் உச்சரிக்கும் விஷயம் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எல் பெற்ற வெற்றிகளும் அதை தொடர்ந்த கிலாபத் அறிவிப்புமே திகழ்கிறது என்றால் நிச்சயம் அது மிகையானதல்ல. குறிப்பாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தினர் மத்தியில் மிகப் பெரும் சர்ச்சையையும் இரு வேறு கருத்துருவாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதிற்கில்லை.

2.தற்போது இஸ்லாமிய தேசத்தை அறிவித்துள்ள ஐ.எஸ் மீது இரு வேறு கருத்துகள் இஸ்லாமிய உலகில் நிலவுகின்றன. ஒரு சாரார் உண்மையில் கிலாபத்தை நிலை நாட்டும் கறுப்பு கொடி ஏந்திய நபி (ஸல்) முன்னறிவிப்பு செய்த படையே ஐ.எஸ் என்றும் ஒரு படி மேலாக சென்று அதன் அமீர் பக்தாதி தான் மஹதி என்றும் கருதுகின்றனர். எதிர் தரப்பாரோ இது ஒரு தற்காலிக வெற்றி என்றும் உண்மையில் கிலாபத்தை ஹைஜாக் செய்யும் முயற்சி என்றும் கருதுகின்றனர். மேலும் அமெரிக்கா அல்லது சவூதியின் கைப்பாவை ஐ.எஸ்.ஐ.எஸ் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். உண்மை என்ன என்பதை பார்ப்பதற்கு முன் நடந்தவற்றை முதற்கண் நோக்குவோம்.
சிரியாவில் நடந்தது என்ன ?
********************************
சிரியாவில் 2011ல் பஷார் அசதுக்கு எதிராக ஆரம்பித்த அமைதியான எதிர்ப்பு போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய போராட்டமாக உருப்பெற்றது. எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் சட்டாம்பிள்ளை அமெரிக்கா இதிலும் மூக்கை நுழைத்து ஷியா பஷார் அல் அஸதுக்கு எதிரான சுன்னி போராளிகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தது. ஈரானின் நெருங்கிய துணையாக இருந்த சிரியாவை வீழ்த்த சவூதி அரேபியா, கத்தர் முதலான நாடுகளும் Free Syrian Army எனப்படும் குழுவுக்கு நிதியுதவிகளை வழங்கின.
சூழ்ச்சியாளர்களிலெல்லாம் மிகச் சிறந்த சூழ்ச்சியாளன் அல்லாஹ் என்பதற்கேற்ப இவ்வாய்ப்பை பயன்படுத்தி போராளிகள் மத்தியில் ஐ.எஸ்.ஐ.எஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஜபல் அல் நுஸ்ரா சிரியாவில் நுழைந்து அசாதுக்கு எதிராக போராடி வருகின்றனர். ஜபல் அல் நுஸ்ராவுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்சுக்கும் உள்ள கருத்து வேறுபாடினால் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ்ஸும் நேரடியாக களத்தில் குதித்து ஈராக் பகுதியை ஒட்டியுள்ள சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ளது.
ஈராக்கில் நடந்தது என்ன ?
*************************************************
1.சதாம் ஹுசைன் வீழ்த்தப்பட்ட பிறகு சதாம் ஹுசைன் ஆதரவு படையினர், அமெரிக்காவின் ஆதிக்கத்தை விரும்பாத போராளிகள், அல்காயிதா உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் ஈராக்கில் போராடி வருகின்றன. அல் காயிதாவை தனிமைப்படுத்த சுன்னிகளுக்கு நிதியுதவியும் பின்னாளில் ஈராக் ராணுவத்தில் இணைத்து கொள்ளப்படுவர் என்ற வாக்குறுதியோடும் ஸஹ்வா படைகள் அமெரிக்காவால் 2006ல் உருவாக்கப்பட்டு அல்காயிதா தனிமைப்படுத்தப்பட்டது.
2.ஆனால் நூர் அல் மாலிகி இரண்டாம் முறை ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சுன்னிகள் முழுமையாய் ஓரம் கட்டப்பட்டனர். இதனால் மீண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் வீரியத்துடன் செயல்பட ஆரம்பித்துள்ளது. யாரும் எதிர்பார்க்கா வண்ணம் ஏராளமான பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.
3.ஐ.எஸ் எதிர்ப்பாளர்களின் வாதங்கள்
தற்போது இஸ்லாமிய தேசத்தை அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை ஷியாக்கள், அமெரிக்கர்கள், சவூதியர்கள், ஹிஸ்புத் தஹ்ரீர், இஹ்வான் போன்ற அமைப்பினர்கள் (சிலர் அதிகாரபூர்வமாக) இஸ்ரேல் மற்றும் முக நூல் போராளிகள் உள்ளிட்டோர் எதிர்க்கின்றனர்.
4.இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டாலும் அவற்றில் பிரதானமானவை
1.இஸ்ரேல், அமெரிக்காவின் தயாரிப்பே இவர்கள்
2.சவூதி, கத்தரின் கைப்பாவை
3.ஈரான் மற்றும் ஷியாவின் கைப்பாவைகள்
4.சிறுபிள்ளைதனமான முயற்சி
5.மனித உரிமை மீறல்கள்
6.இஸ்ரேல் அமெரிக்காவின் கையாட்களா ?
இதை விட போராளிகளை கொச்சைபடுத்த முடியாது என்று தெளிவாக சொல்லி விடலாம்.
உஸாமாவை அமெரிக்கா தொடக்கத்தில் ஆதரித்ததை போலவே ஆதரிக்கிறது என்று சொல்பவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அமெரிக்கா தன் நலனுக்காக ஆதரித்ததை போல் ஆப்கனிலிருந்து கம்யூனிஸத்தை துரத்தியடித்தல் எனும் பொது இலக்குக்காகவே அதை உஸாமா ஏற்று கொண்டார் என்பதும் பின் அமெரிக்கா இஸ்லாத்துக்கு எதிராக திரும்பிய போது உஸாமா எதிர்த்ததால் ஷஹீதாக்கப்பட்டதும் வரலாறு. இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க வெளியுறவு துறை செயலர்களின் சமீபத்திய அறிக்கைகளை படித்தால் எந்தளவுக்கு அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை குறித்து அஞ்சுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
சவூதி கத்தரின் கைப்பாவைகளா ?
*************************************************************
1.Free Syrian Army க்கும் ஐ.எஸ்க்கும் வித்தியாசம் தெரியாத நல்லவர்களே இக்குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். அஸதுக்கு எதிராக Free Syrian Armyஐ ஆதரித்த அமெரிக்காவும் பிரிட்டனும் ஆயுதம் வழங்கும் நிலைக்கு வந்து அதை கைவிட்டதற்கு காரணமே அவை ஐ.எஸ் கையில் சிக்க கூடும் என்பதாலேயே. மேலும் ஆரம்பத்தில் வேகமாக சிரிய ஜிஹாதை ஆதரித்த சவூதி, கத்தர் மற்றும் துருக்கி போன்றவை மழுப்புவதற்கும் அதுவே காரணம் என்பதை உணர வேண்டும். மேலும் சமீபத்தில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக போரிடவே சகோதர சண்டைக்காகவே அமெரிக்கா FSAக்கு நிதியுதவி அளிக்க திட்டமிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2.மேலும் ஐ.எஸ்ஸின் கிலாபா அறிவிப்பு மேற்குலகை விட சவூதிக்கே அதிக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை கிலாபா அறிவிப்பை அடுத்த சவூதியின் அதிகார மட்ட மாற்றங்களிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். "ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் நம்பிக்கை இல்லாமல் ஜனநாயகம் மூலம் இஸ்லாத்தை நிலை நாட்ட முயன்ற எகிப்தின் முர்ஸியையே சகிக்க முடியாமல் கவிழ்த்த சவூதி எப்படி இவர்களை சகிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்".
