(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, September 14, 2012

அல்லாஹ்வின் சாபத்தை எதிர் நோக்கியிருக்கும் அமெரிக்கா !!


சகோதர சகோதரிகளே ...,

நம் உயிருக்கும் மேலான ,உலகத்திற்கு அருட்கொடையான ,அழகிய முன்மாதிரியான அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களை பற்றி மிக அசிங்கமாக ,அருவருக்க தக்க வகையில் சொல்வதற்கு கூட முடியாத அளவிற்கு சிந்தரித்து திரைப்படம் வெளியிட்டுள்ளது அமெரிக்க யூத நாய்கள்...

அமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்ற அயோக்கியன் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம் தயாரித்து அதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளான்.

இவன் ஒரு இஸ்ரேலிய யூத இனத்தை சேர்ந்தவன். இந்த படத்தை வேண்டுமென்றே இஸ்லாத்திற்கு எதிரான யூத அமைப்பு ஒன்று அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் முழுவதும் விளம்பரம் செய்ய ஆரம்பித்தது.
மேலும் அமெரிக்காவில் குர்ஆனை எரித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றேன் எனக் கூறிய பாதிரியார் Terry Jones இதை பரப்பியுள்ளான்.
இதை தொடர்ந்து முஸ்லீம்களுக்கு வெறி ஏற்ற வேண்டும் என்றே இதனின் அரபி மொழிபெயர்ப்பு சமீபத்தில் வெளியானது.
இதை பார்த்து கொந்தளித்து போன எகிப்து மற்றும் லிப்யா நாட்டினர் அயிரக்கணக்கானோர் அங்குள்ள அமெரிக்க தூரகத்தை (11-9-2012) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்க கொடிகளை கிழித்து போராட்ட காரர்கள் அந்த யூத கைக்கூலியை கைது செய்யுமாறும் அந்த திரைப்படத்தை நீக்குமாறும் கோசங்களை எழுப்பினர்.
இந்த படத்தை தயாரித்த சாம் பாசைல் என்பவனிடம் இது குறித்து கேட்டதற்கு, Islam is a hateful religion. “Islam is a cancer,” எனக் கூறியுள்ளான். மேலும் நான் இதை நீக்கப் போவதில்லை இந்த படத்தை போன்று இன்னும் 200 மணி நேர படம் எடுக்க போகின்றேன் எனத் தெரிவித்துள்ளான்.
யூடுப் அதிகாரிகளிடம் இந்த படத்தை நீக்குமாறு கூறப்பட்டதற்கு நாங்கள் இதை நீக்க இயலாது எனத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவும் இதற்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்க வில்லை மாறாக ஹிலாரி கிளிண்டன் நேற்று ஏகிப்தில் முஸ்லிம்கள் நடத்திய  போராட்டத்தை கண்டித்துள்ளார்.
முஸ்லிம்கள் நாடு முழுவதும் கொந்தளிக்கும் அளிவிற்கு அந்த படத்தில் என்ன இருக்கின்றது?நபிகள் நாயகத்தை என்ன அவமான படுத்தியுள்ளான் என்ற கேள்விக்கு வருவோம்..
அந்த 14 நிமிட  வீடியோ வை பார்க்கும் எந்த முஸ்லிமின் இரத்தமும் கொதிக்காமல் இருக்காது.நபிகள் நாயகத்தின் படத்தை வரைந்ததற்கே கொந்தளித் போன முஸ்லிம்கள் இதை பார்த்தார்கள் ஆத்திரடையாமல் இருக்க மாட்டார்கள்.
ஆகையால் நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் பாரபட்சம் பார்க்காமல் தங்களால் முடிந்த அளவிற்கு கண்டிக்க வேண்டும்...
எங்கெல்லாம் போராட்டங்கள் ,கண்டன ஆர்பாட்டங்கள்  நடத்தப்படுகிறதோ அதில் பாரபட்சம் இல்லாமல் கலந்து கொண்டு நாம் அனைவரும் அமெரிக்கா யூத நாய்களை எதிர்த்து கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
தயவு செய்து அந்த அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறது , இந்த அமைப்பு நடத்துகிறது என்ற பஞ்சாங்கத்தை பாடி நான் அதில் கலந்துகொள்ள மாட்டேன் என்று ஒதுங்கி விடாதீர்கள் ..
நாம் கலந்து கொள்வது எந்த இயக்கத்திற்கோ ,ஜமாத்திற்காகவோ  அல்ல.. அல்லாஹ்வின் தூதருக்காக...
எனபதை நினைவில் கொள்ளுங்கள் ... மேலும் 
அல்லாஹ்விடம் கையேந்துவோம் ... 

யா அல்லாஹ் ... 
உன்னுடைய நேசத்திற்குரிய தூதரை அவமதிக்கும் படியாக , கொச்சை படுத்தி வேண்டும் என்றே எடுக்கபட்ட இத்திரைப்படம் வெளியாவதற்கு காரணமாக இருந்த அனைவரின் மீதும் இன்ஷாஅல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக.!
அவர்களை ஈருலகிலும் இழிவுபடுதுவாயாக... 
மேலும் முஸ்லிம்களுக்கு கண்ணியத்தையும் , வெற்றியையும் தருவாயாக...



Sunday, September 9, 2012

நாகூர் ரயில்வே நிலையத்தின் அவல நிலை..?


நாகூர். ஜூலை 18 . கிட்டத்தட்ட சுமார் இருபது ஆண்டுகளுக்கு பின் ஒரு சிறிய ஆசை, ஏன் நாம் நாகூரிலிருந்து காரைக்காலுக்கு ரயில் மூலம் போகக்கூடாது என்று? இந்த ஆசை எடுத்த எடுப்பில் நிறைவேறியதா என்றால் அதான் இல்லை. அதற்கு என்ன காரணம் மற்றும் நாகூர் ரயில்வே நிலையத்தின் தற்போதைய நிலையைப்பற்றி கண்டறிய ஒரு சுற்று வந்தோம். 


