(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, October 24, 2009

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்

“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” - நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி, முஸ்லிம்

அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.

சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.

“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

பிற மதத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும் நூல்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை; இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில் கூறப்பட்ட பல விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணாக இருப்பதை உணர்ந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது போன்றே அவர்கள், திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் (Proven Scientific Facts) எவையும் அல்குர்ஆனிற்கு முரணாக இல்லை என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே நேரம், இதனை விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை முஸ்லிம்கள் மேல் உள்ளது.

எண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து கிடைக்கின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கருவியல், வானியல் என திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் சில:

ஆழ் கடலில் அலை

இரு கடல்களுக்கிடையே தடுப்பு

நிலத்தடி நீர் சேமிக்கப்படும் முறை

திருப்பித் தரும் வானம்

பெருவெடிப்புக் கொள்கை

முகடாக வானம்

வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி

விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்

சூரியனும் கோள்களும் நகர்ந்து நீந்துதல்

வானத்திலும் பயணம் செய்ய வழிகள்

முளைகளாக மலைகள்

பூமியில் மலையின் உயரம் அளவிற்குக் கீழே செல்ல இயலாத நிலை

பூமி உருண்டை

பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்

ஓரங்களில் குறைந்து வரும் பூமி

மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடை குறைதல்

புவி ஈர்ப்பு சக்தி

விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம்

கலப்பு விந்து

கர்ப்ப அறையின் தனித்தன்மை

வேதனையை உணரும் நரம்புகள்

தேன் உற்பத்தி

இவையனைத்தையும் விளக்க முற்பட்டால், அதுவே தனி புத்தகமாக ஆகிவிடுமாதலால், விரிவஞ்சி முஸ்லிம்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத, அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை காண்போம்.

தராசை நிலை நிறுத்திய அல்லாஹ்:

அவன் (அல்லாஹ்) வானத்தை உயர்த்தினான்; நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்து விடாதீர்கள்! (அல்குர்ஆன் 55:7-9)





மேற்கண்ட வசனம் இருபெரும் அறிவியல் உண்மைகளை நமக்கு எடுத்தியம்புகின்றது. முதலாவதாக, “அல்லாஹ் வானத்தை உயர்த்தினான்” என்ற வசனம் 20 ஆம் நூற்றாண்டின் அரும்பெரும் கோட்பாடான “பெரு வெடிப்புக் கொள்கை”-யை கூறுகின்றது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பேரண்டம் சிறு கேலக்ஸிகளாக மிக நெருக்கத்துடன், நட்சத்திரங்கள் பூமியோடு நெருங்கிய நிலையிலேயே இருந்தது. பேரண்டத்தின் விரிவாக்க சக்தியின் மூலமாகவே வானமும், வானத்தில் உள்ள பொருட்களும் பிரிந்து, உயர்ந்து சென்றுள்ளன. 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக எழுதப் படிக்கத் தெரியாத நபியான முஹம்மது (சல்) அவர்களால், கண்டிப்பாக இச்செய்தியை கூறியிருக்க முடியாது; மாறாக, இதனையெல்லாம் படைத்து, இயக்கும் ஏக இறைவனால் மட்டுமே இதனைக் கூறியிருக்க முடியும் என்பது தெளிவு.

அடுத்ததாக, நிறுப்பதில் நாம் நீதி தவறக்கூடாது என்பதற்காக, வானத்தை உயர்த்தி, தராசை நிறுவியதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை புரிந்து கொள்வதற்கு முன்னதாக, பொருண்மை (Mass), எடை (Weight) இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளின் பொருண்மை என்பது அது தன்னகத்தே கொண்டுள்ள பருப்பொருளின் அளவைப் பொருத்தது; எடை என்பது அப்பொருளின் மீது செயல்படும் (புவி) ஈர்ப்பு சக்தியின் அளவாகும். எடுத்துக்காட்டாக, 25 கன சென்டி மீட்டர் கொள்ளளவுள்ள ஒரு ரப்பராலான பொருளையும், அதே கொள்ளளவுள்ள ஒரு இரும்புக்கட்டியையும் தராசின் இரு தட்டுகளில் வைத்தால், இரும்புக்கட்டி வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கி இருக்கும். ஒரே அளவான பொருட்களாக இருப்பினும், இரும்பின் பொருண்மை, ரப்பரின் பொருண்மையை விட அதிகம் என்பதே இதற்குக் காரணம். ஆனால், இதே தராசை பூமியை விட்டு மேலே 2000 கி.மீ. உயரத்திற்குச் சென்று விண்வெளியில் பிடித்தோமானால், இரு தட்டுகளும் சமமாகவே இருக்கும். பூமியில் வேலை செய்த தராசு விண்வெளியில் வேலை செய்யவில்லையே ஏன்? ஏனெனில், நாம் தராசில் நீதி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணுக்குப் புலனாகாத ஈர்ப்பு சக்தியை அல்லாஹ் ஏற்படுத்தி, அந்த புவியீர்ப்பு விசை மூலம் பொருட்களின் சரியான எடையை நாம் அறிந்து கொள்ளச் செய்திருக்கிறான் என்பது இதிலிருந்து விளங்குகின்றது.

வானத்தை கூரையாக்கிய அல்லாஹ்:

வானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக்கினோம்; அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்! (அல்குர்ஆன் 21:32)

பூமியின் ஒரு நாள் கணக்குப்படி, தினமும் சுமார் 800 கோடி விண்கற்கள் விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்குகின்றன என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தில் நாம் வாழும் பூமியானது மூன்றாவது கோளாகும். இதற்கடுத்து செவ்வாய், வியாழன் என்ற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவைகளுக்கிடையே, ஆயிரக்கணக்கான சிறு கோள்களும், கோடிக்கணக்கான சிறு விண்கற்களும் சூரியனை அகல வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே இருந்த கோள் வெடித்து சிதறியதனால் தோன்றியவையே இந்த சிறு கோள்களும், விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் ஆகும். பெரும்பாலான விண்கற்களின் அளவு, நாம் ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு எறியும் கற்களைவிட சிறிதான கூழாங்கல் அளவிலிருந்து சிறு மண்துகள் அளவு தான். ஆனால், இவற்றின் வேகமோ, விநாடிக்கு ஏறக்குறைய 42 கி.மீ. பூமியானது சூரியனை விநாடிக்கு சற்றேறக்குறைய 30 கீ.மீ வேகத்தில் சுற்றுகின்றது. இந்த விண்கற்கள் சூரியனைச் சுற்றும்போது, சற்றே பாதை விலகினால், புவியின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியின் மீது மோதுகின்றன.






இவ்வாறாக எதிரெதிர் திசையில், விண்கல் பூமியின் மீது மோதினால் என்ன நிகழும்? விநாடிக்கு 64 கி.மீ. வேகத்தை, சிறு மண்துகள் போன்ற விண்கல் பெற்று விட்டால், ஒரு அங்குலம் தடிமனுள்ள இரும்புத்தகட்டையே துளைத்துச் சென்று விடும் சக்தியை பெற்று விடுவதாக கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், பூமியைச் சுற்றி, காற்று மண்டலப் போர்வையை அல்லாஹ் ஏற்படுத்தி, நம்மைக் காத்து அருள் புரிந்துள்ளான். கடுமையான வேகத்தில், பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும் இந்த விண்கற்கள், காற்றில் உராய்ந்து, அதன் காரணமாக சூடாக்கப்பட்டு, உருகி எரிந்து சாம்பலாகி காற்று மண்டலத்தோடு கலந்து விடுகின்றன. இவ்வாறாக இறைவன் காற்றுப் போர்வை மூலம் நம்மையும், நாம் வாழும் பூமியையும் காத்தருளி உள்ளான்.


இறைவன் வழங்கிய அற்புதமான திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளை கண்டுணர்ந்து, சிந்திக்கக்கூடிய முஸ்லிமல்லாத மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம், சத்திய இஸ்லாத்தினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின் பால் ஈர்க்க முடியும், இன்ஷா அல்லாஹ்.


ரியாத் ஃபெய்ஸல்

Friday, October 23, 2009

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு!

<2002ஆம் ஆண்டு குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் இராம பக்தர்களாக வந்த சங் பரிவார் தொண்டர்களையும் அப்பாவி இந்து மக்களையும் தீவைத்துக் கொளுத்திவிட்டு நிமிட நேரத்தில் அதனை 'முஸ்லிம் தீவிரவாத'மாகத் திசை திருப்பி, 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் காவுகொண்ட மோடியும் அவனது கொலைவெறிக் கூட்டமும் இன்றுவரை வெகு சுதந்திரமாக பவனி வரும் நாடு, நம் நாடு.




கடந்த 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நான்டட் நகரத்தில் சங்பரிவார் அமைப்பு உறுப்பினர் ஒருவரது வீட்டில் குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது சக்தி வாய்ந்த குண்டு வெடித்த நிகழ்வின்போது அங்கு முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளும் ஒட்டுத் தாடிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இது போன்ற நிகழ்வுகளால் பலமுறை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார குழுக்களின் பயங்கரவாத முகம் அம்பலப்பட்டாலும் பயங்கரவாதத்தை முஸ்லிம்கள் மட்டும் ஒட்டு மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டு செயல்படுவதாகக் காட்டுக் கூச்சல் போடும் பேச்சுரிமைச் சுதந்திரம் மிளிரும் நாடு, நம் நாடு.



கடந்த 2007 ஜனவரி மாதம் 24ஆம் நாளிரவில் தென்காசி RSS அலுவலகத்திலும் பேருந்து நிலையத்திலும் நிறுத்தப் பட்டிருந்த ஆட்டோ ரிக்ஷாக்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலையக் குண்டு வெடிப்பில் ஒரு வெற்றிலை வியாபாரி உள்பட இருவர் காயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் உள்ளிட்டப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. என்றாலும், செய்வதையும் செய்துவிட்டு, "இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம் பயங்கரவாதிகளே காரணம்; அவர்களைக் கைது செய்ய வெண்டும்" என்று அறிக்கைகளை அள்ளி விடுவதற்கும் அவற்றைப் படித்துப் பார்க்காமலே பதிப்பதற்கும் பரபரப்புப் பத்திரிகைகள் நிறைந்த கருத்துச் சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கும் நாடு, நம் நாடு.



கேரளத்திலிருந்து வெளியாகும் "தேஜஸ்" என்ற தினசரியில், "நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்களை மோசமானவர்களாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரிக்க ஹிந்துத்துவ இயக்கங்கள் நடத்தும் சதிகளே" என்று பிரபல தலித் சிந்தனைவாதியும் "தலித் வாய்ஸ்" பத்திரிக்கையின் ஆசிரியருமான V.T இராஜசேகர் உரக்க உண்மையைப் போட்டுடைத்த போதிலும் பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற இன்னபிற புண்ணாக்கு வாதங்களெல்லாம் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களின் கடமைகளாக நிறைவேற்றப் படுவதுபோல் உலகமுழுதும் உருவாக்கப்பட்டு வரும் மாயையை ஒழித்துக் கட்டுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை முஸ்லிம்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலொன்றாக, இந்திய முஸ்லிம் அறிஞர்களும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவினரும் இணைந்து 'பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்' Movement Against Terrorism (MAT) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்திருக்கின்றனர்.



"முஸ்லிம்களுக்குக் கல்வியூட்டும் கடமையோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை என்பதை ஊடகங்களுக்கும் பிறமதச் சகோதரர்களுக்கும் உரியவகையில் புரிய வைப்பதைக் கடமையாகக் கையிலெடுத்துள்ளோம்" என்று கூறுகிறார் ப.எ.இ.யின் ஒருங்கிணைப்பாளரும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவின் செயற்குழு உறுப்பினருமான காலித் ரஷீத் ஃப்ராங்கி மஹல்லீ.



"அண்மையில் நடைபெற்ற ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய முஜாஹிதீன் என்ற பெயரில் மின்னஞ்சல் அனுப்பியவரையும் அதைப்போன்ற பெயர் தாங்கிகளையும் எதிர்த்துப் போராடி முறியடிப்போம்" என்றும் அவர் சூளுரைத்தார்.



மேலும், கடந்த ஃபிப்ரவரி 2ஆம் நாள் லக்நவ்வில் இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் குழுமிய மாநாட்டில் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டு, இப்போது செயலுக்கு வருவதாகவும் IANS க்கு அளித்த தொலைபேசிப் பேட்டியின்போது ஆயிஷ்பக் ஈத்காவின் துணை இமாமான மஹல்லீ கூறினார்.



"நாட்டில் நிகழ்த்தப் படும் பயங்கரவாதச் செயல்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் தலையில் சுமத்தி வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியதாகும்" என்று கூறிய மஹல்லீ, நாங்கள் தொடங்கியிருக்கும் இந்த 'பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்' பற்றி, ஒவ்வொரு பள்ளியின் வெள்ளிமேடைகளிலும் அறிமுகப் படுத்தி, எங்கள் சமுதாயத்தவரைத் தவறான வழிகாட்டுதலின் பக்கம் செல்ல விடாது தடுத்து, வெற்றியின் இலக்கை நிச்சயம் அடைவோம்" என்று உறுதியோடு கூறும் மஹல்லீயின் அவாவும் இலட்சியமும்தான் கோடானு கோடி இந்திய முஸ்லிம்களின் அவாவும் இலட்சியமுமாகும்.



நாட்டின் அமைதியே நமது அவா!

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்! - பகுதி 4

தாக்கியவர் இருவர், தாக்குதல் நடந்தது நான்கு இடங்களில்!





கார்கரே கொலை செய்யப்படுவதற்குச் சற்று முன்பு மருத்துவமனையில் நடந்த தாக்குதலைக் குறித்து காவல்துறை கூறுவதற்கு மாற்றமாக காமா மருத்துவமனையிலுள்ள ஊழியர்கள் வேறு விதமாகக் கூறுகின்றனர். "தீவிரவாதிகள் தூய மராத்தி மொழியில் பேசினர்" என மருத்துவமனை ஊழியர்கள் கூறியதன் தொடர்ச்சியாகும் இது.