ஈரான் மற்றும் ஷியாவின் கைப்பாவைகள் ?
*************************************************************************************
1.ஈராக்கில் சுன்னிகள் மூலம் வன்முறையை தூண்டுவதன் மூலம் ஈராக்கில் தன் பிடியை தக்க வைக்க ஐ.எஸ்ஸை ஈரான் உருவாக்கியது என்பது எவ்வளவு அபத்தம் என்பதற்கு ஷியா வீரர்களையும் அவர்களது அடக்கத்தலங்களையும் ஐ.எஸ் இடித்தது எனும் செய்தியிலிருந்தே புரிந்து கொள்ளலாம். மேலும் ஐ.எஸ்ஸை ஒழிக்க நிச்சயம் ஈரானும் , சிரியாவும் கூட அமெரிக்காவுடன் கை கோர்க்கும் என்பதை நாம் பார்க்க தான் போகிறோம்.
மனித உரிமை மீறல்கள்
**************************************************
1.ஷியாக்களை கொல்வது போன்ற வீடியோக்கள், கொன்று விட்டு ரத்தம் குடிப்பது போன்ற கொடூரமான புகைப்படங்கள் என இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இஸ்லாம் சொல்லும் போர் விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று குற்றம் சொல்லப்பட்டது. இவ்வாறாக ஐ.எஸ் மீது மனித உரிமை குற்றம் சுமத்துபவர்கள் முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஊடகங்களில் வெளியாகும் அனைத்தும் உண்மை அல்ல என்பதும் ஐ.எஸ்ஸை அசிங்கப்படுத்த மேற்குலக ஊடகங்கள் எடுக்கும் முயற்சி என்பது ஊடகத்தை நன்கு தெரிந்த அனைவருக்கும் தெளிவாக விளங்கும்.
2.FSA தளபதி ஒருவர் 2011ல் செய்த போர் கொடுமைகள் ஐ.எஸ் செய்ததை போல் இணையத்தில் உலாவுவதும் ஈராக்கிய படைகள் செய்த கொடுமைகள் ஐ.எஸ் மேல் போடப்படுவதும் நடைபெறும் யதார்த்தமாகும். சமீபத்தில் கூட திக்ரித்தில் பணி புரிந்த 46 இந்திய நர்சுகளை ஈராக்கிய அரசு படைகளின் தாக்குதலிருந்து காப்பாற்ற மொசூலுக்கு மாற்றிய ஐ.எஸ்ஸின் செயலை வழக்கம் போல் ஊடகங்கள் தீவிரவாதிகள் கடத்தல் என்று எவ்வாறெல்லாம் திரித்தன என்பது நாம் அறிந்ததே. ஜனநாயக நாடுகளின் ராணுவத்தினர் பெண்களை தேடி வேட்டையாடி வன்புணர்வு செய்யும் காலகட்டத்தில் எதுவும் செய்யும் அதிகாரமிருந்தும் மூச்சு காற்று கூட படாமல் அனுப்பி வைத்த ஒரு செயல் போதும் அவர்கள் எப்படிப்பட்ட மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதற்கு. மேலும் போர்களத்தில் எல்லா எதிரிகளையும் ஓரே மாதிரி நடத்த முடியாது என்பதையும் விளங்கி கொள்ள வேண்டும்.
சிறுபிள்ளைதனமான முயற்சி
*****************************************************
1.கிலாபத்துக்காக போராடும் இயக்கவாதிகள், உலமாக்கள் உள்ளிட்டோர் ஐ.எஸ் கிலாபத் அறிவிப்பின் மூலம் அவசரப்பட்டு விட்டது, யாருடனும் கலந்து ஆலோசிக்கவில்லை, ஷரியாவுக்கு எதிரானது என்றெல்லாம் குற்றம் சுமத்துகின்றனர். உண்மையில் ஐ.எஸ் ஆலோசனை செய்தார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் அனைவரையும் கலந்து ஆலோசனை செய்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. உண்மையில் இம்மார்க்கம் நிலை பெற போராடிய செசன்யாவின் ஷாமில் தொடங்கி ஆப்கனில் ஷஹீதான் உஸாமா வரைக்கும் உண்மையான எண்ணத்துடனே போரிட்டார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து ஷஹீது உடைய அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று பிராத்திப்போமாக.
2.ஆனால் எல்லா அமைப்புகளும் கிலாபத்துக்காக போராடவில்லை என்பதும் லிபியாவின் உமர் முக்தார் போன்ற பலர் தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவுமே போராடினர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதன் காரணத்தால் அவர்களின் தியாகத்தை நாம் எள்ளவும் குறைத்து மதிப்பிடவில்லை. இஸ்லாமிய உலகின் மதிப்புக்குரிய அறிஞர்களின் கருத்துகளை பார்க்கும் போது சில போது தாங்கள் வசிக்கும் நாட்டின் அதிகார பீடத்தை திருப்திபடுத்த கருத்துரைக்கின்றனரோ என்ற ஐயம் எழுவதை தடுக்க முடியவில்லை.
முஸ்லீம்கள் என்ன செய்ய வேண்டும் ?
***************************************************************************************
1.விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கிலாபத் அறிவிக்கப்பட்டு இமாம் ஜும்மாவும் கொடுத்துள்ள சூழலில் முஸ்லீம்களாகிய நாம் (ஐ.எஸ்ஸை ஆதரிக்கும் / எதிர்க்கும்) என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
2.ஐ.எஸ்ஸை ஆதரிக்கும் முஸ்லீம்கள் ஐ.எஸ் உண்மையிலேயே கிலாபத்துக்கான பாதையை நோக்கி பயணிக்கிறதா என்பதை கண்காணிப்பதோடு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல ஐ.எஸ் என்ற உண்மையை விளங்கி கொள்ள வேண்டும்.
3.மேலும் ஐ.எஸ் JAN, AQ, உள்ளிட்ட பிற போராளி அமைப்புகளிடம் இணக்கமாக இருக்க முயற்சி செய்வதோடு தேவையற்ற முஸ்லீம் உம்மாவின் ரத்தம் ஓட்டப்படுவதை தடுப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
4.ஐ.எஸ்ஸை எதிர்க்கும் முஸ்லீம்கள் யூத, பிராமண, நஸ்ரானியின் பிடியில் சிக்கியுள்ள ஊடகங்களின் வாயிலாக நிகழ்வுகளை பார்ப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
5.அறிவிக்கப்பட்ட கிலாபாவை உறுதிப்படுத்தும் முயற்சியில் துணை நிற்பதோடு அதை பரவலாக்கவும் பாடுபட வேண்டும்.
6.இதற்கு பிறகும் அவர்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் இறைவனிடத்தில் துஆ செய்து நிகழ்வுகளை அவதானிக்க வேண்டும்.
7.குறைந்த பட்சம் யூத கைக்கூலிகள் என்றெல்லாம் போராளிகளை கொச்சைப்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
8.கடைசியாக ஐ.எஸ்ஸின் தளபதி ஒருவர் கேட்ட துஆவுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
9."யா அல்லாஹ் இக்கூட்டம் உண்மையிலேயே கிலாபாத்துக்காக பாடுபட கூடிய ஒன்றெனில் இதை வெற்றி பெற செய்வாயாக. மாறாக இது கவாரிஜ்களாகாவோ, மேற்குலகின் கைப்பாவையாகவோ இருக்கும் பட்சத்தில் இதன் முதுகை முறித்து விடுவாயாக"
(அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்)
Jazkallah to http://islamiyakolgai.blogspot.ae

Sunday, February 9, 2014

யுவனுக்கு இசை கொடுக்காத நிம்மதியை , இஸ்லாம் கொடுத்துள்ளது....