தினந்தோறும் பிற்பகல் பனிரெண்டு மணிக்கு நாகூரிலிருந்து காரைக்காலுக்கு ரயில் உண்டு என்று சொன்னதும் ஆவலாக நாகூர் ரயில்வே நிலையத்தில் காலை 11:40 மணிக்கு ஆஜரானேன். டிக்கெட் கவுண்டருக்கு சென்றதும், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தான் உள்ளது ஒரு டிக்கெட் பதினான்கு ரூபாய், நீங்க இரண்டு டிக்கட்டுக்கு முப்பது ரூபாய் கொடுங்க என்றார் டிக்கெட் விநியோகிப்பவர். உடனே பணத்தை கொடுத்ததும் அந்த ரூமில் இருந்தவர் ஏதோ முனுமுனுக்க, உடனே நான் கொடுத்த முப்பது ரூபாயை திருப்பி கொடுத்து 'சார் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரத்துக்கு முன்பே போய் விட்டது, இனி சாயிந்தரம் ஐந்து மணிக்கு தான் அடுத்த ரயில்' என்றார். என்ன கொடுமை சார் இங்கு போர்டில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் காலை 11 :45 க்கு நாகூருக்கு வருவதாகவும் மீண்டும் காலை 11 :50 க்கு நாகூரிலிருந்து எர்ணாகுளம், காரைக்கால் வழியாக புறப்படுவதாக போட்டிருக்கிறது என்று வினவிய உடன், நம்மைப் பார்த்து ஆத்திரமாக, அது அப்படிதான் இப்ப ரயில் காரைக்காலுக்கு கிடையாது என்று கொஞ்சம் உரத்த குரலில் கூறினார். 



உடனே நாம் டூட்டி ஸ்டேஷன் மேனேஜரை அணுகி அவரிடம் ரயில் கால அட்டவணையைப் பற்றி கேட்கலாம் என்று முற்பட்டபோது, அந்த அறையில் அமர்ந்திருந்த நீல சட்டை போட்ட ரயில் ஊழியர் (சீனியர் சிட்டிசன்) ஒருவர், வெளியில் நீங்க கேட்ட விபரம் உள்ளது போய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஏதோ அவரிடம் கடன் கேட்டு வந்தவன் போல் நம்மை பார்த்தார். 



பின்பு வெளியில் அந்த அட்டவணையை பார்த்ததும் ஏதும் புரியவில்லை, காரணம் நாகூருக்கு வரும், போகும் ரயில்களின் புறப்படுமிடம், சேருமிடம் இருந்தாலும் ஆனால் வழி தடங்களைப்பற்றிய விபரம் இல்லை. மீண்டும் இந்த விபரத்தை அறிய டூட்டி ஸ்டேஷன் மேனேஜரை அணுகும் போது, அந்த நீல சட்டை ஊழியர் (சீனியர் சிட்டிசன்) ஒரு மாதிரியாக நம்மை பார்த்தார். பின்பு அங்கு அமர்ந்திருந்த மற்றொரு காக்கிச் சட்டை ஊழியர் (இளைஞர்) தாமாக முன்வந்து கீழ்க்கண்ட விபரத்தை நம்மிடம் கூறினார். 

நாகூர் - காரைக்கால் 
09:30 AM (திருச்சி ரயில்) 
10:20 AM (சென்னை ரயில்) 
11:20 AM (எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்/Train No .:16886) 
05:00 PM (வேளாங்கண்ணி ரயில்) 

காரைக்கால் - நாகூர் 
12:15 PM (திருச்சி ரயில்) 
04:10 PM (எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்) 
05:45 PM (தஞ்சாவூர் ரயில்) 
07:30 PM (சென்னை ரயில்) 





எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் காலை 11:20 க்கு என்று சொல்கிறீர்கள் ஆனால் டிக்கெட் கவுண்டரில் அதிகாரி காலை 11:45 க்கு (Train No .:16886) என்று கூறுகிறாரே என்று வினவிய போது நான் சொல்வது தான் புது நேரம், அதன்படி தான் இன்றும் இந்த ரயில் புறப்பட்டது என்று கூறினார். ஆனால் இது அனைத்தும் டூட்டி ஸ்டேஷன் மேனேஜர் அறையில் தான் நடந்துக்கொண்டு இருந்தது, ஆனால் இந்த உயர் அதிகாரியோ (இந்தி வாலா) செவிடன் காதில் ஊதிய சங்கு போல் எதையும் கண்டுக்கொள்ளவில்லை, நம்மிடம் என்னவென்று ஆங்கிலத்தில் கூட வினவவில்லை என்பது தான் வருத்தமான விஷயம். 




இதில் என்ன சுவராஸ்யம் என்றால், டிக்கெட் விநியோகிக்கும் அதிகாரிக்கோ ரயில் அட்டவணை, குறிப்பாக ரயில் புறப்படும் நேரம் பற்றி தெரியவில்லை என்பதான் கொடுமை. படித்த நமக்கே இந்த வரவேற்பு என்றால், பாமர மக்களை எப்படி இவர்கள் கையாளுவார்கள் என்பதை நாமே முடிவு செய்துக்கொள்ளவேண்டியது தான். 

