(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, July 22, 2013

காரைக்காலில் பா.ஜ.க அட்டுழியம் மத கலவரம் ஏற்படுத்த முயற்சி

முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் .பதட்டமான சூழல் .பிஜேபி புதுச்சேரி மாநில செயலாளர் அருள்முருகன் மற்றும் குண்டர்கள் காரைக்கால் மாதா கோவில் வீதி MAX WOMEN (கபீர் ) கடையை அடித்து நொறுக்கிஅங்கு பணிபுரியும் haja என்பவரை கத்தியால் குத்தினார்கள் .அரசு பொது மருத்துவமனையில் ஹாஜா அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார் .இதற்கு காரைக்கால் காவல்துறை பா.ஜ.க விற்கு ஆதரவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றது.
காரைக்காலில் இப்போது நடைபெற்று வரும் காவிகளின் பந்திற்கு காரைக்கால் காவல் துறை முழு ஆதரவு தெரிவித்து வருகிறது ,ஆம்!இன்று காலை பொதுமக்கள் கடைகளை திறந்தபோது வழமைபோல காவி கயவர்கள் கலவரம் ஏற்படுத்தும் நோக்கோடு கடைக்காரர்களை மிரட்டினர் .அதை தடுக்கவேண்டிய காவல்துறையோ கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது ,துணிச்சல் பெற்ற காவிகயவன் அருள்முருகன் முஸ்லிம் சகோதரர்களின் கடைக்குள் புகுந்து அவர்களை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளான் ,இதனை தடுக்க சென்ற முஸ்லிம்களை காவல் துறை அடித்து விரட்டியுள்ளது ,மட்டுமல்லாமல் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (s p )முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் முடிந்தால் பாண்டிச்சேரியில் பாம் வையுங்கள் என்றும் தான் ஒரு அரசு அதிகாரி என்பதைகூட மறந்து விட்டு காவிகளின் தலைவனை போல பேசியுள்ளார் 

இதனால் கொதித்து போயுள்ள முஸ்லிம்கள் அமைப்பு/கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்று கூடி லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளிவாசலிலிருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்டஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளிப்பது என முடிவெடுத்துள்ளனர் .காவி பயங்கரவாதி அருள்முருகனை கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யவேண்டும் காவிகளின் தலைவனைபோல் பேசிய காவல் கண்காணிப்பாளர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
- நன்றி காரைக்கால் யூசுப் எஸ்.பி
- புகைப்படங்கள் இஸ்லாமிய சிந்தனை










இஸ்லாமியர்களை தீவிரவாதி என்று கூறிய காரைக்கால் காவல் துறை கண்காணிப்பாளரை (SP) பணிநீக்கம் செய்யக்கோரி காரைக்கால் இஸ்லாமிய மக்கள் மாவட்ட ஆச்சியரிடம் மனு கொடுத்தனர்.














Sunday, July 14, 2013

புனிதமிக்க இந்த ரமலானில் உங்களின் துஆவில் இவர்களை இணைத்துகொள்ளுங்கள்..



இலங்கை - கேகாலை மாவட்டத்தில் தல்கஸ்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜனாப் முனவ்வர் , பாத்திமா ஹூசைனா தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் அஸ்மா, 12 வயது. இளையவள் ஸைனப், 9 வயது
தமது பிறப்பு முதலேயே மிகவும் அரிதானதொரு தோல் வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ள இருவரும் அதனைக் குணப்படுத்துவதற்காக கடந்த பல  வருடங்களாக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இவர்களின் சிகிச்சைக்காக இதுவரை பல இலட்சம் ரூபாய்கள் செலவளிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியர்களின் ஆலோசணைப்படி வாழ்நாள் பூராவும் தொடர்ந்தும் மருந்துகளைப் பாவிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

தமது வயதையொத்த ஏனைய சிறுமிகளைப் போல சாதாரணதொரு வாழ்க்கையை வாழ விரும்பும் இவர்கள் தற்போது தல்கஸ்பிடிய முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர்.             