யூனிஃபார்மில் இருந்த மருத்துவமனை செக்யூரிட்டிகளைக் கொன்ற கொலையாளிகள், யூனிஃபார்மில் இல்லாத மற்றொரு நபரையும் கொன்றனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையின் மேல்மாடியில் ஏறினர். லிஃப்ட் ஆபரேட்டர் டிக்கே என்பவர் அவர்களை மேல் மாடிக்குக் கொண்டு சென்றார். சற்று நேரத்தில் சுமார் எட்டு பேரடங்கிய காவல்துறைக் குழு ஒன்று, தீவிரவாதிகளை எதிர்கொள்ள மருத்துவமனை வந்தடைந்தது. அவர்களுக்கும் மேல்மாடிக்கான வழிகாட்டியாக அதே லிஃப்ட் ஆபரேட்டரே உடன் சென்றார். காவல்துறையினரில் ஒருவர் இரும்பு போன்ற ஒரு துண்டை எடுத்து டெரஸ்ஸில் எறிந்தார். லிஃப்ட் ஆபரேட்டர் தாமதிக்காமல் கீழே ஓடினார். தொடர்ந்த சுமார் 45 நிமிடங்களுக்கு மேல்மாடியில் துப்பாக்கி சூடும் சப்தம் கேட்டது. A.C.P. ஸ்தானந்த் தத்தாவிற்குக் காயம் ஏற்பட்டது. அப்போது மருத்துவமனை வார்டுகளிலிருந்த நோயாளிகள், விளக்குகளை அணைத்து விட்டு மூச்சையடக்கிப் பிடித்தபடி பயந்து நடுங்கியபடி இருந்தனர். ஆனால், காவல்துறையினர் சற்று நேரத்தில் வெறுங்கையுடன் கீழே இறங்கி வந்தனர். தாக்குதல் நடத்திய கொலையாளிகள் எப்படித் தப்பித்தனர் என்பதைக் குறித்து எவ்வித விவரமும் இல்லை. இதே ஸதானந்த் தத்தாவிற்குத்தான் தீவிரவாதிகளுடனான போராட்டத்தில் காயமேற்பட்டதாகவும் "உடனடியாக காமா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைத்த தகவலின்படி ஸலஸ்கர் காமா மருத்துவமனை வந்தார். கார்கரேவிற்கும் இதுபோன்றதொரு தகவல் கிடைத்திருந்தது.

காமா மருத்துவமனைக்கு அருகில் பணியிலிருந்த துர்குடா என்ற சப்-இன்ஸ்பெக்டரின் மொழியினை அடிப்படையாக வைத்து இதே போன்ற, கீழ்க்காணும் செய்தியை டிசம்பர் 2 நாளிட்ட டி.என்.எ என்ற பத்திரிகைத் தெரிவிக்கிறது:

"காமா மருத்துவமனைக்கு அருகிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் துப்பாக்கி சூடு நடப்பதாக மூச்சிரைக்க ஓடியபடி ஒரு சிறுவன் தன்னிடம் வந்து கூறியதாக இன்ஸ்பெக்டர் கூறுகிறார். ஆனால், அதனைக் காவல்துறை கண்டுகொள்ளவில்லை. காமா மருத்துவமனைக்கு அருகிலுள்ள இந்த செயின்ட் சேவியர் கல்லூரி வளாகம் ஒரு ஆளரவமற்ற பகுதியாகும். அதற்குப் பின்பக்கத்தில் வைத்தே கார்கரே கொல்லப்பட்டர்" மெட்ரோ சினிமாவிற்கு அருகில் தீவிரவாதிகளின் மீது கார்கரே துப்பாக்கி சூடு நடத்துவதாகவும் காயமேற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவதாகவும் TV சானல்கள் ஒளிபரப்புச் செய்திருந்தன.

கஸபும் இஸ்மாயிலும் சி.எஸ்.டி உட்பட நான்கு இடங்களில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்துவது எப்படி சாத்தியமாகும்?. வி.டியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரவாதிகளுள் வேறு சிலரும் இருந்திருந்தனரா?


நரிமன் ஹவுசிற்கு அருகில் வசிக்கும் ஆனந்த் ராவ் ராணா என்பவர் கூறியதாக, டி.என்.ஏ தினசரி மற்றொரு செய்தி வெளியிட்டது: "தொலைகாட்சியில் கார்கரே கொல்லப்பட்ட செய்தி வெளியான உடன் நரிமன் ஹவுஸிலிருந்து மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டது". நரிமன் ஹவுஸுக்கென அளவுக்கதிகமாக மாமிசமும் மதுவும் உணவு வகைகளும் அன்றைய தினம் வாங்கிச் சென்றதாக ஒரு வியாபாரியை விசாரித்து அதே பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்திகள் அனைத்தையும் காவல்துறையும் அதிகாரிகளும் கண்டுகொள்ளாதது ஆச்சரியமானது!

1992-93இல் மும்பையில் நடந்தக் கலவரத்தை விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையில் கலவரம் மிக மோசமாகத் தொடரக் மிக முக்கியக் காரணமாக, "மும்பை காவல்துறை காவி மயமாகியிருக்கிறது" எனச் சுட்டிக் காண்பிக்கப் பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட அந்தக் கலவரத்தில், கீழ்நிலை அதிகாரி - கான்ஸ்டபிள் - முதல் அடிஷனல் கமிஷனர் வரை 31 காவல்துறை அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாக கமிசன் கண்டுபிடித்தது. மாலேகோன் வழக்கு விசாரணையில் கார்கரே எதிர்கொண்ட பிரச்சனைகளில் காவிமயமாக்கப்பட்ட மும்பைக் காவல்துறையும் ஒன்றாகும். முஸ்லிம் எதிர்ப்புணர்வு கொண்ட அதிகாரி எனப் பெயரெடுத்த ரகுவன்ஷி வகித்த 'தீவிரவாதத் தடுப்புப் படை'த் (ATS) தலைவர் பதவியைத்தான் கார்கரே ஏற்றுக் கொண்டிருந்தார். ஆனால், அவரது ATS குழுவில் இருந்தவர்களில் பெரும்பான்மையினரும் ரகுவன்ஷியின் ஆதரவாளர்களாக இருந்தனர். அதுமட்டுமல்ல, "ஆர்.எஸ்.எஸின் வெடிகுண்டு உற்பத்தித் தொழிற்சாலை" என கார்கரே கண்டு பிடித்த போன்ஸாலா இராணுவப் பயிற்சி பள்ளியுடன் ATSக்கும் தொடர்பு இருந்திருந்தது. "இன்று மாலேகோன் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள கர்னல் புரோஹித் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ATSக்குப் பயிற்சியளித்தவர்" என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயமாகும்!.

இன்று கார்கரே மறைவிற்குப் பின் மீண்டும் ATSஇன் தலைவராக நியமிக்கப்பட்டு, மாலேகோன் குண்டுவெடிப்பை விசாரிக்கும் ரகுவன்ஷி, கார்கரேக்கு முன்னரும் ATSஇன் தலைவராக இருந்த வேளையில், மும்பை நாக்பாடாவிலுள்ள ATS தலைமையகத்தில் ATS உறுப்பினர்களுக்கு ஒரு ஒருநாள் பயிற்சி வகுப்பு நடந்திருந்தது. அந்த ஒருநாள் பயிற்சி கேம்பில் முதல் வகுப்பெடுத்தது, இதே மாலேகோன் வழக்கின் முதல் குற்றவாளியான கர்னல் புரோஹித். "ஆபரேசன் டெக்னிக்ஸ் அண்ட் ஸ்ட்ரேட்டர்ஜி" என்பது பாடத்தலைப்பாக இருந்தது. இந்தக் கேம்பிற்கே தலைமையேற்றிருந்தது இப்போது மாலேகோன் வழக்கை விசாரிக்கும் ரகுவன்ஷி. ATS பயிற்சிப் பள்ளியில் வகுப்பெடுத்த மற்றொருவரின் பெயர் கர்னல் எஸ்.எஸ்.ரய்கார். இவர் போன்ஸாலா இராணுவப் பயிற்சி பள்ளியின் கமாண்டராக இருந்தார்.

மாலேகோன் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த கார்கரே, "கர்னல் புரோஹித்தான் குண்டு வெடிப்புக்குக் காரணம்" எனக் கைது செய்ததோடு, போன்ஸாலே இராணுவப் பயிற்சிப் பள்ளிக்கு எதிராக விசாரணை நடத்தியவேளை, கமாண்டர் ரய்காரை விசாரணனையில் உட்படுத்தி இருந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாயாவிற்குப் புரோஹிதை அறிமுகப்படுத்தியவர் இதே கமாண்டர் ரய்காரேதான்.

ரமேஷ் உபாத்யாயா, புரோஹித் ஆகியோரின் கைதுக்குப் பின், அப்பொழுது ரயில்வே காவல்துறையில் டிஐஜியாக இருந்த ரகுவன்ஷியிடம் கார்கரே இவற்றைக் குறித்து விசாரித்த பொழுது, "பயிற்சி வகுப்பு நடந்தது உண்மைதான். அப்போது புரோஹித் இராணுவ உளவுத்துறையில் வேலை செய்திருந்தார்" என்று அவர் கூறினார். "ATS பயிற்சி கேம்பிற்கு வகுப்பெடுக்கப் புரோஹிதிற்கு அழைப்பு விடுத்தது நான்தான்" என ஒப்புக்கொண்ட ரகுவன்ஷி, "அதற்கு மேல் வேறு சம்பவங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை" என்று பதிலளித்துள்ளார்.

மும்பை ATSஐ நன்றாக அறிந்திருந்த கார்கரே, மாலேகோன் வழக்கில், அதன் அனைத்து விஷயங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு ஆரம்பத்திலிருந்தே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவாறே வழக்கை விசாரிக்க ஆரம்பித்திருந்தார். தன்னுடன் இணைந்துச் செயல்பட்ட மற்ற அதிகாரிகள் தவறாகப் புரிந்துக் கொள்ளாமல் இருக்க, அனைத்து விசாரணைகளிலும் குற்றவாளிகளை விசாரிப்பதிலும் நேரடியாக ஈடுபட்டார். வாக்குமூலங்களைத் தயார் செய்வதிலும் நேரடியாக கவனம் செலுத்தி இருந்தார். பப்ளிக் ப்ராசிகியூட்டர் ரோஹிணி ஸாலயனுடன் இடையிடையே கருத்துப்பரிமாற்றம் நடத்திக் கொண்டிருந்தார். ஹிந்துத்துவ இயக்கங்களுடன் தொடர்புடைய அடிஷனல் கமிஷனர் பரம்பீர் சிங்கை ஊடகங்களுக்கு விவரங்கள் வழங்குவதிலிருந்து விலக்கினார். அவருக்குப் பதிலாக அடிஷனல் கமிஷனர் சுக்வீர் சிங்கை ATS அதிகாரப்பூர்வச் செய்தியாளராக நியமித்தார். சுருக்கமாக, காவல்துறையிலுள்ள ஹிந்துத்துவவாதிகளைக் கார்கரே இவ்வழக்கின் அருகிலேயே வரவிடவில்லை.

தேசத்தின் பலப்பாகங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கான ஹிந்துத்துவவாதிகளின் திட்டங்களைக் குறித்தும் கார்கரேக்கு தகவல்கள் கிடைத்திருந்தன. இவற்றைச் சுட்டிக்காண்பித்து, தனது உயர் அதிகாரிகளுக்குக் கார்கரே அறிக்கை சமர்ப்பித்தார். சிமி, இந்தியன் முஜாஹிதீன் போன்ற செயல்படும் தொண்டர்கள் சக்தியில்லாத, அதிகாரப்பூர்வமாகத் தங்கள் நிலைபாட்டை வெளிப்படுத்த இயலாத, நாடு முழுவதும் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ள, ஒன்றும் செய்ய இயலா இயக்கங்களைத் தொடர்பு படுத்தி மத்தியப் புலனாய்வுத்துறை புனைந்த கதைகளுக்கு அவை நேர் எதிராக இருந்தன.

அது மட்டுமல்ல, இராணுவப் புலனாய்வு துறையில் அதிகாரியாக இருக்கும்போது கர்னல் புரோஹித் சமர்பித்த ரகசிய தகவல்களின் உண்மைநிலையை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் புரோஹிதின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கைகளை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கார்கரே கொடுத்த அறிக்கையில் கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் அவரது விசாரணை ஹிந்துத்துவ சக்திகளுக்கும் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐக்கும் இடையிலான தொடர்புகளின் வலுவான முடிச்சுகளை அவிழ்க்கும் நிலை வரை வந்தது. அவர் கொல்லப்படுவதற்கு முந்தைய தினம், சில ஹிந்துத்துவ சக்திகளுக்கும் ஐ.எஸ்.ஐக்கும் இடையிலான தொடர்புகளை நோக்கி மாலேகோன் விசாரணை நீள்வதாகவும் விரைவில் உறுதிப் படுத்தத் தக்க, நம்பகமானக் கூடுதல் விவரம் கிடைக்கப்பெறும் எனவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது இங்கு நினைவு கூரத் தக்கது.

