(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, January 21, 2010

பிரான்ஸ் , டென்மார்க் நாட்டில் பெண்கள் பர்தா அணிய தடை

பிரான்ஸ் , டென்மார்க் நாட்டில் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது இஸ்லாமிய சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திஉள்ளது ....


பாரிஸ் : "பிரான்சில் பொது இடங்களில் பர்தா அணிந்து நடமாடினால்

50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்ற புதிய சட்டம் பிரான்ஸ் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, "பர்தா அணிவது அடிமைத் தனத்தைக் குறிக்கிறது. ஆண், பெண் இருவருக்கும் சம உரிமை அளிக்கப்படும் பிரான்சில், இதுபோன்ற உடைகளை அனுமதிக்க முடியாது' என்று அறிவித்திருந்தார்.


இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனம் வந்தாலும், இம்மாதம் முதல்வாரத்தில் பிரான்ஸ் பார்லிமென்டில், "பொது இடங்களில் பர்தா மற்றும் நிக்கா உடை அணிந்து வந்தால், 51 ஆயிரம் ரூபாய் (750 யூரோ) அபராதம் விதிக்கப்படும்' என்ற மசோதா கடும் வாக்குவாதங்களுக்கிடையில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.


அதிபர் கட்சியின் பார்லிமென்ட் குழுத் தலைவர் ஜீன் பிரான்காய்ஸ் கோப் இது குறித்து கூறியதாவது: உடலை முழுவதுமாக மறைத்து, கண்களுக்கு மட்டும் திரையிடும் பர்தாவுக்கும், உடலை மறைத்து கண் மட்டும் தெரியும் வகையில் உள்ள நிக்கா உடைக்கும் இந்த அபராதம் பொருந்தும். கலாசார விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் மட்டும் இதற்கு விதிவிலக்கு உண்டு. இந்த சட்டம் மத அடிப்படையில் அல்ல. மத மற்றும் மதச்சார்பின்மை சார்ந்த அறிஞர்களிடம் நாங்கள் பேசிய போது, பர்தா என்பது மத அடிப்படையில் உருவானதல்ல என்று அவர்கள் உறுதிபடுத்தினர். இவ்வாறு கோப் தெரிவித்தார்.


கோபன்கெகன் :
டென்மார்க் நாட்டு பத்திரிகை ஒன்று முகமதுநபி படத்தை வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தது. இப்போது அங்கு முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை விதித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்.

டென்மார்க் நாட்டில் மொத்த மக்கள் தொக 55 லட்சம். இதில் 1.9 சதவீதம் பேர் முஸ்லிம்கள். 1 லட்சம் முஸ்லிம் பெண்கள் உள்ளனர்.


அவர்கள் பர்தா அணிய தடை விதிக்கலாம் என்று சிபாரிசு செய்தனராம்
இதையடுத்து அந்த நாட்டு பிரதமர் ரசும்சென் டென்மார்க்கில் பெண்கள் பர்தா அணியக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

டென்மார்க் வெளிப்படையான ஜனநாயக நாடு. இங்கு யார்-யாரை சந்தித்தாலும் அவர்களுக்குள் பேசிக்கொள்ளலாம். எனவே யாரும் முகத்தை மறைத்து செல்வதற்கு அனுமதிக்க முடியாது. எனவேதான் பர்தா அணிய தடை விதிக்கப்படுகிறது என்று பைத்தியகார தனமான காரணத்தை கூறி வருகின்றனர் .


அல்லாஹ்வின் ஒளியை வாயால் ஊதி அணைக்க முயல்கிறார்களா ? என்ன ..!!

மின்சார கட்டண உயர்வு- அரசு அறிவிப்பு

சென்னை :"வணிக மற்றும் வீட்டு மின் இணைப்பு வைத்துள்ளவர்களில், இரு மாதங்களுக்கு, 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, கட்டண உயர்வு கிடையாது' என, மின்வாரியம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், மாதம் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர், "ஷாக்' அடைந்துள்ளனர். அத்தியாவசிய மின்சாதனப் பொருட்கள் வைத்திருப்போர், இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தற்போது மின் இணைப்பு பெற்றுள்ள இரண்டு கோடியே ஐந்து லட்சத்து 16 ஆயிரம் பேரில், ஒரு கோடியே, 38 லட்சம் பேர் வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனர். அவர்களில், இரண்டு மாதங்களுக்கு, 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவோர், ஒரு கோடியே 20 லட்சம் பேர்.



மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் வாரியம் விடுத்துள்ள கோரிக்கையில், இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை வீடுகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு, எந்தவிதமான கட்டண உயர்வும் செய்யப்படுவதாகத் தெரிவிக்கவில்லை. எனவே, 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும், ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு தற்போது உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வால் எந்த பாதிப்பும் கிடையாது.