7ஆம் வகுப்பில் அஸ்மாவும் நான்காம் வகுப்பில் ஸைனப் உம் கல்வியை தொடர்கின்ற நிலையில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் சக மாணவர்கள் அனைவரும் இவர்கள் கற்பதற்காக தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.


சவுதி அரேபியாவில் ஹோட்டல் இன்டகொண்டினன்டில் தொழில் புரிந்த ஜனாப் முனவ்வர் தனது சம்பாத்தியம் முழுவதையுமே இவர்களின் சிகிச்சைக்காக செலவிட்டுள்ளார். தனது முள்ளந்தண்டில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து தற்போது எந்த வித தொழிலுமே செய்ய முடியாத நிலையில் உள்ளார் ஜனாப் முனவ்வர்.

பாத்திமா அஸ்மா மற்றும் பாத்திமா ஸைனப் தமது வாழ்நாள் பூராவும் மருந்துகளுடனேயே வாழ வேண்டிய நிலையில் மாதாந்தம் சுமார் 25 ஆயிரம் ரூபாய்களை மருந்திற்காக மட்டும் செலவழிக்க வேண்டியுள்ளனர்.
எந்தவித தொழிலுமே செய்ய முடியாத நிரந்தர நோயாளியான ஜனாப் முனவ்வர் தனது பிள்ளைகளுக்கு அன்றாடம் தேவையாகும் மருந்துகளை தயார் செய்வதற்கு உங்களுடைய நிதியுதவிகளை நாடுகின்றார்.



எவரொருவர் தனது சகோதரனின் தேவையொன்றை பூர்த்தி செய்கின்றாரோ,அல்லாஹ் அவரின் தேவையொன்றை பூர்த்தி செய்வான் ' - ஹதீஸ்.

சுகத்தையும் துக்கத்தையும் வழங்குபவன் அல்லாஹ் ஒருவனே!

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்.

இந்தச் சிறுமிகளின் மருத்துவச் செலவிற்காக உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.  உதவிகள் செய்யமுடியாத  நிலையில் இருந்தால்..
இந்த இருவருக்கும் அல்லாஹ்விடம் அன்றாடம் துஆ செய்யுங்கள்...
யா அல்லாஹ் நோயை தருபவனும் நீயே ..
அந்த நோயிர்க்கும் நிவாரணம் அளிப்பவனும் நீயே ..
யா அல்லாஹ் இந்த சகோதரிகளுக்கு பரிபூரண சுகத்தை தருவானாக...

CONTACT DETAILS
S.L.M MUNAWWAR
F 119/1, PANAPURAWATHA,
THALGASPITIYA,
ARANAYAKE.
SRI lANKA.
PHONE: 0094 77 91 77 33 9
email: amflanka@gmail.com

NAME OF ACCOUNTS.L.M MUNAWWAR
BANKCOMMERCIAL BANK
BRANCHMAWANELLA
A/C NO.
8790020192
SWIFT CODECCEYLKLXXXX




Tuesday, July 9, 2013

நாகூரை சேர்ந்த சகோதரர் கபீர் அவர்களுக்கு நம்மால் என்ற உதவிகளை செய்வோம்..

நாகூரில் புதுமனை தெருவில் வசிக்கும், முகம்மது கபீர் இரு சக்கர வாகன விபத்தில் மார்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கல்லீரல், மற்றும் கணையம் பாதிக்கப்பட்டு சென்னை, பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனையில் தீவிர அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இரு கால்கள் செயல் இழந்த நிலையில் உள்ளதால், மேற்கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது..ஏழ்மை குடும்பத்தில் பிறந்த அவரால் அனைத்து செலவுகளையும் பண்ண சக்தி இல்லாததால், அக்குடும்பத்தார் நம்மிடையே உதவியை நாடி இருக்கிறார்கள்..

இந்த செய்தியை அனைவரும் பகிர்ந்து, அவருடைய உடல் குணம் அடைய அல்லாஹுவிடம் துஆ செய்யுமாறும், தாங்களால் இயன்ற அளவு பண உதவி செய்திடுமாறும் கேட்டு கொள்கிறோம்.