இத்தகைய இக்கட்டான நிலையிலேயே கார்கரேயை நீக்குவதற்காக பாஜக முனைப்புடன் முன் வந்தது. ATSஇன் தலைமைப் பதவியிலிருந்துக் கார்கரேயை நீக்குவதே பாஜகவின் முதல் முயற்சியாக இருந்தது. அவருக்குப் பதிலாக, ஆர்.எஸ்.எஸ்ஸுடன் பயணம் செய்யும் மும்பை காவல்துறையிலுள்ள ஒரு டி.ஜி.பியை அப்பதவியில் நியமிப்பதற்கு மேல்மட்டத்தில் முயற்சிகள் நடந்தன. ஆனால், அப்போதைய உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலின் துணை கார்கரேக்கு இருந்ததால் உடனடியாக பாஜகவால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இருப்பினும் அரசியல்வாதிகளின் துர்பிரச்சாரங்களும் கண்டனங்களும் கார்கரேயை வெறுப்படைய வைத்திருந்தன. அவருக்கு எதிரான மோசமான கண்டனங்கள் அவரை மிகவும் வருத்தப்படுத்தியிருந்தன. இதனை ஆர்.ஆர். பாட்டீலிடம் அவர் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாக கூறி வருத்தப்பட்டிருந்தார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் - 3

வெடித்துச் சிதறும் தீப்பிழம்பாய் ...!






சி.எஸ்.டியில் தாக்குதல் நடந்த உடனேயே மெட்ரோவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அவசரகதியில் காவல்துறை இயங்கியது. அதேநேரத்தில் மெட்ரோவில் இருந்த ஒரு பத்திரிக்கையாளர் அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தார்: "ஒரு காவல்துறை அதிகாரி, அனைவரையும் உடனடியாக அங்கிருந்து விலகிச் செல்லக் கட்டளையிட்டார். இதனைக் கேட்ட அனைவரும் அங்கிருந்து விலகிக் கொண்டிருந்தனர். ஆனால் இருவர் மட்டும் தாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து விலகவில்லை. இருவரில் ஒருவர், தனது உடையினுள்ளிருந்து துப்பாக்கியை எடுத்துக் காவல்துறை அதிகாரியை நோக்கிச் சுட்டார். மறுநிமிடம், அந்த அதிகாரி குண்டடிபட்டுக் கீழே விழுவதைக் கண்டேன். மறுநொடியில் இருவரும் காணாமல் மறைந்தனர்".



அவ்விருவரும் "கலாஷ்நிக்கோவ்(ஏ.கே.47) துப்பாக்கியை உபயோகித்துத் தாறுமாறாகச் சுட்டதாக"க் காவல்துறை கூறும் கஸபோ இஸ்மாயீலோ அல்ல. அவ்வாறெனில், கஸபையும் இஸ்மாயீலையும் தவிர்த்து, வேறு சில கொலையாளிகளும் சி.எஸ்.டியில் இருந்துள்ளனர். கொலையாளிகள் எத்தனை பேர்?. தாஜிலும் நரிமன் ஹௌஸிலும் தாக்குதல் நடத்தியவர்களை விட அதிகமான தீவிரவாதிகள் சி.எஸ்.டியில் இருந்திருக்க வேண்டும். கொலையாளிகளின் முக்கியக் குறி கார்கரே ஆகவும் அவரைத் தீர்த்துக் கட்டத் தேர்ந்தெடுத்த இடம் சி.எஸ்.டி/காமா மருத்துவமனை வளாகமாகவும் இருந்திருக்க வேண்டும். தாஜிலும் ஓபராயிலும் நடந்தத் தாக்குதல், ஊடகங்களின், பொதுமக்களின், காவல்துறையின் கவனத்தைத் திசைதிருப்பும் வேலையாக இருந்திருக்கலாம்.




சி.எஸ்.டியில் தாக்குதல் நடந்த மறுநிமிடம் மெட்ரோவிற்கருகில் துப்பாக்கிச் சூடு நடக்கும் காட்சிகளைத் தொலைகாட்சிகள் ஒளிபரப்பு செய்திருந்தன. "காவல்துறையோடு தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர்" என்றும் "அதில் கார்கரேவிற்குக் குண்டடி பட்டது" எனவும் முதலில் செய்தி வந்தது. கார்கரே அணிந்திருந்த இளநீலநிறச் சட்டையைப் போன்று உடையணிந்திருந்த ஒருவரை வண்டியில் ஏற்றும் காட்சியும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால், அந்த உடலில் கார்கரேயின் முகத்தில் இருந்தது போன்ற காயங்களின் வடுக்கள் இல்லாமல் இருந்தது. ஆரம்பத்தில் கார்கரே கொல்லப்பட்டதாகக் காட்டப்பட்ட காட்சியும் செய்தியும் திடீரென காணாமல் போனது. பிறகு, காமா மருத்துவமனைக்கு அருகில் உள்ள இருளில் ஆளரவமற்ற இருளில் வைத்துக் கார்கரே கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. சாட்சியின் வாக்குமூலப்படி, கஸபும் இஸ்மாயீலும் காலை மணி 9.55க்கு சி.எஸ்.டியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மிகச் சரியாக அதே நேரத்தில் சி.எஸ்.டிக்கு அருகிலுள்ள சபர்பன் டெர்மினலின் அருகில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவ்வாறெனில், சி.எஸ்.டியில் நான்கு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஆனால், காவல்துறையின் விளக்கப்படி, சி.எஸ்.டியில் இருவர் மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ளனர். எனில், சபர்பன் டெர்மினலின் அருகில் தாக்குதல் நடத்திய அவ்விருவர் யாவர்? "காமா மருத்துவமனையில் துப்பாக்கி சூடு நடத்தியர்கள் தூய மராத்தி மொழியில் பேசினர்" என்ற மருத்துவமனை ஊழியரின் சாட்சி வாக்குமூலத்தையும் இதனுடன் இணைத்துப் பார்த்தால் சில விஷயங்கள் கூடுதலாகத் தெளிவாகின்றன.

கார்கரேக்கு மும்பை காவல்துறையிலேயே அளவுக்கதிகமான எதிரிகளை மாலேகோன் வழக்கு விசாரணை உருவாக்கியிருந்தது என்ற உண்மையை இங்கு நினைவில் நிறுத்த வேண்டும்.

பணிநீக்கம் செய்யப்பட்டவரும் அதன் பின்னர் சிவசேனாவில் இணைந்தவருமான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் சச்சின் வாஸா இதில் முக்கியமானவர்.

சிவசேனாவில் இணைந்த சச்சின் வாஸாதான் கார்கரேக்கு எதிரான பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கியிருந்தார். கட்கூப்பர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காஜா யூனுஸ், காவல்துறை கஸ்டடியில் கொல்லப்பட்டு அவரது உடலை சிதைத்து மறைத்த வழக்கில் சச்சின் வாஸா குற்றம் சுமத்தப்பட்டிருந்தார் (காஜா யூனுஸ் என்பவர், "கட்கூப்பர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி" என யு.எ.யில் இருந்து கைது செய்து கொண்டுவரப்பட்ட நிரபராதியாவார்). யூனுஸின் உடலையும் ஆதாரங்களையும் சிதைத்த வழக்கில் மும்பை காவல்துறையில் சச்சின் வாஸாவோடு மேலும் சிலரும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர். இதில் முக்கியமான மற்றொருவர், ஸலஸ்கருடன் பணிபுரிந்திருந்த ப்ரதீப் ஷர்மாவாகும். கள்ளக்கடத்தல், சதியாலோசனை, ஆள்கடத்தல், நிழலுலக மாஃபியாக்களிடமிருந்து இலஞ்சம் பெறல் எனத் தொடங்கி பல்வேறு கிரிமினல் வழக்குகளில் குற்றவாளியான ஷர்மா, அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

தயா நாயக் என்பவர், இதே குற்றச்சாட்டுகளில் பிடிக்கப்பட்ட மற்றொரு அதிகாரியாவார். ஊழல் அதிகாரிகளான இவர்களுக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டி வழங்கியவர் ஸலஸ்கர் என்ற சந்தேகம் இவர்களுக்கு இருந்தது. சர்வீஸில் இருக்கும் பல பிரமுகர்களும் இவரின் நண்பர்களாவர். ஒரே நேரத்தில் மும்பை காவல்துறையில் நேர்மையான இரு அதிகாரிகள் - கார்கரேயும் காந்தேயும்; அவ்விருவரோடு ஊழல் அதிகாரிகளான சச்சின் வாஸா, தயா நாயக் ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டியதாக நம்பப் படும் ஸலஸ்கர். மூவரும் ஒன்றாகக் கொல்லப் படுகின்றனர். கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்பட்டு ஸலஸ்கர் வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ப்ரதீப் ஷர்மாவும் சச்சின் வாஸும் தலைமை வகித்த என்கவுண்டர் குழுவில் பல ஆண்டுகளாக அவ்விருவரோடும் இணைந்து பணிபுரிந்திருந்த அருண் ஜாதவ், சில அற்ப காயங்களுடன் தப்பித்து அவர்கள் கொல்லப்பட்டதை கண்ணால் கண்ட ஒரேயொரு சாட்சியாக 'மாறு'கிறார்.

மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் சர்வதேச தொடர்பைக் கண்டறியும் முக்கியமான கட்டத்தில் கார்கரே இருந்தார். கார்கரேக்குப் பின்னர் தற்பொழுது மும்பை தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவராக மீண்டும் பதவியேற்ற கெ.பி. ரகுவன்ஷி, 2006ல் நடந்த இரயில் குண்டுவெடிப்பை விசாரித்தவராவார். சிமி தொடர்பின் பெயரில் முஸ்லிம்களை வேட்டையாடிய ரகுவன்ஷிக்கு, அவ்வழக்கில் நகைப்பிற்கிடமான ஆதாரமற்ற சில பொய்கதைகளைச் சொல்வதை தவிர்த்து விட்டு, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியும் நிலைக்குச் செல்ல ரகுவன்ஷியால் இயலவில்லை. அவ்வழக்குத் தற்பொழுது நீதிமன்றத்தில் கண்கட்டி விடப்பட்டுத் தடுமாறி நிற்கின்றது.

தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைமைக்குத் தகுதியற்ற ரகுவன்ஷி ரெயில்வே துறைக்கு மற்றப்பட்டு, வியன்னாவில் ரா அதிகாரியாகப் பணிபுரிந்து கொண்டிருந்த ஹேமந்த் கார்கரே மும்பைத் தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவராக நியமிக்கப் பட்டார். மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் கார்கரே ரகுவன்ஷியின் வழியைப் பின்பற்றவில்லை. ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் பரிசோதித்து வரும்வேளையில், குண்டுவெடிப்புக்கு உபயோகிக்கப்பட்ட இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் யார்? என்ற முக்கிய விசாரணையே கார்கரேயை அவ்வழக்கின் நேரான பாதைக்குக் கொண்டு வந்தது. ஹிந்துத்துவ சாமியாரிணி ப்ரக்யா சிங் தாக்கூர் கைதுசெய்யப்பட்டார். அவரை விசாரித்ததில் இருந்து கர்னல் ஸ்ரீகாந்த் ப்ரஸாத் புரோகிதை நோக்கியும் அதிலிருந்து ஆர்.எஸ்.எஸின் இராணுவ, வெடிகுண்டு தயாரிப்பு தலைமையகமான போன்ஸாலா இராணுவ பயிற்சி மையத்தினை நோக்கியும் கார்கரேயின் விசாரணை நீண்டது.

மாலேகோன் குண்டுவெடிப்புப் தொடர்பாக ஹிந்துத்துவ சாமியாரிணி ப்ரக்யா சிங் மற்றும் கர்னல் புரோகித் ஆகிய இருவரைக் கைது செய்து, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருந்த ஆர்.எஸ்.எஸின் கைகளைக் கார்கரே வெளிப்படுத்தியதோடு, பல ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்களின் மீது அழுத்தி மூடப்பட்டிருந்த தீவிரவாதக் குற்றச்சாட்டுகளின் கறையினை சுத்தம் செய்து, முஸ்லிம்களின் மீது புனையப்பட்டிருந்த பொய்களை வெளிச்சமிட்டுக் காட்டினார்.

இத்துடன் விஷயங்கள் முற்றுப் பெறவில்லை. மாலேகோன் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளை விசாரணை செய்யும் வேளையில் அதில் வி.ஹெச்.பி தலைவர் தொகாடியாவின் பெயரும் வெளியானது. ஹிந்துத்துவாக்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பெற்ற விஷயம் உறுதியானது.

குண்டுவெடிப்பில் உபயோகிக்கப்பட்டது ஆர்.டி.எக்ஸ் எனில், அதற்குப் பின்னால் சிமி, லஷ்கரே தொய்பா முதலான பாகிஸ்தான் தொடர்புடைய இயக்கங்கள்தான் செயல்பட்டிருக்கும் என்ற முன்முடிவுகளும் தவறானது. கர்னல் புரோகித் 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் மருந்தை காஷ்மீர் இராணுவ மையத்திலிருந்துக் கடத்தி, ஹிந்துத்துவாக்களுக்கு வழங்கிய விவரமும் வெளிச்சத்திற்கு வந்தது. அதுமட்டுமின்றி, பங்களாதேஷிலுள்ள ஹிந்துத்துவாக்கள், இந்தியாவில் வந்து குண்டுவெடிப்புகளை நடத்துகின்ற விவரமும் வெளியானது.

இவ்விசாரணை, பாகிஸ்தானிகள் உட்பட 68 பேர் படுகொலை செய்யப்பட்ட 2007 பிப்ரவரியில் நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவாக்கள் ஈடுபட்ட உண்மையின் தடத்திற்கு இட்டுச் சென்றது. அத்துடன் ஹைதராபாத்திலுள்ள மக்கா மஸ்ஜிதில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பிலும் ஹிந்துத்துவாக்களுக்குள்ள தொடர்பைக் குறித்து விசாரிக்கும் நிலை வந்தது.

சம்ஜோதா குண்டுவெடிப்பை விசாரிப்பது ஹரியானா காவல்துறையானதால், அதில் தொடர்புடைய ஹிந்துத்துவாக்கள் குறித்த ஆதாரங்களை கார்கரேவிடமிருந்து ஹரியானா காவல்துறையின் விசாரணை குழு சேகரித்துக் கொண்டிருந்தது. விசாரணை பா.ஜ.கவில் உள்ள பல முக்கியஸ்தர்களை நோக்கியும் நீளும் என்ற நிலை வந்தது.