இரண்டு மாதங்களுக்கு, 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் 18 லட்சம் பேர் மட்டுமே, வாரியம் உத்தேசித்துள்ள குறைந்த பட்சக் கட்டண உயர்வை ஏற்க நேரிடும். தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை, இரு மாதங்களுக்கு 1,500 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோரும்,வணிக நிறுவனங்களில் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கும், கட்டணத்தில் எந்தவிதமான உயர்வும் கிடையாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் புது உத்தரவுப் படி பார்த்தால், ஒரு மின்விசிறி, "டிவி', பிரிட்ஜ் வைத்திருப்போர் கூட, அதிக கட்டணம் செலுத்த நேரிடும் என்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள், "ஷாக்' அடைந்துள்ளனர்.

பெட்ரோல் விலை ஏற்றம் இல்லை என்று அறிவித்து விட்டு - மின்சார கட்டணத்தை உயர்த்தி சாமார்த்தியமாக சரிகட்டுகிறது அரசு.

INSHAALLAH//thanks 2 dailynewspaper

Wednesday, January 20, 2010

உயிரே ஓடி வா!

“எவர் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கவா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் ஷைத்தான்கள் இறங்ககின்றனர். (அல்குர்ஆன் 26: 221, 222)

மனிதன் இறந்தபின் அவனது உயிர் எங்கே செல்கிறது என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் அவர்கள் இன்னும் திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியவில்லை. அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதுபற்றி நாம் பெரிதாக அக்கரை எடுத்துக் கொள்ளத் தேவையுமில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல இறைவனும் அவனது திருத்தூதரும் நமக்கு போதுமான விளக்கத்தை தந்துள்ளனர்.

குர்ஆன், ஹதீஸை ஆராய நேரமில்லாதவர்கள் இறந்தவர்களின் உயிர் பற்றி தவறான கருத்துகள் கொண்டுள்ளனர். அதனை மக்களிடமும் பிரச்சாரம் செய்கின்றனர். “இறந்து போன நல்லவர்களை நாம் பலமுறை அழைக்கும்போது அவர்கள் அந்த இடத்துக்கு ஓடி வருகிறார்கள். இது நம்மில் சிலரது நம்பிக்கை. வேறு சிலர் “இறந்து போன நல்லவர்களின் உயிர்கள் உயிருடன் உள்ளவர்களின் உள்ளெ இறங்கி பேசுகின்றன” என்று கருதுகின்றனர். இரண்டுமே தவறான நம்பிக்கையாகும்.

நல்லடியாபுகளில் பல பிரிவினர் உண்டு. நபிமார்களுக்கு அடுத்த இடத்தை “அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு வீரமரணம்” அடைந்தோர் பெறுகின்றனர். அவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் “அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டோரை மரித்தவர்கள் என்று நிச்சயமாக நீங்கள் எண்ணாதீர்கள்!” தம் ரப்பினிடத்தில் (இறைவனிடத்தில்) அவர்கள் உயிருடனே இருக்கிறார்கள். (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் 3:196)

அவர்கள் இறைவனிடமும் எவ்வாறு உயிருடன் உள்ளனர் என்பதை நபிகள் (ஸல்) அவர்கள் விளக்கமுற்படும் போது, அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள் நுழைந்து சுவனத்தில், தான் நினைத்தபடி சுற்றித்திரிகின்றன,” என்று குறிப்பிட்டார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம் அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊது(ரழி)


இத்தகைய உயர்ந்த நிலையை அடைந்துள்ள ஷஹீதுகள் தங்களுக்கு கிடைத்த இந்தபெரும் பேறை, உலகுக்கு வந்து சொல்லிவிட்டு திரும்புவதற்காக அல்லாஹ்விடம் அனுமதி கேட்டனர். அல்லாஹ் “உங்கள் சார்பாக உங்கள் நிலையை நான் உலகமக்களுக்கு அறிவிக்கிறேன்” என்று கூறி மேற்கூறிய வசனத்தையும், அதற்கு அடுத்து வருகின்ற இரண்டு வசனங்களையும் இறக்கினான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தனர்.
ஆதாரம் : அபூதாவூது அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)

மேற்கூறிய இரண்டு நபிமொழிகளும் “அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு வீரமரணம் அடைந்தவர்கள் சுவனத்தில் பறவை வடிவத்தில் வாழ்கின்றனர் என்பதையும், அவர்கள் இந்த உலகுக்கு வந்து உடனே திரும்பிச் செல்ல அனுமதி கேட்டும் அல்லாஹ் அதற்கு அனுமதிக்கவில்லை” என்பதையும் நமக்குத் தெளிவாக்குகின்றன,

“அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து வேறிடம் செல்ல விரும்ப மாட்டார்கள்” (அல்குர்ஆன் 18:108)

அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டோரின் உயிர்கள் இந்த உலகுக்கு வரமாட்டா என்று தெளிவாகின்றது. ஏனைய நல்லடியார்களின் நிலைபற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

கப்ரில் நல்ல மனிதனை வைக்கப்பட்டு அவனிடம் விசாரணைகள் முடிக்கப்பட்டவுடன் அவனுக்கு உரிய இடத்தைக் காட்டி “இதுவே கியாமத் வரை உனது தங்குமிடமாகும்” என்று மலக்குகள் கூறுவர் (நபிகள் நாயகம் -ஸல்) ஆதார நூல் : புகாரி, முஸ்லிம் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி)