பின்பு நாகூர் ரயில்வே நிலையத்தை வலம் வந்தோம், அதில் நமக்கு கண்ணில் தென்பட்டவையைப் பார்ப்போம். ஒழுங்கான குடிநீர், நிலையம் முழுவதும் இல்லை, ஒரே ஒரு கழிவறை இருந்தும் அது காலம் காலமாக பூட்டிவைக்கப்பட்டுள்ளது, இதற்கு பக்கத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு உள்ள கழிவறை கதவின்றி, தண்ணீரின்றி, சுத்தமின்றி இருந்ததை காணமுடிந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த கழிவறைக்கு எதிர் புறம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் விளம்பரப் பலகையில் ஒரு வாசகம் "திறந்த இடத்தில் மலம் கழிக்க வேண்டாம்!" என்ற வாசகம் வேறு இதன் அர்த்தம் தெரியாமல் தொங்கிக்கொண்டு இருந்தது. மாநில அரசாங்கம் சுத்தத்தைப் பற்றி கூறுகிறது, ஆனால் மத்திய அரசு ரயில்வே நிலையத்தில் சுத்தம், சுகாதாரத்திற்கான அறிகுறியே இல்லை. 




இந்த குறைகளை நிவர்த்தி செய்ய ரயில்வே நிலையத்தில் உள்ள அதிகாரிகளை அணுகினால் ஏதோ நாம் வழித் தெரியாமல் வந்து விட்ட பட்டிக்காட்டான் போன்று பார்ப்பதை உணர முடிந்தது. ஆதலால் இந்த குறைகளை அப்படியே திருச்சி கோட்டம் தெற்கு ரயில்வே மக்கள் குறை தீர்க்கும் அதிகாரி மற்றும் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் திரு. S . அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அவர் எடுக்கும் நடவடிக்கையையும் மற்றும் அதற்குண்டான பதிலையும் இந்த பகுதியில் பிரசுரிப்போம். அதுபோல் நாகூர் ரயில்வே நிலையத்திப் பற்றி பொது மக்கள் விமர்சனத்தையும் அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

பொதுமக்கள் (பயணிகளின்) கவனத்திற்கு: நாகூர் ரயில்வே நிலையம் 

நாகூர் ரயில்வே நிலையத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் அதிகாரியின் விபரத்தோடு உள்ள BSNL தொலைப்பேசி மற்றும் ஈமெயில் முகவரியும் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மக்கள் குறை தீர்க்கும் அதிகாரியின் விபரம் அடங்கிய பலகையில்:
BSNL தொலைபேசி: 2416105 என்றும் ஈமெயில் முகவரி: adrmtpj@sr.railnetgov.in என்றும் உள்ளது. ஆனால் நான் தொடர்பு கொண்ட பிறகு தான் இங்கே குறிக்கப்பட்டுள்ள தொலைப்பேசி என்னும் ஈமெயில் முகவரியும் தவறாக இருப்பதை உணர்ந்துக்கொண்டேன்.

பின்பு தென்னக ரயில்வேயின் வலைத்தளத்தை http://www.sr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0%2C7%2C331பார்க்கும் போது கீழ்க்கண்ட சரியான முகவரி எனக்கு கிடைத்தது.


BSNL தொலைபேசி: 2416015 என்றும் ஈமெயில் முகவரி: adrmtpj@sr.railnet.gov.in இருந்தது.

இது தெரிந்து நடந்த தவறா? அல்லது தெரியாமல் செய்த தப்பா?? என்று தென்னக ரயில்வே தான் பதில் சொல்லவேண்டும். 


எதிர்ப்பார்ப்பு: 


:: நாகூர் ரயில்வே நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு சாதகமாக இன்முகத்துடன் செயல்படவேண்டும். காரணம் நாகூருக்கு பல மாநிலத்தவர், பல மதத்தவர் நாகூரை ஒரு சுற்றுலா தளமாக கருதி இங்கு வருகின்றனர். 
:: ரயில் புறப்படும் மற்றும் சேரும் நேரங்கள் (வழித்தடங்களுடன்) தெளிவாக (துல்லியமாக) குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். 
:: ரயில் நேரம் பற்றி பயணிகளின் விசாரணைக்காக தனி அதிகாரி இருப்பது நன்று. 
:: ரயில் டிக்கெட் விநியோகிப்பவருக்கு ரயில் நேரம் பற்றி அறிந்திருக்க வேண்டும். 
:: சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, குடிநீர், கழிவறை வசதிகள் மற்றும் பயணிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். 

திரு. S . அப்துல் ரஹ்மான் அவர்கள் மூலம் இந்த குறைகளுக்கு ஒரு நல்ல விடிவு காலம் வரும் என்று பொதுமக்களில் ஒருவனாக எதிர்ப்பார்க்கும் 
மு.இ.. முஹம்மது இபுறாஹிம் மரைக்கார்.




நாகூர் ரயில் நிலையத்தில் நடக்கும் எதார்த்த நிகழ்வுகளை எல்லோரையும் போல் பார்த்துவிட்டு , மற்றவர்களிடம் சொல்லி புலம்பிவிட்டு செல்லாமல் .. 

தன்  உணர்வுகளை புகாராக பதிவு செய்து , பிரச்சனைகளை  களைவதற்கு முயற்சி செய்துள்ள சகோ.முஹம்மது இபுறாஹிம் மரைக்கார் அவர்களுக்கு நாகூர் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.. 

உங்களது முயற்சியில் இப்பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் .. இல்லையென்றால் இன்ஷால்லாஹ் உங்களது முயற்சியை நாங்கள் முன்னெடுத்து செல்வோம்... 

Saturday, September 8, 2012

ஊர்ல கொசு தொல்லை தாங்க முடியலப்பா ..!!


