(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, April 22, 2011

ஜோதிடம் மோசடி என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 ஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் நம்பாதீர்கள் இது முழுக்க முழுக்க அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்டது மற்றும் இது விபரமரியாத மனிதர்களை ஏமாற்றும் குருட்டு வித்தையாகும்.

உதாரணமாக உங்கள் அன்பு மகனுக்கோ அல்லது மகளுக்கு திருமணம் செய்ய நாடுவீர்கள் ஆனால் இந்த ஜோதிடர்கள் செவ்வாய்தோஷம் என்று கூறி அந்த இளம் ஆண், பெண்ணின் திருமணத்தை தடை செய்வார்கள் இதனால் பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி ஆணும், பெண்ணும் 35 வயது வரை இல்லற சுகத்திற்கு ஏங்கி அறை கிழட்டு பருவத்தை அடைந்த பிறகு திருமணம் செய்து குழந்தை பேறு இல்லாதவர்களாகவும், வயது முதிர்ந்த நிலையில் தங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு கணவன், மனைவி பொருத்தம் அமையாமலும் காணப்பட்டு வாழ்க்கை முழுவதும் அலங்கோளமாக காணப்படுவார்கள். மேலும் 35 வயதில் தகப்பனை இழந்தும், தாயை இழந்தும் அநாதைகளாக திருமணம் செய்துக்கொள்பவர்கள் எத்தனை பேர் சிந்தியுங்கள் ஏன் இந்த அவலம்.

சிந்தித்துப்பாருங்கள் உலகத்தில் இன்று சுமார் 600 கோடி மக்களுக்கும் மேல் வசிக்கிறார்கள் இவர்கள் அனைவருக்கும் செவ்வாய் தோஷம், பீடை என்று இருந்திருந்தால் யாருக்கேனும் திருமணம் நடைபெறுமா? இந்த அவல நம்பிக்கை முழுக்க முழுக்க தமிழ் பேசக்கூடிய நம் தமிழர்களின் மத்தியில்தான் உள்ளது மாறாக அமெரிக்கர்கள், ஆப்ரிக்கர்கள், ஜப்பானியர்கள், இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் என்று யாருக்கும் இந்த தோஷம் பயம் ஏற்படுவதில்லை காரணம் உலகில் உள்ள 600 கோடி மக்களில் ஜோதிடத்தை நம்புபவர்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் ஜோதிடத்தையும், ஜாதகத்தையும் நம்புவதில்லை அதை அனுமதிப்பதும் கிடையாது.

குறி சொல்லும் ஜோதிடன் உங்களிடம் அற்ப காசுகளுக்காகத்தான் குறி கூறுகிறானே தவிர அவனுக்கு கோடி ரூபாய் பணம் இருந்தால் குறி சொல்வதை கேவலமாக எண்ணி பார்க், பீச் என்று ஜாலியாக அலைந்து திரிவான். எனவே இந்த ஜோதிடமும், ஜோதிடனும், ஜாதகமும் பொய் என்பதை உணருங்கள். இதோ சிந்திப்பவர்களுக்கு இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

ஜோதிடம் பொய்யானது! 
ஜோதிடம் என்பதற்கு வான மண்டலத்திலுள்ள (GALAXY)  நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்பது பொருளாம்! எந்த நட்சத்திரமாவது மனிதனிடம் பேசுமா எனவே ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க பொய். எந்த நட்சத்திரமாவது குறி சொல்கிறதா? பேசுகிறதா? இது முட்டாள்தனம் இல்லையா? எடுத்த எடுப்பிலேயே ஜோதிடம் என்ற பெயர் பெய்யாக இருக்கிறது சரி பார்ப்போம் இதில் என்ன உள்ளது என்பதை!

ஜோதிடன் என்பவன் பொய்யன்!
நட்சத்திரங்களின் மொழியை அறிந்தவன் ஜோதிடனாம் இது கொஞ்சம் ஓவரா இல்லையா? ஒரு தமிழ் பேசக்கூடியவனிடம் சென்று எதுகை, மோனை பற்றி கேட்டால் திக்குமுக்காடுகிறான் தமிழே தடுமாற்றமாக உள்ள நிலையில் ஜோதிடனுக்கு நட்சத்திர மொழி தெரியுமாம். வடமாநில மொழியான ஹிந்தி படிக்க தமிழனுக்கு தெரியல வானமண்டல மொழி தெரியுதாம்!

நட்சத்திரம் குறி கூறுகிறதாம்!
நட்சத்திரம் நேரத்தை கூறுகிறதாம் அது வானமண்டலத்தில் உள்ள 9 கோள்களின் மூலமாக விதியை ஆராய்ச்சி செய்து இது இப்படி! அது அப்படி என்று கூறுகிறதாம். எந்த நட்சத்திரமாவது பேசுமா அப்படி பேசுவதாக இருந்தால் இதோ நாம் டேப்ரிக்கார்டர் தருகிறோம் அதன் பேச்சை பதிவு செய்து தாங்க நாமும் கேட்டு ரசிக்கிறோம்!

கோள்களின் பெயரால் மோசடி

வான் மண்டலத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் இருக்கிறதாம் இந்த கோள்கள்தான் நேரத்தை நிர்ணயிக்கிறதாம். ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில் ராகு, கேது என்பது கண்ணிற்கு தெரியாத கோள்களாம் மற்ற 7 கோள்கள்தான் கண்களுக்கு புலப்படுமாம். (ராகு, கேது ஆகிய இரு கோள்கள் நிழல் உலக தாதாத்கள் போன்று நிழல் கோள்களாம் இவைகள்தான் கெட்ட நேரத்துக்கு காரணமாம்) 

இந்த ஒன்பது கோள்களுக்கு அருகில் அஸ்வினி, கார்த்திகை, ஆயில்யம், சித்திரை என்று 27 நட்சத்திரங்கள் இருக்கிறதாம் இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றவாம். சூரியனை சுற்றி கோள்கள் வருகிறதா? இல்லை இந்த 27 நட்சத்திரங்களை சுற்றி கோள்கள் வருகிறதா? தலையே கிர்ர்ர்ருன்னு சுற்றுகிறது!

எல்லா கோள்களும் ஒரே வேகத்தில் வருவதில்யாம் ஒவ்வொரு கோளும் வேகத்தில் மாறுவிடுகின்றனவாம்.

சரி! கோள்கள் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது.
பூமி (Earth), சந்திரன் (Moon), புதன் (Mercury), வெள்ளி(Venus), செவ்வாய் (Mars) ,வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune) முதலான கோள்கள் சூரியன் (Sun), சுற்றி வருகிறது.

ஜோதிடர்கள் கூறும் கோள்களின் வேக கணிப்பு பொய்

கோள்கள் பெயர்ஜோதிடர்களின் கோள் கணிப்புநாசா விஞ்ஞானிகளின்
கோள் கணிப்பு
சூரியன்
12 மாதம்
சுழலும் காலம்  30 நாட்கள்
ஈர்ப்பு வேகம் 273 m/s/s
வெளியேறும் வேகம் 620 km/sec.
சந்திரன்
30 நாள்
சுழலும் காலம்  27.32 நாட்கள்
ஈர்ப்பு வேகம் 1.6 m/s/s
வெளியேறும் வேகம் 2.38 km/sec
செவ்வாய்
ஆண்டுகள்
சுழலும் காலம் 24.62 மணிகள்
ஈர்ப்பு வேகம் 3.7 m/s/s
வெளியேறும் வேகம்  5.01 km/sec.
ராகு &  கேது
18 ஆண்டுகள்,
இப்படி 2 கோள்கள் இல்லை
சனி
30 ஆண்டுகள
சுழலும் காலம் 10.53 மணிகள்
ஈர்ப்பு வேகம் 9.1 m/s/s
வெளியேறும் வேகம்  35.60 km/sec.

ஜோதிடர்களின் இந்த கோள்களின் வேக கணிப்பை விஞ்ஞானிகளின் வேக கணிப்புடன் இணைத்துப்பார்த்தால் நமக்கு தலை சுற்றல்தான் வருகிறது. இந்த அளவுக்குமா ஜோதிடர்கள் புரளியை கிழப்புவார்கள்.

சனி கிரகத்தை கிண்டல் செய்யும் ஜோதிடர்கள்!
ஒன்பது கிரகங்களில (அதாவது 2 பொய் கிரகங்களும் சேர்த்து) சந்திரன் என்ற கிரகம்தாம் வேகமாக சுற்றுகிறதாம்.  சனி கிரகம் மெதுவாக சுற்றுகிறதாம். எனவே சனி கிரகத்தை மந்தன் என்று கூறுகிறார்கள்.

சனி கிரகம் பற்றிய நொண்டி கதையை கேளுங்கள்
சனி என்பவர் ஒரு கிரகமாம் அவருக்கு ஒருகால் நொண்டியாம். ஆகவேதான் இந்த சனி கிரகம் மட்டும் சூரிய குடும்பத்தில் நொண்டி நொண்டி மெதுவாக சுற்றிவருவாராம். அந்த நொண்டி கதையை படித்துப்பார்ப்போமா!

இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினானாம்  அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றாம்  ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்து விட்டானாம்.

ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்குமாம் அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாதாம். இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டானாம். தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனராம்  

ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினராம் அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, “உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டாராம்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டாராம். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகுமாம். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டாராம், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தனவாம்.


இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தானாம், சனி 12ம் இடத்தில் காணப்பட்டாராம்

தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டானாம் உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டானாம் இது தான் சனிபகவான் நொண்டியான கதையாம். ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறாராம்.