அல்ஹம்துலில்லாஹ்.....

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக  இணையத்தள உலகில் கிசு கிசுக்க பட்ட செய்தி தற்போது சமந்தப்பட்ட நபர் மூலமாகவே உறுதிசெய்யபட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா - இஸ்லாத்திற்கு திரும்பியுள்ளார்.                           அல்லாஹ் அக்பர்...

இன்று உலக அளவில் இஸ்லாத்தை கொச்சைபடுத்தவும் , முஸ்லீம்களை கேவலபடுத்தவும் என்ன என்ன சதிவலைகளை செய்ய முடியுமோ அத்தனையையும் பலர் தங்கள் முழு நேர வேலையாக செய்து வரும் இவ்வேளையில்...

அல்லாஹ்வின் உதவியால் இன்று இஸ்லாத்தை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஆண்டு தோறும் வந்து கொண்டு இருகிறார்கள்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக இஸ்லாம் கவர்ந்திழுத்து வருகிறது...

அந்த வகையில் யுவன் இஸ்லாத்தினால் எந்த வகையில் கவரப்பட்டார் , எப்படி இஸ்லாத்தை ஏற்றுகொண்டார் என்ற அதிகாரபூர்வ விபரம் கிடைக்க பெறவில்லை ...இரண்டு திருமணமும்  தோல்வி , தாய் மரணம் என நிம்மதிஇழந்த யுவனுக்கு அவரின் இசை கொடுக்காத நிம்மதியை இஸ்லாம் கொடுத்துள்ளது என்பது மட்டுமே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


அவர் தனது ட்விட்டரில் தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும் , அதற்காக பெருமைபடுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தான் இஸ்லாத்தை ஆய்வு செய்து பின்பற்ற தொடங்கியதாக பிரபல நாளிதழுக்கு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அல்ஹம்துலில்லாஹ்...


ட்விட்டர் பக்கத்தில் யுவனின் வார்த்தைகள்...


இஸ்லாத்தை ஏற்ற பலர் சிலாகித்து சொல்லும் வார்த்தை ..

நான் இஸ்லாத்தை ஏற்றுகொண்டதில் பெருமை அடைகிறேன்...

காரணம் என்ன தெரியுமா ... சத்தியம்..  உண்மை.. உறுதி...க்கு சொந்தமான இஸ்லாமிய மார்க்கம் கொடுக்கும் ஈமான் என்னும் உண்மையான இறைநம்பிக்கையே..

உண்மைக்கும், உண்மையை போன்ற பொய்யிற்கும் இது தான் வித்தியாசம்..

அல்லாஹ் இந்த சகோதரரை முழுமையான இஸ்லாமியனாக வாழ செய்வானாக..

இந்த சகோதரருக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்த இவரின் நண்பருக்கு அருள்புரிவானாக...

சத்தியத்தை பின்பற்றுவோம் , பிறருக்கு நாமும் எடுத்துரைப்போம்.

Monday, August 19, 2013

Dr.அப்துல்லாஹ்விற்கு நேர்வழிகாட்டி அழைத்துகொண்டான் அல்லாஹ்..!!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பெரியார்தாசன் என்று நாத்திகராக அறியப்பட்டு , பிறகு உண்மையான இறை தேடலுக்கு தன்னை உட்படுத்தி கொண்டு 2010ல்  சத்திய இஸ்லாத்தை உண்மை என்று ஏற்றுகொண்டு  அப்துல்லாஹ்வாக தன்னை இறை மறுப்பிலிருந்து மீட்டுக்கொண்ட சகோதரர் Dr.அப்துல்லாஹ் அவர்கள் நேற்று நள்ளிரவு மரணித்தார்கள்..

                          "இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்"


அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வை வெற்றி பெற செய்வானாக..

இஸ்லாத்தை ஏற்றுகொண்ட நாள் முதல் தாவா களத்தில் முழுமூச்சாக இறங்கி செயல்பட்டார்கள்... பல ஊர்களுக்கும் , பல நாடுகளும் சென்று முஸ்லீம்களுக்கும்  தாவா பயிற்சிகளை வழங்கியுள்ளார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்...

அண்மைகாலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் விளைவாக சென்னையில்  சிகிச்சை பெற்று வந்தார்கள் ..அல்லாஹ்வின் நாட்டப்படி  நள்ளிரவு  சுமார் 1:30மணி அளவில் மௌத்தாகிவிட்டார்கள்..

அப்துல்லாஹ் அவர்களின் சொற்பொழிவுகள் எப்படி இருக்கும் என்று யாருக்கும் சொல்லிகாட்ட தேவையில்லை .. தனது  பேச்சால் அனைவரையும் கட்டி போடுபவர்..

அப்துல்லாஹ் அவர்கள் சிறந்த மனத்தத்துவ நிபுணரரும் கூட .. பலரை தனது பேச்சாற்றலால் மனமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்...இதை பயன்படுத்தி நான் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பேன் என்று முழுவதுமாக செயல்பட்டார் ...

அப்துல்லாஹ் அவர்கள்  இன்று நம்மோடு இல்லை என்று நினைக்கும் போது மனம் கனக்கிறது ..அவரின் பங்களிப்பு நமக்கு தேவை தான் .. இருப்பினும் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் .. அவனது நாட்டப்படியே அனைத்தும் நிகழ்கிறது..



இஸ்லாமிய கொள்கைகளுக்கு நேர் எதிர் கொள்கையில் இருந்தவரை அல்லாஹ் அவரின் உள்ளதை புரட்டி இஸ்லாத்தில் நுழைவிக்க வைத்து அவருக்கு வளமான மறுமைவாழ்விற்கு வழிவகுத்து கொடுத்துவிட்டான்.

அவர் செய்த நற்காரியங்களை அல்லாஹ் பொருந்திகொண்டு .. மறுமையில் மகத்தான கூலி வழங்க வேண்டி நாம் அனைவரும் பிரார்த்திப்போம்..

மேலும்  நாம் அனைவரும் மரணிக்கும் போது முஸ்லீம்களாக ஈமானோடு மரணிக்க அல்லாஹ்விடம்  துஆ செய்ய வேண்டும்..

முஸ்லீமாக இருப்பதைவிட மரணிக்கும் போது முஸ்லீமாக ஈமானோடு மரணிப்பதில் தான் மறுமை வெற்றி இருக்கிறது ..

அந்த பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கவேண்டும்.

அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்து புகழும்...

Wednesday, July 3, 2013

இன்று இவர்கள் - நாளை நாம் .. மரணத்திற்கு ஒவ்வொருவரும் ஆயத்தம் ஆக வேண்டும்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

சகோதர சகோதரிகளே... 

நாள்தோறும் மரணசெய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது .. தூக்கத்தில் , பிரயாணத்தில் ,விபத்தில் , நோயில் என பல நிலைகளில் மரணம் ஒவ்வொரு மனிதனாக விழுங்கி கொண்டே வருகிறது ... நேற்று நம்மோடு இருந்தவர்கள் இன்று நிச்சியமாக இருப்பார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது ... இன்று ஆட்டம்போடும் நாம் நாளை ,நாளை மறுநாள் இருப்போம் என்று அறுதியிட்டு கூற இயலாது .. இருப்போம் என்ற ஒற்றை நம்பிக்கையில் தான் காலம் கடந்து கொண்டு இருக்கிறது...