“கப்ரில் மனிதன் வைக்கப்பட்டு விசாரணை முடிந்த உடன் நான் எனது குடும்பத்தினரிடம் சென்று எனக்குக் கிடைத்த மகத்தான வாழ்க்கை பற்றி கூறிவிட்டு வருகிறேன்” என்று கேட்பார். (பேசாமல்) புதுமணமகனைப் போல் அயாந்து உறங்குவீராக! என்று அவருக்குக் கூறப்படும். (நபிகள் நாயகம் -ஸல்) ஆதார நூல் : புகாரி, முஸ்லிம் அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி)

கப்ரில் வைக்கப்பட்டு விசாரணை முடிந்த பின் சுவனத்து ஆடை அணிவிக்கப்பட்டு, சுவனத்து விரிப்பு விரிக்கப்படும். சுவனத்தின் நறுமணம் அவர்களை நோக்கி வீசிக் கொண்டிருக்கும். (நபிகள் நாயகம் -ஸல்) ஆதார நூல் : அபூதாவூது, அறிவிப்பவர்: பரா, இப்னு ஆஸி

மேற்கூறிய நபிமொழிகளிலிருந்து இறந்துவிட்ட நல்லடியார்கள் “சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்” என்றும், “இன்னும் சிலர் மண்ணறையிலேயே சுவனத்து இன்பங்களில் திளைத்துக் கொண்டுள்ளனர்” என்றும் அவர்கள் இவ்வுலகுக்கு வந்து செல்ல அனுமதி கேட்டும் அவர்களுக்கு அனுமதி தரப்படமாட்டாது என்பதையும் தெளிவாகவே நம்மால் விளங்க முடிகின்றது.

இறந்துபோன நல்லடியார்கள் எவரும் திரும்பவும் இந்த உலகுக்கு விஜயம் செய்கிறார்கள் என்றோ, இன்னொருவர் உடலுக்குள் வந்து புகுந்து கொள்கின்றனர் என்றோ, யாரேனும் நம்பினால் மேற்கூறிய அல்லாஹ்வின் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும், மாறு செய்த மாபெரும் குற்றவாளியாகின்றனர்.

மனிதனது உடலக்குள் புகுந்து கொண்டு ஆள்மாறாட்டம் செய்வது ஷைத்தான்தான், நல்லடியார்கள் அல்ல. அதனை நாம் இக்கட்டுரையின் துவக்கத்தில் எழுதிய குர்ஆன் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். பொய் சொல்கின்ற, தீய செயல்கள் செய்கின்றவர்கள் மீது தான் ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கு ஏற்ப, இன்று பேயாடுவோர், பல்வேறு இறை கட்டளைகளை உதாசீனம் செய்தவர்களே அவர்களையே ஷைத்தான் ஆட்டுவிக்கிறான்.

நல்லடியார்கள் தங்களுக்கு வல்ல அல்லாஹ்வால், தரப்பட்டிருக்கும் அளவிடமுடியாத பெரும் சுகவாழ்வை அனுபவித்துக் கொண்டுள்ளனர். சுவனத்து இன்பங்களில் திளைத்தவர்களாக உள்ளனர். சுகமான நித்திரையில் இருக்கின்றனர்.

அழியாத பெருவாழ்வை அடைந்துள்ள நல்லவர்கள், அழிந்துவிடக் கூடிய இந்த அற்ப உலகத்துக்கு எப்படி வருவார்கள்?

நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை.

“அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்தவர்களுக்கு “பிர்தவ்ஸ்” என்னும் சுவாக்கம் தங்குமிடமாக உள்ளது. அதில் (அவர்கள்) என்றென்றும் நிலைத்திருப்பாாகள். அங்கிருந்து (வேறிடம்) திரும்பிச் செல்ல அவர்கள் விரும்பமாட்டார்கள். (அல்குர்ஆன்)

இந்தத் திருக்குர்ஆன் வசனமும் இந்த உண்மையைத் தான், நமக்கு உணர்த்துகிறது. “உயிரே ஓடி வா” என்று அழைத்தவுடன் எவரது உயிரும் இங்கே வரப்போவதுமில்லை. பிறரது உடலுக்குள் புகுந்து கொள்வதுமில்லை.

உறுதியான ஈமான் இல்லாதவாகளிடமும், தீய செயல் புரிவோரிடமும் கோழை மனது கொண்டவர்களிடமும், ஷைத்தான்கள் ஊடுருவிக் கொண்டு உளறுகின்றவைகளைக் கண்டு,பாமர மக்கள் “வலியுல்லா” வந்து விட்டதாக நம்பி வருகின்றனர். இவ்வாறு நம்புவதன் மூலம், சுவனத்து இன்பங்களையும், அல்லாஹ்வின் நேசர்களையும், அவமதிக்கின்றனர்.