வெயில் காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கியாச்சு. இனி கொசுக்களின் காலம். எங்கே சென்றாலும், பகலிலும் இரவிலும் கொசுகள் ரீங்காரமிட்டு, நம்முடைய ரத்தத்தை உறிஞ்சும். இதுல பவர்கட் வேற. 

தண்ணீருக்கு அடுத்தபடியாக நோய் பரப்புவது கொசுக்களாகும். டெங்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன. இது தவிர பலவித வைரஸ்களை பரப்புவதன் முலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் காரணமாக இருக்கின்றன.

இந்த கொசுக்களால் மனித இனம் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சமல்ல. உலகில் 40 சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் கொசுக்கள் முலம் பரவுகிறது. ஆண்டு தோறும் 10 கோடி பேர் பாதிப்புக்குள்ளாவதில் ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் பாதிப்பு அதிகமாகி இறந்துவிடுகிறார்கள். ஏடிஸ் இன கொசுக்களே இதற்கு காரணமாகும்.

மனிதர்களின் உயிரையே பறிக்கும் மிகவும் அபாயகரமான நோய்களை வேகமாக உண்டாக்குவதில் கொசுக்களுக்கே முதலிடம். கொசுக்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது நமது நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒரு கொசுவின் இனப்பெருக்க காலத்தில் அது ஆயிரக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறது. எனவே கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால் அவற்றின் உற்பத்தியைக் குறைக்க முடியும். கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம்.

இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியை ஓரளவு குறைப்பது எப்படி ?

1. வீட்டின் பின்பகுதியில் தண்ணீரைத் தேங்க விடுவது கூடாது. நீர் தேங்கும் இடங்களில் பிளிச்சிங் பவுடரை இடலாம் மற்றும் பினாயிலையும் ஆங்காங்கே தெளிக்கலாம்.

2. " சுத்தம் " என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருத்தல் கூடாது.

3. தெருக்களில், குளம், குட்டைகளில் கழிவு மற்றும் குப்பைகளை கொட்டுவது உள்ளிட்ட சில காரணங்களால் கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகி விடுகிறது. இதை முதலில் நிறுத்த வேண்டும்.

(மேற்கண்ட விசயங்களை நாகூர் கவுன்சிலர்கள் கவனிக்க வேண்டும் )

சரி என்ன தான் நாம் தற்காப்பு நடவடிக்கை செய்தாலும் .. கொசுவரத்தான் செய்கிறது .. கடிக்கத்தான் செய்கிறது அப்படி கடி வாங்கப்போய், சில நோய்களும் இலவசமாக வந்துவிடுவதால், அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள், ALLOUT மற்றும் odomas cream களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இப்படி பயன்படுத்துவது ஆபத்தில்போய்தான் முடியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்களும், விஞ்ஞானிகளும்!


கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

கொசுவை விரட்டுவதற்காக ஒருவர் தெடர்ந்து கொசுவர்த்திச்சுருள், மேட், ALLOUT ,odomas போன்றவற்றை ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு, அது முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உண்டான காற்றை செயல்பாட்டிற்கு எடுத்துக்கெள்ள இயலாமலும் போய் விட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பல ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர்.

கொசுவர்த்திச்சுருள் இருந்து வெளிவரும் புகையை அப்போது பிறந்த அல்லது பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.

மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு கூட காரணமாக இருக்கிறதாம்.

இதுதவிர, கொசு விரட்டியில் உள்ள டயேக்சின் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது.

கொசு தொல்ல தாங்கமுடியல...சரி… இதற்கு வேறு என்னதான் வழி..?  

முதன்மையான ஒரே வழி– கொசுவலையை பயன்படுத்துவது தான்.. நவீன கொசு விரட்டிகள் வருவதற்கு முன்பு ...இந்த கொசுவலை நம்முடைய முன்னோர்கள் காலத்தில் பயன்பட்டு வந்தது தான்.

நம் முன்னோர்கள் வீட்டிலேயே கொசுவலையை தைத்து பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் இன்று நாம் அதற்க்கு முக்கியதுவம் கொடுப்பதில்லை..

எது எதுக்கோ செலவு செய்கிறோம்... ஒரு கொசுவலையை நாம் வாங்கி வைத்துகொள்வதில்லை .. நாம் கொசுவலையை பயன்படுத்தினால் கொசுவால் வரும் பல நோய்களை இன்ஷால்லாஹ் தவிர்க்கலாம்.. மின்சாரம் இருந்தாலும் ,இல்லாவிட்டாலும் கொசுவலையால் பிரச்சனையில்லை..


இது ஆல்லாமல் சாம்பிராணி அல்லது காய்ந்த வேப்பிலையை போட்டு புகை மூட்டி கொசுக்களை விரட்டலாம்… 

இல்லை இல்லை .. நாங்கள் good knight ,all out liquid ,coil தான் பயன்படுத்துவோம் என்று அடம்பிடிப்பவர்கள்... குறைந்தது நீங்கள் பயன்படுத்தும் அறைகளில் காற்றோட்டம் இருப்பது போல் பார்த்துகொள்ளுங்கள் ... கொஞ்சமாவது நீங்கள் விஷக்காற்றை சுவாசிப்பதை தவிர்க்கலாம். இல்லையென்றால் நீங்கள் கண்விழிக்கும் வரைக்கும் மருந்தின் வாடை உங்கள அறைகளில் வளம் வந்துகொண்டே இருக்கும்.



துணுக்கு :

கோடாலி தைலம் (axe oil) போன்ற தைல வகைகளை கை,கால்களில் நமக்கு தாங்கக்கூடிய அளவில் தேய்த்து கொண்டால் .. அந்த தைலத்தின் வாடை இருக்கும் வரை கொஞ்சம் நேரம் கொசு கடியில் இருந்து ஓய்வு எடுக்கலாம்..