நொண்டி கதையை சிந்தித்துப்பாருங்கள்
நாம் இந்த ஜோதிடப் பிரியர்களிடம் கேட்பது என்னவென்றால் இந்த சனி பகவானுக்கு ஜாதகம் கணிக்க யாரும் இல்லையா? தன் கால் நொண்டியாகும் என்ற செய்தியை சனி பகவானால் முன்கூட்டியே கணித்து அறியவோ அதற்கான பரிகாரம் செய்யவோ இயலவில்லை அப்படியிருக்க இந்த சனி பகவான் எப்படி மற்றவர்களுக்கு குறி சொல்ல பயன்படுவார்.

இந்த நொண்டிக்கதைகளை வைத்துக்கொண்டு மனிதர்களை ஏமாற்றுகிறார்கள் இந்த ஜோதிட வித்துவான்கள் அதாவது காசுக்காக தங்களடைய கடவுளையை நொண்டியாக்கி அதன் மூலம் குளிர்காய்கிறார்கள். தாங்கள் வணங்கும் கடவுளை நொண்டியாக்கும் இந்த அவலநிலை இந்த தமிழர்களுக்கு தேவையா?

ஜாதகத்தை  கணிக்கும் முறையில் தவறுகள்
  1. கிருதயுகம்.
  2. திரேதாயுகம்
  3. துவாபரயுகம்
  4. கலியுகம்.

வாண்மண்டலம் இந்த நான்கு யுகங்களையும் கொண்டதாம் இதற்கு  ஒரு சதுர்யுகம் என்று பெயராம். இந்த சதுர்யுகத்தில் முதல் 3-யுகங்கள் முடிந்துவிட்டதாம் இப்போது நடை முறையில் இருக்கும் யுகம் கலியுகமாம். 

  • ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகளாம்
  • கலியுகத்தில் 5094 ஆண்டுகள் முடிந்துவிட்டனவாம்

ஆனால் விஞ்ஞானிகளின் துள்ளியமான கணிப்பு படி இந்த வாண் மண்டலம் காஸ்மோலாஜிகள் டைம் (cosmological time) பிரகாரம் 13.73 பில்லியன் வருடங்கள் முடிந்துவிட்டதாம்.

ஒரு பில்லியன் என்பது 100 கோடிகள் இப்போது 13.73 பில்லியன் என்பதை இந்திய முறைப்படி கணித்தால் 13,73,00,00,000க்கு மேல் செல்கிறது. அதாவது

விஞ்ஞான கணிப்பு
13,73,00,00,000
ஜோதிடர்களின் கணிப்பு
43,20,000
வித்தியாசம்
13,72,56,80,000


ஜோதிடர்களால் ஒழுங்காக பிரபஞ்சத்தின் வயதை கூட அறிய முடியவில்லை கணித பாடத்தையே தப்பாக போட்டு வைத்துள்ளார்கள் அப்படியிருக்க ஜாதகம் எப்படி துள்ளியமாக அமையும். (பிரபஞ்சத்தின் வயதை அல்லாஹ் மட்டுமே துள்ளியமாக அறிவான் காரணம் அவன் பிரபஞ்சத்தை முன்மாதிரியின்றி படைத்தவன்)

சிந்திக்க சில அருள்மறை குர்ஆன் வசனங்கள்

துன்பம் ஏற்படுத்துவதும் அல்லாஹ்வின் அதிகாரம்
 எத்துன்பமும் அல்லாஹ்வுடைய கட்டளை கொண்டே தவிர உண்டாகுவதில்லை.(அல் குர்ஆன் 64:11)

அல்லாஹ்விடம் துன்பம் பற்றிய பதிவேடு உள்ளது
 எத்துன்பத்தையும் (உலகில்) நாம் உண்டாக்குவதற்கு முன்னதாகவே (லவ்ஹ{ல் மஹ்பூல் என்னும் ) பதிவேட்டீல் (பதியப்பட்டு) இருந்தே தவிர பூமியிலும் உங்களிலும் எத்துன்பமும் ஏற்படுவதில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு (மிக) இலேசானதாகும்.(அல் குர்ஆன் 57~22)

அல்லாஹ்வைத் தவிர யாரக்கும் மறைஞானம் கிடையாது
மறைவானவற்றின் திறவுகோள் அல்லாஹ்விடமே உள்ளன. அவற்றை அவனைத்தவிர (வேறு எவரும்) அறியமாட்டார்கள். இன்னும் கரையிலும், கடலிலும் உள்ளவற்றையும் அவன் அறிவான். ஓர் இலை உதிர்வதைக் கூட அவன் அறியாமல் (அவன் கட்டளையின்றி) அது உதிர்வதில்லை.பூமியின் இருள்களுள்ள எந்த விதையும் எந்தப் பசுமையானதும் எந்தக் காய்ந்ததும் அவனுடைய தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை. (அல் குர்ஆன் 6:59)
மறைவான ஞானம் இறைத்தூதர்களுக்கும் கிடையாது
 (நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ் எங்களுக்கு எதை விதித்துள்ளானோ அதைத்தவிர (வேறொன்றும் எங்களுக்கு உறுதியாக ஏற்படாது. அவன் (தான்) எங்களின் பாதுகாவலன். அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் முழுநம்பிக்கை வைக்கவும்.(அல் குர்ஆன் 9:51)
 அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)

சலாத்தின் மூலம் இஸ்லாமிய தாவா - சகோதரர் இத்ரீஸ் தவ்பிக்

              
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன் முழுவதையும் படித்த பிறகு சிலர் கவரப்படுவார்கள், சிலரோ குர்ஆனின் சில வசனங்களை கேட்டதாலேயே ஈர்க்கப்பட்டிருப்பார்கள், வேறு சிலரோ முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் நான் பார்த்த நபர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்.


இவர் இஸ்லாத்தை தழுவி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இந்த கால இடைவெளியில் இவர் நம் உம்மத்திற்கு செய்துள்ள பணிகள் அளப்பரியவை. தாவாஹ் பணியில் சிறந்து விளங்கும் இவர், இன்றைய முஸ்லிம் தலைமுறையினருக்கு மிகப்பெரும் ஊக்கமாய் திகழ்கின்றார்.

நான் மேலே கூறியவற்றிற்கு சொந்தக்காரர் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் (Idris Towfiq) அவர்கள். கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றிய இவர், தான் இஸ்லாமை தழுவியது குறித்து கூறிய கருத்துக்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது...இன்ஷா அல்லாஹ்....



"ஆன்மிகத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க விரும்பினேன். பாதிரியாராக வர வேண்டுமென்ற என்னுடைய ஆசையை பிஷப்பிடம் வெளிப்படுத்தினேன்.

ரோமில் என்னுடைய பயிற்சியை முடித்து விட்டு கத்தோலிக்க பாதிரியாராக பிரிட்டனில் பணியாற்ற துவங்கினேன். ஒரு பாதிரியாராக சிறப்பான நாட்கள் அவை. நல்ல மனிதர்களோடு பணியாற்றி கொண்டிருந்தேன்.

என்னை பார்த்து சிலர் ஆச்சர்யத்துடன் கூறுவார்கள் 'சகோதரர் இத்ரீஸ், உங்கள் வாழ்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். திடீரென வேறொரு பாதையில் திசை திரும்பிவிட்டீர்கள். என்னவொரு மாற்றம்!!!'

நான் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்கின்றேன். அவர்கள் எண்ணுவது போல நான் இரு வேறு பாதையில் இருந்ததில்லை. நேரான வழியில் இருந்ததாகவே நினைக்கின்றேன்.

செயின்ட் தாமஸ் அக்கொய்னஸ், பைபிள், சர்ச்சுகளின் வரலாறு ஆகியவற்றை பற்றி அன்று ரோமில் படித்து கொண்டிருந்தது, இன்று உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுவதற்குதான் என்று நினைக்கின்றேன்.

பாதிரியாராக வர எனக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. இன்று, இங்கே, உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுபதற்கு பயிற்சியளிக்கப்பட்டதாகவே எண்ணுகின்றேன். 

சரி, ஏன் பாதிரியார் பணியை துறந்தேன்? சர்ச்சுகளுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ஒரு கத்தோலிக்க கிருத்துவனாக மகிழ்ச்சியாகவே இருந்தேன். என்னுடைய மதத்தை விட்டு விலகும் எந்தவொரு எண்ணமும் எனக்கு தோன்றியதில்லை.

தான் நாடுவோருக்கு வெவ்வேறு வழிகளில் நேர்வழி காட்டுகின்றான் இறைவன். உளவியல் ரீதியாக என்னை பாதிக்கப்பட செய்து நேர்வழி காட்டினான் அவன்.

நீங்கள் அறிந்திருக்கலாம், ஒரு கத்தோலிக்க பாதிரியார் மணம் முடித்து கொள்ள முடியாது. நான் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். கத்தோலிக்க சர்ச்சின் ஒரு அங்கமாக தொடரும் அதே வேலையில், பாதிரியார் பணியிலிருந்து விலகுவதென முடிவெடுத்தேன். மிக கடினமான முடிவு இது. என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்னுடைய முடிவு. இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் எனக்கு புத்துணர்ச்சி தேவை. சுற்றுலா செல்வதென முடிவெடுத்தேன். என்னிடம் அப்போது அதிக பணமும் இல்லை. குறைந்த செலவில் எந்த இடம் விடுமுறைக்கு ஏற்றதென்று இன்டர்நெட்டில் தேடினேன். நான் கண்டு கொண்ட இடம் எகிப்து.

மணல், ஒட்டகங்கள், பிரமிடுகள் என்று இவை தவிர்த்து எகிப்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது....

ஆ...இன்னொரு பிரச்சனையும் இருக்கின்றது....முஸ்லிம்கள்.....

நான் இதுவரை ஒரு முஸ்லிமை கூட என் வாழ்வில் சந்தித்ததில்லை. டி.வி.க்கள் என்ன சொல்கின்றனவோ அதுதான் நான் முஸ்லிம்களை பற்றி அறிந்திருந்தது. எகிப்திற்கு நான் செல்லும் பயணம் அபாயம் நிறைந்ததாக இருக்கலாம்.