அல்லாஹ் இதுபோன்ற தவறான நம்பிக்கை கொள்வதிலிருந்து நம்மைக் காப்பாற்றுவானாக! ஆமீன்!!

நன்றி
அந்நஜாத்//http://www.annajaath.com

Monday, January 18, 2010

ஹதீஸ் - அடிப்படை விளக்கம்

ஹதீஸ் என்றால் என்ன?

ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்பொருள்படும்.

இஸ்லாமிய உலகில் ஹதீஸ: என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சொல் செயல் ஆகியவற்றுக்கும் அவர் மௌனமாக இருந்து அங்கீகரித்த விசயங்களுக்கும் சொல்லப்படும்.

அதே போல நபித்தோழர்களது சொல் செயல் அங்கீகாரத்திற்கும் ஹதீஸ் என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு சாரார் இதற்கு அஸர் என்று வேறுபெயரிட்டு அழைப்பர்.

ஹதீஸ் குத்ஸி

ஹதீஸ் குதுஸி என்றால் அல்லாஹ் சொல்கிறான் என்று முன்னுரையிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லும் பொன்மொழியாகும். இந்த தகவல் குர்ஆனில் இருக்காது.

உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் சொல்கிறான் மனிதன் என்னை திட்டுகிறான். மனிதன் காலத்தை திட்டுகிறான் . காலத்தை நானல்லவா படைத்தேன். (முஸ்லிம்)

ஹதீஸ் வகைகள்

ஸஹீஹ்

அறிவிப்பாளர் தெடர் முழுமையாக சொல்லப்பட்டு அவர்கள் அனைவரும் பரிபூர்ண நம்புக்ககைக்குரிய நேர்மையாளராகவும் மிக்க மனன சக்தியுள்ளவராகவராகவும் மனிதத்தன்மை மிக்கவராகவும் இருந்து அவர்களால் சொல்லப்படும் ஹதீஸ் அவர்களைவிடச்சிறந்தவர்களின் அறிவிப்புக்கு முரன்படாமலும் இருந்தால் அது ஸஹீஹ் என்ற முதல் தரமான ஹதீஸ் ஆகும்.

ஹஸன்

அறிவிப்பாளரின் தகுதிகள் முழுமை பெற்றிராத நிலையில் ஒரு ஹதீஸின் கருத்துக்கள் வேறு பல வழிகளில் அறிவிக்பபட்டிருக்குமானால் அது ஹஸன் என்றழைக்கப்படும்.

லயீப்

அறிவிப்பாளர்களின் தகுதியில் குறைப்பாடுகள் இருந்து மற்ற விதிமுறைகளில் தேறாத ஹதீஸ்கள் லயீப் எனப்படும்.

மவ்லூஉ

உண்மை அல்லாத பொய்யாக இட்டுக்கட்டி சொல்லப்பட்ட ஹதீஸ:கள் மவ்லூஉ எனப்படும்.



ஹதீஸ் தொகுப்புகள்:

என் சம்பந்தமாக எதையும் எழுதிவைக்காதீர்கள் என நபிகள் நாயகம் உத்தரவிட்டடிருந்தார்கள் .

குர்ஆன் எழுதிப்பதிவு செய்யப்படும் சுழ்நிலையில் ஹதீஸூம் எழுதப்பட்டால் எது குர்ஆன் வசனம் ? எது நபிகளாரின் பொன்மொழி? என்பதில் குழப்பம் நேர்ந்துவிட வாய்ப்புள்ளதால் இப்படி ஒரு உத்தரவை நபிகள் நாயகம் சொன்னார்கள். ஆகவே நபிகள் நாயகம் அவர்களது பொன்மொழிகளை அவரது தோழர்கள் எழுதிப் பதிவு செய்யவில்லை

ஆயினும் அபூஹூரைரா போன்ற ஓரிரு நபித்தோழர்கள் தங்களுக்கு அத்தகைய குழப்பம் ஏற்படாது என்று தெளிவுபெற்றிருந்தமையால் சில பொன்மொழிகளை ஏடுகளில் எழுதி வைத்திருந்தார்கள். எனினும் அவை பெரிய அளவிலோ தெகுப்பு வடிவிலோ இருக்கவில்லை.

நபித்தோழர்கள் அபரிமிதமான தங்களது நினைவாற்றலில் இருந்தே நபிகளாரின் பொன்மொழிகளை வாய்வழியாக உலகுக்கு தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். அதனால் அக்காலங்களில் நபிகளாரின் பொன்மொழிகளை மனனம்செய்வது சிறந்தமார்க்க சேவையாக கருதப்பட்டது. இன்றை காலத்தில் திருக்குர்ஆனை மனனம் செய்பவர் ஹாபிழ் என்று அழைக்கப்படுகிறார். அன்றோ ஒரு இலட்சம் பொன்மெழிகளை மனனம் செய்தவர் ஹாபிழ் என அழைக்கப்பட்டார். அதுமட்டுமல்ல மனனம் செய்யப்படும் பொன்மொழிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஹாகிம் ஹூஜ்ஜத்துல் இஸ்லாம் ஆகிய சிறப்புபெயர்கள் வழங்கப்பட்டன.