கொசுக்கடினா சும்மாவா .... 

உதவி : நன்றி அதிரை பிபிசி

Tuesday, August 28, 2012

வார்டு கவுன்சிலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா..? ?

நமதூரில் ஏற்கனவே நல்லா இருந்த ரோட்டை கொத்து புரோட்டா போட்டு நாசம் பண்ணியாச்சு ... 

அப்படி இப்படின்னு எல்லாத்தெருவையும் உண்டு இலைன்னு பண்ணியாச்சு சரி எப்பதான் ரோடு போடுவீங்க என்றால் ...

இந்தல , அந்தல என்று சொல்லிகொண்டு இருகிறார்கள்.... இதுல இந்த பிரச்சனை வேறு ..


இது மாதிரி ஊர்ல பல இடம் இருக்கிறது .. இது ஒரு சாம்பிள் என்றே சொல்லலாம்.. மேற்கண்ட படத்தில் உள்ள பிரச்சனை செய்யது பள்ளி குளத் தெரு வார்டு:8 ல் வருகிறது. 

இந்த வார்டு கவுன்சிலர் சகோ. ப ஜெகபர் சாதிக் சாஹிபு . - 9750629494.

நாகூரின் முக்கிய சாலை சந்திப்பு , அருகில் பள்ளி கூடம்.. ஈஸியா கொசு உருவாகும்..

நீங்க ஆளும் கட்சி வேற ..  அதிகாரம் இருக்கு .. ஒட்டு கேட்கும் போது அப்டி இப்படி என்று சொன்னீர்கள்.

கொஞ்சம் பார்த்து ஏதாவது ஊர் மக்களுக்கு செய்ங்க..  ப. ஜெகபர் சாதிக் சாஹிபு...

இத உங்கட்ட தானே கேட்க்க முடியும் ... 

அப்பரும் தமுமுக -மமக சகோதரர்கள் இருகிறார்கள்... நீங்கலும் கொஞ்சம் இதில் கவனம் செலுத்தலாம் .. உங்களால தான் அதிமுக அங்க ஜெயித்தது(?) இங்கு ஜெயித்தது(?) என்று சொன்னால் மட்டும் போதுமா ... 

ஏதாவது ஊர் மக்களுக்கு செஞ்சி உங்க பெயர காப்பாத்த வேணாமா ?..


நன்றி : NAGORE 611002 PAGE & ABDUL SALAM.


நாகூர் கவுன்சிலர்கள் :

Serial NoNamePosition and WardContact NumberEmail & WebSite
ResidenceMobile
1ப மகாலட்சுமிவார்டு 19965085546
2ரா செந்தில்குமார்வார்டு 29443885134
3பா கனகவள்ளிவார்டு 39942975135
4அ மெஹர்பானுவார்டு 49942158585
5மு சின்னப்பிள்ளைவார்டு 59787359921
6அ சுல்தான் அப்துல் காதர்வார்டு 69150147433
7மு ஹலிமாபீவீவார்டு 79944036855
8ப ஜெகபர் சாதிக் சாஹிபுவார்டு 89750629494
9ஹ முஹம்மது கபீர்வார்டு 99865072744
10வெ நாகையன்வார்டு 109894160347


Tuesday, August 21, 2012

நோன்பு பெருநாள் தொழுகை புகைப்படங்கள்

நாகூர் பீரோட்டம் தெரு திடலில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றபோது எடுத்த புகைப்படம்.





நன்றி : தினத்தந்தி.
செல்ல மரைக்கார்.

Wednesday, August 15, 2012

சுதந்திர இந்தியாவில் - சுதந்திரமில்லா ஓர் தேசம் !!

எல்லை பாதுகாப்பு படையில் COMMANDO INSTRUCTOR பணி புரியும் ஒரு சராசரி இந்திய குடிமகனின் பதிவு ...


விடைகள் தான் இந்தியாவிடமே இல்லை ?????????????






மாலை இருட்டிய பின் காஷ்மீரில் யாரும் வெளியே சுற்ற முடியாது. ராத்திரி நேரம் கருத்தரங்கம் போறேன் பதிவர் கூட்டம் நடத்துறேன்னு திரிஞ்சா அப்ப்புறம் மார்ச்சுவரி போஸ்ட் மார்ட்டம்தான்.அதாவது காலை விடிந்தது முதல் மாலை இருட்டும் வரை மட்டுமே நீங்கள் சாலையில் நடமாட முடியும்.

பகலிலும் அடையாள அட்டை இல்லாமல் சென்றால் சந்தேகத்தின் பேரில் நீங்கள் கைது செய்யப்படலாம்.அடையாள அட்டைகளை ரயில் பயணங்களில் எவ்வளவு நியாபகமாக எரிச்சலோடு எடுத்து செல்கிறோம் நாம்?மறந்து போனால் கைது என்று அறிவித்தால் எப்படி இருக்கும்?

வாகன சோதனை என்ற பெயரில் உங்களின் வாகனமும் நீங்களும் பலமுறை சோதனை செய்யப்படும்போதும் தாமதப்படுத்தும்போதும் எப்படி உணர்வீர்கள்?சுதந்திரமாக?

போர்வைக்குள் குறுந்தகவல் அனுப்பும் அன்பர்களே போராட்ட பரப்புரை செய்யும் நண்பர்களே அங்கே இந்த பருப்பெல்லாம் வேகாது.காஷ்மீரில் குறுந்தகவல் தடை என்பதை அறிவீர்களா?ஒரே நாடு ஒரே சிம் என்று புரட்சி செய்யும் இந்தியா காஷ்மீர் சிம் கார்டுகள் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து எங்கேயும் செயல்பட அனுமதிப்பதில்லை.அப்படின்னா


 காஷ்மீர் தேசம் தனி என்பதை ஒப்பு கொள்வீர்களா?