இவர் இதற்க்கு முன் சிகிச்சை செய்த மருத்துவ ரசிதும் , நாகூர் ஜமாத் வழங்கிய சான்றும் இணைக்க பட்டு உள்ளது....உதவ விரும்புபவர்கள், அவர் குடும்பத்தை நாடி உதவி தொகையை கொடுக்கலாம் அல்லது கீழே குறுப்பிடபட்டுள்ள வங்கியின் மூலமாகவும் உதவலாம்...

அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் வெற்றியை கொடுப்பானாக,,,ஆமீன்...

CITY UNION BANK, NAGORE
Account No. 1206336
ifsc code -CIUB0000278

A.MOHAMED IBRAHIM (கபீர் சகோதரர்)
























நன்மைகளை கொள்ளைஅடித்துகொள்ள  ரமலான் வந்துவிட்டது ...
அதிலும் அடுத்தவரின் கஷ்டத்தை போக்கும் உயர்ந்த தொண்டுகளை செய்வோமானால் ... 

 படைத்தவனிடமிருந்து மகத்தான கூலி இன்ஷாஅல்லாஹ் நிச்சயம்.

Wednesday, July 3, 2013

இன்று இவர்கள் - நாளை நாம் .. மரணத்திற்கு ஒவ்வொருவரும் ஆயத்தம் ஆக வேண்டும்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

சகோதர சகோதரிகளே... 

நாள்தோறும் மரணசெய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது .. தூக்கத்தில் , பிரயாணத்தில் ,விபத்தில் , நோயில் என பல நிலைகளில் மரணம் ஒவ்வொரு மனிதனாக விழுங்கி கொண்டே வருகிறது ... நேற்று நம்மோடு இருந்தவர்கள் இன்று நிச்சியமாக இருப்பார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது ... இன்று ஆட்டம்போடும் நாம் நாளை ,நாளை மறுநாள் இருப்போம் என்று அறுதியிட்டு கூற இயலாது .. இருப்போம் என்ற ஒற்றை நம்பிக்கையில் தான் காலம் கடந்து கொண்டு இருக்கிறது...



ஏதோ பிறந்தோம் , இறப்போம் என்பதெல்லாம் இறைமறுப்பாளர்கள் , இணைவைப்பாளர்கள் சொல்லி கொள்ளும் அர்த்தமற்ற வார்த்தைகள்.. நாம் அப்படியல்ல .. ஏன் பிறந்தோம் , எதற்காக படைக்கபட்டோம் , எப்படி வாழவேண்டும் , எப்படி மரணிக்க வேண்டும் , மரணித்த பிறகு நம்முடைய நிலை எப்படி இருக்கும் என்று உலகத்தின் அருட்கொடை நபி (ஸல்) அவர்களால் ஒவ்வொரு விஷயமும் விவரித்து வாழ்ந்து காண்பிக்கபட்ட சமூகம் நாம்...


நாம் மரணத்தை மிக அதிகம் அதிகம் நினைவுகூற வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ... உலக விஷயங்களில் , பொருளாதாரத்தை பெருக்குவதில் நாம் கொண்டுள்ள கவனம் - நாம் கொண்டுள்ள சத்தியமார்க்கத்தில் இல்லை இல்லவே இல்லை ... அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்...

இன்று முகநூலில் அடுத்தவரின் மரணச்செய்தியை படித்து கொண்டிருகிறோம் நாளை நம்முடைய மரணம் மற்றவர்களுக்கு செய்தியாக இருக்கலாம் -யாருக்கு தெரியும் ...
என்ன ஆரோக்கியமான உடலும் ,வயசும் இருந்தாலும் நம்முடைய தவனை வந்துவிட்டால் .. நாம் இறைவன் முன் நிறுத்தப்படுவோம்..

ஆகையால் நாம் ஒவ்வொருவரும் மரணத்திற்கு ஆயத்தம் ஆகவேண்டும் ...

சில தினங்களுக்கு முன்பு இரண்டு சகோதரிகள் , ஒரு சகோதார் கார் விபத்தில் மரணமடைந்தார்கள் ... அந்த அதிர்ச்சி முழுமையாக நீங்காத நிலையில்..