இக்கட்டத்திலேயே, "ஹிந்துக்களைத் தீவிரவதிகளாகச் சித்தரி"ப்பதாகக் கூறி பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானியும் நரேந்திர மோடியும் கார்கரேக்கு எதிரான ஆக்ரோஷத்துடன் வெளியாகினர். "ஹிந்துக்கள் ஒருபோதும் தீவிரவாதிகளாக இயலாது" என்ற விசித்திரமான நியாயத்துடன் இருவரும் கார்கரேக்கு எதிராகக் கடுமையாக அறிக்கை விட்டனர். அதன் பின்னர் கார்கரேக்குத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வரத்துவங்கின.

அவரது "வீடு குண்டுவெடிப்பின் மூலம் தகர்க்கப்படும்" என்று மிரட்டல் விடுக்கப்பட்ட அன்று இரவு, இவற்றுக்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளியாக கார்கரே கொலை செய்யப்படுகின்றார். மாலேகோன் வழக்குப் பரணேறும் சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன. சம்ஜோதா இரயில் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைத் தடைபடுகின்றது.

மாலேகோன் வழக்கில் கார்கரேயால் கைதுசெய்யப்பட்ட கர்னல் ஸ்ரீகாந்த் ப்ரசாத் புரோகிதைக் கொண்டு மும்பைத் தீவிரவாதத் தடுப்புப் படைக்கு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்த ரகுவன்ஷி மீண்டும் மும்பைத் தீவிரவாத தடுப்புப்படைக்குத் தலைவராகிறார். இத்துடன் மக்கா மஸ்ஜித் உட்பட பல வெடிகுண்டு வழக்குகளிலும் ஹிந்துத்துவாக்களுக்கான தொடர்புகள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் மங்கத் தொடங்கியுள்ளன.

satyamakam.com

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் - 2

கார்கரே கொலையைக் குறித்த காவல்துறையின் விளக்கத்தை கார்கரேயின் குடும்பம் உட்பட மக்கள், அப்படியே நம்பாமல் சந்தேகப் படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதன்முதலாகக் கார்கரே தாஜ் ஹோட்டலிலும் காந்தே மற்றும் ஸலஸ்கர் இருவரும் தாஜிற்கு அடுத்துள்ள மெட்ரோவிற்கருகில் வைத்தும் கொல்லப் பட்டதாகவே காவல்துறை கூறியிருந்தது. பின்னர், மூவரும் ஒரே இடத்தில் வைத்து ஒன்றாகவே கொல்லப்பட்டதாகக் காவல்துறையே மாற்றிக் கூறியது.





மும்பைத் தாக்குதல் தொடங்கிய வேளையில், கார்கரே தாதரிலுள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். காந்தே அன்று ஆஃப் டூட்டியில் இருந்தார். தாக்குதல் நிகழ்வை முதலாவதாக அறிந்த ஸலாஸ்கர், நேரடியாகத் தாஜ் ஹோட்டலுக்குத்தான் முதலில் வந்து சேர்ந்தார். தாஜ் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த ஸலாஸ்கரை ஜாயிண்ட் கமிஷனர் ராகேஷ் மரியா கொலாபா காவல்நிலையத்திற்கு வரும்படி கன்ட்ரோல் ரூம் வழியாக ஆணையிட்டிருக்கின்றார். தாஜிலிருந்து கொலாபா காவல்நிலையத்திற்குப் புறப்பட்ட ஸலாஸ்கருக்கு, ரமேஷ் மரியாவிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது - தீவிரவாதிகளின் தாக்குதலில் அடிஷனல் கமிஷனர் சதானந்த் தத்தா காயமடைந்திருப்பதாகவும் உடனடியாக ஸலாஸ்கர் காமா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் அந்த அழைப்புக் கூறியது.

காமாவுக்குச் செல்லும் வழியில் ஸலாஸ்கர் கார்கரேயைச் சந்தித்தார். காந்தேயும் இவர்களுடன் இணைந்தார். அச்சமயம் ACP பிதோனாய் குவாலிஸ் வண்டியில் அங்கு வந்து சேர்ந்தார். குவாலிஸ் வண்டியினைத் தங்களுக்குத் தர வேண்டும் என காந்தே கேட்டுக் கொண்டார். இதன் பின்னர் நடந்ததாகக் காவல்துறை கூறிய கதை கீழ்கண்டவாறு:

"வண்டியை ஸலஸ்கர் ஓட்டினார். அவருக்கு அருகில் காந்தே உட்கார்ந்திருந்தார். ஜாதவும் மற்ற இரு கான்ஸ்டபிள்களும் கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தனர். இரண்டாவது வரிசை இருக்கையில் கார்கரே அமர்ந்திருந்தார். காமா மருத்துவமனைக்குப் புறப்பட இருந்த வேளையில் இவர்களுக்கு மீண்டும் அழைப்பு வந்தது. "செயின்ட் சேவியர் கல்லூரிக்கு அருகில் வைத்து, தீவிரவாதிகள் வண்டி ஒன்றைக் கடத்துவதற்கு முயற்சி செய்தனர்" என அந்த அழைப்பு கூறியது. அந்நேரம் ஓர் ஆள் அவர்களின் வண்டியின் குறுக்காக பாய்வதைக் கண்டனர். தற்பொழுது காவல்துறையின் கஸ்டடியில் உள்ள அஜ்மல் கஸப்தான் அவன். ஸலஸ்கர் தன் கையிலுள்ள கைத்துப்பாக்கியால் கஸபை நோக்கிச் சுட்டார். கஸ்பின் கையில் காயம் ஏற்பட்டது. திடீரென கஸபுடன் இருந்த இஸ்மாயில் இருளிலிருந்து கொண்டு தாறுமாறாக சுட்டான். வண்டியில் இருந்த கார்கரே உட்பட அனைவருக்கும் குண்டடி பட்டது. அனைவரையும் வண்டியிலிருந்து வெளியே இழுத்துப் போட்டுவிட்டு, கஸபும் இஸ்மாயீலும் அவ்வண்டியில் தப்பியோடினர்; பின்னர் பிடிபட்டனர்."

காவல்துறை கூறும் இக்கதை, நம்பமுடியாத ஒன்றுக்கொன்று பொருந்தாதவை என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். கார்கரேக்கு மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் கொலை மிரட்டல்கள் தொடர்ந்து இருந்ததால், அவருடன் ஆயுதமேந்திய இரு போலீசார் நியமிக்கப் பட்டு, எந்நேரமும் உடன் இருந்தனர். ஆனால், இவர்கள் இல்லாமலேயே கார்கரே முதலில் CSTக்கும் பின்னர் காமா மருத்துவமனைக்கும் சென்றுள்ளார். தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெறுவதற்கு முந்தைய தினம், அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் தலைமையில் நடந்த காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், "மாலேகோன் குண்டு வெடிப்பு விசாரணையில் ஈடுபட்டிருப்பதால் மிகக் கவனமாக இருக்க வேண்டும்" என கார்கரேக்குப் பாட்டீல் முன்னெச்சரிக்கை கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்தே கார்கரேக்குப் பாதுகாப்பாக இரு போலீசார் நியமிக்கப் பட்டனர். இருப்பினும் அந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் துணையின்றி, கார்கரே தீவிரவாதிகளை எதிர்கொள்ள தனியாகச் சென்றது எப்படி? கார்கரே சி.எஸ்.டிக்கு வந்தபோது, ATSஇல் முன்னர் தலைவராக இருந்த பி.கே. ரகுவன்ஷி CSTயில் இருந்தார். இருப்பினும் இவரோ கார்கரேயின் பாதுகாப்பு அதிகாரிகளோ சம்பிரதாய விசாரிப்புக்காகக்கூட கார்கரே அருகில் செல்லத் தயாராகவில்லை. காந்தேயும் ஸலஸ்கரும் கார்கரேயுடன் காமாவுக்குப் புறப்படும் பொழுது, அவர்களது வண்டியில் ரகுவன்ஷி ஏறவில்லை; கார்கரேயின் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் செல்லவில்லை.

காமா மருத்துவமனைக்குத் தனியாகச் செல்லுமாறு யாராவது கார்கரேயிடம் கோரிக்கை/உத்தரவு விடுத்திருந்தனரா?

அச்சமயம் கார்கரேக்குத் தொடர்ச்சியப் பல தொலைபேசி அழைப்புகள் வந்திருந்ததை அவரது இறுதியான அசைவுகளை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகளிலிருந்து உறுதியாகக் கூறலாம். அந்நேரம் காவல்துறை கண்ட்ரோல் அறையில், ஜாயின்ட் கமிஷனர் ராகேஷ் மரியாதான் இருந்தார். இதே மரியாதான் தற்பொழுது மும்பைத் தாக்குதல் வழக்கை விசாரிக்கின்றார். கஸபை விசாரணை செய்த ஒரேயொரு அதிகாரியும் இவர்தான்.

கார்கரே கொல்லப்பட்ட நிகழ்வில் ஒரே சாட்சி அருண் ஜாதவ், மீண்டும் நடந்த சம்பவத்தை விவரிக்கும்போது கதையில் மாற்றம் வருகிறது. "தீவிரவாதிகள் கார்கரேயின் மீதும் மற்றவர்கள் மீதும் தாறுமாறாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காந்தே, ஸலஸ்கர், கார்கரே முதலானவர்களை வண்டியிலிருந்து வெளியே தூக்கி வீசிவிட்டு, காரைக் கடத்திக் கொண்டு தப்பிச் சென்றனர். அதே காருக்குள் காயம் அடைந்திருந்த நான், இறந்தவன் போன்று வண்டியின் சீட்டிற்கு கீழே மறைந்து கிடந்தேன்" என்பதாக ஜாதவ் கூறுகிறார். "தீவிரவாதிகள் அவ்வண்டியை விட்டு மற்றொரு வண்டியைக் கடத்தித் தப்பிச் செல்வதுவரை நான் அவ்வண்டியின் சீட்டிற்கு கீழே கிடந்தேன். தீவிரவாதிகள் சென்ற பிறகு வயர்லெஸ் மூலமாக காவல்துறை கண்ட்ரோல் அறைக்குத் தகவல் கொடுத்தேன்" என்பது ஜாதவ் தரும் விவரணம்.

ஸலஸ்கரின் பாதுகாப்பு அதிகாரியான கான்ஸ்டபிள் ஜாதவின் கையில் ஒரு கைத்துப்பாகி கூடவா இல்லாமல் இருந்தது?

தீவிரவாதிகள் முதலில் கடத்திச் சென்ற குவாலிஸ் வண்டியின் பின்சீட்டிற்குக் கீழே, தீவிரவாதிகளுக்குத் தெரியாமல் கிடந்த ஜாதவ், தீவிரவாதிகளைப் பின்பக்கமிருந்து சுட்டுத் தள்ளியிருக்கலாமே?

இக்கேள்விக்கு ஜாதவின் பதிலைக் கேளுங்கள்:
"என் கைவசமிருந்த கைத்துப்பாக்கியைக் காமா மருத்துவமனையில் வைத்து நான் வேறோர்(?) அதிகாரிக்குக் கொடுத்து விட்டேன்".

எவரும் நம்ப முடியாத பதில்!.

ஜாதவைப் போன்ற என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், இதுபோன்ற இக்கட்டான சூழலில் தனது கைத்துப்பாக்கியை மற்றொருவருக்கு கொடுப்பது என்பது மட்டுமல்ல, கலாஷ்நிக்கோவ் துப்பாக்கிகளுடன் நிற்கும் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்கு அனுபவமிக்க ஓர் என்கவுண்டர் அதிகாரி வெறுங்கையுடன் செல்வது என்பது உலகமகா காமடியாகும்.

அதுமட்டுமல்ல, காமா மருத்துவமனைக்கு எதிரில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் காயம் பட்டதாகக் கூறும் ஜாதவ், அதற்கு முன்பு காமா மருத்துவமனைக்கு எப்பொழுது சென்றார்?. காமா மருத்துவமனைக்கு முன்பாக வண்டியிலிருந்து இறங்கும் முன்னரே தீவிரவாதி இஸ்மாயில் தாறுமாறாகச் சுட்டதாகவும் கையில் குண்டடி பட்டிருந்த கஸபும் இஸ்மாயீலும் கார்கரே முதலானவர்களை வண்டியிலிருந்து இழுத்து வெளியே போட்டு விட்டு வண்டியைக் கடத்திச் சென்றதாகவும் அந்நேரம், தான் வண்டியின் பின் இருக்கையின் கீழே குண்டடி பட்டு இறந்தது போன்று கிடந்ததாகவும் இதே ஜாதவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சம்பவம் நடந்த சமயத்தில் காமா மருத்துவமையின் முன்பாக வண்டியிலிருந்து கீழே இறங்காத ஜாதவ், எப்பொழுது காமா மருத்துவமனையில் வைத்து மற்றொரு அதிகாரிக்குத் தனது கைத்துப்பாக்கியைக் கொடுத்தார்?. ஜாதவின் கைத்துப்பாக்கியைப் பெற்றுக் கொண்ட அந்த மர்ம அதிகாரி யார்?

ஸலஸ்கரின் பாதுகாப்பு அதிகாரியான ஜாதவிற்கு, ஸலஸ்கருடன் செல்லும் சாதாரண வேளைகளில்கூட கையில் துப்பாக்கி இருக்க வேண்டியது கட்டாயமாகும். இருப்பினும் தீவிரவாதிகளை எதிர்கொள்ளச் செல்லும் வேளையில், கையில் துப்பாக்கி இல்லாமல் சென்றார் என்பது உச்சகட்ட நகைப்பாகும்.