உங்கள் ஊரை எப்போது வேண்டுமானாலும் முற்றுகை இடலாம் முடக்கி வைக்கலாம் சோதனை போடலாம் என்றால் சம்மதிப்பீர்களா?அவ்வாறு செய்யும்போது பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடைபெற்றால் கண்மூடிக்கொள்வோமா?இல்லை கொல்வோமா?

கடைகளில் செய்திதாளால் சுற்றப்பட்டு கருப்பு பாலிதீனில் வைத்து தரப்படும் நாப்கின் வைத்துள்ள கைப்பையை வேறு ஆண்களிடம் தருவீர்களா சகோதரிகளே? வாகன சோதனையின் போது அவ்வாறு வேற்று மனிதன் தன் கைப்பையை சோதனையின் பேரில் திறப்பதும் நாப்கினை எடுத்து பிதுக்கி பார்க்கும்போது உணரும் அவமானமும் வெறுப்பும் நீங்கள் அனுபவித்ததுண்டா சகோதரிகளே?

உங்களால் பாதுகாப்புபடை வாகனங்களை மீறி சாலையில் வண்டி ஓட்ட முடியாது.எதிர் பாரா விதமாக நீங்கள் பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கு வழி தரவில்லை என்றால் பலவித மொழிகளில் உங்கள் பிறப்பு சந்தேகிக்கப்படும்.பதில் பேசும் பட்சம் தாக்கப்படுவீர்கள்.

சந்தேகக் கைதுகளில் தாக்கப்பட்டு உயிரிழக்கும் காஷ்மீரிகளுக்கு குரல் எழுப்ப முடியாது.எழுப்பினால் நமது வீட்டு தொலைக்காட்சிகள் காஷ்மீரில் கலவரம் என்று கலகம் செய்யும்.நாமும் துலுக்க பயலுவளுக்கு வேற வேலை இல்லை என்று மென்று துப்புவோம்.வாழ்க சுதந்திரம்.

கைது செய்யப்பட்ட காஷ்மீரி மனிதர் 35 வயதுக்கு மேல் இருக்கும்.


ஆயுதங்கள் எங்கே உள்ளன என்று பல விதங்களில் விசாரணை.



அடி உதைக்கு பயந்து அவர் சும்மானாச்சும் ஓரிடம் சொல்லி கொஞ்ச நேரம் தப்பித்து மூச்சு வாங்க ஏமாந்து திரும்பிய நாங்கள் அவரை முதலில் நிர்வாணப்படுத்தி மல்லாக்க படுக்க வைத்தோம். 



ஏசு போல கை கால்களை விரித்து வைத்து ஒவ்வொரு கை கால்களின் மேல் ஆளுக்கொருவர் ஏறி நின்று கொள்ள வலுக்கட்டாயமாக திறக்கப்பட்ட அவர் வாயில் வாளி வாளியாக குளிர்ந்த தண்ணீர் மூச்சு திணற திணற ஊற்றப்பட்டது.



வாய் மூடாமல் கெட்டியாக பிடித்து கொண்ட பாவிகளில் ஒருவன் நான்.
நீர் நிறைந்த அந்த வாய் மூச்சு காற்றை கேட்குமா? தேசிய கீதம் பாடுமா?





எனது அதிகாரி ஒருவர் மாலையில் சிலரை பிடித்து கொண்டு வந்து தேநீர் கொடுத்து பாயாசம் கொடுத்து அப்புறமாக இரவினில் அடித்து துவைப்பார்.அது அவர் சுதந்திரமாம்.

இப்படி குரல்வளையை இறுக்கி பிடித்து கொண்டு கருத்து சுதந்திரம் தருகிறேன் பேசுங்கள் ஆனால் செயல்படுத்த முடியாது என்பது எப்படி உண்மையான சுதந்திரம் ஆகும்?அதை கொண்டாடுங்கள் என்றால் மனசார எப்படி முடியும்?

நீங்கள் அனுபவித்து பாருங்களேன் இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று?

இதை அனுபவித்து விட்டு சொல்லட்டும். எனது இந்தியா வாழ்க என்று


Thanks -Mgpt Caa

Sunday, August 12, 2012

ஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா ?

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக..


1) ஸலாத்துல் லைல் + வித்ரு
2) கியாமுல்லைல் + வித்ரு
3) தஹஜ்ஜத்து + வித்ரு
4) தராவீஹ் + வித்ரு

இவ்வாறு நான்குப் பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே தொழுகையை தான் என்பது நம்மில் பலருக்கு இன்னும் தெளிவாகவில்லை.. மேற்கண்ட எல்லா தொழுகையிலும் வித்ரு சேர்ந்து வருவதே இது ஒரே தொழுகை தான் என்பதை விளக்கிவிடும்.

நபி(ஸல்) அவர்களின் தொழுகைகள் பற்றிய ஹதீஸ்ககளை ஆய்வு செய்யும் எவரும் இவைகள் வெவ்வேறு தொழுகைகள் அல்ல. மாறாக ஒரே தொழுகைக்கு சூட்டப்பட்டுள்ள வெவ்வேறு பெயர்கள்தான் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி விளங்கிக் கொள்வார்கள்.