இன்று சகோதர் பஹுருதீன் அலி அஹ்மது அவர்கள் கத்தாரில் கார் விபத்தில் தீடீர் மரணம் அடைந்துவிட்டார்கள் ... அவருக்கு அல்லாஹ் பாவத்தை பிழைபொறுத்து மறுமையில் மகத்தான கூலியை வழங்கி வெற்றி பெற செய்வானாக... அவருக்காக நாம் அனைவரும் கண்டிப்பாக துஆ செய்வோம்... அவரின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையை தருவானாக..

யா அல்லாஹ் எங்களை முஸ்லீம்களாக மரணிக்க செய்வாயாக ...
பரிபூரண ஈமானோடு மரணிக்கும் பாக்கியத்தை வழங்குவாயாக...
சொர்க்கத்தை எங்களுக்கு ஹலால் ஆக்குவாயாக ...

அல்லாஹு அக்பர் -

Friday, June 28, 2013

விபத்தில் உயிரிழந்த சகோதர சகோதரிகளுக்காக பிரார்த்திப்போம்..

பொறையாறு அருகே நேற்று (வியாழக்கிழமை) மாலை டேங்கர் லாரி - கார் மோதிக் கொண்டதில் நாகூரை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்வம் ஊர் மக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நாகை மாவட்டம், நாகூர் தைக்கால் தெருவைச் சேர்ந்த செய்யது அகமது (52),இவரது மனைவி ஜுலைகான் நாச்சியார் (45), செய்யது அகமதுவின் சகோதரி ஜீனத் (42) ஆகியோர் சென்னையிலிருந்து காரில் நாகூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை நாகூர் சமரசநகர் அப்துல் கபூர் மகன் யூசுப் (28) ஒட்டினார்.
பொறையாறு அருகே நண்டலாறு சோதனைச் சாவடிக்கு முன்பாக உள்ள மரவாடி அருகே வந்தபோது காரைக்காலிலிருந்து சீர்காழி நோக்கி வந்த டேங்கர் லாரி, கார் மீது நேருக்கு நேராக மோதியுள்ளது.
இதில் காரில் இருந்த ஜுலைகான் நாச்சியார், ஜீனத், ஓட்டுநர் யூசுப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) பலத்த காயமடைந்த செய்யது அகமது பொறையாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்...சவூதியிலிருந்து வந்த ஜீனத்தை நாகூருக்கு செய்யது அகமது அழைத்து வந்தபோது இவ்விபத்து நேரிட்டது.

மூவரின் உடல் இன்று காலை நாகூருக்கு கொண்டு வரபட்டு மாலை 4:30மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த சகோதர சகோதரிகளுக்கு மறுமை வாழ்வு வெற்றி பெற நாம் அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் இன்ஷால்லாஹ்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் மனதைரியத்தை கொடுக்கவேண்டியும் நாம் பிரார்திப்போமாக...

விபத்தில் உருக்குலைந்த கார் :




அல்லாஹ் மரணித்த சகோதர சகோதரிகளின் பாவத்தை பிழைபொறுத்து மறுமையில் வெற்றிபெற செய்வானாக....

Wednesday, June 19, 2013

நாகூர் மகாலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு அரசு தடை

நாகை மாவட்டத்தில் 13 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அந்தப் பள்ளிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனுமதி பெறாமல் செயல்படும் பள்ளிகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோரைக் கொண்ட குழு மூலம் நாகை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், நாகை மாவட்டத்தில் 13 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த 13 பள்ளிகளின் செயல்பாட்டுக்கும் மாவட்டக் கல்வி நிர்வாகம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தடை செய்யப்பட்ட பள்ளிகள் விவரம்:

கொட்டாரக்குடி பிரைட் இன்டர்நேஷனல் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி,