கொல்லப்படுவதற்குச் சில மணித்துளிகளுக்கு முன்னர், கார்கரே மாலேகோன் வழக்கின் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் ரோஹிலி சாலினியுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியிருந்தார். மாலேகோன் வழக்குத் தொடர்பான மேலதிக விஷயங்கள் குறித்து அடுத்தநாள் விரிவாகப் பேசிக் கொள்ளலாம் என இருவரும் தீர்மானித்திருந்தனர். கிட்டத்தட்ட அதே நேரம், பூனே காவல்துறைக்கு ஒரு மொட்டை தொலைபேசி மிரட்டல் வந்தது. "அடுத்த இரு தினங்களுக்குள் கார்கரே குண்டுவெடிப்பில் கொலை செய்யப்படுவார்" என அம்மிரட்டல் கூறியது. அம்மிரட்டலை விடுத்தவர் தூய மராட்டி மொழியில் பேசியுள்ளார். கார்கரே கொல்லப்பட்டார்; நாட்களுக்குள் அல்ல, சில மணிநேரங்களுக்குள்ளேயே! கார்கரேயின் அருகில் செல்வதற்கோ அவருடன் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குவாலிஸ் வண்டியில் அவருடன் ஏறிச் செல்வதற்கோ தயாராகாத முன்னாள் ATS தலைவர் ரகுவன்ஷி உடனடியாக மீண்டும் ATS தலைவராகப் பதவியேற்றார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்!

கார்கரே கொல்லப்பட்டது ஏகே47 மூலம் அல்ல

!
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு இடையில் கொலை செய்யப்பட்ட மும்பைத் தீவிரவாதத் தடுப்புத்துறை(ATS)த் தலைவர் கார்கரே கொல்லப்பட்டது ஏகே 47 ரக துப்பாக்கியின் மூலம் அல்ல என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கைத்துப்பாக்கியிலுள்ள 9MM ரக தோட்டாக்களே மருத்துவப் பரிசோதனையின்போது கார்கரேயின் உடலில் காணப்பட்டன எனப் பத்திரிக்கைகளிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



மருத்துவப் பரிசோதனையின்போது கார்கரேயின் உடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் ஏகே 47 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 7.52MM ரகத் தோட்டாக்கள் அல்ல எனவும் கைத்துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 9MM ரகத் துப்பாக்கித் தோட்டாக்களே அவர் உடலில் காணப்பட்டன எனவும் தகவல்கள் கசியத் துவங்கியுள்ளன. தற்பொழுது காவல்துறை கஸ்டடியில் உள்ள அஜ்மல் கஸப் மற்றும் மும்பைத் தாக்குதலின்போது கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இஸ்மாயிலின் கைவசமிருந்த ஏ.கே.47 துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டுகள் துளைத்தே கார்க்கரே கொல்லப்பட்டார் என்ற காவல்துறையின் வாதத்தைத் தற்பொழுது வெளியாகும் தகவல்கள் கேள்விக்குறியாக்கி உள்ளன.

கார்கரே கொல்லப்பட்டதைக் கண்ணால் கண்ட ஒரே சாட்சியான கான்ஸ்டபிள் ஜாதவின் வாக்குமூலப்படி, மறைவான இடத்திலிருந்து திடீரென வெளியான இஸ்மாயிலின் கைகளில் இருந்து வெளியான ஏ.கே.47 துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்தே கார்கரே கொல்லப்பட்டார். இஸ்மாயில், கலாஷ்நிகோவ் 47 ரகத் துப்பாக்கி உபயோகித்துத் தாறுமாறாகச் சுட்டதாக ஜாதவ் கூறியுள்ளார். ஆனால், கலாஷ்நிகோவ் துப்பாக்கிகளில் 7.52MM தோட்டாக்களே உபயோகிக்க முடியும். கொல்லப்பட்ட கார்கரேயின் உடலிலிருந்து கலாஷ்நிகோவில் உபயோகிக்கும் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. கஸபின் கைகளில் கைத்துப்பாக்கி இருந்ததாக இதுவரை வெளியான தகவல்களில் கூறப்படவும் இல்லை. அதுமட்டுமல்ல, கஸப் கைத்துப்பாக்கி உபயோகித்ததாக ஜாதவின் வாக்குமூலத்திலும் இல்லை. ATS அதிகாரி ஸலஸ்கர் சுட்ட குண்டு கஸபின் கைகளில் பாய்ந்து, அந்நேரத்தில் அவன் வலிதாங்காமல் அலறியதாக மட்டுமே ஜாதவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தீவிரவாதத் தாக்குதலைச் சமயோசிதமாகப் பயன்படுத்திக் கொண்டு வேறு ஏதேனும் குழுக்கள் கார்கரேயைக் கொலை செய்திருக்கலாம் என்ற சாத்தியமான சந்தேகத்திற்கு இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் வலுக் கூட்டியுள்ளன. கஸபும் இஸ்மாயிலும் சி.எஸ்.டியில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுத் தப்பி ஓடிய பின்னரும் சி.எஸ்.டிக்குச் சமீபமுள்ள மெட்ரோ மற்றும் அதன் சுற்றுபுறங்களில் மேலும் பல துப்பாக்கிச் சூடு சப்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றத் தொடக்கத்தில் இதனைக் குறித்துப் பலமுறை செய்தி கூறிய ஊடகங்கள், பின்னர் தாஜிலும் மற்ற தாக்குதல்களிலும் கவனத்தை மாற்றியபின் அவற்றைக் குறித்து எந்தச் செய்தியும் வெளியிடவில்லை. அதே சமயம், "பொது மக்களின் முன்னிலையில் தெளிவுபடுத்தப் படவேண்டிய பிரேத பரிசோதனை அறிக்கை உட்பட மற்ற ஆதாரங்களை ஊடகங்களுக்குக் கொடுக்க வேண்டாம்" என காவல்துறை சம்பந்தப் பட்டவர்களிடம் கடுமையாகக் கட்டளை பிறப்பித்துள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இது, கார்கரே கொல்லப்பட்ட விதம் குறித்து மேலும் சந்தேகத்தை அதிகப் படுத்தியுள்ளது.

கார்கரேயின் உடலில் துப்பாக்கித் தோட்டா துளைத்த இடத்தைக் குறித்துத் தற்போதுவரை முன்னுக்குப் பின் முரணான அபிப்பிராயங்களே நிலவுகின்றன. "கார்கரே நெஞ்சில் குண்டுகள் துளைத்து இறந்தார்" என ஆரம்பத்தில் வெளியான செய்திகள், அவர் அணிந்த புல்லட் புரூப் காட்சிகள் வெளியாகி பிரச்சனைகளை ஏற்படுத்தியப் பின்னர், "நெஞ்சில் அல்ல; கழுத்திலேயே அவர் குண்டு துளைத்து இறந்தார்" என்று பின்னர் செய்திகள் வெளியாகின. அவர் எங்கு சுடப்பட்டு இறந்தார் என்ற செய்தியைக்கூட இதுவரை உறுதியாகக் கூறாமல் மறைத்து வைத்திருப்பது, கார்கரே கொலையைப் பற்றி மென்மேலும் சந்தேகங்களையே அதிகப் படுத்துகிறது.

***

நவம்பர் 26 அன்று நடந்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் துவக்கத்திலேயே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரே கொலை செய்யப்பட்ட வேளையில் அதற்கு நாயிக் அருண் ஜாதவ் என்ற ஒருவர் மட்டுமே சாட்சியாக இருந்தார். காவல்துறையின் விளக்கப்படி, கார்கரே யாத்திரை செய்திருந்த குவாலிஸ் வண்டியில் கார்கரேயுடன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் ஸலாஸ்கர், கூடுதல் நியமன கமிஷனர் அஷோக் காந்தெ, கான்ஸ்டபிள் நாயிக் அருண் ஜாதவ், மேலும் இரு கான்ஸ்டபிள்கள் ஆகிய ஐவர் உடனிருந்தனர். இதில் ஜாதவ் மட்டும் சிறு காயங்களுடன் தப்பிக்கிறார். கார்கரேயும் மற்றவர்களும் கொல்லப்பட்டது எப்படி என்பதை ஜாதவின் விவரிப்பிலிருந்து மக்கள் அறிந்துக் கொள்கின்றனர். காவல்துறை கூறும், கொலையாளிகள் நடத்திய ரேண்டம் 'ஃபயரிங்கில் ஜாதவின் வலது தோளில் மட்டுமே குண்டு காயம் ஏற்படுகின்றது. அதாவது, துப்பாக்கிச் சூட்டில் உயர் அதிகாரிகள் அனைவரும் கொல்லப்பட்ட வேளையில் கீழ்மட்டநிலையிலுள்ள கான்ஸ்டபிள் மட்டும் சிறு காயத்துடன் தப்பிக்கிறார்.

ஜாதவின் வாக்குமூலப்படி, காமா மருத்துவமனைக்கு அருகில் ஒரு மரத்தின் பின்புறம் மறைந்திருந்த தீவிரவாதிகள் கார்கரே பிரயாணித்த குவாலிஸ் வண்டியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். சி.எஸ்.டிக்குச் சற்று முன்பாக ஹஜ் ஹௌஸ் முன்பக்கத்தில் வந்து சேரும் கார்கரே, குண்டுதுளைக்காத ஆடையும் தலைக்கவசமும் அணிகிறார். இங்கு வைத்து ஸலாஸ்கரும் காந்தேயும் அவருடன் இணைகின்றனர். 'கார்கரேயின் கடைசி அதிரடி' என்ற தலைப்பில் ஐபிஎன் இணையதளம் வெளியிட்ட அவரது படத்தின்கீழ் "LAST OPERATION: Karkare gears up before entering the Taj Palace hotel" என்று தகவல் தந்தது. ஆனால், தாக்குதல் தீவிரமாக நடைபெற்ற தாஜ் ஓட்டலுக்கோ ஓபராய் ஓட்டலுக்கோ கார்கரே செல்லவில்லை. மும்பைக் காவல்துறையின் மற்றொரு அதிகாரியான தினேஷ் அகர்வால் கூறுவதை கேளுங்கள்: "தீவிரவாதத் தாக்குதல் நடந்த உடனேயே ATS குழுவை அலர்ட் செய்வதற்காக நான் கார்கரேவை அழைத்தேன். 'அகர்வால், நான் இப்பொழுது சம்பவ இடத்தில்தான் இருக்கிறேன்' என்று கார்கரேயிடமிருந்து உடனடியாக எனக்கு பதில் கிடைத்தது" கார்கரே சி.எஸ்.டியில் நிற்கும் வேளையிலேயே அகர்வால் கார்கரேயை அழைத்திருக்க வேண்டும்.

சி.எஸ்.டியில் நடந்த துப்பாக்கிச் சூடுக் காட்சிகளிலிருந்து தீவிரவாதிகளின் ஆயுதபலத்தைக் குறித்து கார்கரே புரிந்திருக்கக் கூடும். என்றாலும் கார்கரே காந்தேவையும் ஸலாஸ்கரையும் அழைத்துக் கொண்டு காமா மருத்துவமனைக்குப் புறப்படுகின்றார். அவர் சென்று சேர்ந்ததோ, காமா மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஆளரவமற்ற பகுதியில்! அதன் மிக அருகிலேயே மும்பை காவல்துறை கமிஷனர் அலுவலக வளாகத்தினுள் சி.எஸ்.டி தலைமையகம் அமைந்துள்ளது . ஏற்கெனவே சி.எஸ்.டியில் தீவிரவாதிகளுடன் போராட்டம் நடத்திய மூன்று உயர் அதிகாரிகள், வேறு ஆயுதங்களோ காவல்படையின் உதவியோ இன்றி ஒரே ஒரு வண்டியில் தீவிரவாதிகளைத் தேடிச் செல்வது என்பது அசாதாரணச் சம்பவமாகும்.

கார்கரேக்குத் தவறான தகவல் வழங்கி, அவரைக் காமா மருத்துவமனைக்குத் திசைதிருப்பி விட்டது யார்? அல்லது கார்கரே வேறு ஏதாவது இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டாரா?. 50க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களில் பங்குபெற்றவர்; அதில் பெரும்பாலானவையும் போலி என்கவுண்டர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நாயிக் அருண் ஜாதவை நம்பலாமா?(விவாதம் கிளப்பிய சதபோலா என்கவுண்டர் (1997), நவீன்ஷெட்டியைச் சுட்டுக்கொன்ற 2003ல் பாந்த்ரா குர்லா பில்டிங் என்கவுண்டர் போன்றவற்றிலும் இதே ஜாதவ் பங்கு பெற்றிருந்தார். இத்தகைய பல என்கவுண்டர்களிலும் ஜாதவ் மும்பை நிகழ்வைப்போலவே சொல்லி வைத்தாற்போல் அபாயகரமில்லாத அற்ப காயங்களுடன் தப்பியிருந்தார்.)

சந்தேகங்கள் தொடர்கின்றன ...

இன்ஷா அல்லாஹ் தொடரும் ...

இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! ( இரண்டாம் பகுதி)

இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! (பகுதி- 2)





இந்திய அரசியலின் ஆய்வை, அதனைக் குறித்த ஆய்வு செய்யும் எண்ணைத்தை உருவாக்கியுள்ள பாஜகவின் உருவாக்கத்திலிருந்தே துவங்கலாம். 1915இல் துவக்கப் பட்ட ஹிந்து மகாசபையின் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் ஜனசங்கம், 1981ஆம் ஆண்டு பாஜக எனும் பெயரில் அரசியல் கட்சியாக அறிமுகம் செய்யப்பட்டது. அந்நாட்களில், நாட்டு மக்கள் முன் பாஜகவினால் வைக்கப்பட்ட தலையாய முழக்கம், "ஊழலற்ற, அதிகார வெறியற்ற, திறமையான ஆட்சி" என்பதாக இருந்தது. அதுவரை காங்கிரஸ் என்ற ஒற்றைக் கட்சியின் அதிகார வெறியிலும் ஊழலிலும் சிக்கித் தவித்த இந்திய மக்கள், தங்களைக் கைதூக்கிவிட ஒரு வலிமையான மாற்றுக் கட்சி வாராதா? என்ற ஏக்கத்திலிருந்தனர். அத்தோடு, அதிகாரத்தைப் பிடிக்க இந்திய மக்களை இந்துக்கள்-இந்துக்கள் அல்லாதோர் என்ற வகையில் பிரித்தெடுக்க, "இந்தியா இந்துக்களுக்குச் சொந்தமானது" என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் கோஷமும் மெல்ல மெல்ல பாஜகவிடமிருந்து பக்குவமாக வெளிப்பட ஆரம்பித்தது. இதற்கு தேசியத்தையும் தேசப்பற்றையும் தங்களின் சொந்த உடமைகளாகக் காட்டிக் கொள்ள பாஜக தவறவில்லை.