முதல் தொகுப்பு
ஹிஜ்ரீ முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த உமைய்யா வம்ச ஆட்சியாளர் ஹஜ்ரத் உமர் பின் அப்துல் அஸீஸ் (61101ஹி 681717கி.பி.) ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஒரு யுத்தத்தில் பெருமளவில் நபித்தோழர்கள் மரணமடைந்த போது ஹதீஸ்கள் நூல் வடிவத்திவ் தொகுக்கப்படவேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.

உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களது உத்தரவிற்கேற்ப இமாம் முஹம்மது பின் முஸ்லிம் பின் `ஹாப் அஸ்ஸூஹரீ ( ஹி 124 ) நபிகளாரின் பொன் மொழிகளின் முதல் தொகுப்பை திரட்டினார். அதற்குப்பின் பக்திசிரத்தையோடும் அக்கறையோடும் பலரும் நபிகளாரின் பொன்மெழிகளை திரட்டத்தொடங்கினார்கள்.

அந்த ஆர்வத்தின் முடிவில் சில பிரச்சினைகளும் எழுந்தன. நபிகளாரின் பொன்மொழிகள் அல்லாத பலவும் திரட்டுக்களில் இடம்பெற்றன . தவறான எண்ணத்தோடு மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவுத் அரசியல் மற்றும் குழுஉணர்வின் தாக்கத்தாலும் பலர் பெய்யான செய்திகளை இட்டுக்கட்டடியி நபிமொழி என்ற பெயரில் உலாவ விட்டிருந்தனர். அவையும் திரட்டுக்களில் இடம் பெறத் தொடங்கின. இப்பொய்ச் செய்திகள் மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் ஆபத்தாக அமைந்தன.

இந்நிலையில் தான் இமாம் முஹம்து பின் இஸ்மாயீல் புகாரி ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டில் ஆதாரப்பூர்வமான பொன்மெழிகளை திரட்டித்தர முதன்மையான உறுதி பூண்டார். மார்க்கத்திற்கும் சமுதயத்திற்கும் மிகப்பொரிய சேவையாற்றுவதற்காக பிறப்பபெடுத்தது போல் 16 ஆண்டுகால பெரும் முயற்ச்சிக்குப்பின் தனக்கு மனனமாக இருந்த சுமார் 6 இலட்சம் பொன்மொழிகளிலிருந்து 7586 பொன்மொழிகளை தேர்வு ஆதரப்பூர்வமான பொன்மொழிகள் தொகுப்பை உலகுக்கு வழங்கினார். அதற்குப்பிறகு அவருடைய வழியை அடியொட்டி பலரும் ஆதராப்பூர்வ தொகுப்புகளை திரட்டித்தந்தனர். அவற்றுள் மக்களால் பெருமளவில் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்புகள் ஆறு .


1. ஸஹீஹூல் புகாரீ

நூலின் பெயர் :அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் (புகாரீ)

முழுப் பெயர் :அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் அல்முஸனத் அல்முக்தஸர் மின் உமூரி ரசூலில்லாஹி வ சுனனிஹி வ அய்யாமிஹி)

ஆசிரியர் பெயர் :அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயீல் அல்பபுகாரீ (ரஹ்)

பிறப்பு :ஹிஜ்ரீ 194 (கி.பி. 810) `வ்வால் மாதம் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு

இறப்பு :ஹிஜ்ரீ 256 (கி.பி. 870) `வ்வால் மாதம் முதல் நாள் சனிக்கிழமை இரவு


இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தமது பதினெட்டாம் வயதில் ஸஹீஹூல் புகாரீ ஹதீஸ் தொகுப்பு நூலை எழுதத் துவங்கினார்கள். தமது முப்பத்து நான்காம் வயதில் ஏறத்தாழ பதினாறு ஆண்டு கால அயராத உழைப்பிற்குப் பிறகு அதனை எழுதி முடித்தார்கள். அன்னார் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர் ஆவார். இந்நூலில் 7563 (ஃபத்ஹூல் பாரீயின் இலக்கம்) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் தொகுப்பு நூற்களில் (ஸிஹாஹ் சித்தா) ஸஹீஹூல் புகாரிக்கு அடுத்ததாக அபூதாவூத் எனும் நூல்தான் இயற்றப்பட்டது.