என்னிடம் அப்போது பணமும் இல்லை...வேறு வழியும் இல்லை. எகிப்திற்கு செல்லுவதென முடிவெடுத்தேன்.

எகிப்தில் தங்கிருந்த அந்த ஒரு வாரம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. என் வாழ்வில் முதல் முறையாக இஸ்லாமை சந்தித்தேன்.

நான் முதன் முதலாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டது, இஸ்லாமை பற்றிய ஒரு புத்தகத்தாலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியாலோ அல்லது ஒரு முஸ்லிம் அறிஞராலோ அல்ல. காலணிகளை துடைத்து கொண்டிருந்த அந்த சிறுவனால் தான்.
அன்று அந்த சிறுவனை கடந்து சென்று கொண்டிருந்தேன்.

'அஸ்-------ஸ--------லாமு அலைக்கும்'

அவன் என்னை நோக்கி கூறிய வார்த்தைகள் இவை.

உங்கள் மீது அமைதி நிலவுவதாக என்ற அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள்.

என் ஓட்டலுக்கு அருகில் அவனது கடை இருந்ததால் நிறைய முறை அவனை கடந்து தான் செல்லுவேன். அவனிடம் பேசுவதற்கென்று சில அரபி வார்த்தைகளை கற்று கொண்டேன்.

அவனை கடந்து செல்லும்போது 'எப்படி இருக்கின்றாய்' என்று கேட்பேன்.

அவன் 'அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனிற்கே)' என்று பதிலளிப்பான்.

ஆக, இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, அந்த சிறுவன் கூறிய "அஸ்ஸலாமு அலைக்கும்' மற்றும் 'அல்ஹம்துல்லில்லாஹ்' என்ற வார்த்தைகளால் தான்.

விடுமுறை முடிந்து என்னுடைய நாட்டிற்கு திரும்பினேன். இன்னும் எனக்கு இஸ்லாம் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். முஸ்லிம்கள் என்பவர்கள் ஊடகங்கள் கூறுவது போன்று இல்லை.

கல்வி பயிற்றுவிப்பது (Idris Tawfiq has a degree  in English language and Literature from the University of Manchester) என்னுடைய பின்னணியாக இருந்ததால் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியில் அமர்ந்தேன். குறும்புக்கார சிறுவர்களை கொண்ட பள்ளி அது. மிகவும் குறும்புக்கார மாணவர்கள்.

அந்த சிறுவர்களில் அரபு மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். என்னுடைய பணி, உலகின் ஆறு முக்கிய மதங்களான புத்தம், இந்து மதம், சீக்கியம், கிருத்துவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் குறித்து பாடம் எடுப்பது. கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவன் நான். யூத மதத்தை பற்றியும் போதுமான அளவு அறிவு பெற்றிருந்தவன். மற்ற மதங்கள் குறித்து ஒன்றும் தெரியாது.

இஸ்லாம் குறித்து இந்த மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடமெடுக்க வேண்டுமென்றால் அந்த மார்க்கம் குறித்து நான் அறிந்திருக்கவேண்டும். ஆகையால், இஸ்லாம் குறித்து படிக்க ஆரம்பித்தேன்.

நிறைய படித்தேன். படித்த தகவல்களை விரும்ப ஆரம்பித்தேன்.

மூன்று, நான்கு மாதங்கள் சென்றிருக்கும்.....நாயகம் (ஸல்) அவர்களது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் தடுமாற்றத்தை உணர்வேன். அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் ஏதாவது செய்து சுதாரித்து கொள்வேன்.

ரமலான் மாதம் வந்தது....

இந்த சிறுவர்கள் என்னிடம் வந்தார்கள், 'சார், நாங்கள் தொழ வேண்டும். உங்கள் அறையில் தான் தரைவிரிப்பும் (Carpet), வாஷ்பேசினும் (Wash basin) உள்ளது. உங்கள் அறையில் நாங்கள் தொழலாமா?'

அனுமதித்தேன்.....

சிறுவர்கள் தொழுவதை பின்னால் உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் தக்பீர் கட்டுவது, ருக்கூ(1) செய்வது என இவை என்னை வசீகரித்தது. அவர்களிடம் கூறாமல், இந்த சிறுவர்கள் தொழுகையில் என்னென்ன உச்சரிகின்றார்கள், அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பது போன்றவற்றை இன்டர்நெட்டில் தேடி அறிந்து கொண்டேன்.

ரமலான் முடிவில், இந்த சிறுவர்கள் மூலமாக எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன்.

அது போல, ரமலான் மாத ஆரம்பத்திலேயே இந்த சிறுவர்களிடம் கூறியிருந்தேன், உங்களுடன் சேர்ந்து நானும் நோன்பு நோற்பேனென்று. அல்லாஹ்விற்காக அல்ல, இந்த சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக...

ஆக, ராமலான் மாத முடிவில், எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன், நோன்பும் நோற்றிருந்தேன்.

மேலும் மாதங்கள் உருண்டோடின. முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர்கள் இனிமையானவர்கள் என்பதை அறிந்திருந்தேன். முஸ்லிம்களுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது.



இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்ள லண்டன் மத்திய மசூதிக்கு செல்ல ஆரம்பித்தேன். மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்ல, நான் அறிந்து கொள்ள.

சில வாரங்களுக்கு பின்பு, யூசுப் இஸ்லாம் (பிரபல முன்னாள் பாடகரான கேட் ஸ்டீவன்ஸ்) அவர்களின் சொற்பொழிவை அந்த பள்ளிவாசலில் கேட்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அந்த உரையின் முடிவில் அவரிடம் சென்றேன்.

'நான் முஸ்லிமல்ல. அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கேட்கின்றேன், ஒருவர் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்'
அவர் கூற ஆரம்பித்தார்...

'இறைவன் ஒருவனே என்பதில் உறுதிப்பாடு கொண்டவர்கள் முஸ்லிம்கள்'

நான் கூறினேன் : 'நான் எப்போதும் ஒரு இறைவனின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்'

மேலும் அவர் சொன்னார் : 'முஸ்லிம்கள் ஐவேளை தொழுபவர்கள்'

நான் சொன்னேன் : 'உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அரபியில் எப்படி தொழ வேண்டுமென்று எனக்கு தெரியும்'
என்னை புதிராக பார்த்தார் யூசுப் இஸ்லாம். தொடர்ந்தார்...

'முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள்'
நான் சொன்னேன் :
'Actually, ரமலான் மாதம் முழுக்க நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்'

என் கண்களை நேரடியாக பார்த்த யூசுப் இஸ்லாம், ' சகோதரர், நீங்கள் ஏற்கனவே முஸ்லிம்தான். யாரை முட்டாளாக்க பார்க்கின்றீர்கள்"

பின்னால் 'அல்லாஹு அக்பர் என்று மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை கூற ஆரம்பித்தார்கள். அனைவரும் தொழுகைக்காக செல்ல ஆரம்பித்தார்கள்.

நான் மது அருந்தியவனை போல அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர் கூறிய அந்த வார்த்தைகள் என்னை துளைத்து கொண்டிருந்தன.

தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்றேன். கீழே ஆண்களும், மேலே பால்கனியில், பெண்களும் தொழுகைக்காக அணிவகுக்க ஆரம்பித்தார்கள். பின்னால், தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன். தொழுகை ஆரம்பித்தது.

மிக மிக அழகான தருணம் அது. குரானின் வசனங்கள் ஓதப்பட..........அழ ஆரம்பித்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....சிறு குழந்தையை போல அழுது கொண்டிருந்தேன்.....

உணர ஆரம்பித்தேன். இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தம் இன்று இந்த அறையில் முடிவடைந்திருக்கின்றது.

தொழுகை முடிந்ததும் நேராக யூசுப் இஸ்லாமிடம் சென்றேன்.

'சகோதரர், நான் முஸ்லிமாக வேண்டுமென்று விரும்புகின்றேன்.  என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்'

அவர் சொன்னார், 'நான் கூறுவதை திரும்ப கூறுங்கள். வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'

அவரை பின் தொடர்ந்து கூறினேன், 'வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'

அங்கிருந்த சகோதரர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அற்புதமான தருணம் அது.

முழுமையான முஸ்லிமாக வாழ்வது, முஸ்லிமல்லாதவரை இஸ்லாமை நோக்கி அழைக்கும் சிறப்பான யுக்தி என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதனால், ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ விரும்புகின்றேன்.

நான் இப்போது மிகுந்த மன அமைதியுடன் உள்ளேன். நான் பெற்ற இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் நினைத்து கூட பார்த்திராத வழியில் அல்லாஹ் என்னை வழி நடத்தி கொண்டிருக்கின்றான்.

என்னுடைய அணுகுமுறை முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களையும் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. இறைவன் நாடினால், தொடர்ந்து என்னுடைய அழைப்பு பணியை செய்து கொண்டிருப்பேன்"

சுபஹானல்லாஹ்...

இஸ்லாம் போதிக்கும் சிறு வார்த்தைகள் கூட ஒருவர் மனதில் ஊடுருவி இஸ்லாத்திற்கு நல்ல அறிமுகமாக இருப்பது ஆச்சர்யமடைய வைக்கின்றது.

முஸ்லிமல்லாதவரை நோக்கி நாம் சொல்லும் சலாம் கூட ஒரு சிறந்த அழைப்பு பணியாக இருப்பதற்கு சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களின் இஸ்லாம் நோக்கிய பயணம் ஒரு அழகிய உதாரணம்.

இஸ்லாம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் இத்ரீஸ் தவ்பிக். இவை மட்டுமல்லாது பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பை செய்து வருகின்றார்.