மருங்கூர் பழனிவேல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில்,

திருவெண்காடு விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, 


சுவாமி விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, 

அர்ரஹ்மான் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

 திருஇந்தளூர் ஐடியல் கிட்ஸ் பள்ளி, 


மகாதானத்தெரு யூரோகிட்ஸ் பள்ளி, 

சீனிவாசபுரம் மதர் கிட்ஸ் பள்ளி,

சோழசக்கரநல்லூர் குட்லக் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,

நீடுர் அல் பிர்ல்லியண்ட் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

நாகை பிளே ஸ்கூல்,

நாகூர் மகாலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,


கீழையூர் தாமரை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 

ஆகிய 13 பள்ளிகள் அனுமதியின்றி செயல்பட்டதன் காரணமாக, செயல்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் நாகூர் வினித் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,

வேதாரண்யம் குரவப்புலம் விஜயலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளையும் நடத்த விருப்பமில்லை என அந்தப் பள்ளிகளின் நிர்வாகத்தினர் தெரிவித்ததன் காரணமாக, 2 பள்ளிகளும் மூடப்படுகிறது

Tuesday, June 4, 2013

நாகூர் ஆட்டோ கேப்ஸ் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகிறதா..?

நாகூர் ஆட்டோ கேப்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பாக புதிய கட்டண விபரம் வெளியிடபட்டுள்ளது.

இதில் நாகூர் லோக்கல் கட்டணம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. நாகூரை சுற்றிஉள்ள ஊர்களுக்கு உள்ள கட்டண விபரம் வெளியிடபட்டுள்ளது.

இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் வெளியிட்ட நோட்டீஸ்ல் " இன்றைய தினம் வரை அனைத்து ஆட்டோ கேப்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நஷ்டத்தில் தான் ஆட்டோவை இயக்கி கொண்டு இருக்கிறோம் " என்று குறிப்பிட்டுள்ளனர்.


என்ன கொடுமை இது ??  இது எவ்வளவு பெரிய அபத்தம் .. இவ்வளவு நாளா எந்த இலாபமும் இல்லாமல் தான் நீங்கள் எல்லாம் ஆட்டோ ஓட்டுகிறீர்களா..?

இது சாத்தியமா ?...

ஆட்டோ கட்டணம் ஏற்றுவதற்கு ஏன் இப்படி ஒரு பொய்... 

போதிய வருமானம் இல்லை ஆதலால் கட்டணம் ஏற்றப்படுகிறது என்று போட வேண்டியது தானே ...   

சரி அது இருக்கட்டும் ...

பீச்சுக்கு , ரயில்வே ஸ்டேஷனுக்கு , பங்களா தோட்டத்திற்கு லோக்கல் கட்டணம் 40 ருபாய் வாங்குகிறீர்களே இது சரியா ? சகோதர்களே...
இவையெல்லாம் நாகூரில் இல்லையா ?.. 


Thursday, May 30, 2013

வீடு கட்ட செங்கல் வேண்டாம் இனி பிளாஸ்டிக் பாட்டில் போதும்!

சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிற பிளாஸ்டிக் கழிவுகளை, கட்டிடங்கள் கட்டப் பயன்படுத்த முடியும் என நிரூபித்துள்ளது, ‘சமர்ப்பண்’ என்கிற தொண்டு அமைப்பு. தில்லியைச் சேர்ந்த இந்தத் தொண்டு நிறுவனம், செங்கலுக்கு மாற்றாக பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு பசுமை வீடுகளை உருவாக்கி வருகின்றது.
                            
பிளாஸ்டிக் பாட்டில்களில் உருவாக்கப்படும் வீடுகள் மிகவும் பாதுகாப்பானவை. அதனைக் கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள் பல்லாண்டுகள்வரை எந்தச் சேதாரமில்லாமல் உறுதியாக இருக்கும் தன்மை கொண்டவை. பொதுவிழாக்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் போன்ற இடங்களிலிருந்து காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கிறோம்.
                                                  

    
சேகரித்த பாட்டில்களை அளவு வாரியாகப் பிரித்து, சாலையோரங்களில் கிடக்கும் வீணான மண்ணைக் கொண்டு நிரப்பி, பாட்டிலை உறுதியாக்குகிறோம். அதன் பின்னர் அதனை கட்டிடப் பணிக்கு பயன்படுத்துகிறோம். பாட்டிலில் மண்ணை நிரப்ப பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் எனப் பலதரப்பினர் எங்கள் அமைப்புக்கு உதவி செய்துவருகின்றனர்.
                                                  