2. சுனன் அபூதாவூத்

நூலின் பெயர் :சுனன் அபூதாவூத்
ஆசிரியர் பெயர் :அபூதாவூத் சுலைமான் பின் அல்அ`அஸ் அஸ்ஸிஜிஸ்தானீ (ரஹ்)
பிறப்பு :ஹிஜ்ரீ 202
இறப்பு :ஹிஜ்ரீ 275 (கி.பி. 889) ஹவ்வால் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை



Eரானிலுள்ள ஸிஜிஸ்தான் நகரில் பிறந்த அபூதாவூத் சுலைமான் பின் அல்அ`அஸ் (சஜிஸ்தானீ) (ரஹ்) அவர்களும் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர் ஆவார். ஹதீஸ்களுக்காகவே இவ்வுலகில் பிறந்து வாழ்ந்தவர் என்று இவரைக் குறித்துப் பெருமையாகக் கூறுவர். இவர் தம்முடைய பிரசித்தி பெற்ற சுனன் அபூதாவூத் எனும் ஹதீஸ் தொகுப்பு நூலை இயற்றி தம்முடைய ஆசிரியர் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் சமர்பித்தபோது அவர்கள் தமது மாணவரை மிகவும் பாராட்டினார்கள். இந்நூலில் 5274 (முஹ்யித்தீன் இலக்கம்) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து ஸஹீஹ் முஸ்லிம் இயற்றப்பட்டது.


3. ஸஹீஹ் முஸ்லிம்
நூலின் பெயர் :அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்
ஆசிரியர் பெயர் :அபுல் ஹ_ஸைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் அந்நைசாப+ரீ அல்குi~ரீ (ரஹ்)
பிறப்பு :ஹிஜ்ரீ 204 (கி.பி. 819)
இறப்பு :ஹிஜ்ரீ 261 (கி.பி. 875) ரஜப் மாதம் 25ஆம் நாள் ஞாயிறு மாலை


இன்றைய மேற்கு ஈரான் நாட்டிலுள்ள நைசாபூர் நகரில் பிறந்த அபுல் ஹ_ஸைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் அல்குi~ரீ அன்நைசாபூரீ (ரஹ்) அவர்களும் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர்களில் ஒருவர் ஆவார். பிற்காலத்தில் புகாரீ (ரஹ்) அவர்களின் மாணவராகவும் இருந்துள்ளார்கள்.ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் தொகுப்பு நூற்களில் (ஸிஹாஹ் சித்தா) ஸஹீஹ_ல் புகாரிக்கு அடுத்ததாக ஸஹீஹ் முஸ்லிம் கருதப்படுகிறது. ஆனால் இந்நூல் அமைக்கப்பட்டள்ள முறையையும் அதில் ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒழுங்கையும் கவனித்து

இது ஸஹீஹ_ல் புகாரீயைவிட மேம்பட்டதாகும் என மொராக்கோ போன்ற மேற்கத்திய நாட்டினர் சிலர் கூறியுள்ளனர். இந்நூலில் 7345 (நவவீ இமாம் இலக்கம்) ஹதீஸ்கள் உள்ளன.

4. ஜாமிஉத் திர்மிதீ

நூலின் பெயர்:அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்
ஆசிரியர் பெயர்:அபூரூடவ்சா முஹம்மத் பின் ரூடவ்சா பின் சூரா அத்திர்மிதீ (ரஹ்)
பிறப்பு ஹிஜ்ரீ 209
இறப்பு ஹிஜ்ரீ 279 (கி.பி. 892)


இன்றைய உஸ்பிகிஸ்தான் நாட்டிலுள்ள திர்மித் நகரத்தில் பிறந்த அபூஈசா முஹம்மத் பின் ஈசா பின் சூரா அத்திர்மிதீ (ரஹ்) அவர்கள் புகாரீ (ரஹ்) அவர்களின் மாணவர்களில் மிக முக்கியமானவர் ஆவார். புகாரீ (ரஹ்) அவர்களின் பிரதிநிதி (கலீஃபா) என்று இவரைக் குறித்துக் கூறப்படுவதுண்டு. இந்நூலில் 3891 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

5. இப்னுமாஜா

நூலின் பெயர் :சுனன் இப்னுமாஜா
ஆசிரியர் பெயர்:அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் அல்கஜ்வீனீ பின் மாஜா அர்ருப்ஈ (ரஹ்)
பிறப்பு:ஹிஜ்ரீ 209
இறப்ப:ஹிஜ்ரீ 273 (கி.பி. 887)

காஸ்பியன் கடலுக்கு தெற்கே அமைந்துள்ள ஈரானிய நகரமான கஸ்வீனில் பிறந்த அப+ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் அல்கஜ்வீனீ பின் மாஜா அர்ரப்ஈ (ரஹ்) அவர்கள் தமது சுனன் இப்னு மாஜா நூலை ஹாஃபிழ் அப+ ஜர்ஆ அர்ராஜீ (ரஹ்) அவர்களிடம் சமர்பித்தபோது அதில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களை அன்னார் ஆராய்ந்து இந்நூலில் சுமார் முப்பது பலவீனமான ஹதீஸ்கள் மட்டுமே உள்ளன என்று கூறினார்கள். இதில் 4341 (அப்துல் பாகீயின் இலக்கம்) ஹதீஸ்கள்.