ஏதோ பிறந்தோம் , இறப்போம் என்பதெல்லாம் இறைமறுப்பாளர்கள் , இணைவைப்பாளர்கள் சொல்லி கொள்ளும் அர்த்தமற்ற வார்த்தைகள்.. நாம் அப்படியல்ல .. ஏன் பிறந்தோம் , எதற்காக படைக்கபட்டோம் , எப்படி வாழவேண்டும் , எப்படி மரணிக்க வேண்டும் , மரணித்த பிறகு நம்முடைய நிலை எப்படி இருக்கும் என்று உலகத்தின் அருட்கொடை நபி (ஸல்) அவர்களால் ஒவ்வொரு விஷயமும் விவரித்து வாழ்ந்து காண்பிக்கபட்ட சமூகம் நாம்...


நாம் மரணத்தை மிக அதிகம் அதிகம் நினைவுகூற வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ... உலக விஷயங்களில் , பொருளாதாரத்தை பெருக்குவதில் நாம் கொண்டுள்ள கவனம் - நாம் கொண்டுள்ள சத்தியமார்க்கத்தில் இல்லை இல்லவே இல்லை ... அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்...

இன்று முகநூலில் அடுத்தவரின் மரணச்செய்தியை படித்து கொண்டிருகிறோம் நாளை நம்முடைய மரணம் மற்றவர்களுக்கு செய்தியாக இருக்கலாம் -யாருக்கு தெரியும் ...
என்ன ஆரோக்கியமான உடலும் ,வயசும் இருந்தாலும் நம்முடைய தவனை வந்துவிட்டால் .. நாம் இறைவன் முன் நிறுத்தப்படுவோம்..

ஆகையால் நாம் ஒவ்வொருவரும் மரணத்திற்கு ஆயத்தம் ஆகவேண்டும் ...

சில தினங்களுக்கு முன்பு இரண்டு சகோதரிகள் , ஒரு சகோதார் கார் விபத்தில் மரணமடைந்தார்கள் ... அந்த அதிர்ச்சி முழுமையாக நீங்காத நிலையில்..




இன்று சகோதர் பஹுருதீன் அலி அஹ்மது அவர்கள் கத்தாரில் கார் விபத்தில் தீடீர் மரணம் அடைந்துவிட்டார்கள் ... அவருக்கு அல்லாஹ் பாவத்தை பிழைபொறுத்து மறுமையில் மகத்தான கூலியை வழங்கி வெற்றி பெற செய்வானாக... அவருக்காக நாம் அனைவரும் கண்டிப்பாக துஆ செய்வோம்... அவரின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையை தருவானாக..

யா அல்லாஹ் எங்களை முஸ்லீம்களாக மரணிக்க செய்வாயாக ...
பரிபூரண ஈமானோடு மரணிக்கும் பாக்கியத்தை வழங்குவாயாக...
சொர்க்கத்தை எங்களுக்கு ஹலால் ஆக்குவாயாக ...

அல்லாஹு அக்பர் -

Tuesday, May 7, 2013

தெளிவடைந்த ஃபித்னா - உள்ளத்தை புரட்டிய இறைவன்


நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி கட்சியின் உறுப்பினர் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn). சமீபத்தில் இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.  கடந்த சனிக்கிழமையன்று (20-04-2013) மதீனாவிற்கும், ஞாயிறு அன்று (21-04-2013) மக்காவிற்கும் வருகை தந்த டோர்ன் தனது உம்ராவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஷேக் அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸி உட்பட பல மார்க்க அறிஞர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சரி இதில் என்ன பெரிய பிரமாதம் இருக்கிறது?

இவரது பின்னணியைப் பற்றி சற்று தெரிந்து கொள்வது நல்லது. இறைத்தூதரை இழிவு படுத்தும் நோக்கில் ஃபித்னா எனும் திரைப்படத்தைத் தயாரித்த Geert Wilders-ன் Party for Freedom தலைவர்களில் ஒருவராவார் டோர்ன். விஷமத்தனமான இத் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டு வியந்து போனார். "இந்த மனிதர் முஹம்மதுக்கு முஸ்லிம்களிடத்தில் அப்படி என்ன சிறப்பு?" என்று பெரும் ஆச்சரியம் அடைந்து அக் கேள்விக்கு விடை காணும் ஆய்வில் இறங்கி விட்டார்.



"அந்த ஒரு கேள்விக்கான தேடலே இன்று என்னை முஸ்லிம் ஆக்கியது" என்கிறார் டோர்ன். டட்ச் (Dutch) பாராளுமன்ற உறுப்பினரான இவர், தமது மன மாற்றத்தை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியுலகத்திற்கு பகிரங்கமாக அறிவித்தார். "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!" எனும் அவரது டிவிட்டர் ஷஹாதா அரபி மொழியில் அமைந்திருந்தது. 46 வயதான டோர்னின் இந்த மனமாற்றம் நெதர்லாந்தில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.



விஷயம் மெல்ல வெளியே கசிந்து பல நாட்களாகியும் இவரின் கட்சி உறுப்பினர்கள் பலருக்கு இது ஒரு வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ஒரு நகைச்சுவையாகவே இருந்தது. பின்னே? "I hate Islam" என்பது இவரது Party of Freedom கட்சியின் பகிரங்க அடிநாதம். அக்கட்சியைச் சேர்ந்த இவரே இப்போது "I follow Islam" என்றால்? சிரித்தார்கள்.

"இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கக் கூடிய நான் முஸ்லிம் ஆகி விட்டேன் என்பதை நம்ப மறுப்பர் என்பது எனக்கும் தெரியும். ஆனால், நான் கடந்த ஒரு வருடமாக பல முஸ்லிம் அறிஞர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, மனத்திலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக குர்ஆன், ஹதீஸ்களை முழுமையாக ஆராய்ந்து கொண்டிருந்தேன். அதை எனக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அறிவர்!" என்கிறார் அல் ஜஸீராவிற்குபேட்டியளித்த டோர்ன்.
மதீனா நகரின் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் தொழும் டோர்ன்
மனம் மாறிய கையோடு, தனது மாநகர மேயருக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதிக் கோரிக்கை விடுத்திருந்தார் டோர்ன். 'தமது பணி நேரத்தினூடாக தொழுது கொள்ள அனுமதி வேண்டும்' என்ற கோரிக்கை.

"இஸ்லாத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை அதிகமதிகம் கேட்டவன் நான். இன்னமும் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் என் கட்சியினர், என்னைத் துரோகி என்றே அழைக்கின்றனர். நல்லது. மனதை விசாலமாக்கி, முன் முடிவுகளை கைவிட்டு, ஆராய்ந்து இம்முடிவை நான் தேர்ந்தெடுத்ததை அறிந்த பலரோ எனக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மற்றவர்களைப் போலவே நானும் வாழ்க்கையில் இதுவரை மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறேன். ஆனால், நான் செய்து வந்த தவறுகளிலிருந்து இப்போது நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் என் பாதை தெளிவாகி விட்டதையும் இதில் நான் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதையும் உணர்கிறேன்!" என்று தமது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.
நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?"
அவதூறு மற்றும் பொய்களை மட்டுமே முதலீடாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் பற்றி நினைத்தால் வெட்கித் தலைகுனிவதாகக் கூறும் டோர்ன், நபியவர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற மேற்கத்தியப் பொய்ப் பிரச்சாரங்கள் பற்றி உலகமெங்கும் சென்று எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளேன். இப்போது நினைத்தால் என்னால் வேதனையைத் தாங்க முடியவில்லை. நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?" என்கிறார்.