பாட்டிலின் தட்டையான அடிப்பகுதியை வெளிப்புறம் மற்றும் தரைத்தளத்தில் இருப்பது போன்று பயன்படுத்தினால், சமநிலையில் இருக்கும். இந்த முறையில் பாட்டில்களை அடுக்கி, சுவரை சிமெண்ட் மூலம் எளிதாகப் பூச முடியும். இதனால், செங்கல் வாங்கும் செலவை முற்றிலுமாகக் குறைக்கலாம்.
                                                
ஒரு சதுர அடிக்கு 16 ஒரு லிட்டர் பாட்டில்கள் தேவைப்படும். மேலும் 15 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட ஒரு பசுமை வீடு கட்ட, சுமார் 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

இதை பற்றி மேலும் அறிய....அவசியம் இந்த வீடியோவை பார்க்கவும்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QaFO95Ord_I


http://www.samarpanfoundation.org/website/index.php?option=com_content&view=article&id=95:house-construction-with-plastic-bottles&catid=52:delhi-projects&Itemid=66

                                            
செங்கல் பயன்படுத்துவதற்கு மாற்றாக பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் பள்ளிகள், மருத்துவமனை சுற்றுச்சுவர், நடைமேடைகள், பேருந்து நிறுத்தம் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் கட்டலாம்" என்று கூறுகிறார், ‘சமர்ப்பண்’ சென்னை திட்ட ஒருங்கிணைப்பாளர் ரோமினி.
                                            

 பிளாஸ்டிக் பாட்டில் மூலம் கட்டப்பட்டும் வீடுகள் மழை மற்றும் குளிர்காலத்தில் கதகதப்பாகவும், கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும்" என்கிறார் ரோமினி. இதுபோன்ற பசுமை வீட்டை, ‘சமர்ப்பண்’ தொண்டு அமைப்பு, தில்லியில் பள்ளிக் கட்டிடமாக கட்டிக்கொடுத்துள்ளனர்.


தற்போது செங்குன்றம் அருகே, பசுமை வீடு திட்டத்தினைச் செயல்படுத்த இந்த அமைப்பு சார்பாக பாட்டில்களை சேகரித்து வருகின்றனர். முதற்கட்டமாக அங்கு ஜெனரேட்டர் மேடை ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்டு, தளம் அமைப்பதற்கான ஆராய்ச்சிகளையும் ‘சமர்ப்பண்’ அமைப்பு தற்போது செய்து வருகின்றது.

Thank you : என்.ஹரிபிரசாத்

Wednesday, May 15, 2013

வழிகெட்ட கொள்கைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.!!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....

ஏக இறைவன் அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளபட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே, இதை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகிறான்.

ஆனால் இன்று முஸ்லீம்கள் என்று தங்களை அடையாளபடுத்தி கொள்ளும் பல குழுக்கள்  தாங்களே நேர்வழியில்  செல்வதாக கூறிக்கொண்டு..,

இஸ்லாம் இஸ்லாம் என்று சொல்லிகொண்டு மனம்  விரும்புவதை  எல்லாம் செய்துகொண்டு இஸ்லாத்தின் பெயரை சொல்லி தங்களது வழிகெட்ட கொள்கைகளை நியாயபடுத்துகிறார்கள்..

இந்நிலையில் நாம் இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குரான் -சுன்னாவை முன்வைத்தால் நம்மை பார்த்து குழப்பவாதிகள் என்கிறது உண்மையான குழப்பவாதிகள் கூட்டம்..

இவர்களின் வழிகெட்ட , குழப்பமான , நபிவழிக்கு மாற்றமான கொள்கைகளை அறிந்துகொள்ள.. நாம் மார்க்க சட்டங்களை கரைத்து குடிக்க தேவையில்லை.

இஸ்லாமிய மார்க்க அடிப்படை அறிவு இருந்தால் போதுமானது.

கீழ்காணும் வீடியோக்களை பாருங்கள்..