6. சுனன் நஸயீ
நூலின் பெயர் :சுனன் நஸயீ
ஆசிரியர் பெயர் :அபூஅப்துர்ரஹ்மான் அஹ்மத் பின் ~_ஐப் அந்நஸயீ (ரஹ்)
பிறப்பு :ஹிஜ்ரீ 215
இறப்பு :ஹிஜ்ரீ 303 (கி.பி. 915)


கிழக்கு ஈரானிலுள்ள நசா எனும் நகரத்தில் பிறந்த அபூஅப்துர்ரஹ்மான் அஹ்மத் பின் ~_ஐப் அன்னஸயீ (ரஹ்) அவர்கள் முஸ்லிம் (ரஹ்) அவர்களைவிட அதிகமாக ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள். இந்நூலில் 5769 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

இவை தவிர இன்னும் ஏராளமான ஆதாரப்பூர்வமான பொன்மொழித் தொகுப்புகள் உண்டு.

Friday, January 15, 2010

தொடர் கிரகணங்களும்-இறைவனின் எச்சரிக்கையும்

இஸ்லாத்தின் பார்வையில் கிரகணங்கள் :

அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.
(புஹாரி பாகம் 1, அத்தியாயம் 16, எண் 1059 )


(புஹாரி பாகம் 1, அத்தியாயம் 16, எண் 1053)
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

ஒரு சூரிய கிரகணத்தின்போது ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது ஆயிஷா(ரலி)வும் மக்களும் தொழுது கொண்டிருந்தனர். நான் மக்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) தம் கையால் வானத்தை நோக்கிச் சைகை செய்து 'ஸுப்ஹானல்லாஹ்' என்று கூறினார்கள். ஏதேனும் அடையாளமா? என்று கேட்டேன். 'ஆம்' என்பது போல் சைகை செய்தார்கள்.

எனக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்கு நானும் (தொழுகையில்) நின்றேன். பின்னர் என் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு 'நான் இதுவரை காணாத அனைத்தையும் இந்த இடத்தில் கண்டேன் செர்க்கம், நரகம் உட்பட, மேலும் கப்ருகளில் தஜ்ஜாலின் சோதனை போல் அல்லது அதுற்கு நெருக்கமான அளவுக்கு நீங்கள் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டிருக்கிறது. உங்களில் ஒருவரிடம் வானவர் வந்து 'இம்மனிதரைப் பற்றி உம்முடைய முடிவு என்ன? என்று கேட்பார்.

நம்பிக்கையாளர் உறுதியுடனிருந்தவர் 'அவர்கள் முஹம்மது நபியாவார்கள். எங்களிடம் தெளிவான மார்ககத்தையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் அவர்களின் அழைப்பை ஏற்று, நம்பிப் பின் பற்றினோம்' என்று கூறுவார். அவரிடம், நல்லவராக நீர் உறங்குவீராக! நிர் நம்பிக்கையாளராக இருந்ததை நாம் நிச்சயமாக அறிவோம்' என்று கூறப்படும். நயவஞ்சகர் சந்தேகத்திலிருந்தவர் (இக்கேள்விக்குப் பதில் அளிக்கும் போது) 'மக்கள் எதையோ சொன்னார்கள்; நானும் சொன்னேன். எனக்கு எதுவும் தெரியாது' என்று விடையளிப்பார்'
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


கிரகணங்கள் சொல்வது என்ன ?


கடந்த வருடம் இரண்டும் கிரகணங்கள் நிகழ்தன,பொதுவாக வருடத்திற்கு அதிகபட்சம் 2 கிரகணங்கள்தான் நிகழ்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, இன்றைய கங்கண சூரியகிரகணத்தையும் சேர்த்து மொத்தம் நான்கு கிரகணங்கள் வருகின்றன என்கிறார்கள்.
உலகில் நடக்கும் கொடுமைகளும் , அக்கிரமங்களும்மே இதற்கு காரணம் என்பதை நபி மொழியில் இருந்து காண முடிகிறது .

நபி(ஸல்)அவர்கள் கிரகணத்தை பற்றி குறிப்பிடும்போது "தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான்" என்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்
எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதர்களை அவர்களின் உலக சிந்தனையை இந்த கிரகணத்தின் மூலம் தடுத்து மறுமையையும் , அவனின் வல்லமையையும் நினைஊட்டுகிறான்.

அல்லாஹ்வின் அத்தாட்சிகளை உலகமே வியந்து பார்க்கிறது. ஒரு மணி துளியாவது ஒவ்வொரு மனிதனும் இந்த நிகழ்வை பற்றி அவனவன் புத்திக்கு தகுந்தாற்போல் யோசிக்கிறான் .ஆனால் இதை செய்விப்பவனை பற்றி யோசிப்பதில்லை -இவர்களுக்கும்

இதை செய்விப்பவனின் ஆற்றலை தெரிந்தும் அலட்சியமாக இருக்கும்-முஸ்லிம்களுக்கும் !! என ஒட்டு மொத்த உலக ஜீவராசிகளுக்கும் - பொதுவான எச்சரிக்கையே இது போன்ற கிரகணங்கள் என்பதை மறக்க கூடாது.

சமீபத்தில் நடந்த ஹைத்தியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் நினைவிருக்கலாம் - நாமும் இதே உலகத்தில் தான் இருக்கிறோம் என்பதை மறவாதிர்கள். அங்கே ஆடிய பூமி இங்கே ஆட எவ்வளோ நேரமாகும் ..??