இட்டுக் கட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் ஏற்படுத்திய அவநம்பிக்கையை போக்க, டொராண்ட்டோ (Toronto) நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையமான Canadian Dawah Association – CDA வுடன் இணைந்து சர்வதேசத் திரைப்படம் ஒன்றினைத் தயாரிக்கப் போவதாகக் கூறுகிறார்.



"இம்முறை என் திரைப்படம் அப்பட்டமான உண்மையைப் பேசும். இஸ்லாத்தைப் பற்றியும் நபிகளாரின் சிறப்புப் பண்புகளையும் இது எடுத்துரைத்து, மேற்கத்திய நாடுகளிடையே பரப்பப் படும் இஸ்லாமோஃபோபியாவை அகற்றும்!" என்கிறார் உறுதியாக.



"உங்களது புனிதப் பயணம் எவ்வாறு இருந்தது?" என்ற கேள்விக்கு, "இதே இடத்திற்கு உம்ரா மற்றும் ஹஜ் செய்யச் செல்பவர்களை கிறுக்குப் பிடித்தவர்கள் (Lunatic) என்றெல்லாம் ஏளனம் செய்துள்ளேன். இப்படி கீழ்த்தரமாக பிறர் மனம் புண்படும்படி நடந்து கொண்ட நான், நபி (ஸல்) அவர்களின் கல்லறைக்கு அருகிலும் ரவ்தா ஷரீஃப்க்கு முன்பு நிற்கும் போதும் என்னுள் பொங்கிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை. இவ்விடங்களில் நான் தொழும் போது, சுவர்க்கத்தின் அருகே நெருங்கி விட்டது போன்ற தூய்மையானதொரு உணர்வு ஏற்பட்டிருந்தது. என் கண்கள் குளமாயின" 



"இறைத்தூதர் மீது இத்தனை அன்பை வைத்திருக்கும் உலக முஸ்லிம்களைப் போன்றே நானும் என்னை உணர ஆரம்பித்திருக்கிறேன். அதே நேரத்தில், இறைத்தூதர் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கும் சில மேற்கத்தியவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். எங்களிடையே தான் எவ்வளவு அறியாமை? எத்தனை பாரபட்சம்? இவற்றை எல்லாம் நான் எப்படி களையப் போகிறேன்?" என்று கவலைப்படுகிறார் டோர்ன்.



"உலக அளவில் முஸ்லிம்களுக்கும் பிற மதத்தினருக்குமுள்ள இடைவெளியைக் குறைத்து அவர்களிடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படச் செய்வேன். இஸ்லாம் பற்றிய தெளிவை எனக்கு உணர்த்திய இஸ்லாமிய அழைப்பு மையமான CDA வுடன் இணைந்து, அழைப்புப் பணியினை முழு மூச்சுடன் மேற்கொள்வேன்.  இஸ்லாத்தைப் பற்றியும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல, என்னுடைய வாழ்க்கையை இனி அர்ப்பணிப்பேன்!" என்று Okaz/Saudi Gazette க்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

- அபூ ஸாலிஹா http://www.satyamargam.com/

Tuesday, March 26, 2013

அந்தப் பழைய காலுறை... என்னோடு வரவேண்டும்..!!


அவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார்.  தன் மகனை அருகழைத்தார்.
மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார்: "என் அருமை மகனே, விரைவில் நான் உங்களனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி சடலத்துணி (கஃபன்) சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?"

"என்னவென்று சொல்லுங்கள் தந்தையே!" என்றான் மகன். 

அறிஞர் கூறினார் : "என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை"


ஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன இது விசித்திரமான கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும், எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக் கொண்டான்.

அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன் சொத்துகளையும், மனைவி மக்களையும் விட்டுவிட்டு மாண்டுப் போனார்.  அவரை உலகிலிருந்து விடைகொடுத்து அனுப்ப உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர்.  உடல் குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில் சுற்றப்படும் நேரம் நெருங்கியது. அப்போது மகனுக்கு தந்தையின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து, குளிப்பாட்டியவரிடம் சென்று  தந்தையின் ஒரு காலுறையைக் கொடுத்து "இதனை என் தந்தையின் கால்களில் அணிவியுங்கள்; இதுவே அவரின் இறுதி விருப்பமாகும்" என்று கூறினான்,

"முடியாது; முடியவே முடியாது" மறுத்தார் குளிப்பாட்டும் பணியாளர்.  "இல்லை, இது என் தந்தையின் ஆசை; நீங்கள் செய்துதான் ஆகவேண்டும்" என்று சொல்லிப் பார்த்தான் மகன்.  ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை. "இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை; எனவே, வாய்ப்பில்லை!" என்றார் உறுதியாக.

மகனோ மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான். அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். "நான் சொன்னது, சொன்னது தான்.  வேண்டுமானால், நீ மார்க்க அறிஞர்களை; தீர்ப்பளிப்பாளர்களைக் கேட்டுவிட்டு வா; நான் சொல்வதைத் தான் அவர்களும் சொல்வார்கள்". அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில் அறிஞர்களை, மார்க்க அறிஞர்களை அணுகிக் கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள் "ஆமாம்! ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை தான்!"

இக் களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர், அந்த மகனை நெருங்கினார். "தம்பி, உன் தகப்பனார் அவரது சடலம் துணியிடும் வேளையில் உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஒரு கடிதம் என்னிடம் தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம் இதுவென்று நினைக்கிறேன்" என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.

இறந்த அறிஞரின் நீண்டகால நண்பர் அவர். தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப் படித்தான்மகன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"என் மகனே! அனைத்து செல்வங்களையும் விட்டுவிட்டு இதோ நான் இறந்து விட்டேன். என் நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய சொத்துக்களிலிருந்து ஒரே ஒரு பழைய காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை;  நாளை இந்த நிலை உனக்கும் வரலாம்.  இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும் இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை  நீ நேர்வழியில் ஈட்டி, நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம் இருக்கிறதல்லவா; அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும்  உதவும். ஆகவே, இந்தச் செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின் வயிற்றுப் பசிக்கும், அறிவுப் பசிக்கும் உணவாகும் வகையில் செலவிடு. அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய்!"

அந்த நிமிடம் வரை உள்ளத்தில் பெருகியிருந்த ஆணவமோ மமதையோ சடசடவென எரிந்து பொசுங்குவதைப் போன்ற உணர்வுடன் கண்களில் நீர் கோர்க்க, தந்தையின் சொற்களை உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகன்.

'(மறுமையில் நன்மையின்) எடை கனத்தவர்களே வெற்றியாளர்கள்.' என்கிறது (திருக்குர்ஆன் 7:8)

'அல்லாஹ்வின் திருப்திதான் மிகப்பெரியது. அதுதான் மகத்தான வெற்றி.' (திருக்குர்ஆன் 9:72)

நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க: பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும் என்கிற கருத்தை உணர்த்தும் திருக்குறள் உண்டு:


(ஆங்கில மடல் ஒன்றின் தமிழாக்கம்: சகோதரர் இப்னு ஹம்துன்)

Friday, September 21, 2012

உண்மையை உலகுக்கு உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது


முஸ்லிம்கள் தங்களது உயிரை விட மேலாக மதிக்கக்கூடிய உத்தம தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தீவிரவாதியாககாமுகராக சித்தரித்து படமெடுத்ததன் மூலம் இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று நினைத்து திட்டம் தீட்டினர் அயோக்கிய யூதனும்கேவலப்பட்ட பாதிரியும்.

     ஆனால் எப்போதெல்லாம் இஸ்லாம் தாக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியடைந்து வரும் நிகழ்வுகளை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
     இதற்கு முன்பாக 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. தகர்த்தது இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று கூறி ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தது அமெரிக்கா.