உலகம் முழுதும் பயணம் செய்து அழைப்பு பணியில் ஈடுபட்டு வரும் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களை தங்கள் பகுதிக்கு/பல்கலைகழகத்திற்கு சொற்பொழிவாற்ற அழைக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவருடைய தளத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம்.

சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் போன்றவர்களை தொடர்ந்து நம்மிடையே தோன்ற செய்து நம்முடைய ஈமானை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக..ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Brother Idris Towfiq's website:
1. idristawfiq.com. link

My sincere thanks to:
1. Canadian Dawah Association.

This article translated from (not a word to word translation):
1. Irish priest embraces Islam - Canadian Dawah Association website. link
2. IQRAA TV - British Catholic priest converted to Islam. link

ஜசகல்லாஹ் :ஆஷிக் அஹமத் அ
http://ethirkkural.blogspot.com/



Thursday, April 21, 2011

ரஹீம் வீட்டு சாய்பாபா சிலையில் எண்ணெய் வடிந்தது...!!!

ஆந்திர மாநில புட்டர்பத்தி சாய்பாபவை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் இந்துக்களில் பல பேர் நம்புகின்றனர். படிக்காத பாமர மக்கள் முதல் படித்த பட்டதாரி வரை,ஏழை முதல் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பணக்காரன் வரை பல பேர் இவருடைய பக்தர்களாக இருக்கிறார்கள்.


தன்னுடைய பேச்சாற்றல் மூலமாகவும்,தந்திர வித்தைகள் மூலமாகவும் பல மக்களை கவர்ந்து தன்னை ஒரு மிகப்பெரிய அவதாரமாக ஆக்கிக்கொண்டவர்தான் இந்த புட்டர்பத்தி சாய்பாபா! சமீபத்தில் தொலைகாட்சியிலும், நாளிதழ்களிலும் ஒரு பரவலான் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதுதான் சாய்பாபாவின் உடல் நிலைப் பற்றி.
சாய்பாபாவிற்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுவிட்டதாகவும், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி (ஃபேஸ் மேக்கர்) பொருத்தப்படிருப்பதாகவும், நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை மோசமாகி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

உலகத்தில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும் இதற்கு சாய்பாபா ஒன்றும் விதிவிலக்கு அல்ல.. தனக்கு ஏற்பட்ட உடல் பாதிப்பை  கூட தீர்த்து கொள்ளமுடியாமல் மரணபடுக்கையில் இருக்கும் சாய்பாபா,  இன்னமும் பல மக்களால் கடவுள் என்ற நிலையில் பார்க்கபடுகிறார் என்பது நிச்சியமாக சிந்திக்கும் மக்களுக்கு சிரிப்பை தான் வரவழைக்கும்... 

இதில் இன்னொரு காமெடி என்னவென்றால் ... சாய்பாபாவை கடவுளாக நினைக்கும் அறிவுஜீவிகள் ,தனக்கு என்ன கஷ்ட நஷ்டம் வந்தாலும் சாய்பாபாவிடம் தான் கேட்ப்பார்களாம்.. ஆனால் இப்போது சாய்பாபாவிற்கே கஷ்டம் என்பதால் யாரிடம் பொய் உதவி தேடுவது என்று  கலக்கம் அடைந்த பக்தர்கள் சுதாரித்து கொண்டு சாய்பாபாவின் உருவபடத்திற்கே பூஜை செய்து அவரிடமே பிரார்த்திக்கிரார்களாம்..!!
இது கூட வித்தியாசமா இருக்குல்ல ? ... என்ன கொடும போங்க..

இது இப்டி இருக்க நம்மாலு ஒருவர் ரஹீம் என்ற பெயர் தாங்கிய முஸ்லிம். அவருக்கு சாய்பாபா கனவில் வந்து சாய்பாபாவின் சிலையை வழிபட சொன்னாராம். அதனால் அவர் வழிபட்டுதாராம்... மிச்ச கதையை நீங்களே படித்து பாருங்க... அதை பற்றி எழுத எரிச்சலாக இருக்கு... இவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று கூறி கொள்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு  முஸ்லிம் என்றால் யார் என்றே தெரியவில்லை பாவம்... அல்லாஹ் தான் காப்பாற்றவேண்டும்.


இந்நிலையில் இன்று (24/4/11) சாய்பாபா இறைவனின் நாட்டப்படி மரணமடைந்தார். தான் 96 வயது வரை மக்களுக்கு அருள் தருவேன் என்று கூறி வந்த பாபா ,தனது 85  வயதிலையே மரணித்து போனது குறிப்பிடதக்கது. தன்னையே நோய் நொடியில் இருந்து காத்துக்கொள்ள முடியாமல் இறந்து போன பாபாவிற்காக அவரின் பக்தர்கள் அழுது புரண்டு அறியாமையின் விளிம்பிற்கே சென்று விட்டனர். இதில் அதர்ச்சியில் இருவர் இறந்து விட்டார்களாம்...!! என்ன கொடும இது.. 

வருகிற 4-ம் தேதி நாகூர் தர்கா கந்துரி விழா..


“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?”  என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.அல்குர்ஆன் 18:103, 104

களைகட்டும் மத்தி மீன் சீசன்


Saturday, April 16, 2011

நான் துபாய்ல வேலை செய்றேன்...- ஒரு உழைப்பாளியின் குரல்..!!

(ஆக்கம் ; மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)

நான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் என்ற போதிலும் பெற்றோர், மனைவி, உறவினர் என்ற உள் வட்டத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். ஒரு கடையில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்த போதிலும் மனதில் ஒரு நிறைவு இருந்தது. குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது.
இதே சூழ்நிலையில் ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கைச் சக்கரம் துபாய் மோகம் என்ற பேராசையில் சிக்கி தடம் புரண்டு விட்டது. ஆம் இந்த மோகம் எனக்குள் வந்ததல்ல, எனது தாய் வீட்டாரிடமிருந்து நற்போதனை என்ற மயக்க ஊசி மூலம் எனக்குள் ஏற்றப் பட்டது. ஊரிலிருந்து எவ்வளவு தான் உழைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் காணமுடியாது !
ஒரு இரண்டு வருடம் துபாய்க்கு போய் வந்தாலே போதும் வீடு, வாசல், நகை, பணம் என ஓரளவுக்கு சொத்து சேர்த்து விடலாம். பிறகு வேண்டுமானால் ஊரிலேயே ஏதாவதொரு கடைவைத்து பிழைத்துக் கொள்ளலாம். என்ற வசீகர திட்டத்தை கூறிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது குடும்பத்தார் கூறிய திட்டமெல்லாம் உண்மையிலேயே நடந்து விட்டதை போன்ற உணர்வே எனக்குள் ஏற்பட்டது.
 
அப்போதே துபாய் மோகம் என்னும் நெருப்பு எனக்குள் கொழுந்து விட்டு எரிந்தது. திருமணம் முடிந்து இரண்டு மாதம் தானே ஆகிறது புது மனைவியை விட்டு பிரிவது நியாயமா? என்ற கேள்விக்கெல்லாம் கூட விடை கொடுக்க என் மனம் இசையவில்லை. காலம் தாமதிக்காது எனது ஊரின் முக்கியஸ்தர் ஒருவரை பார்த்து என்னை எப்படி யாவது துபாய்க்கு அனுப்பிவிடுங்கள். என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கெஞ்சிக் கூத்தாடினேன். நான் ஒன்றும் படித்த பட்டதாரியல்லவே, படிப்புக்கேற்ற வேலை தேட! அதனால் தான் என்ன வேலையாக இருந்தாலும் என சொல்லி இருந்தேன்.

எனது ஆர்வத்தைப் பார்த்து அந்த நல்ல மனிதர் சம்பளம் குறைவாக கிடைக்கும் விசா,டிக்கெட்க்கு 50 ஆயிரம் செலவாகும் பரவாயில்லையா எனக் கேட்டது தான் தாமதம் துபாய்க்கே போனது போல் ஒரு நம்பிக்கை எனக்குள் பிறந்தது. எவ்வளவு சம்பளமானாலும் பரவாயில்லை என்னை எப்படியும் துபாய்க்கு அனுப்பி விடுங்கள் என்ற கோரிக்கை வைப்பதில் மட்டும் கொஞ்சமும் சுரத்துக் குறையாமல் பார்த்துக் கொண்டேன். சரி பார்க்கலாம் என்ற அந்த பெரிய மனிதர் ஒரு வழியா என்னை துபாய்க்கு அனுப்பி விட்டார். நானும் பல கனவுகளுடன் துபாய் வந்து 15 ஆண்டுகள் ஓடி விட்டன.
என்னுடன் துபாய் வந்த எனது நண்பன் சுஹைல் மட்டும் சொல்லி வைத்தாற் போல இரண்டு வருடம் முடிந்ததுமே விசாவை கேன்சல் செய்து விட்டு தாயகம் போய் விட்டான். ஊரில் ஏதோ ஒரு பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக பிற நண்பர்களின் மூலம் கேள்விப்பட்ட ஞாபகமுண்டு. நான் துபாய் வந்து இரண்டு வருடம் முடியும் தருவாயில் விடு முறையில் ஊருக்கு போகலாம் என நினைத்து என் வீட்டாரிடம் அதாவது சகோதர, சகோதரிகளிடம் நான் ஊருக்கு வரப்போகிறேன் உங்களுக்கெல்லாம் என்ன வேண்டுமென கேட்டது தான் தாமதம் மிகப்பெரிய பட்டியலே வந்து சேர்ந்து விட்டது கடிதத்தின் வாயிலாக, அந்தப் பட்டியலுடன் ஒரு வேண்டுகோளும் இருந்தது தான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.
அதாவது உடனே வர வேண்டாம் துபாய் போய் இரண்டு வருஷம் தானே ஆகுது இன்னும் இரண்டு வருஷம் இருந்து உழைத்துவிட்டு கை நிறைய பணத்துடன் வந்தால் நல்லாயிருக்கும் என்ற வேண்டுகோள் தான் அது ! அந்தக் கடிதம் பார்த்ததுமே ஊருக்குப் போகும் எனது ஆசை யெல்லாம் கானல் நீராய் மாறிவிட்டது. எனது தாய், உடன் பிறந்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்த நான் என் மனைவியின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்காத குற்றவாளி யாகி விட்டேன்.
பிறகு ஒரு வழியா 4 வருஷம் முடிந்து ஊருக்கு பயணம் மேற்கொண்டேன் விடுமுறையில் தான் ! அதற்கு முன்பே கடைசி இரண்டு வாரங்களும் யார் யாருக்கு என்னென்ன வாங்க வேண்டுமோ? அதையெல்லாம் கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி ஆசை ஆசையாய் வாங்கினேன். தாய், சகோதரிகள், மனைவிக்கு சேலைகள் எடுத்துக் கொண்டேன், மற்றபடி வாசனை திரவியங்கள், தைலங்கள், சோப்புகள் என வகை வகையாக வாங்கிக் கொண்டேன். நான் எடுத்த சேலைகளில் என் மனைவிக்கு கத்திரிப் பூ கலரில் ஒரு சேலையும் என் சகோதரிக்கு ஆரஞ்சுக் கலரில் ஒரு சேலையும் ரொம்ப ஆசைப்பட்டு எடுத்தேன்.