இதற்க்கு இஸ்லாத்திற்கும் ஏதாவது சமந்தம் இருக்கிறதா என்று சொல்லுங்கள்

இந்த வீடியோவில் வரும் அனைத்தும் இஸ்லாம் காட்டிய வழி என்று தெரிந்தோ , தெரியாமலோ அல்லது திட்டமிட்டோ பரப்பபடுகிறது....

இதை சொல்லத்தான் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலம் பாடுபட்டார்களா  ?.. 

40:21இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.

Tuesday, May 7, 2013

தெளிவடைந்த ஃபித்னா - உள்ளத்தை புரட்டிய இறைவன்


நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி கட்சியின் உறுப்பினர் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn). சமீபத்தில் இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.  கடந்த சனிக்கிழமையன்று (20-04-2013) மதீனாவிற்கும், ஞாயிறு அன்று (21-04-2013) மக்காவிற்கும் வருகை தந்த டோர்ன் தனது உம்ராவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஷேக் அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸி உட்பட பல மார்க்க அறிஞர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சரி இதில் என்ன பெரிய பிரமாதம் இருக்கிறது?

இவரது பின்னணியைப் பற்றி சற்று தெரிந்து கொள்வது நல்லது. இறைத்தூதரை இழிவு படுத்தும் நோக்கில் ஃபித்னா எனும் திரைப்படத்தைத் தயாரித்த Geert Wilders-ன் Party for Freedom தலைவர்களில் ஒருவராவார் டோர்ன். விஷமத்தனமான இத் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டு வியந்து போனார். "இந்த மனிதர் முஹம்மதுக்கு முஸ்லிம்களிடத்தில் அப்படி என்ன சிறப்பு?" என்று பெரும் ஆச்சரியம் அடைந்து அக் கேள்விக்கு விடை காணும் ஆய்வில் இறங்கி விட்டார்.



"அந்த ஒரு கேள்விக்கான தேடலே இன்று என்னை முஸ்லிம் ஆக்கியது" என்கிறார் டோர்ன். டட்ச் (Dutch) பாராளுமன்ற உறுப்பினரான இவர், தமது மன மாற்றத்தை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியுலகத்திற்கு பகிரங்கமாக அறிவித்தார். "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!" எனும் அவரது டிவிட்டர் ஷஹாதா அரபி மொழியில் அமைந்திருந்தது. 46 வயதான டோர்னின் இந்த மனமாற்றம் நெதர்லாந்தில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.



விஷயம் மெல்ல வெளியே கசிந்து பல நாட்களாகியும் இவரின் கட்சி உறுப்பினர்கள் பலருக்கு இது ஒரு வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ஒரு நகைச்சுவையாகவே இருந்தது. பின்னே? "I hate Islam" என்பது இவரது Party of Freedom கட்சியின் பகிரங்க அடிநாதம். அக்கட்சியைச் சேர்ந்த இவரே இப்போது "I follow Islam" என்றால்? சிரித்தார்கள்.

"இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கக் கூடிய நான் முஸ்லிம் ஆகி விட்டேன் என்பதை நம்ப மறுப்பர் என்பது எனக்கும் தெரியும். ஆனால், நான் கடந்த ஒரு வருடமாக பல முஸ்லிம் அறிஞர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, மனத்திலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக குர்ஆன், ஹதீஸ்களை முழுமையாக ஆராய்ந்து கொண்டிருந்தேன். அதை எனக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அறிவர்!" என்கிறார் அல் ஜஸீராவிற்குபேட்டியளித்த டோர்ன்.
மதீனா நகரின் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் தொழும் டோர்ன்
மனம் மாறிய கையோடு, தனது மாநகர மேயருக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதிக் கோரிக்கை விடுத்திருந்தார் டோர்ன். 'தமது பணி நேரத்தினூடாக தொழுது கொள்ள அனுமதி வேண்டும்' என்ற கோரிக்கை.