     அமெரிக்கா தாக்குதல் தொடுத்தது ஆஃப்கானிஸ்தான் மீது மட்டுமல்லஇஸ்லாத்தின் மீதும்தான்.
     இஸ்லாம்தான் இத்தகைய தீவிரவாத செயல்களைத் தூண்டுகின்றது. அவர்களது வேதம்தான் உலகத்தின் நிம்மதிக்கு குண்டு வைக்கின்றது. அவர்களது இறைத்தூதரின் வழிகாட்டுதல்கள்தான் அவர்களை தீவிரவாதிகளாக்குகின்றன என்று இஸ்லாத்தின் மீது அபாண்டமான அவதூறுகளும்,பொய்யான குற்றச்சாட்டுகளும் பரப்பிவிடப்பட்டன.
    இவர்களது இந்த பொய்ப்பிரச்சாரம்தான் 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமெங்கும் குறிப்பாக அமெரிக்கா முழுவதும் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி பெறுவதற்கு அடிகோலியது.

இவர்களது இந்த கேடுகெட்ட பிரச்சாரத்தினால் ஏற்பட்ட எதிர்விளைவுகள் என்ன தெரியுமா?
    திருக்குர்ஆன் விற்பனை அதிகமானது: அமெரிக்காவிலுள்ள அனைத்து மகாணங்களிலும்அத்தனை புத்தக நிலையங்களிலும் திருக்குர்-ஆன் அதிக அளவு விற்பனையானது. இவர்கள் இஸ்லாத்தின் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளைச் சொல்கின்றார்களே! இஸ்லாம் என்னதான் சொல்ல வருகின்றது என்று இஸ்லாமியரல்லாதவர்களை ஆய்வு செய்ய அவர்களது பொய்ப்பிரச்சாரம் தூண்டியது.

இணைய தளம் மூலம் எகிறிய அழைப்புப்பணி:
    இணைய தளம் மூலமாக திருக்குர்-ஆன் ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் அதிக அளவு  பதிவிறக்கம் செய்யப்பட்டது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட திருக்குர்-குர்ஆனை மக்கள் சிந்திக்க அது வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தது.

பள்ளிவாயில்களை நோக்கி படையெடுத்த பிறமதத்தவர்கள்:
    அமெரிக்க அயோக்கிய அரசோ மற்ற இஸ்லாமிய நாடுகள் மீது தீவிரவாத முத்திரை குத்தி படையெடுத்த நேரத்தில்பிறமத மக்கள்  பள்ளிவாயில்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். பல தேவாலயங்களும்கேளிக்கை பார்களும் மூடப்பட்டு அவைகள் பள்ளிவாசல்களாக உருமாறின.

இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது :
     இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.

கூகுளில் குர்-ஆன் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன :
     இஸ்லாமிய எதிரிகள் குர்-ஆனைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குர்-ஆன் குறித்து தேடுவோர்மற்றும் இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

நூலகங்களில் குர்-ஆன் காணாமல் போயின :
     எத்தணை பிரதிகள் வாங்கி வைத்த போதும் ஐரோப்பாகனடாஅமெரிக்காவில் உள்ள நூலகங்களில் குர்-ஆனையே குறிவைத்து அனைவரும் படிப்பதற்கு எடுத்துக் கொண்டு போவதால் குர்-ஆன் ஸ்டாக் இல்லாமல் போனது.

முஸ்லிம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் :
     மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பணி இவர்களது அவதூறுப் பிரச்சாரத்தால் மிச்சமானது. முஸ்லிம்கள் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.

அணி அணியாய் மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் :
     முன்பைக் காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
     இப்படி இவர்கள் இஸ்லாத்தை இழிவுபடுத்த நினைத்தபோதெல்லாம் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அதுபோல இப்போது இவர்கள் எடுத்துள்ள இந்தத் திரைப்படமும்அதனால் முஸ்லிம்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பும்,முஸ்லிம்காளின் போராட்டமும் கோடிக்கணக்கான இஸ்லாமியரல்லாத பிறமத மக்களை இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்யத் தூண்டியுள்ளது.

    அத்தோடுமட்டுமல்லாமல்நபிகளாரை தீவிரவாதியாகஓரினச்சேர்க்கையாளராககாமுகராக சித்தரித்த மானங்கெட்டவர்களுக்கு பதிலடி கொடுக்க முஸ்லிம்களைத் தூண்டிவிட்ட ஒரு மாபெரும் உந்து சக்தியாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    அந்த மானம்கெட்டவர்கள் நமது நபி  மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. அவதூறானவை. ஆனால் அவர்கள் வேதப்புத்தகமாக வைத்துள்ள பைபிளும் அவர்களது மத வழிகாட்டுதல்களும்அவரது பாதிரிகளும்தான் அப்படிப்பட்டவர்கள் என்பதை உலகமக்களுக்கு உரத்துச் சொல்லவும்உண்மையை உலகறியச் செய்யவும் இப்போதுதான் முஸ்லிம்களுக்கு காலம் கனிந்துள்ளது. தங்களது அழைப்புப்பணியின் வாயிலாக இந்த அவதூறு பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்க இஸ்லாமிய உலகம் தயாராகிவிட்டது.

     ஒவ்வொரு தாக்குதல்களின் இறுதியிலும், "இஸ்லாத்திற்கே இறுதி வெற்றி" என்பது இந்த நிகழ்விலும் உண்மையாகும். முஸ்லிம்கள் அதை தங்களது செயல்களின் வாயிலாக நிரூபித்துக்காட்டுவார்கள். இன்ஷா அல்லாஹ்.

 (ஏக இறைவனை) மறுப்போர்உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.  (அல்குர்-ஆன் 5 : 3)  

source: onlinepj.com

Sunday, December 18, 2011

கத்தார் : அப்துல் வஹ்ஹாப் பள்ளிவாசல் திறப்பு

கத்தார் நாடு தனது பெரிய பள்ளிவாசலுக்கு,  18 ஆம் நூற்றாண்டு  முஸ்லிம் மார்க்க அறிஞரான இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பெயரைச் சூட்டியுள்ளது.(தௌஹீத் – ஓரிறைகொள்கையை பற்றி பேசுபவரை விரும்பாத மக்கள் “வஹ்ஹாபி” என்று அன்போடு அழைப்பதற்கு காரணம் இவர்தான்)இவ்வாண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்ட புதிய பள்ளியாகும் இது. 




கத்தரின் தேசிய பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாகவும் அதன் நாகரிக மதிப்பீடுகளை உணர்த்துவதாகவும் இப்பெயரைச் சூட்டும்படி கத்தர் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி கேட்டுக்கொண்டதாக, கத்தர் நியூஸ் ஏஜென்சி (QNA) தெரிவித்துள்ளது.


இஸ்லாம் மார்க்கத்தை அதன் தூய வடிவில் போதித்தவரான இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ஹிஜ்ரி 1115 ல் பிறந்து ஹிஜ்ரி 1206 ல் மரணித்தார்கள். அக்காலக் கட்டங்களில் சவூதி அரேபியாவில் வாழ்ந்தவர். தமது  காலத்தில்,  மத வழிபாடுகளில் காணப்பட்ட புனைவுகளை நீக்கி "இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே இடைத்தரகர் இல்லை" என்றுரைத்து, இஸ்லாம் மதத்தை அதன் பழைய வடிவில் மீட்டெடுத்தவர்.