ஒரு வழியா வாங்கிய பொருட்களையெல்லாம் லக்கேஜாக கட்டி விட்டு நான்கு வருடம் கழித்து பெற்றோரை, உடன்பிறப்புகளை, மனைவியை காணப் போகிறோம் என்ற வெறித்தனமான ஆசையில் நான் அணிந்த ஃபேண்டில் பெல்ட் போட மறந்து விட்டேன். ஏர் போர்ட்டில் வந்து பார்த்த பிறகு தான் அதை உணர்ந்தேன். அதுவும் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் இடத்தில் சக ஆண் பயணிகள் பெல்ட்டை கழற்றி பிளாஸ்டிக் தட்டில் வைத்த போது தான் எனது இடுப்புக்கும் கை வைத்து பெல்ட் போடாத உண்மையை கண்டு பிடித்தேன்.
அந்தளவுக்கு என் நினைவெல்லாம் என் குடும்பத்தைப் பற்றியே இருந்தது. பெல்ட் போடாததால் அடிக்கடி இடுப்பிலிருந்து கீழிறங்கிய எனது ஃபேண்ட்டை அவ்வப்போது மேல் தூக்கி விடும் போது சுகமான சுமை யாகவே இருந்தது ! விமானத்தில் அமர்ந்து விட்டேன் குறிப்பிட்ட நேரம் வந்ததும் விமானம் புறப்படப் போகும் தகவலை விமானப் பணிப்பெண் உணர்த்தினார் ஆம் இடையில் விமானம் பறக்கும் போது ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் எப்படி உயிருடன் தப்பிப்பது? என்ற செய்முறை பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.

விபத்திற்குள்ளான விமானங்களிலிருந்து பாராசூட் மூலம் உயிர் தப்பிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் கேட்டு விடாதீர் அதை கடைசி வரைக்கும் யாராலும் கண்டு பிடிக்க முடியாது! பிறகு ஏன் இந்த சடங்கு சம்பிராதயம்? எனக் கேட்கிறீர்களா? எல்லாம் பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கத்தான் !விமானம் மேலெழும்பியதும் சக பயணிகள் பாதுகாப்பான பயணத்திற்காக அவரவர் கடவுளை வேண்டினர்.
ஆனால் என் மனம் மட்டும் பறக்கும் விமான வேகத்தை விட தாயகத்தைப் பற்றிய பல சுகமான நினைவு களாய் சீறிப் பாய்ந்தன. ஊர் போனதும் மறக்காமல் நமக்கு கற்றுத் தந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் முத்துவேலை நேரில் பார்த்து சுகம் விசாரித்து விட வேண்டும். நம் வளர்ச்சியைப் பார்த்து (அதாவது என் தொப்பை வயிற்றை சொல்கிறேன்) ஆச்சர்யப்படுவார்.

காமெடி நடிகர் வடிவேலு பாஷையில் சொல்வதானால் ஆசிரியர் என்னைப் பார்த்ததும் அவனா …….. நீ? என்று கூட கேட்கலாம். பிறகு அவரது வகுப்பு மாணவர்களிடம் இவன் என் பழைய மாணவன் என நம்மை அறிமுகப்படுத்தும் போது நமக்குள் எவ்வளவு உற்சாகம் ஏற்படும் ! இன்னும் இது போன்ற பல எதிர்பார்ப்பு நினைவுகள் அசை போட ஆரம்பிக்கும் போதே விமானம் சென்னையில் தரையிறங்கி விட்டது. நான்கு மணிநேரம் போனதே தெரியவில்லை. சென்னை விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது. முறையான பரிசோதனைகள் முடிந்து எனது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.

என் கண்களின் தேடலை புரிந்து கொண்ட இளைய தம்பி அண்ணே…. எனக் குரல் கொடுத்தான் அவனைப் பார்த்ததும் தான் ஓரளவுக்கு பதற்றம் குறைந்தது. பிறகு என் தாய் மற்ற சகோதரர்கள், சகோதரிகள் என எல்லோரும் என் தலையை அன்பாக தடவிக் கொண்டே சுகம் விசாரித்தனர். இவைகளினூடே எனது இதயத்துடிப்பு மட்டும் அதிகரித்துக் கொண்டே போனது. எல்லாம் என் ஆசை நாயகியை காண வேண்டும் என்ற பரபரப்புத்தான்! என் அண்ணிக்குப் பின்னால் வெட்கத்துடன் மறைந்து கொண்டு நின்றிருந்தாள் என் அன்பு மனைவி ! அவளை அருகில் போய் பார்த்த போது அப்பப்பா …… அந்த இனிமையை வர்ணிக்க வார்த்தையில்லை என்னைப் பார்த்த அவள் சிறிய சினுங்கலுடன் சொகமா இருக்கீங்களா? எனக் கேட்ட போது எனக்குள் நான் பாட ஆரம்பித்து விட்டேன்.
ஒரு வார்த்தை பேச காத்திருந்தேன் நான்கு வருஷம் …. இந்தப் பாட்டை என் மனசுக்குள்ளேயே பாடிக் கொண்டேன். பிறகு நலம் விசாரிப்புகள் முடிந்ததும் என் குடும்பத்தார் வந்த காரில் ஏறிக் கொண்டேன். கார் ஒரே சீரான வேகத்திலேயே எனது ஊரை நோக்கி போய்க் கொண்டிருந்தது.
ஆனால் என் மனம் மட்டும் ஒரே சீராக இருக்கவில்லை ! நான் சொன்ன மாடலில் வளையல் எடுத்தாயா? இது என் தங்கையின் கேள்வி? எனக்கு என்ன வாங்கினாய்? என்ற என் அக்காவின் கேள்விக்கு பதில் சொல்ல முயன்ற போதே என் தாயார் குறுக்கிட்டு எம் மவன் பயணம் செய்து களைப்பா இருக்கான் அவனை தொந்தரவு செய்யாமல் ஓய்வெடுக்க விடுங்கள் என அரட்டியதும் தான் எனது லக்கேஜின் விசாரிப்புகள் நின்றன.
டெக்னாலஜியின் உதவியுடன் உலகமே முன்னேறிக் கொண்டிருந்தாலும் சென்னையிலிருந்து எனது ஊருக்கு 12 மணி நேரம் பயணம் செய்வதென்ற தரித்திரம் மட்டும் மாறவே இல்லை. அதிகாலை புறப்பட்ட எனது பயணம் மாலையில் தான் முடிந்தது. ஆம் எனது ஊருக்குள் வந்து விட்டேன் குறுக்கும் நெடுக்குமாக இருந்த தெருவுக்குள் வளைந்து வளைந்து கார் போனது. அந்தத் தெருவின் கடைசி வீடு என்னுடைய ஓட்டு வீடு தான். ஒரு வழியா காருக்குள் ளிருந்து வெளியில் வந்த நான் எனது வீட்டின் வாசலில் கையில் ஆரத்தி தட்டுடன் நின்ற என் மனைவியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அப்படியானால் நாம் சென்னை ஏர் போர்ட்டில் பார்த்தது? பாட்டுப் பாடியது? எல்லாமே என் மனப்பிரம்மை தான் என்பதை சில விநாடி களிலேயே உணர்ந்து கொண்டேன்.
உண்மையாகவே என் மனைவி சென்னைக்கு வரவில்லை. காரணம் நான் ஊர் வரும் போது ஆரத்தி எடுக்க ஆள் வேண்டுமாம், அதனால் தான் என் மனைவியை மட்டும் அழைத்து வரவில்லை என என் வீட்டார் சொன்னார்கள். இந்த ஆரத்தி முறையை கண்டு பிடித்தவன் மட்டும் அன்று எதிரில் கிடைத்திருந்தால் அவனை உண்டு இல்லை என ஆக்கியிருப்பேன். அவ்வளவு கோபம்.
என் மனைவியின் ஆரத்திக்குப் பிறகு வீட்டுக்குள் போய் குளித்து விட்டு புதிய ஆடையணிந்து ஹாலில் வந்து அமர்ந்தேன். என்னை நலம் விசாரிப்பதற்காக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் வந்து போயினர். இரவு ஒன்பது மணியாகி விட்டது.
இனியும் குடும்பத்தாரின் பார்சல் பிரிப்பு ஆர்வத்திற்கு தடை போட விரும்பாமல் பார்சலை பிரித்து அவரவருக்குரியதை பங்கு வைத்து கொடுத்தேன். ஒரு வழியா பாகப்பிரிவினையெல்லாம் முடிந்து இரவு உணவருந்தி விட்டு பயணக்களைப்பால் சோர்ந்து போயிருந்த என் கண்களுக்கு ஓய்வு கொடுத்தேன். நான்கு வருடம் கழித்து குடும்பத்தை பார்த்த பரவசத்தில் கண்கள் நன்றாய் உறங்கி விட்டன.
காலையில் எழுந்து குளித்து முடித்து காலை உணவை முடித்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு போனேன். அங்கே ராஜ மரியாதை கிடைத்தது. வாய்க்கு ருசியான மட்டன் பாங்கா, நெய் சோறு சாப்பாட்டை முடித்ததும் நானும் என் மனைவியும் தனியறைக்குள் போய் வாயில் வெற்றிலை மென்று கொண்டே நான்கு வருட பிரிவின் சோகத்தை வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டிருந்தோம்.
திடீரென ஒரு கூச்சல் சப்தம் வந்ததும் பதறியடித்து அறையை விட்டு வெளியே வந்தேன் சிறிதும் தாமதமின்றி என் கால் அருகில் வந்து விழுந்தன ஆரஞ்சுக் கலர் சேலை ஆமாம், நான் வெயிலில் அலைந்து என் சகோதரிக்காக ஆவலுடன் எடுத்த அதே ஆரஞ்சுக்கலர் சேலை தான் ! சேலை வந்த திசையை நோக்கினேன் வாசலில் என் சகோதரி கண்களில் கோபம் கொப்பளிக்க நின்று கொண்டு இதையும் உன் பொண்டாட்டிக்கே கொடுத்து விடு ! இந்த நாத்தம் பிடித்த சேலை எனக்கு வேண்டாம். அவள் உன்னை வசியம் பண்ணி மயக்கி விட்டாள். அதனால் தான் அவளுக்கு விலை உயர்ந்த சேலையும் எனக்கு விலை குறைந்த சேலையுமாய் எடுத்திருக்கிறாய்.
சமீப காலமாக உனது நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரிகிறது போன மாசம் ஊர் வந்த நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் உம் பொண்டாட்டிக்கு கேமரா வைத்த மொபைல் போன் வாங்கி கொடுத்து விட்டியாமே, எல்லாம் எங்களுக்கு தெரியா தென்றா நினைத்து விட்டாய்? திடீரென பொண்டாட்டி மோகம் வந்து விட்டதோ? இதெல்லாம் நீயாக செய்ய வில்லை எல்லாம் அவள் செய்துள்ள மருந்து மாயம் தான். எத்தினி நாளைக்கு இந்த மோகம்? நானும் பார்த்திர்ரேன் என மூச்சு விடாமல் பத்ரகாளி ஆட்டம் ஆடி விட்டு வெடுக்கென போகிறாள்.