தூங்கியெழுந்து தொழுதால் தஹஜ்ஜுத் என்கிறோம். ரமழானில் தொழுதால் தராவீஹ் என்கிறோம்.ஆனால் இது இந்தத் தொழுகை! இது இந்தத் தொழுகை!! என்று நபி(ஸல்) பெயர் சூட்டி இரவில் எந்தத் தொழுகையையும் தொழவில்லை அவர்களின் வழமையான தொழுகைகளும் அதன் எண்ணிக்கைகளும் ஒரே விதமாக இருந்தன. அதை மக்களுக்கு விளக்க வந்தவர்கள் தான் ஒரே தொழுகையை பல பெயர்களால் அறிமுகப்படுத்தி விட்டனர்.

இரவில் தொழுவதால் ‘ஸலாத்துல் லைல்’ இரவுத் தொழுகை என்றும், இரவில் நின்று வணங்குவதற்கு ஆர்வமூட்டப்பட்டதால் ‘கியாமுல் லைல்’ என்றும்,குர்ஆனில் ‘தஹஜ்ஜத்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் ‘தஹஜ்ஜத்’ என்றும் அந்த தொழுகை ஒற்றைப்படையில் முடிவதால் ‘வித்ரு’ என்றும் அந்த தொழுகைக்கு பெயர்வந்தது.

தராவீஹ் என்ற பெயரிலோ அல்லது அப்படி புரிந்துக் கொள்ளும் விதத்திலோ நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எந்த ஒரு தொழுகையும் தொழப்படவில்லை.மற்ற வார்த்தைகளாவது ஹதீஸ்களில் கிடைக்கின்றன. தராவீஹ் என்ற வார்த்தை எந்த ஒரு ஹதீஸிலும் வரவே இல்லை.

இரவின் கடைசிப் பகுதியில் எழுந்து தொழமுடியாமல் போகும் என அஞ்சுபவர் அதன் ஆரம்பப் பகுதியில் ஒற்றைப்படையாகத் தொழட்டும். யார் இரவின் கடைசிப் பகுதியில் தொழ ஆர்வங்கொள்கிறாரோ அவர் அதன் கடைசிப் பகுதியிலேயே ஒற்றைப்படையாகத் தொழட்டும் ஏனெனில் இரவின் கடைசிப் பகுதியின் தொழுதல் சாட்சி கூறப்படும் அதுவே சிறந்தது” என நபியவர்கள் கூறினார்கள் 
ஆதாரம் : முஸ்லிம் 1802.

தொழுகை ஒன்றுதான் அந்த தொழுகையின் தன்மையையும் நேரத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டவர்கள் பல பெயர்களை அந்த தொழுகைக்கு சூட்டி விட்டனர்.

”நபி(ஸல்)அவர்கள் இந்த தொழுகைகளை பெயர் குறிப்பிட்டு தொழுததில்லை என்று கூறுகிறீர்களே… ஆனால் வித்ரு என்று ஏராளமான ஹதீஸ்களில் பெயர் வருகிறதே..” என்று சந்தேகம் வரலாம்.

‘வித்ரு’ என்ற வார்த்தையை மொழிப் பெயர்க்காமல் விட்டுவிடுவதால் தான் இந்த சந்தேகம் வருகிறது.‘உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்’ என்பது ஹதீஸ். ஹதீஸ் வாசகங்கள் எல்லாவற்றையும் மொழி பெயர்க்கும் நாம் ‘வித்ரு’ என்பதை அப்படியே விட்டுவிடுகிறோம். அதனால் அது தனி தொழுகைப் போன்று தெரிகிறது. வித்ரை மொழிப் பெயர்க்கும் போது இந்த குழப்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடும்.

‘வித்ரு’ என்ற வார்த்தைக்கு ‘ஒற்றை’ அல்லது ‘ஒற்றைப்படை’ என்று பொருள்.உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையிலாக்குங்கள் என்று மொழி பெயர்க்கும் போது தெளிவான விளக்கம் கிடைத்து விடுகிறது.

எந்த ஹதீஸ் நூல்களை எடுத்துக் காட்டி அறிஞர்கள் தஹஜ்ஜத் தொழுகைத் தனி – தராவிஹ் தொழுகைத் தனி, ஸலாத்துல் லைல் தனி என்று கூறுகிறார்களோ அதே ஹதீஸ் நூல்களில் அந்தந்த தலைப்பிற்கு கீழ் ஒரே ஹதீஸ் வார்த்தை மாறாமல் “வித்ரு- ஒற்றைப்படை” இடம் பெற்றிருப்பதை ஊன்றி கவனிக்க வேண்டும்.

வெறும் தலைப்புகளை மட்டும் பார்த்து சட்டங்களை வகுத்துவிடக் கூடாது. அந்தந்த தலைப்பிற்கு கீழுள்ள ஹதீஸ்களின் வார்த்தைகளைப் பார்த்து அதிலிருந்துதான் சட்டங்களை வகுக்க வேண்டும். அப்படி ஆய்வு செய்பவர்களுக்கு இது தனி தனி தொழுகை என்ற குழப்பம் ஏற்படவே செய்யாது.

எல்லாம் வேறு வேறு தொழுகை என்றால் எல்லா தொழுகை முடிவிலும் கடைசி தொழுகையாக “ஒற்றைப்படை - வித்ரு” தொழுகை எப்படி வரும்.?

நபி(ஸல்) இரவின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுவார்கள் மரணத்தை நெருங்கிய காலத்தில் அவர்களின் வித்ரு தொழுகை ஸஹர் நேரம் வரை சென்றது என ஆய்ஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் – திர்மிதி 419)

மேற்கண்ட ஹதீஸ் மூலமாக.. இரவு தொழுகையை நபி(ஸல்) அவர்கள் இரவின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் தொழுதிருக்கிறார்கள். இதன் மூலம் ஒரே தொழுகை தான் வேறு வேறு நேரங்களில் தொழுதிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.