கத்தாரின் குவைர் ஏரியாவில் அமைந்துள்ள இப்புதிய; பெரிய பள்ளியில் 10 ,000 பேர் ஒரே சமயத்தில் தொழுகை நடத்தலாம். மூன்று அடுக்குகளாக, 19 ,550 ச.மீ பரப்பில் கட்டட அளவைக் கொண்டுள்ள இப்பள்ளி  மொத்தத்தில்175,000   ச.மீ பரப்பளவைக் கொண்டது.
இஸ்லாமிய பாரம்பரிய கட்டடக் கலை அமைப்பில் அழகுற கட்டப்பட்டுள்ள இப்பள்ளியின்  மேற்பகுதியில் 24 கும்பங்கள் (Domes) அமைக்கப்பட்டுள்ளன.





Source: inneram.com 
http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=476213&version=1&template_id=57&parent_id=56

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் சுருக்கமான வரலாறு:


ஓரிறைக்கொள்கை தான் ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் தாரக மந்திரமாக இருந்தது. இந்த அடிப்படைத் தத்துவத்தை மீளக் கட்டமைத்துக் கொண்டு வருவதில் ஷெய்க் அவர்களின் பங்கு மகத்தானது. 



அவர்களால் மீளக்கட்டியமைக்கப்பட்ட இந்தக் கொள்கையானது 250 வருடங்களான பின்பும், இன்றும் அதன் பொலிவு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தக் கொள்கையானது இணைவைப்பின் பிடியிலும், மௌட்டீகத்தின் பிடியிலும், இன்னும் நூதனக் கலாச்சாரங்களின் பிடியிலும் சிக்குண்டு சீரழிந்து கிடந்த மத்திய மற்றும் கிழக்கு அரேபியாவை மேற்கண்ட ஓரிறைக் கொள்கையின்பால் கொண்டு வந்து, இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம். 

மேலும், இந்தக் கொள்கையை இந்தளவு வெற்றிகரமான இயக்கமாகக் கொண்டு வந்ததில் அன்றைய அரேபியத் தீபகற்பத்தின் இதயப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த மன்னர் சௌது அவர்களின் பங்கு மகத்தானது, இந்த மன்னரின் ஆளுகையின் கீழ் இருந்த பகுதியைத் தான் இன்றைக்கு நாம் சௌதி அரேபியா என்றழைத்துக் கொண்டிருக்கின்றோம். 



ஷெய்க் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஹிஜ்ரி 1115 ல் இஸ்லாமிய மார்க்கப் பற்றுள்ள குடும்பத்தில் பிறந்தார்கள்.  இவரது தந்தை அந்தக் காலத்தில், இன்றைய சௌதி அரேபியத் தலைநகருக்கும் வட கிழக்கே அமைந்துள்ள உயைனா என்ற கிராமப் புறத்தில், மார்க்கத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாகத் திகழ்ந்தார்கள். ஷெய்க் அவர்கள் இளமைப் பருவத்தில் நல்ல மனனம், மற்றும் ஞாபக சக்திமிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள். 

தனது மகனைப் பற்றி ஷெய்க் அவர்களின் தந்தை கூறும் பொழுது, ‘இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமான பல சட்ட விளக்கங்களை சிறுபிராயத்திலிருந்த எனது மகனிடமிருந்து தான் நான் கற்றுக் கொண்டேன்’, என்று பெருமையுடன் தனது மகனைப் பற்றிக் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். 
இதன் காரணமாக, சிறு வயதுடையவர்களாக இருந்த போதிலும் தொழுகைக்குத் தலைமை தாங்கக் கூடிய இமாமாக இவர்களை நிற்க அனுமதித்தார்கள். இந்த நிலையில், மக்காவிற்கு ஹஜ் செய்யச் செல்வதற்காக தனது தந்தையிடம் அனுமதி பெற்றுக் கொண்டு சென்ற இமாமவர்கள், பின் மதீனாவில் ஒரு மாத கால அளவு தங்கினார்கள். 



இதன் பின்பு, மீண்டும் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்த இமாமவர்கள், மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தலானார்கள், பின்பு திருமணமும் நடந்தேறியது. இதன் பின்பு, மீண்டும் மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்தவற்காக மக்காவிற்கும், மதீனாவிற்கும் பயணமானார்கள். அறிவுத் தாகத்தின் மிகுதியினால், மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்தவற்காக ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தார்கள். 

இதன் பின்பு, மீண்டும் தனது ஊருக்குத் திரும்பி வந்த இமாமவர்கள் அங்கேயே ஒரு வருட காலத்தைக் கழித்து விட்டு, மீண்டும் கல்வியைத் தேடி ஈராக் நாட்டில் அமைந்துள்ள பஷரா என்ற ஊருக்குப் புறப்பட்டார்கள். இஸ்லாத்திற்குப் புறம்பான செயல்முறைகளை இமாமவர்கள் வெளிப்படையாக விமர்சித்ததன் காரணமாக, அந்த ஊரை விட்டே மிகவும் கேவலமான முறையில் வெளியேற்றப்பட்டார்கள். 


மீண்டும் இமாமவர்கள் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்தவுடன், இவர்களது குடும்பத்தவர்கள் ஹுரைமிளா என்ற இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்று விட்டதை அறிந்தார்கள். பின் தனது குடும்பத்தவர்களுடன் வந்து இணைந்து கொண்ட இமாமவர்கள், தனது தந்தையின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்ளலானார்கள். 


இருப்பினும், இமாமவர்கள் தனது சுயதேடலின் அடிப்படையில், குர்ஆனையும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவையும் மிகவும் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் கற்றுக் கொள்ளலானார்கள். மேலும், அவர்கள் வாழ்ந்த காலங்களில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களான ஷெய்க் இப்னு தைமிய்யா (ரஹ்) மறறும் இமாம் இப்னு கைய்யிம் ஜவ்ஸிய்யா (ரஹ்) ஆகியோர்களது மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நூற்களை ஆர்வத்துடன் படிக்கலானார்கள். 


ஹிஜ்ரி 1153 ல், இமாம் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் தந்தையின் மரணத்தினை அடுத்து, தான் வாழ்ந்த பகுதியில் தன்னைச் சுற்றி நடக்கும் இஸ்லாத்திற்கு முரணான பல்வேறு மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து, வெளிப்படையாகவே விமர்ச்சித்துப் பேசலானார்கள். 


மிக நீண்ட காலமாக மக்களால் மறந்து விடப்பட்ட மற்றும் அறியாமையினால் பின்பற்றாமல் விடப்பட்ட இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ‘தௌஹீத்’ என்றழைக்கக் கூடிய ‘ஓரிறைக் கொள்கை’யின்பால் மக்களை அழைத்தும், இன்னும் இஸ்லாத்திற்கு முரணான பல தெய்வ வணக்க வழிபாடு, நூதனங்கள், மூடப்பழக்க வழக்கங்களை கை விட்டு விட்டு, முழுக்க முழுக்க இஸ்லாத்தின் அடிப்படைச் சட்டங்களை கடைபிடித்தொழுகுவதற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கலனார்கள். 


இவர் தான் வாழ்ந்த பகுதியான நஜ்துப் பகுதியில் இருந்தே இந்த அழைப்பை விடுக்கலானார்கள். தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்ற பகுதியான ஹுரைமிளா மக்கள் தந்த மானசீகமான ஆதரவை அடுத்து, இஸ்லாத்திற்கு எதிராகக் கடைபிடிக்கப்பட்ட்னெடுத்துச் செல்வதில் இமாமவர்கள் மிகவும் ஊக்கம் பெற்றார்கள். 
இன்னும் பலர் நேரடியாக இமாமவர்களைச் சந்தித்து, மிக நீண்ட காலங்களுக்குப் பிறகு, , தங்களது இஸ்லாத்திற்கு முரணான செய்கைகளுக்கு இவரது இந்தப் பணி இடையூறாக அல்லவா இருந்து கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கலானார்கள். 