உண்மையில் இந்தக் கோஷம் ஆர்.எஸ்.எஸ் ஹிந்துதுவ கோஷம் என்பது எவரும் அறியாததல்ல. இந்தக் கோஷத்துக்கு உரமிடும் வகையில், சுதந்திரத்தின்போது முஸ்லிம்களுக்காகப் பாகிஸ்தானும் இந்துக்களுக்காக இந்தியாவும் பிரிக்கப்பட்டன என்பதையும் பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம்களே காரணம் என்ற சிந்தனையையும் சிதைத்து எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்களின் துணையுடன் மக்கள் மனதில் பாஜக சரியாகவே திணித்து வந்தது.

பாஜகவின் இக்கோஷத்தை நம்பிய பாமர மக்கள், பாகிஸ்தான் பிரிவினையின் ஆணிவேர் குறித்தும் நாட்டைத் துண்டாடுவதற்கு அப்போது நடந்த உண்மையான சதி நிகழ்வுகளைக் குறித்தும் ஆராயத் தலைப்படவில்லை. இந்திய விடுதலைப் போராட்ட காலகட்டத்தில், நாட்டை ஆள்வோருக்குப் பின்னணியில் இருந்து செயல்படுவதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ், அக்காலகட்டத்திலேயே சரியான பாதையில்இந்து-முஸ்லிம் எனும் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையுடன் பயணித்துக் கொண்டிருந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்து-முஸ்லிம் என்ற பிரிவினையைச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஆங்கிலேயர்களுடன் இணைந்து விதைத்தது. அதற்கு உதவியாக காங்கிரஸின் உள்கட்டமைப்பில் நன்றாக ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ், கிட்டத்தட்ட அதன் உயர் மட்டத் தலைவர்கள் அனைவரின் சிந்தனையிலும் காவி எண்ணத்தை விதைப்பதில் வெற்றி பெற்றிருந்தது.



ஒரு காலகட்டம் வரை இந்திய நாட்டின் விடுதலையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு காங்கிரஸோடு இணைந்து போராடி வந்த ஜின்னா, காங்கிரஸில் ஏற்பட்ட ஹிந்துத்துவ மாற்றத்தை உணர்ந்து காங்கிரசிலிருந்து விலகி முஸ்லிம் லீக்கின்கீழ் விடுதலைப் போரைத் தொடர வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டார். 1906ஆம் ஆண்டு சர்.ஆகாகானால் தோற்றுவிக்கப் பட்ட முஸ்லிம் லீக் என்ற அமைப்புக்குள் முப்பதாண்டுகள் கழித்து, 1936ஆம் ஆண்டில் ஜின்னா நுழைந்தார். நுழைந்தார் எனச் சொல்வதைவிட, காங்கிரஸில் இருந்த தீவிர ஹிந்துத்துவத் தலைவர்களின் வேற்றுமைப் பேச்சுக்கள் ஜின்னாவைக் காங்கிரஸிலிருந்து பிரித்து முஸ்லிம் லீக்கினுள் தள்ளி விட்டன எனக் குறிப்பது பொருத்தமாக இருக்கும். நேரு போன்ற உயர்மட்டத் தலைவர்கள் பலர் திலகர் போன்ற ஹிந்துத்துவவாதிகளின் சிந்தனையோடு ஒத்துப் போய் விட்டது ஜின்னாவின் முஸ்லிம் லீக் நுழைவுக்குக் காரணியானது.

மேற்கொண்டு போவதற்கு முன்னர், வேளை வாய்க்கும்போது சுத்தம் செய்யப்பட வேண்டிய வரலாற்று அழுக்குகளைச் சற்றே இனம் கண்டு இங்கு ஆவணப் படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

"முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் தனித்தனி நாடு எனும் சிந்தனை லாலா லஜ்பத்ராயின் மூளையில்தான் முதன் முதலில் உதித்தது" என அவரிடம் ஆறு ஆண்டுகள் அந்தரங்கச் செயலாளராகப் பணியாற்றிய பண்டிட் சுந்தர்லால் ’ரேடியன்ஸ்’ வார 13.6.87 இதழில் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

"இந்தியாவின் ஆட்சி என்பது இந்துக்களுக்கே; இங்கு முஸ்லிம்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை" என்று சாவர்கர் 1917ஆம் ஆண்டிலிருந்து கூறி வந்ததாக R.N.அகர்வால் தனது The National Movement என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

"இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது. முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே. அவர்கள் விருந்தாளியைப் போலவே நடந்து கொள்ள வேண்டும்" என்று குர்தகி மட சங்கராச்சாரியார் முஸ்லிம்களை எச்சரித்தார்.

"இந்து-முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது முழு முட்டாள்தனம் - A Joint Hindu Muslim state is Sheer Nonsense" என்று அகில இந்திய சிவில் சர்வீஸில் உறுப்பினராக இருந்த ஹர்தயால் கூறினார்.

1923இல் வாரணாசியில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தலைமையில் இந்துமகாசபை புதுப்பிக்கப்பட்டு, "இந்தியா இந்துக்களுக்கே! வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை" என்று வெளிப்படையாகப் பிரகடனப் படுத்தப் பட்டது.

இத்துணைப் பிரிவினைவாத முழக்கங்கள் இந்துத் தலைவர்களால் முழங்கப் பட்ட பின்னரும் 1940 வரைக்கும் முஸ்லிம் லீக், தனிநாடு பற்றி வலியுறுத்தவில்லை. "முஸ்லிம்களுக்கு என்று தனிநாடு என்பது நிறைவேற முடியாத வெறுங் கனவு - An Impossible Dream" என்று 1939இல் ஜின்னா எதிர்ப்புக் குரல் கொடுத்திருந்தார்.

காலம் மாறியது; காங்கிரஸுக்கு ஆட்சிப் பொறுப்பு கிடைத்த உடனேயே இந்திய முஸ்லிம்களை அது வெளிப்படையான எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கியது.

"நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையின் அடிநாதம் காங்கிரஸ்தான். 1937இல் காங்கிரஸுக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைக்கப் பெற்றதும் அதன் செயல்பாடுகள் முஸ்லிம்களுக்கிடையில் ஐயங்களை உருவாக்கின.. முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற காங்கிரஸ் மறுத்தது" என்று Congress Parentage of Partition எனும் தலைப்பின்கீழ் தமது நூலான Recollection and Reflectionஇல் எழுதுகிறார் விடுதலைக் கட்சி(Liberal Party)யின் தலைவர் சர். சிம்மன்லால் சிடால்வாட்.

"ஆட்சிக்கு வரும் மாநில அமைச்சரவையில் சிறுபான்மைப் பிரதிநிதிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்" எனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட 1930ஆம் ஆண்டின் வட்டமேஜை மாநாட்டில் பங்காற்றியவர் சர். சிடால்வால். வட்டமேஜை மாநாட்டுத் தீர்மானத்தைப் பதவிக்கு வந்ததும் காங்கிரஸ் காற்றில் பறக்க விட்டது. "முஸ்லிம் லீக் கட்சிக்கு முழுக்குப் போட்டு விட்டு, காங்கிரஸில் இணைந்தால் மட்டுமே அமைச்சர் பதவி" என்று புதிய ஒரு கொள்கையைக் காங்கிரஸ் அறிவித்தது.

"காங்கிரஸின் அறிவிப்பு, அதன் அடிப்படை விதிகளுக்கே மாற்றமானது. இந்திய நாட்டின் எல்லாக் கட்சிகளையும் அழித்தொழித்து விட்டு, காங்கிரஸை இந்தியாவின் ஒரே அரசியல் கட்சியாக நிறுவும் முயற்சியின் முன்னோட்டமாக இந்த முறை கையாளப்பட்டது. ஒரு ஏகாதிபத்திய, யதேச்சதிகார அரசாங்கத்தை நிறுவ செய்யப்படும் இம்முயற்சியை ஒருக்கால் ஹிந்துக்கள் வரவேற்கக் கூடும். ஆனால் சுதந்திர மக்கள் என்ற முறையில் இம்முயற்சி, முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்" என A Short History of India and Pakistan எனும் நூலில் டாக்டர் அம்பேத்கர் வன்மையாகக் கண்டித்தார்.

"ஒன்றிணைந்த இந்தியாவில் சுயாட்சி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்கலாம்" என்பதாக ஒரு முடிவை, கேபினட் தூதுக்குழு 1946 மே மாதம் 16ஆம் தேதி வெளியிட்டது. சுயாட்சியில் முஸ்லிம்களுக்கும் பங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 1940ஆம் ஆண்டு முன்வைத்த தனிநாடு கோரிக்கையை ஜின்னாவின் ஆலோசனையின்படி கைவிடுவதற்கு முஸ்லிம் லீக் முன் வந்தது. எனவே, கேபினட் தூதுக்குழுவின் முடிவை 1946 ஜூன் 6ஆம் தேதியன்று ஒரு தீர்மானத்தின் மூலம் முஸ்லிம் லீக் ஏற்றுக் கொண்டு நிம்மதி அடைந்தது.

ஆனால், நிம்மதி நீடிக்கவில்லை.

ஒருமாதத்துக்குள் - அதாவது 1946 ஜூலை 10இல் - பத்திரிகையாளருக்குப் பேட்டியளித்த ஜவஹர்லால் நேரு, "கேபினட் குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு அதிகாரம் உண்டு" என்று மிரட்டும் தொனியில் தெரிவித்தார்.

அது குறித்து, "நேருவின் பேட்டி, நாட்டில் வரலாற்றையே மாற்றி விட்டது" என காங்கிரஸ் தலைவர் மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் தனது India Wins Freedom என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இடைக்கால ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போதே இந்தளவுக்கு இரட்டை நாக்கோடு பேசும் காங்கிரஸ், விடுதலை பெறும் இந்தியாவில் முஸ்லிம் லீக்கோடு - முஸ்லிம்களோடு நீதி-நியாயத்தோடு நடந்து கொள்ளும் என்று நம்ப முடியாது என்ற முடிவான நிலைக்கு முஸ்லிம் சமுதாயம் தள்ளப் பட்டது. "அடிக்கடி தன் நிலையை மாற்றி மாற்றிப் பேசும் காங்கிரஸை இனியும் நம்பத் தயாராக இல்லை; தனி நாடுதான் தீர்வு" என விடுதலைக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர்தான் முடிவாக ஜின்னா அறிவித்தார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் இந்தியாவில் இருந்தால் தாங்கள் நினைப்பது போன்ற ஹிந்துத்துவ அஜண்டாவை நடைமுறைப்படுத்த இயலாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸ் தலைவர்களான நேரு, வல்லபாய் பட்டேல் போன்றோரின் துணையுடன் பாகிஸ்தான் பிரிவினைக்கு நன்றாக விதை தூவி வளர்த்து, மவுண்ட் பேட்டனின் துணையுடன் விடுதலையின் போது பாகிஸ்தானைப் பிரித்து ஜின்னாவிடம் கொடுத்து இந்தியாவிலிருந்து அனுப்பி வைத்து விட்டனர்.

பிரிவினைச் சதிக்கு ஆளாகாமல் முஸ்லிம்கள் தப்பி இருந்தால் என்ன நடந்திருக்கும்? அண்மையில் பிஜேபியிலிருந்து வெளியே தள்ளப் பட்ட ஜஸ்வந் சிங் தனது 'Jinnah: India-Partition-Independence' என்ற நூலில் கூறுகிறார்:


"இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களின் விழிகளை உற்றுப் பாருங்கள். மனதில் வலிகளைச் சுமந்து வாழ்வது அவர்களது விழிகளில் தெரியும். அவர்களது சொந்த மண் எது? அவர்களை நாம் அந்நியர்களைப் போலத்தானே நடத்தி வருகிறோம்? தேசப் பிரிவினைக்கு முஸ்லிம்கள் கொடுத்த விலை மிகமிகக் கூடுதல்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தேசம் பிரிவு படாமல் ஒன்று பட்டிருந்திருந்தால் அவர்கள் இங்கு அசைக்க முடியாத வலிமையுடன் இருந்திருப்பார்கள் ... Look into the eyes of the Muslims who live in India and if you truly see the pain with which they live, to which land do they belong? We treat them as aliens…without doubt Muslims have paid the price of Partition. They could have been significantly stronger in a united India… "

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.
satyamarkam.com

இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! ( முதல் பகுதி )

இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! ( முதல் பகுதி )




உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் என்பது தேசிய அரசியல் என்றும் மாநில அரசியல் என்றும் இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தியாவின் விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய இரு தேசிய கட்சிகளே செயல்பட்டு வந்தன. முழு நாட்டுக்காக நடந்த விடுதலை வேள்வியில் வெற்றி கிடைத்ததென்னவோ பாதியாகத்தான். இந்திய சுதந்திரத்தின் போது "முஸ்லிம்களுக்கான பகுதி" என பாகிஸ்தான் பிரிக்கப்பட்டப் பின்னர், இந்திய தேசிய அளவில் முஸ்லிம் லீக் என்ற அமைப்பு, படிப்படியாகத் தன்னைத் தானே சுருக்கிக் கொண்டது.

சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரு குறிப்பிட்ட காலம்வரை தேசிய அரசியலில் காங்கிரசுக்கு மாற்றாக மற்றொரு தேசிய கட்சி வலுப்பெற்று வராத காரணத்தால், மத்தியில் காங்கிரஸின் ஆட்சியே நடைபெற்று வந்தது. மாநிலங்களில் பிரதேச கட்சிகள் வளர்ச்சி பெறும்வரை மாநிலங்களிலும் காங்கிரசின் ஆட்சிதான் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் உள்ள பல குறைபாடுகளால் மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக எழுந்த சிந்தனைகள், பல பிரதேச கட்சிகளை வளர வைத்தன. 60களின் இறுதியில் மாநிலங்களில் காங்கிரசுக்கு இருந்த ஆதிக்கம் செயலிழக்கத் துவங்கி ஒவ்வொரு மாநிலத்திலும் பல பிரதேச கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க ஆரம்பித்தன. இருப்பினும் தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக அதே அளவுக்குச் சக்தியுடன் மற்றொரு கட்சி வளர்ச்சி பெறாத காரணத்தினால் அப்போதும் காங்கிரசின் கையே தேசிய அளவில் ஓங்கியிருந்தது.

80களின் தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் அல்லாத பல கட்சிகள் இணைந்து காங்கிரஸுக்கு மாற்றாக தேசிய அளவில் உருவாக்கப்பட்ட ஜனதா கட்சி, நீண்ட காலத்துக்கு நிலைக்கவில்லை. 81ஆம் ஆண்டு ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸின் ஜனசங்கம் தேசிய அளவில் மாற்று கட்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

காங்கிரஸில் இருந்த கோஷ்டிச் சண்டை, பதவி வெறி, ஊழல், நிர்வாகத் திறமையின்மை, அடித்தட்டு மக்களை முன்னேற்றுவதற்குத் திட்டமிட்ட கொள்கையின்மை போன்ற காரணங்களைப் பட்டியலிட்டு திறமையான, நிலையான, வலுவான, ஊழலற்ற ஆட்சி என்ற கோஷத்தை முன்வைத்து தேசிய அரசியலில் களமிறங்கிய பாரதிய ஜனதா கட்சி, ஒரு கட்டத்தில் மத்தியில் ஆட்சியைப் பிடித்து 5 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்யும் அளவுக்கு முன்னேறியது.

அந்தோ, பரிதாபம்! இந்து மகாசபை, ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். போன்ற பல அமைப்புகளால் உரமிடப் பட்டு வெறும் 20 ஆண்டு காலத்தில் அசுர வளர்ச்சியைப் பெற்ற பாஜக, தற்போது இலையுதிர் காலத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. உண்மையை நீண்டகாலத்திற்கு மூடி மறைக்க முடியாது என்ற வாசகத்துக்கு ஏற்ப, பாஜகவால் மூடி மறைக்கப்பட்டப் பல உண்மைகள் அக்கட்சியின் மூத்தத் தலைவர்களின் வாயிலிருந்தே வெளியேறிய வண்ணமிருக்கின்றன. எல்லாக் கட்சிகளுக்கும் முதல் மந்திரமான, "ஊழலற்ற ஆட்சி" என்ற கோஷம் பாஜகவைப் பொருத்தளவில், மீண்டும் ஒருமுறை அந்த இரு சொற்களையும் சொல்வதற்குக்கூட அக்கட்சி அருகதை அற்றுப் போய்விட்டது. அந்த அளவுக்குக் காங்கிரசோடு போட்டியிடும் விதத்தில் பாஜக தலைவர்களிடையே ஊழல் தலைவிரித்தாடியதோடு காங்கிரஸின் பதவி வெறியைவிடப் பன்மடங்கு, மத்தியில் நாற்காலியைப் பிடிப்பதற்காக எத்தகைய கேவலமான வேலைகளையும் பாஜக செய்யும் என்பது இப்போது நாட்டு மக்களுக்குப் புரிந்து விட்டது. "காங்கிரசுக்கு மாற்றாக" என்று சொல்லிக் கொண்டு முன்னெழுந்து வந்த பாஜக, எழுந்த வேகத்தில் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

பொய்யின் மீதும் அசத்தியத்தின் மீதும் கட்டியெழுப்பப்படும் கோட்டைகள் நீண்ட காலம் தாக்குபிடிக்காது என்பதற்கு இலக்கணமாக, மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த பாஜகவுக்குக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த படுதோல்வி, அக்கட்சி இதுவரை மறைத்து வைத்திருந்த பல உண்மைகள் திமிறிக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன் மூலம் அக்கட்சியின் செல்வாக்குச் சரிந்து, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது.

தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக முன்வைக்கப் பட்ட பாஜகவின் உருவாக்கத்துக்குப் பின்னால் பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உறைந்து கிடப்பதை இன்று நாட்டு மக்கள் தெளிவாகப் புரியத்துவங்கி விட்டனர். அதுவும் அக்கட்சியின் மிக மூத்தத் தலைவரின்(ஜஸ்வந்த் சிங்) வாயாலேயே பாஜகவின் விடிவெள்ளியாகப் போற்றப்பட்ட அத்வானியின் பொய் முகத்திலிருந்து இந்திய சுதந்திர வரலாற்றின் மிக முக்கிய கட்டங்கள் தொடர்பான மறைக்கப்பட்ட தகவல்கள் வெளியானதும் அக்காரணத்திற்காகவே அவரைக் கட்சியை விட்டே நீக்கியதன் மூலம் இதுநாளும் பாஜக தனக்கு, "கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாவலர்கள்" எனப் பூசி வந்த சாயம் வெளுத்துப் போனதைத் தெள்ளத் தெளிவாக நாட்டு மக்கள் புரிந்து கொண்டதோடு, இதுநாள் வரை இந்திய அரசியல் குறித்துத் தங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தவை அனைத்தையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டம் வந்து விட்டது என்று நினைக்கத் தொடங்கியுள்ளனர்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.


thanks 2 satyamarkam.com

வளர்ந்து வரும் இஸ்ரேலிய-ஹிந்துத்துவ பயங்கரவாதம்!

சென்ற 17.10.09 ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய நாள் ஒரே பரபரப்பு!

என்னவென்று நினைக்கிறீர்கள்?



"தீபாவளி கொண்டாட்டத்தினைச் சீர் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி" என்று பத்திரிக்கைகளிலும்-மின் ஊடகங்களிலும் வெளியான செய்தியைத் தொடர்ந்து எழுந்த பரபரப்புதான் அது.

அத்தோடு அமெரிக்க உளவு நிறுவனமும் தன் பங்கிற்கு வழக்கம் போல் எச்சரிக்கை செய்தது. ஆனால் நடந்தது என்ன?


கோவா மாநிலம் பண்டா நகரில் தீபாவளி இரவு அன்று ஸ்கூட்டரில் சென்ற இருவர், அவர்களின் வண்டியில் வைத்திருந்த குண்டு வெடித்து மரணம் அடைந்தனர். கோவா மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து இறந்தவர்கள் இந்துக்களான பட்டேல் மற்றும் நாயக் என்று அடையாளம் கண்டனர். விஷயம் அத்தோடு முற்றுப் பெறவில்லை. வழக்கத்திற்கு மாறாக இம்முறை அந்தக் குண்டுவெடிப்பைக் குறித்து நமது நடுவு(!)நிலை ஊடகங்களின், "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற கூக்குரல் வெளிவரும் முன்னரே, வேகமாகச் செயல்பட்ட காவல்துறையினர், ஸ்கூட்டரில் இறந்த இருவரும் எடுத்துச் சென்ற குண்டு, எதிர்பாராத விதமாக முன்னரே வெடித்துச் சிதறியதையும் குண்டு கொண்டு சென்றவர்கள் யாவர்? என்ற விசாரணையில், அவர்கள் இந்துத் தீவிரவாத அமைப்பான சனாதன் சான்ஸ்தாவினைச் சார்ந்தவர்கள் என்பதையும் கோவா காவல்துறையினர் கண்டு பிடித்து விட்டனர்.

இந்த சனாதன் சான்ஸ்தா அமைப்பு எது? என்பது வாசகர்களுக்கு மறந்திருக்காது!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு மாலேகான் நகரில் பைக் குண்டு வெடித்து பலர் மாண்ட சம்பவத்தில் கைது செய்யப் பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் மற்றும் அந்தக் குண்டு வெடிப்பின் மாஸ்டர் மைண்ட் ஆகச் செயல்பட்ட இராணுவ அதிகாரி கர்னல் புரோகித் ஆகியோர் கைது செய்யப் பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அவ்விருவரும் தீவிரமாகச் செயல்பட்ட "அபினவ் பாரத்" இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கம்தான் சனாதன் சான்ஸ்தா என்ற தீவிரவாத அமைப்பு. அபினவ் பாரதின் முக்கிய பணி, ஆங்காங்கே நாச வேலைகளைச் செய்து விட்டு, அதனை முஸ்லிம்கள் செய்ததாகத் திசை திருப்பி விடுவதாகும் அந்த இயக்கதோடு தொடர்புடைய மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இயக்கத்தின் தொண்டர்கள் இருவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்ததிலிருந்து, இவர்களே பயங்கர வாத-நாசவேலைகளைச் செய்து விட்டு காவல் துறையினரை ஏவி, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து கைது செய்யத் தூண்டும் நடவடிக்கையாகவும் அதன் மூலம் இரு சமூகத்தினரிடையே கலவரம் ஏற்பட வழிவகை செய்யும் அடித்தள முயற்சியாகவும் இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

இதே நாளில் மற்றொரு சம்பவமும் நடந்ததை இவ்விடத்தில் ஒப்பு நோக்குவது பொருத்தமாக இருக்கும். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மட்டைப் பந்துப் போட்டி ஒன்று 17.10.09ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள காஷ்மீர் மாநில கிரிக்கெட் குழுவினர் வருகை தந்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் கர்நாடக காவல் துறையினர் எவ்விதக் காரணமும் இன்றி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் விளையாட்டு வீரர் ரசூல் என்பவருடைய பையில் சோதனையிட்டபோது, காவலரின் கையிலிருந்த கருவியிலிருந்து ஒலி எழுந்துள்ளது. ரசூலின் பையைத் துருவி-துருவிச் சோதனையிட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. இருந்த போதும் ரசூலையும் அவருடன் தங்கியிருந்த மற்றொரு வீரரையும் கர்நாடக காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

கர்நாடகக் காவல்துறையின் இத்தகைய செயலுக்குக் காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஃபாரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்ததுடன் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மேலும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த பின்பு பெங்களூரு போலிஸ் கமிஷனர் சங்கர் பிடாரி, "சில தரப்பினரிடம் வந்த தகவலினை வைத்துத் தவறாக நடவடிக்கை எடுத்து விட்டதாக" அறிவிக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு வரும் வரை, "காஷ்மீரிலிருந்து வந்த முஸ்லிம் விளையாட்டு வீரர் கைது, தீவிரவாதியா? வெடிகுண்டா?" என்பது போன்றெல்லாம் பக்கங்களை நிறைத்த சில பத்திரிகைகள், "அந்த விளையாட்டு வீரர் அப்பாவி, தவறு நடந்து விட்டது" எனக் காவல்துறை கமிஷனர் அறிவித்த செய்தியினைக் கண்டு கொள்ளவே இல்லை. இவ்விடத்தில், கர்நாடக மாநிலத்தில் பெண் தீவிரவாதி பிரக்யாசிங்கிற்காகக் குரல் கொடுத்த பாஜக ஆட்சி செய்கின்றது என்பதையும் இதே மாநிலத்தில் தான் ராம் சேனா என்ற தீவிர இந்துக்கள் அமைப்பும் மிகச் சுதந்திரமாக செயல்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அநியாயப் பழி சுமத்தி ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட டாக்டர் ஹனீஃபிடம், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாது அவருக்கு உண்டான நஷ்டஈட்டுடன் அவர் திரும்பி ஆஸ்திரேலியா வந்து தொழில் செய்யலாம் என்றும் ஆஸ்திரேலியா அரசு அறிவித்தது. ஆனால் கர்நாடகக் காவல் துறையோ காஷ்மீர் வீரர் ரசூலின் பைச் சோதனையில் ஒன்றுமில்லை என்று அறிவித்து விட்டு, "அந்த வீரர் ரசாயன பரிசோதனை முடியும் வரையில் அறையை விட்டு வெளியேறக் கூடாது" என்றும் அறிவித்துள்ளது.

இந்துத்துவாவிலே பி.எப்.ஜி என்ற குழு இருப்பதாகவும் அது பெரும்பாலும் இளைஞர்களையும் மாணவர்களையும் கொண்ட அமைப்பாகவும் அவர்கள் வேலையே பெண்களைக் கவரக்கூடிய செல்போன் தொடர்பினை முஸ்லிம் பெண்களிடம் ஏற்படுத்தி அவர்களின் கற்பிற்குக் களங்கத்தினை ஏற்படுத்தி விட்டுத் தப்பித்துக் கொள்வதாகவும் சொல்லப் படுகிறது. இது தொடர்பான சில ஆர்.எஸ்.எஸ்ஸின் உள் சுற்றறிக்கைகளைச் சில முஸ்லிம் அமைப்புகள் கைப்பற்றி வெளியாக்கியுள்ளன.