11 ரக்அத்கள் :

ரமளானில் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் ஆய்ஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் நபியவர்கள் பதினோரு ரக்அத்களை விட அதிகப்படுத்தியதில்லை. முதலில் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்டுவிடாதே.. (அதாவது அந்த தொழுகை அவ்வளவு அழகாக இருக்கும்) பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றி கேட்டுவிடாதே… பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள். 
                                                                    
(ஆய்ஷா(ரலி) புகாரி ஹதீஸ் எண் 1147, திர்மிதி 403 அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)

ரமளான் ரமளான் அல்லாத நாட்கள் என்று நபி(ஸல்) எந்த வித்தியாசமும் செய்யாமல் இரவுத் தொழுகையை 11 ரக்அத்களாகவே நீடித்துள்ளார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ் வலுவான சான்றாக உள்ளது.

நபியவர்கள் பதினோரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள் அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. (ஆய்ஷா(ரலி) புகாரி அத்தியாயம் வித்ரு எண் 994)

இஷாவிலிருந்து சுப்ஹ் வரை நபி(ஸல்) பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத் முடிவிலும் ஸலாம் கொடுப்பார்கள். பின்னர் ஒரு ரக்அத் (வித்ரு) தொழுவார்கள். (ஆய்ஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத், நஸயி)

நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸில் இஷாவிலிருந்து சுப்ஹ் வரை நபி(ஸல்) அவர்கள் ஒரே தொழுகையை தான் தொழுதுள்ளார்கள் என்பதும். நபி(ஸல்) இஷாவிலிருந்து சுப்ஹ் வரை 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள். தஹஜ்ஜத்தும்; அதுதான், தராவீஹூம் அதுதான், இரவுத் தொழுகையும் அதுதான், வித்ருத் தொழுகையும் அதுதான் என்பது எந்த சந்தேகதிற்கு இடமின்றி தெளிவாகிறது.


தராவிஹ் தனி – தஹஜ்ஜத் தனி முரண்பட்ட நிலைப்பாடு :

தராவிஹ் 20 ரகாயத் தொழுகிறார்கள் ..ஏன் ? என்று கேட்டால் உமர் (ரலி) தொழுதிருகிரார்கள் என்று அவர்கள் மேல் பழியை போடுகிறார்கள். ஆனால் அது கூட சரியா என்றால் அதுவும் தவறு .. சரி அது இருக்கட்டும் ..

மேலும் சொல்கிறார்கள் .. நபி (ஸல்) அவர்கள் தராவிஹ் முன் இரவில் தொழுதிருகிரார்கள் அதனால் நாம் தொழுகிறோம்.. பின் இரவில்  தஹஜ்ஜத் – கியாமுல்லைல் 8 ரகாயத் தொழுதிருகிறார்கள் அதனால் நாம் தொழுகிறோம் என்கிறார்கள்.

இதற்க்கு இவர்கள் எந்த சான்றையும் காண்பிப்பது இல்லை.. மேலும் இவர்களின் செயலை கவனித்தாலே தெரிந்துவிடும் இவர்கள் செய்வது தவறு என்று...

அதாவது முன் இரவில் தராவிஹ் 20 ஜமாத்தாக தொழுகிறார்கள்..
நள்ளிரவில்  தஹஜ்ஜத் தனியாக 8 ஜமாத்தாக தொழுகிறார்கள்…
ஆக 28 ஜமாத்தாக தொழுகிறார்கள்...

இவை வேறு வேறு தொழுகை என்றால் ... இந்த இரண்டு தொழுகைக்கும் அல்லாஹ்வின் தூதர் தனி தனி ஜாமஅத்தாக தொழுக அனுமதித்திருகிறார்களா ? தொழுதிருகிறார்களா? காண்பிக்க முடியுமா ?

உங்கள் செயல்களே காண்பிக்கிறது இது ஒரே தொழுகைதான் என்று..


அதிகம் தொழுதால் நன்மை தானே - குற்றமா என்று கேட்கிறார்கள்

நல்ல எண்ணத்தில் தான் இப்படி கேட்கிறார்கள் .. ஆனால் நாம் இதே அளவுகோளை மற்ற சுன்னத்தான விசயங்களுக்கு வைக்கமாட்டோம்.

உதாரணமாக மக்ரிப் பின் சுன்னத் இரண்டு தொழுவது நபிவழி .. நான் சொல்கிறேன் நாளையில் இருந்து மக்ரிப் பின் சுன்னத் ஆறு ரகாயத் தொழப்போகிறேன் ...இது முறையா ? 

பிறகு அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறோம் நாம் ..!! சிந்திக்க வேண்டும் சகோதரர்களே ..

உலகத்திற்கு வழிகாட்டியான நபி(ஸல்) அவர்களின் அழகிய செயல்களே நமக்கு சிறந்த முன்மாதிரியாகும் ..
உலகத்திற்கு அருட்கொடை அல்லவா அவர்கள் !! 
நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தாலும் அவர்களை விட சிறந்த செயலை செய்ய முடியாது.. 

ஒரு முஸ்லிமிற்கு அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையே சிறந்தது .. அவர்களை விட நாம் அல்லாஹ்வை அதிகம் நேசிக்கிறோமா என்ன ...

இல்லை நாங்கள் எங்களின் விருப்படித்தான் ,வழக்கப்படி தான் தொழுவோம் என்று நீங்கள் கூறமுற்பட்டால்... எங்களிடம் பதிலில்லை..

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.                               (அல்குர்ஆன் 5:3)

அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததை புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். 
                                                          அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) 
                                                          ஆதாரம்: புகாரி 2697

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்   
Related Posts Plugin for WordPress, Blogger...