இதன் காரணமாக இமாமவர்களைக் கொலை செய்யவும் துணிந்தார்கள். இதன் பிறகு உயைனா நகருக்குப் பயணமான இமாமவர்கள், உயைனாவின் இளவரசருக்கு ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றுவத�Dறு சந்தித்த ஓரிறைக் கொள்கையின் எதிரிகள்AF�கள். இமாமவர்களது விளக்கத்தின் மூலம் கவரப்பட்ட உயைனா இளவரசரவர்கள், இஸ்லாத்திற்கு எதிராகக் கடைபிடிக்கப்பட்டு வந்த மூடப்பழக்கவழக்கங்களான, மண்ணறைக்கு மேலாக கட்டிடங்களை எழுப்பி புனிதமாகக் கருதி வந்தவைகளை இடித்தார்கள், இன்னும் புனிதமானவை என மக்களால் நம்பப்பட்டு கண்ணியமளிக்கப்பட்டு வந்த மரங்களையும் வெட்டினார்கள். 


மிக நீண்ட காலங்களுக்குப் பிறகு, விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களை கல்லெறிந்து கொல்லும் தண்டனையை, இந்த இளவரசரின் உதவியுடன் இமாமவர்கள் மீண்டும் கொண்டு வந்தார்கள். இந்த மறுமலர்ச்சியானது, நூதன பழக்கங்களின் வழியே பிழைத்துக் கொண்டிருந்தவர்களின் முதுகெலும்பையே உடைத்துப் போட்டது போலிருந்தது. 


இதன் காரணமாக, அல் அஹ்ஸா பகுதியின் ஆளுநரைச் சென்று சந்தித்த ஓரிறைக் கொள்கையின் எதிரிகள், உயைய்னா வின் ஆட்சியாளரை நிர்ப்பந்தப்படுத்தி, அதன் மூலம் இமாமவர்களை அந்த இடத்தை விட்டே துரத்த வேண்டும் என்று முடிவு கட்டினார்கள். 


இதன் பின் ஹிஜ்ரி 1158 ல் இமாமவர்கள் திரைய்யா என்றழைக்கப்படக் கூடிய இன்றைய ரியாத் நகரின் புறப்பகுதியில் அமைந்திருக்கக் கூடிய இடத்திற்கு வருகை தருகின்றார்கள். 


இந்தப் பகுதி அப்பொழுது இன்றைய சௌதி அரேபியாவினை உருவாக்கிய மன்னர் முஹம்மது இப்னு சௌத் இப்னு முஹம்மது முக்ரின் அவர்களின் ஆளுகையின் கீழ் இருந்து வந்தது. இந்தப் பகுதியில் நுழைந்ததும், மன்னர் சௌத் அவர்களிடம் இமாமவர்கள் சில நிபந்தனைகளை முன்னிறுத்தினார்கள்.


அதன்படி, அவரது பகுதிக்குத் தேவையான ஆன்மீக மற்றும் மத விவகாரங்களில் மன்னருக்கு இமாமவர்கள் வழிகாட்டுவது, அதற்குப் பிரதியீடாக மன்னரவர்கள் இமாமவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், அதிகார ரீதியாகவும் உதவிகளை வழங்குவது என்று முடிவாகியது. 


இந்த வகையில், சௌதி அரசானது ஓரிறைக் கொள்கையினை பின்பற்றி நடத்தப்படக் கூடிய ஆட்சிப் பிரதேசமாக மாற்றப்பட்டதோடு, இன்னும் மிக நீண்ட காலமாக இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையை விட்டும் வெகு தூரம் சென்று விட்ட நஜ்துப் பகுதியின் மக்களின் மத்தியில் இந்தக் கொள்கையை பிரச்சாரம் செய்யும் பணியை இமாமவர்கள் முடுக்கி விட்டார்கள். 


இமாமவர்களின் வழிகாட்டுதலின் மூலமாக மிகப் பெரிய பிரச்சார யுத்தம் ஒன்றை மன்னர் முஹம்மது இப்னு சௌத் அவர்களும், அவர்களது மகனான அப்துல் அஜீஸ் அவர்களும் தொடங்கினார்கள். இதன் காரணமாக, மத்திய, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் யாவும் மன்னர் முஹம்மது இப்னு சௌத் அவர்களின் வசம் வந்தது. 


உண்மையில், இமாமவர்கள் இணைவைப்புக் கொள்கைக்கு எதிராக மிகவும் அறிவார்ந்த முறையில் இஸ்லாமிய விளக்கங்களை மக்களுக்கு அளித்தார்கள். இன்னும், இணை வைப்புக் கொள்கையில் ஊறித் திளைத்து வந்த பூசாரி வர்க்கத்தினரையும் அறிவார்ந்த முறையில் தெளிவான விளக்கங்களின் அடிப்படையில் எதிர்கொண்டு, அன்பான கனிவான பிரச்சார முறைகள் மூலம் ஓரிறைக் கொள்கையை விளக்கி, அவர்களை முழுமையான இஸ்லாமிய வாழ்வியலின் பக்கம் அழைத்தார்கள்.


இஸ்லாமிய வரலாற்றின் நெடுகிலும் புனிதமானவைகளாகக் கருதப்பட்டு வந்த பல்வேறு மகான்களின் வணக்கத்தளங்களுக்கு மேலாக கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இத்தகைய அழைப்புப் பணியின் மூலமாக இமாமவர்கள் தரை மட்டமாக்கினார்கள். 


இமாமவர்கள் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களின் எழுத்துக்களின் மூலமாகக் கவரப்பட்டிருந்த போதிலும், இன்னும் இவரையும் இவரைப் போன்ற ஏனைய இமாம்களையும், இவர்களில் எவருடைய கொள்கையையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் வழக்கத்தை முறியடித்து, குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சுன்னா வழி இஸ்லாத்தைப் பின்பற்றுவதன் அவசியத்தைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்கள். 


இந்த அடிப்படையினை வலியுறுத்தித் தான் இமாமவர்கள் அனைத்து எழுத்துக்களும் அமைந்திருந்தன. இமாமவர்கள் தனது 91 வது வயதில், ஹிஜ்ரி 1206 ம் ஆண்டு மரணமடைந்தார்கள். இமாமவர்கள் மரணமடைந்த போதிலும், மிக நீண்ட காலமாக மக்களால் கைவிடப்பட்டதொரு கொள்கையை மீளக் கட்டியமைத்து, அரேபியா மட்டுமல்லாது கிழக்கே இந்தியத் துணைக்கண்டத்தையும் இன்னும் மேற்கே வட ஆப்ரிக்கா வரைக்கும் இன்னும் அதனையும் தாண்டி இஸ்லாமிய ஓரிறைக் கொள்கை பரவித் தளைப்பதற்கு இமாமவர்கள் மிகத் தெளிவான வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி விட்டுச் சென்றுள்ளார்கள். அதன் மூலமாக இஸ்லாமிய வரலாற்றில் என்றென்றும் அவர் நிலைத்து நிற்கக் கூடியவராக இமாமவர்கள் திகழ்கின்றார்கள்.


இன்னும் சொல்லபோனால் இன்று தௌஹீத் ஓரிறைகொள்கை என்று யாரும் பேசினால் வஹ்ஹாபிகள்,வஹ்ஹாபிகள் என்று ஏதோ அவர்களை கொச்சைபடுத்துவதாக நினைத்துக்கொண்டு சிலர் சொல்வதுண்டு உண்மையில் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க பணிகளை இவர்களே நம்மை நினைவுகூற வைக்கிறார்கள் என்பதே உண்மை.
Related Posts Plugin for WordPress, Blogger...