அவள் போன திசையை பார்த்தேன் நல்லவேளை தெரு வெறிச்சோடி கிடந்தது. தெருவில் என் சகோதரி மட்டுமா போகிறாள் கூடவே எனது சந்தோஷத்தை யுமல்லவா பிடுங்கிப் போகிறாள். அவள் தூக்கியெறிந்தது சேலையை மட்டுமல்ல, அதில் இருந்த எனது உழைப்பின் வியர்வையையும் தான் !

பாவம் என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை சகோதரிக்கு எடுத்த சேலையை விட 10 திர்ஹம் விலை குறைவென்பது எனக்கும் அந்த ஆண்டவ னுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். பிறகு ஏன் இந்த கலவரம்? விலை குறைவான எனது மனைவியின் சேலை கலரும், டிசைனும் ஏதோ விலையுயர்ந்த ரகம் போல் காட்டி விட்டது ! அதனால் வந்த வினை தானோ? இது. எந்தவொரு விஷயத்தையும் வெளித்தோற்றத்தை மட்டுமே வைத்து எடை போடும் நாசகார சிந்தனை இன்னுமா மனிதர்களுக்குள் இருக்கிறது? நல்லதுக்கே காலமே கிடையாது என்பதை சாதாரண இந்த சேலை விவகாரத்திலேயே புரிஞ்சிகிட்டேன்.
சரி ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம், என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை மற்றவர்களுக்கு எடுத்ததை விட அதிகமாகவே இருக்கட்டுமே, இதில் என்ன குற்றம் உள்ளது? என்னை நம்பி வந்த அவளுக்கு நானே உரிமையாகிவிட்ட பிறகு எனது பணமும், பொருளும் உரிமையாகதா? அவள் என்ன விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமையா? இன்னும் சொல்லப்போனால் என் மனைவிக்கு நான் தானே அடிமை ! அவள் என்னைத்தானே விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள். ஆம் வரதட்சிணை எனும் லட்சங்களையும், மோட்டார் பைக், தங்கச் செயின் உள்ளிட்ட சீர் பொருட் களையும் விலையாக கொடுத்து தானே என்னை மாப்பிள்ள யாக ஏற்றுக் கொண்டாள்.
லட்சங்களை வாரி கொடுத்தபோது என் வீட்டாரால் மதிக்கப்பட்ட என் மனைவி இப்போது தீண்டத்தகாதவளா? ஏன் இந்த முரண்பாடு? சகோதரிகளாய் இருப்போரே கொஞ்சம் மனச்சாட்சியுடன் நடக்க கூடாதா? என சத்தம் போட்டு தெருவில் கத்த வேண்டும் போல் இருந்தது. காரணம் நான் துபாய்க்கு வந்ததே என் மனைவி யின் நகைகளை விற்றுத்தான் ! இவ்வளவு தியாகத்தையும் செய்துள்ள என் மனைவிக்கென்று இந்த நான்கு வருடத்தில் பெரிதாக எதுவுமே செய்திடவில்லை எனக்குத் தெரிந்த வரைக்கும் என் சகோதரி சொன்னது போல் நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் கொடுத்து விட்டது மற்றபடி எதுவுமே கொடுத்துவிடவில்லை. ஏன் எனக்கு எதுவும் தரவில்லை என்றோ, எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என என்றைக்குமே என்னிடம் வாக்குவாதம் செய்யாத என் மனைவியை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்ததை தான் என்னால் ஜீரணிக்கவே முடியல.
நான்கு வருடங்கள் கொதிக்கும் பாலைவன மணலில் கல்லையும், மண்ணையும் சுமந்து காய்த்துப் போன கைகளுடன் திட்டு திட்டான பித்த வெடிப்பு கால்களுடன் ஒரு இரண்டு மாதம் ஊருக்குப் போய் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என வந்துள்ள எனக்கு சந்தோஷத்தை தராவிட்டாலும் பரவாயில்லை இருக்கும் நிம்மதியையாவது பிடுங்காமல் இருந்திருக்கலாமே? என நினைத்து அழுதே விட்டேன் பாலைவன நெருப்புக் காற்றில் கஷ்டப்பட்ட போது கூட நான் அழுததில்லை !

ஆனால் இப்போ அழுகிறேன். எந்த குடும்பத்தின் சந்தோஷத்திற் காகவும், வசதிக்காகவும் என் உணர்ச்சிகளை சாகடித்து விட்டு இளம் மனைவியை தனிமையில் தவிக்க விட்டுட்டு துபாய் வந்து உழைத்து ஓடாய் தேய்ந்து ஒரு வேளை உணவு மறுவேளை உண்ணா நோன்பென்று செலவை சிக்கனப்படுத்தி பணம் சேர்த்து கொடுத்தேனோ? இப்போ அதே குடும்பம் தான் எனக்கெதிராக உள்ளது ! உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வேதனையுடன் நின்றிருந்த எனது தோளில் ஆறுதலாக கை வைத்து அமரவைத்தாள் என் மனைவி. தேவையில்லாமல் என்னால் உங்கள் குடும்பத் திற்குள் சண்டை வேணாங்க,
எனக்கு தந்த கத்திரிப்பூ கலர் சேலையையும் உங்கள் சகோதரிக்கே கொடுத்திடுங்க உங்கள் உண்மையான அன்பு மட்டுமே போதும்ங்க என்ற எனது மனைவியின் முகத்தை பார்த்தேன் அதில் என் மீதான கரிசனம் மட்டுமே தெரிந்தது. ஒரு சேலை கலவரத்தால் அன்றைய சுகமான பகல் உறக்கத்தை தொலைத்து விட்டேன்.

மாலையில் முகம் அலம்பி மனைவி கையால் தேநீர் அருந்தி விட்டு மீண்டும் என் வீட்டிற்கு போனேன். வாசலில் அமர்ந்து பக்கத்து வீட்டு பாட்டிம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த எனது தாயார் என்னைக் கண்டதும் சந்தோஷ மாக வா தம்பீ சாப்பிட்டியா? முகமெல்லாம் வாட்டமா யிருக்கு ஏன் பகலில் தூங்கலியா? என அதிக அக்கறையுடன் கேட்டதை வைத்தே பகலில் சகோதரி வந்து ஆடிய ஆட்டம் நம் தாய்க்கு தெரிந்திருக்கவில்லை என்று யூகித்துக் கொண்டேன்.
பிறகு வீட்டிற்குள் போன என்னை அம்மாவைத் தவிர யாருமே கண்டு கொள்ளவில்லை. இப்படியே இரண்டு மாதங்களும் உருண்டோடி விட்டன. மீண்டும் எனது துபாய் பயணத்திற்கான நாளும் வந்து விட்டது. பயணம் புறப்படுவதற்கு முதல் நாள் இரவில் கனத்த இதயத்துடன் தேம்பி, தேம்பி அழுத என் மனைவியின் அழுகையை என்னால் நிறுத்த முடியலை. நீங்கள் ஏன் துபாய் போகிறீர்கள்? பேசாமல் இங்கேயே ஏதாவது வியாபாரமோ, அல்லது கடையிலோ வேலை பாருங்கள். குறைந்த வருமானமாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் துபாயி லிருந்து தரும் மாசக் காசு 1500 ரூபாயை இங்கிருந்து தர முடியாதா?