***

"ஃபாலஸ்தீனின் காஸா பகுதியில் பெண்கள்-குழந்தைகள் எனப் பாராது கிட்டத்தட்ட 1300 முஸ்லிம்களைக் கொன்று இனப் படுகொலையில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டது" என ஐ.நாவிற்கான கமிட்டி குற்றம் சாட்டியதோடு சரி. ஆனால் நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாது! ஏனென்றால் அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்தி அதனைத் தடுத்து விடும். அப்படிப் பட்ட இஸ்ரேலின் ஏஜண்டுகள் இந்தியாவில் பல துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தினை பதித்துள்ளார்கள் என்றால் மிகையாகாது. உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்:

சமீபத்தில் சென்னையில் நடந்த சட்டத்திற்கான கருத்தரங்கு ஒன்றில் இஸ்ரேல் நாட்டு பேராசிரியர் ஒருவர், "இந்தியாவிற்கு சிவில் சட்டம் அவசியம்" என்று பேசியிருக்கிறார். மத்திய அரசோ சிவில் சட்டம் கொண்டு வருவதா? வேண்டாமா? என்ற விஷயம் விவாதத்திற்குட்டது என்று சொல்லும் போது, அந்நிய நாட்டைச் சேர்ந்த இவர் பி.ஜே.பியின் ஊது குழலாக மாறி, பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு வேண்டும் என்கிறார். அது மட்டுமா? புஷ் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தபோது முக்கிய விண்வெளி ஆராய்ச்சி நிபுணராக இருந்த ஸ்டுவார்ட் என்பவர் இஸ்ரேல் உளவாளியாக இருந்திருக்கிறார். அவர் இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு 2008ஆம் ஆண்டு இரண்டு தடவை வந்து சென்றுள்ளார். அவர் முக்கியமான சிலத் தகவல்களை, சில டாலர்களுக்காகப் பரிமாற்றம் செய்யும் போது, அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐயிடம் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி கையும் களவுமாக மாட்டியுள்ளார்.

நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் ஹிந்துத்துவாவும் உலகிற்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வரும் இஸ்ரேலிய சியோனிஸமும் உள்கட்டமைப்பில் ஒரே அடிப்படைகளைக் கொண்டுள்ளதும் அவை உள்ளுக்குள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதும் அவ்வபோது வெளியாகும் தகவல்கள் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன. "மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித், இஸ்ரேலைத் தலைமையாகக் கொண்டு ஒரு ஹிந்துத்துவ அரசை ஏற்படுத்துவது என்றும் அது இஸ்ரேலிலிருந்து இந்தியாவைக் கட்டுப்படுத்தும் வகையில் காய்களை நகர்த்தியதாகவும் அதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என்றும் விரைவிலேயே அந்த ஆவணங்களுடன் மாலேகோன் குண்டு வெடிப்பு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும்" மகாராஷ்டிரத் தீவிரவாதத் தடுப்புப்படை அதிகாரி ஹேமந்த் கார்கரே சுட்டுக்கொல்லப்படுவதற்கு முந்தைய தினம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் மிக மிக அதிர்ச்சியளிக்கும் வகையில் அதற்கு அடுத்த நாள் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் மூலம் அவர் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். கார்கரே விசாரித்து வந்த மாலேகோன் குண்டுவெடிப்புத் தாக்குதலை விசாரிக்க, கார்கரேயால் விசாரணை செய்யப் பட்டவரும் மாலேகோன் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான கர்னல் புரோஹித்தின் நெருங்கிய நண்பருமான ஹிந்துத்துவவாதி என வெளிப்படையாகவே அறியப்படும் ரகுவன்ஷி மீண்டும் நியமிக்கப்பட்டார்.

ரகுவன்ஷி தலைமையேற்றவுடன், அதற்குச் சில தினங்களுக்கு முன்னர் கார்கரே கூறிய "ஹிந்துத்துவ-இஸ்ரேல் கூட்டணியை" நிராகரித்து விட்டு, "கர்னல் புரோஹித் அவ்வாறான திட்டம் போட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அந்தக் குண்டுவெடிப்புக்குச் சர்வதேச பின்னணி ஏதும் இல்லை" எனவும் அறிவித்தார். அடுத்தச் சில தினங்களில் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் முன்னர் கார்கரே கூறிய இஸ்ரேல் தொடர்பு குற்றச்சாட்டுகள் அடையாளமின்றி அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. நீதிமன்றமும் அந்தக் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் நல்லப்பிள்ளையாக, அதுவரை "தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த மாலேகோன் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அனைவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுவித்ததோடு, சாதாரண வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு அவர்களின் வழக்கையும் 'மாற்றி' உத்தரவிட்டது.

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து சிந்திக்கும் எவருக்கும் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை எவ்வாறு அபாய நிலையில் உள்ளது என்பதும் நாட்டில் இந்துத்துவா-இஸ்ரேல் கூட்டணி தீவிரவாதம் மறைமுகமாகக் கட்டமைக்கப்பட்டு மிக நேர்த்தியாக வளர்ந்து வருவதையும் அறிந்துக் கொள்ள இயலும்.

இந்நிலையில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்கள் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் யாவை? தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?

உடனடியாக மிகத் தீவிரத்துடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயமாகும் இது. இப்பொறுப்பைச் சமுதாய அமைப்புகளிடமும் ஜமாஅத்துகளிடமும் தற்போதைக்கு விட்டு விட்டு, மிக அடிப்படையாக முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்களை இங்குப் பட்டியலிடுவோம்:

ஜூம்மா தொழும் போது மக்காவிலுள்ள கஅபாவில் பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருப்பது போல இங்கும் இளைஞர்களைப் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

பெரிய தப்லீக் ஜமாத்துக்கள் நடக்கும் போது டோர் பிரேம் - ஹேண்ட் மேட் மெட்டல் டிடக்ட்டர்கள் பயன்படுத்தி, சோதனைக்குப் பின் அனுமதிக்க வேண்டும்.

பள்ளிவாசல்களில் இரவில் அடையாளம் தெரியாதவர்களைத் தங்க அனுமதிக்கக் கூடாது.

திருமணம் போன்ற மக்கள் கூடும் சமூதாய நிகழ்ச்சிகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பெரிய தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைப்பேசி, இணையம் பயன்படுத்தும் முஸ்லிம் பெண்களை அவர்களின் பெற்றோர்/பாதுகாவலர் கவனமாகக் கண்காணிப்பதோடு, அப்பெண்களுக்கும் அநாமதேய அழைப்புகள் வரின் அதனை முறையாகப் பெற்றோர்/பாதுகாவலரிடம் தெரியப்படுத்த பயிற்றுவிக்க வேண்டும்.

பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் பயணம் செல்லும் போது அந்நியரின் சதிக்கு ஆளாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். குஜராத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இஸ்ரத், சொராபுதீன் போன்றவர்களைத் தீவிரவாதிகள் என்று போலி முத்திரைக் குத்தி அநியாயமாகப் படுகொலை செய்த பாஜக பயங்கரவாத நிகழ்வுகள் நடக்க வழிவகுக்கக்கூடாது.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் எங்காவது நடந்தால் முஸ்லிம் பெண்கள், வியாபாரத் தலங்கள், மதரஸாக்கள், பள்ளிவாசல்கள் ஆகியவைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் ஊர்களிலும் முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையில் வாழும் ஊர்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஜமாஅத்துகள், அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.

முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.

அரசு இயந்திரங்களின் முழு ஒத்துழைப்புடன் நாட்டில் ஆக்டோபஸ் போன்று பரவி வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்புப் பெற இத்தகைய நடவடிக்கைகள் மிகப் பெரிய பலனை ஏற்படுத்தி விடாது என்பது தெரிந்ததே. இருப்பினும் ஆரம்ப நடவடிக்கைகளாக இவற்றை உடனடியாக கவனிப்பதோடு, முஸ்லிம் சமுதாயம் ஒன்றிணைந்து நாட்டில் வளர்ந்து வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய கூட்டு பயங்கரவாதத்தை வேரடி மண்ணோடு சாய்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

இதுவே இப்போதைய உடனடித் தேவையாகும்.

- முஹம்மது அலி. ஐ.பி.எஸ்

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! (39:53)

இறைவன் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும் மனிதனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இறைவன் அந்த மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்று தான். ''நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும்; எனக்கு எதையும் இணையாக்காதே'' என்பது தான் அது!
இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் பிரார்த்தனை!

''பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு ''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்' என்று உங்கள் இறைவன் கூறுகிறான்'' என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள். நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: திர்மிதீ 3372

எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். இறைவன் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ''நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த் தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)

பிரார்த்தனையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

பணிவோடு பிரார்த்திக்க வேண்டும்

பிரார்த்தனை செய்யும் போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும் பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும்.

உங்கள் இறைவனைப் பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)

அவர் (ஸக்கரிய்யா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 19:3)

உறுதியான நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்

பிரார்த்தனை செய்யும் போது ''இறைவன் கட்டாயம் தருவான், அவனால் தர முடியும்'' என்ற உறுதியான நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும்.

அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது. (அல்குர்ஆன் 7:56)

வலியுறுத்திக் கேட்க வேண்டும்

இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது, ''நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்'' என்பது போன்று கேட்கக்கூடாது. மாறாக, ''இதை நீ தந்து தான் ஆக வேண்டும்; உன்னால் தான் தர முடியும்; வேறு யாராலும் தர முடியாது'' என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.



'நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திக்காது. ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை'' என்று நபியவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) நூல்: புகாரி 6338

பாவமானதைக் கேட்கக் கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

''நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை'' என்று (மனிதன்) கூறுகின்றான். உறவைத் துண்டிக்கும் விஷயத்திலும் பாவமானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்குப் பதிலளிக்கப்படாது. அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2735.

அவசரப்படக்கூடாது

பிரார்த்தனை செய்யும் போது அவசரப்படக் கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு நான் பிரார்த்தித்தேன் எனக்குக் கிடைக்கவில்லை என்று கூறி பிரார்த்திப்பதையே விட்டு விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த்தனை செய்தால் அது ஏற்கப்படாது.

''நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6340

நிராசை அடையக் கூடாது

சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் கேட்கும் அந்தக் காரியம் நிறைவேறவில்லை என்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 12:87)

உணவும் உடையும் ஹலாலாக இருத்தல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறி விட்டு

தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலிஹான) நல்லமல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (அல் குர்ஆன் 23:51)







நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ள வற்றிலிருந்து தூய்மை யானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல் குர்ஆன் 2:172)

ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். பின்பு ஒரு மனிதரைப் பற்றி குறிப்பிட்டார்கள்.
''அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதி படிந்து பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின் பால் கைகளை உயர்த்தி எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை அவனது உணவு அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனே ஹராமில் மூழ்கி விட்டான். இந்த நிலையில் அவனது துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1844

இந்த ஒழுங்கு முறைகள் அனைத்தையும் ஒருவர் கடைப்பிடித்து பிரார்த்தனை செய்கிறார். இருந்தும் அவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப் படவில்லை என்றால் அதனால் அவர் நம்பிக்கை இழந்து விடக் கூடாது. தமது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று எண்ணி விடக் கூடாது.

இறைவன் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன். அந்த அடியான் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு அவனுடைய அறியாமையினால் தனக்குத் தீங்கு தரக் கூடியதைக் கேட்பான். உதாரணமாக தனக்கு நிறைய செல்வம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்வான். ஆனால் அந்தச் செல்வம் அவனை இறை நிராகரிப்புக்கு இழுத்துச் செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததை இறைவன் கொடுப்பான். ஒருவன் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனது தேவையைக் கேட்கின்றான். அனைத்தையும் அறிந்த இறைவன் அதைக் கொடுப்பதற்குப் பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகின்றான். அதுவும் இல்லையெனில் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்குப் பகரமாக மறுமையில் அவனது நிலையை உயர்த்துவான்.

''உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ''அல்லாஹ் அதிகமாக்குவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஸயீத் (ரலி) நூல்: அஹ்மத் 11150

ஓர் அடியான் தன்னிடம் பிரார்த்தனை செய்யும் போது அவனை வெறுங்கையுடன் அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான்.
'உங்களுடைய இறைவன் சங்கையானவன். அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸல்மான் (ரலி) நூல்: இப்னு மாஜா 3911

பாவமானதையும் உறவைத் துண்டிக்கும் விதத்திலும் இல்லாத எல்லா துஆக்களும் ஒப்புக் கொள்ளப்படும் என்றாலும் சில குறிப்பிட்ட நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் மற்ற நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகளை விட அதிகமதிகம் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.








பதிலளிக்கப்படும் துஆக்கள் :

கடமையான தொழுகைக்குப் பின்..

கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.

''எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இரவில் கடைசியிலும் கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்'' என்று பதிலளித்தார்கள். அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதீ 3499

ஸஜ்தாவின் போது...

ஓர் அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகின்றது.

''ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன்னுடைய இறைவனை நெருங்குகின்றான். எனவே ஸஜ்தாவில் துஆவை அதிகப்படுத்துங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 482

இரவின் கடைசி நேரத்தில்...

இரவின் கடைசிப் பகுதியில் செய்யும் துஆவும் பதிலளிக்கப்படும் துஆக்களில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவை மூன்றாகப் பிரித்து, கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்திற்கு தினமும் இறங்குகின்றான். ''என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால் நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகின்றான். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6321

தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ பிரயாணத்தின் போது...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3. தந்தை தனது மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை. அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 3908

நோன்பாளி நோன்பு துறக்கும் போது...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரின் பிரார்த்தனை மறுக்கப்படாது. நீதியான அரசன் நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை. அதை அல்லாஹ் புழுதிகளை விட்டும் உயர்த்துவான். அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 175





பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில்...

''பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 521

போர்க்களத்தில்...

''பாங்கின் போதும் சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப் படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) நூல்: அபூதாவூத் 2540

ஜும்ஆ நாளில்...

''வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ் விடம் எதையேனும் கேட்டால் அதை அல்லாஹ் அவருக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என்று அபுல்காஸிம் (நபிலிஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள்.
அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6400

எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது நம்மைப் படைத்த ஏகனாகிய அல்லாஹ்விடத்தில் மட்டுமே முறையிட்டு அவனுடன் யாரையும் கூட்டாக்காமல் பிரார்த்தனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைக் கடைப்பிடித்து பிரார்த்திப்போமாக!
Related Posts Plugin for WordPress, Blogger...