"இஸ்லாத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை அதிகமதிகம் கேட்டவன் நான். இன்னமும் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் என் கட்சியினர், என்னைத் துரோகி என்றே அழைக்கின்றனர். நல்லது. மனதை விசாலமாக்கி, முன் முடிவுகளை கைவிட்டு, ஆராய்ந்து இம்முடிவை நான் தேர்ந்தெடுத்ததை அறிந்த பலரோ எனக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மற்றவர்களைப் போலவே நானும் வாழ்க்கையில் இதுவரை மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறேன். ஆனால், நான் செய்து வந்த தவறுகளிலிருந்து இப்போது நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் என் பாதை தெளிவாகி விட்டதையும் இதில் நான் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதையும் உணர்கிறேன்!" என்று தமது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.
நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?"
அவதூறு மற்றும் பொய்களை மட்டுமே முதலீடாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் பற்றி நினைத்தால் வெட்கித் தலைகுனிவதாகக் கூறும் டோர்ன், நபியவர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற மேற்கத்தியப் பொய்ப் பிரச்சாரங்கள் பற்றி உலகமெங்கும் சென்று எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளேன். இப்போது நினைத்தால் என்னால் வேதனையைத் தாங்க முடியவில்லை. நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?" என்கிறார்.


இட்டுக் கட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் ஏற்படுத்திய அவநம்பிக்கையை போக்க, டொராண்ட்டோ (Toronto) நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையமான Canadian Dawah Association – CDA வுடன் இணைந்து சர்வதேசத் திரைப்படம் ஒன்றினைத் தயாரிக்கப் போவதாகக் கூறுகிறார்.



"இம்முறை என் திரைப்படம் அப்பட்டமான உண்மையைப் பேசும். இஸ்லாத்தைப் பற்றியும் நபிகளாரின் சிறப்புப் பண்புகளையும் இது எடுத்துரைத்து, மேற்கத்திய நாடுகளிடையே பரப்பப் படும் இஸ்லாமோஃபோபியாவை அகற்றும்!" என்கிறார் உறுதியாக.



"உங்களது புனிதப் பயணம் எவ்வாறு இருந்தது?" என்ற கேள்விக்கு, "இதே இடத்திற்கு உம்ரா மற்றும் ஹஜ் செய்யச் செல்பவர்களை கிறுக்குப் பிடித்தவர்கள் (Lunatic) என்றெல்லாம் ஏளனம் செய்துள்ளேன். இப்படி கீழ்த்தரமாக பிறர் மனம் புண்படும்படி நடந்து கொண்ட நான், நபி (ஸல்) அவர்களின் கல்லறைக்கு அருகிலும் ரவ்தா ஷரீஃப்க்கு முன்பு நிற்கும் போதும் என்னுள் பொங்கிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை. இவ்விடங்களில் நான் தொழும் போது, சுவர்க்கத்தின் அருகே நெருங்கி விட்டது போன்ற தூய்மையானதொரு உணர்வு ஏற்பட்டிருந்தது. என் கண்கள் குளமாயின" 



"இறைத்தூதர் மீது இத்தனை அன்பை வைத்திருக்கும் உலக முஸ்லிம்களைப் போன்றே நானும் என்னை உணர ஆரம்பித்திருக்கிறேன். அதே நேரத்தில், இறைத்தூதர் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கும் சில மேற்கத்தியவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். எங்களிடையே தான் எவ்வளவு அறியாமை? எத்தனை பாரபட்சம்? இவற்றை எல்லாம் நான் எப்படி களையப் போகிறேன்?" என்று கவலைப்படுகிறார் டோர்ன்.



"உலக அளவில் முஸ்லிம்களுக்கும் பிற மதத்தினருக்குமுள்ள இடைவெளியைக் குறைத்து அவர்களிடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படச் செய்வேன். இஸ்லாம் பற்றிய தெளிவை எனக்கு உணர்த்திய இஸ்லாமிய அழைப்பு மையமான CDA வுடன் இணைந்து, அழைப்புப் பணியினை முழு மூச்சுடன் மேற்கொள்வேன்.  இஸ்லாத்தைப் பற்றியும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல, என்னுடைய வாழ்க்கையை இனி அர்ப்பணிப்பேன்!" என்று Okaz/Saudi Gazette க்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

- அபூ ஸாலிஹா http://www.satyamargam.com/
Related Posts Plugin for WordPress, Blogger...