உங்கள் கை, கால்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாக வருதுங்க இனிமேலும் பாலை வனத்தில் கஷ்டப்படாதீங்கமா ப்ளீஸ் ! என்று எனது கைகளை பிடித்து கெஞ்சிய போது ஏறத்தாழ ஒரு குழந்தையை போலவே மாறியிருந்தாள் எனது மனைவி. கவலைப்படாதே, இன்னும் இரண்டே வருஷம் தான் ! ஓரளவுக்கு சம்பாதித்து விட்டு கேன்சலில் ஊர் வந்து விடுகிறேன். பிறகு நாம் நினைத்தது போல் இங்கேயே ஏதாவதொரு வியாபாரம் செய்து கொண்டு காலத்தை ஓட்டிடலாம் என நான் கொஞ்சம் நம்பிக்கையுடன் கூறிய பிறகு தான் என் மனைவி சமாதானமடைந்தாள்.
பின்னர் பொழுது விடிந்து பயணத்திற்கான ஆயத்தங்கள் வெகு ஜோராக நடந்தன. குடும்பத்தார் அனைவரின் வீட்டிற்கும் நேரில் போய் பயணம் சொன்னேன் ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் சக்திகேற்ப 51, 101 என வெற்றிலையும் பணமும் தந்தனர். தொலை தூர பயணம் செல்லும் போது வெற்றிலை பணம் கொடுக்கும் கலாச்சாரத்தைக் கண்டு பிடித்தவர் 501, 1001 என நிர்ணயம் செய்திருக்க கூடாதா? என்று என் உள் மனம் கேட்டுக் கொண்டது ! ஒரு வழியா குடும்பத்தார் எல்லோரிடமும் பயணம் சொல்லிவிட்டு நண்பகல் ஒரு மணிக்கு வீடு வந்தேன்.
மனைவி பகல் உணவை எடுத்து வைத்து பரிமாறினாள் எனக்கோ வயிற்றுப்பசி அறவே இல்லாததால் சாப்பாட்டின் மீது ஆர்வமின்றி இருந்தேன். அப்போது எனக்கிருந்ததெல்லாம் நம் மனைவியை விட்டு இன்னும் இரண்டு வருஷம் பிரியப் போகிறோமே என்ற கவலை தான் என்னை அணுஅணுவாய் சாகடித்தது. என் நிலையை புரிந்து கொண்ட மனைவி சட்டென சாப்பாட்டை யெல்லாம் ஒடுக்கி வைத்து விட்டு எனது மடியில் விழுந்து அழத்தொடங்கினாள்.
பயணம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கிறது என்பதை நினைத்து ஒவ்வொரு நொடியின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அழுதழுது வீங்கியிருந்த என் மனைவியின் நெற்றியில் உச்சி முகர்ந்து விட்டு அழுது வடிந்த எனது முகத்தையும் சோப்பு போட்டு கழுவி பின்னர் ஃபேண்ட், சர்ட் அணிந்தவனாய் சுண்ட வைத்து காய்ச்சித் தந்த பசும்பாலை மட்டும் சம்பிரதாயத் திற்காக குடித்தேன். வாசலில் ஆட்டோக்காரன் மெட்ராஸ் பஸ் கிளம்ப இன்னும் ½ மணி நேரமே உள்ளது சீக்கிரம் கிளம்புங்க என்று குரல் கொடுத்தான்.

எனது லக்கேஜ்கள் ஆட்டோவில் ஏற்றப்பட்டு நானும் எனது மனைவியும் ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டோம். எனது தாய் சகோதரிகள் மற்றொரு ஆட்டோவில் பின்னால் வந்து கொண்டிருந்தனர். சென்னைக்கு செல்லும் சொகுசு பஸ் நிறுத்தம் வந்ததும் முன்னதாக எல்லோரிடத்திலும் கை குலுக்கி விட்டு விடை பெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறி அமரவும் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது.
எனது பூத உடலைத்தான் பஸ் சுமந்ததே தவிர உயிரை அல்ல ! காரணம் உயிர் என் மனைவியின் நினைவோடு கலந்து விட்டது. செய்யாத கொலைக்கு ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதியின் மனநிலை எப்படியோ? அப்படித்தான் சென்னை புறப்பட்ட அன்று எனக்கும் இருந்தது. குடும்பத்தார் களெல்லாம் சிரிக்க நான் மட்டும் அழவேண்டுமா? என்ன நியாயம் இது?
பஸ் பயணம் முடிந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமான நிலைய பரிசோதனைகள் முடிந்த பின் தொலைபேசி மூலம் ஊரில் உள்ளவர்களிடம் பயணம் சொல்லி விட்டு துபாய் வந்து சேர்ந்து விட்டேன். சென்னையிலிருந்து துபாய்க்கு பறந்து கொண்டிருந்த நான்கு மணி நேரத்தில் எத்தனை எத்தனை கேள்விகளால் என்னையே நான் கேட்டுக் கொண்டேன். நான்கு வருடம் கழித்து தேவைக்கு மேல் சாமான்களும் வாங்கி கொண்டு ஊர் போய் கிடைத்த இரண்டு மாத விடுமுறையை ஜாலி பண்ணிவரலாம் என்று நினைத்து போன எனக்கு எவ்வளவு மன உளைச்சல்களை குடும்பத்தினர் தந்து விட்டனர்.

சேலை நல்லா இல்லை என்பது ஒரு பிரச்சினை, கேட்ட ஸ்பிரே வாங்கி வரலை என இன்னொரு பிரச்சினை, வளையல் டிசைன் சரியில்லை என்ற மற்றொரு குறை, தன் கணவனுக்கு கேமரா மொபைல் போன் வாங்கித் தரலையென்று அக்காவின் கோபம் என ஒவ்வொரு கோணத்திலும் நான் சந்தித்த பிரச்சினை யெல்லாம் எனக்குத் தேவையா? நான் மட்டும் உள்ளூர் உழைப்பாளியாக இருந்தாதிருந்தால் இந்த ஈனத்தனமான சண்டைகள் வந்திருக்குமா? நான் சுமந்து போன பார்சலின் மீதான பாசத்தை கூட என் மீது வைக்காத குடும்பத்தினரின் செயலை என்னவென்று சொல்வது? நான் யாருக்காக துபாய் வந்தேன்? உங்களுக்காகத்தானே, மாதம் தவறாமல் தேதி வைத்து அனுப்பிய பணமெல்லாம் உங்களின் தேவைகளுக் காகத்தானே, அனுப்பினேன்.
வாங்கிய சம்பளம் பற்றாக்குறை என தெரிந்ததும் பண்டிகைக்கு புதுத்துணியெல்லாம் நீங்கள் எடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அந்த வருடத்தின் பண்டிகைக்கு நான் மட்டும் பழைய துணியையே உடுத்தி கொண்டு கையிலிருந்த பணத்தை யெல்லாம் உங்களின் சந்தோஷத்திற்காக அனுப்பி வைத்தேனே ! இந்த தியாகத்திற்கெல்லாம் மரியாதை இல்லாமல் ஆக்கி விட்டீர்களே ! எனது குடும்பமே உங்களிடம் தான் கேட்கிறேன் ! இது போன்ற பல கேள்வி களை எனக்குள் கேட்டுக் கொண்டே வந்ததில் விமானம் துபை ஏர்போர்ட்டில் தரை இறங்கப் போவதை கூட உணர முடியாமல் போய் விட்டது. விமானப் பணிப்பெண் பெல்ட் போட சொன்ன போது தான் ஊர் சிந்தனையை உடைத்து விட்டு துபாய் வாழ்க்கைக்கு திரும்பினேன்.

பிறகு மீண்டும் ஊர் சென்றேன் இப்படியே 15 வருஷ என் துபாய் வாழ்க்கை யில் மொத்தமே ஐந்து முறை தான் ஊர் சென்றுள்ளேன். ஊரில் எனது மனைவியுடன் நான் வாழ்ந்த காலம் வெறுமனே 11 மாதம் 16 நாட்களாகும்.
15 வருஷத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே எனது மனைவியுடன் வாழ்ந்த தால் என்னவோ? இது வரைக்கும் எனக்கு குழந்தை பாக்கியமும் இல்லை. ஒரு முறை ஊர் சென்றிருந்த போது மருத்துவரிடம் போய் உரிய சிகிச்சை எடுத்து கொண்டோம். நானும் எனது மனைவியும் ! அப்போது மருத்துவர் கூட எதற்கும் நீங்கள் விசாவை கேன்சல் செய்து விட்டு ஒரு வருஷமாவது ஊரில் இருந்து பாருங்கள். ஒரு வேளை குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கலாம். என சொல்லிய விஷயத்தை எனது வீட்டாரிடம் கூறினேன். சரி பரவாயில்லை டாக்டர் சொன்ன மாதிரி துபாயை முடித்து விட்டு ஒரு வருஷம் ஊரில் தான் இருந்து பாரேன். அப்படி யாவது குழந்தை பிறக்கட்டுமே என சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள்.
டாக்டரென்றால் எதையாவது சொல்லத்தான் செய்வார் அப்பத்தான் அவருக்கும் பிழைப்பு ஓடும். நம் குடும்பத்தில் யாருக்கு பிள்ளை இல்லை? உனக்கு மட்டும் இல்லாமல் போவதற்கு ஆண்டவன் நாடும்போது எல்லாம் தானாக நடக்கும். தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக் கொள்ளாமல் துபாய் கிளம்புற வழியைப்பாரு என என் வீட்டார் சொன்ன போது என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? நான் என்ன சிறிய வயதுக்காரனா? எப்போ வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பதற்கு எனக்கும் வயது 41 ஆகி விட்டது. எனது மனைவிக்கும் வயது 38 ஆகிவிட்டது. இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதி போல் மறுப்பேதும் கூறாமல் உடனே துபாய் கிளம்பிவிட்டேன்.
இப்போது எனது துபாய் வாழ்க்கைக்கு வயது 15 நான் முதன் முதலில் துபாய் வரும் போது என் வீடு எப்படி இருந்ததோ? அப்படியே தான் இப்போதும் அதே பழைய வீடாகவே இருக்கிறது. அப்படி யானால் எனது 15 வருஷ உழைப்பு என்னாச்சு?
கடைசியாக நான் ஊர் போயிருந்தபோது என் மனைவி வீட்டிற்கான மளிகை சாமான்கள் வாங்குவதற்கு எனது ஊரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகரத்தில் இருக்கும் பிரபலமான J.J. சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தோம் நானும் என் மனைவியும், ஷாப்பிங் முடித்து விட்டு பணம் செலுத்தும் இடத்திற்கு வந்து பொருட்களுக்கெல்லாம் பில் போடப்பட்டபோது வேறு யாரோ எடுத்து வைத்த இரண்டு பிளாஸ்டிக் குடமும் என் பில்லோடு சேர்க்கப்பட்டதை அறிந்து குடத்தை ரிட்டர்ன் செய்து விடுமாறு காசாளரிடம் வலியுறுத்தினேன்.
ஆனால் அவர் ரிட்டர்ன் செய்ய முடியாது பில் போட்டது போட்டது தான் என வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான் உன் முதலாளியை காட்டு நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என சொன்னதும் மிகவும் நக்கலாக மாடியில் இருக்கிறார் போய் பார்த்து விட்டு வா என காசாளர் ஓர்மையில் பேசிவிட்டான்.
இந்த மன உளைச்சலுடன் பக்க வாட்டிலிருந்த மாடிப்படியேறி முதலாளியைப் பார்க்க வந்த விஷயத்தை அவரது அறைக்கு வெளியிலிருந்த இளம் பெண்ணிடம் கூறினேன். சில நிமிட காத்திருப்புக்குப் பின் முதலாளி அறைக்குள் செல்லுமாறு அப்பெண் கூறியதும் நான் உள்ளே நுழைந்து மரியாதை நிமித்தமாக கை குலுக்க அருகில் சென்ற போது அதிர்ச்சி அடைந்து விட்டேன். அவர் வேறு யாருமில்லை.15 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் துபாய் வந்து இரண்டே வருஷத்தில் கேன்சலில் ஊர் வந்து பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக கேள்விப்பட்ட அதே சுஹைல் தான் ! என்னப்பா சுஹைல் எப்படி இருக்கிறாய்? என கேட்ட என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை போலும் நீங்கள் யார்? என திருப்பி கேட்டு விட்டார்.
ஏனென்றால் 15 வருடத்திற்கு முன்பு பார்த்த என்னை இப்போது முழு வழுக்கைத்தலையுடனும், நரைத்த தாடியுடனும், பெருத்த தொப்பையுடனும் பார்த்ததால் அடையாளம் தெரியாமல் போய்விட்டது. ஆமாம் வலுக்கைத் தலை, நரைத்தாடி, தொப்பை இவைகளெல்லாம் நீண்ட காலம் துபாயில் இருப்பவர்களுக்கு ஏற்படும் மறைக்க முடியாத அடையாளங் களாகும்.
பிறகு என்னை கடை முதலாளி சுஹைலுக்கு நினைவு படுத்திய போதுதான் ஓரளவுக்கு புரிந்து கொண்டவரைப் போல மெலிதாக சிரித்து விட்டு எனது புகாரை ஏற்றுக்கொண்டு காசாளரை என் முன்னாலேயே கண்டித்துவிட்டு இரண்டு பிளாஸ்டிக் குடத்தையும் ரிட்டர்ன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினார். ஒரு வழியா மற்றவை களுக்கு பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்த நானும் என் மனைவியும் காரில் ஏறி ஊர் திரும்பினோம்.
மிதமான வேகத்தில் ஆற்றை ஒட்டிய ஒற்றையடி சாலையில் கார் சீராய்ப் போய்க் கொண்டிருந்த போது என் நினைவெல்லாம் J.J. சூப்பர் மார்க்கெட் சுஹைலைப் பற்றியேத்தான் இருந்தது. பெட்டிக்கடை வைத்தவனா இன்று இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட் ஓனர்? அதிலும் 40 பேருக்கு மேல் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கானே, சுஹைல் எங்கே? நான் எங்கே? என சிந்தித்தவனாகவே என் வீடு வந்து சேர்ந்தேன். இதுபோன்ற பழைய நினைவுகளும் எனது குடும்பத்தாரின் போக்குகளும் துபாயில் உள்ள என்னை தடுமாற செய்கிறது.
துபாய் போனால் குறுகிய காலத்தி லேயே பணக்காரனாகி விடலாம் என கனவு காண்போரே, இதேக் கனவுடன் துபாய் வந்து என்னைப் போல கஷ்டப்படும் சக உழைப்பாளிகளே, 15 ஆண்டுகளாய் பாலைவனத்தில் உழைத்த நான் இப்போதும் கையில் எவ்வித சேமிப்புமில்லாமல் முதன் முதலில் துபாய் வரும் போது எப்படி இருந்தேனோ அப்படியேத்தான் கஷ்டப்பட்ட நிலையில் இருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும் போதும் நான் வாங்கி செல்லும் சாமான்களால் எனது குடும்பத்திற்குள் ஏற்படும் தேவையற்ற சண்டை சச்சரவுகள் மட்டும் தான் எவ்வித குறைவுமின்றி முன்னேற்றம் கண்டு வருகிறது !
குழந்தையில்லாமல் இருக்கும் எனக்கு மீண்டும் விடுமுறை காலம் நெருங்குகிறது. இப்போது சொல்லுங்கள் நான் மறுபடியும் விடுமுறை யிலேயே ஊர் செல்லவா? அல்லது கேன்சலில் ஊர் செல்லவா?
(2009ம் ஆண்டு முதுகுளத்தூர்.காம் என்ற வலைதளத்தில் வெளியான உருக்கமான கட்டுரை !
கட்டுரையில் குறிப்பிடபட்டிருக்கும் நபர் தற்போ்து தாய் நாட்டில் தொழில் செய்கிறார்)
நன்றி:- http://www.mudukulathur.com/

Thursday, April 14, 2011

முடிந்தது வாக்குப்பதிவு முடிவுகள் அடுத்தமாதம் தெரியும்.


தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று 13/04/11 நடந்தது. 
நமது பகுதியில் பரவலாக எல்லோரிடத்திலும் வாக்களிக்கும் ஆர்வம் இந்த தேர்தலில் அதிகமாக இருந்தது.

நாகூரில் 80% வாக்குகளும்,மொத்த நாகை தொகுதியில் 82% வாக்குகளும் பதிவானதாக தகவல்கள் தெரிவிகின்றன.பலர் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

வாக்குசாவடிக்கு அருகில் வாகனங்கள் நிறுத்த கூடாது , வாக்குசாவடிக்கு உள்ளே மொபைல் பயன்படுத்த கூடாது என்பன போன்ற  பல கட்டுபாடுகளை தேர்தல் ஆணையம் விதித்து இருந்தது.

நாகை தொகுதியில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.சகோ. ஷேக்தாவூத் நாகூர் கௌதிய்யா தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.



இந்நிலையில் இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் என்ன தான் முயற்சி செய்தும் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்க முடியவில்லை.. இதுவரை நடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் நமதூரில் ஓட்டுக்கு பணம் வழங்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.

நேற்று பரவலாக நமதூரில் பல இடத்தில் ஓட்டுக்கு பணம் வழங்கியதாக தெரிகிறது. பணம் சரியாக பட்டுவாடா செய்யப்படவில்லை என்றும், பணம் வழங்குபவர்கள் வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்கியதாகவும் பலர் குறைபட்டு கொண்டனர். 

இதில் சிலர் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை ஆதலால் நாங்கள் ஒட்டுபோடவில்லை என்றும் கூறிக்கொண்டு இருந்தனர் வேடிக்கையாக...


ஆக ஒருவழியாக தேர்தல் முடிந்தது. அடுத்தமாதம் 13ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.அதுவரை காத்திருக்க வேண்டும்.. நமக்கு பிரச்சனையில்லை ஆனால் ஒட்டுமொத்த கட்சி வேட்பாளர்களுக்கும் முடிவு தெரியும் வரை தூக்கம்வராது.

நமது தொகுதியை பொருத்தவரை வெற்றி யாருக்கு என்று உறுதியாக கூறமுடியாத நிலைதான். ஆனாலும் இன்ஷால்லாஹ் சகோ. ஷேக்தாவூத் வெற்றிபெற வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. பொறுத்திருந்து பார்போம்.   

தமுமுக - மமக சகோதர்கள் இந்த தேர்தலில் சகோ. ஷேக் தாவூத்வை  தோற்கடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஜெயபாலுடன் கைகோர்த்து செயல்பட்டனர். வாழ்த்துக்கள் சகோதர்களே..
ஷேக்தாவூத் வெற்றிபெற்றால் ஊருக்கும் ,உங்களுக்கும் நல்லது..
ஜெயபால் வெற்றிபெற்றால் உங்களுக்கும் நல்லதல்ல, ஊருக்கும் நல்லதல்ல..
Related Posts Plugin for WordPress, Blogger...