மரணம் நம்மை நெருங்கிக்கொண்டு இருக்கிறது - நம்மிடம் மறுமைக்காக தயாரிப்பு என்ன இருக்கிறது உங்களிடம் நீங்களே கேட்டுகொல்லுங்கள்...


NAGOREFLASH

Wednesday, January 13, 2010

டாக்டர் அப்துல் கலாம்.-சிறிய வயது பள்ளிக்கூட விவாதம்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.
சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன்.

அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உங்களுக்காக நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன்.

(இந்த விவாதம் இணையத்திற்கு வந்து வெகு நாட்களாகிவிட்டது. இது அவரது பள்ளியில் ஒரு ஆசிரியருக்கும் அவருக்குமிடையே நிகழந்த வாதம்.)




ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா?

கலாம்: கண்டிப்பாக ஐயா

ஆசிரியர்: கடவுள் நல்லவரா?

கலாம்: சந்தேகமேயில்லை

ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: என்னுடைய தம்பிக்கு புற்றுநோயால் மரணம் வந்தது. அவன் கடவுளை மிகவும் நேசிப்பவன். கடவுளிடம் ஓயாமல் பிரார்த்தித்திருந்தான். நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாதவருக்கு நம்மாலான உதவிகளை செய்வோம். அப்படி செய்யாத எல்லாம் வல்ல கடவுள் நல்லவரா?

கலாம்: (மெளனம்)

ஆசிரியர்: உன்னால் பதில் சொல்ல முடியவில்லை

இளைஞனே அப்படித்தானே? நாம் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் நல்லவரா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: சாத்தான் நல்லவனா?

கலாம்: இல்லை.

ஆசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தான்?

கலாம்: (தயக்கத்துடன்) கடவுளிடமிருந்து

ஆசிரியர்: ரொம்ப சரி. இந்த உலகத்தில் கெட்டது இருக்கிறதா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: கெட்டது எங்கும் நிறைந்திருக்கிறது இல்லை? கடவுள்தானே அனைத்தையும் படைத்தார்?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: ஆக, கெட்டவற்றை படைத்தது யார்?

கலாம்: (பதிலில்லை)
ஆசிரியர்: இந்த உலகத்தில் உடல்நிலைக் கோளறுகள், ஒழுக்கமின்மை, பழியுணர்ச்சி, மோசமான நிலை என அனைத்தும் உள்ளது தானே?

கலாம்: ஆம் ஐயா.

ஆசிரியர்: அப்போ, யார் இதையெல்லாம் உருவாக்கியது?

கலாம்: (பதிலில்லை) — (இங்கிருந்து கவனமாக படியுங்கள்) —

ஆசிரியர்: உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை உணர்ந்து பார்க்க ஐந்து அடிப்படை உணர்வுகள் வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. நீ கடவுளை கண்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளின் குரலை கேட்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளை தொட்டிருக்கிறாயா, இல்லை ருசித்துப் பார்த்திருக்கின்றாயா அல்லது மோப்பம் பிடிப்பதுபோல் முகர்ந்தாவது இருக்கிறாயா? ஏதேனும் ஒரு உணர்ச்சியில் கடவுளை உணர்ந்திருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: அப்படியிருந்தும் கடவுளை நீ இன்னமும் நம்புகின்றாயா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: ஆக, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உனது கடவுள் இல்லை என்று கூறுகிறது.

நீ அதற்கு என்ன பதில் தருவாய் மகனே?

கலாம்: ஒன்றுமில்லை ஐயா. எனக்கு நம்பிக்கை மட்டும் உள்ளது.

ஆசிரியர்: ஆம் நம்பிக்கை. அறிவியலுக்கும் அதற்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது.

கலாம்: ஐயா, வெப்பம் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: அப்படியென்றால் குளிர் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: இல்லை ஐயா, குளிர் என்பது இல்லை.

(மாணவர்கள் இதுவரை சுவாரசியம் காட்டாமலிருந்தவர்கள் இப்போது இருவரையும் கூர்ந்து கவனிக்கின்றார்கள்)

கலாம்: ஐயா, நம்மிடம் பல்வேறு வகைப்பட்ட வெப்பம் இருக்கிறது, மிகு வெப்பம், தாழ் வெப்பம், குறைந்த வெப்பம், வெள்ளை வெப்பம், மிகப்பெரிய வெப்பம் அல்லது வெப்பமே இல்லை என்று. ஆனால் குளிர் என்ற ஒன்று கிடையாது.

நம்மால் பூஜ்ஜியத்திற்கும் கீழே 458 டிகிரி வரை (வெப்பமே இல்லை) போக முடியும்

அதற்கு மேல் அளவு இல்லை. குளிர் என்ற ஒன்று கிடையாது. குளிர் என்பது வெப்பம் இல்லாமையைக் குறிக்கும் ஒரு சொல் அவ்வளவே. குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப்பதம் இல்லை வெப்பத்தின் தன்மை இல்லாமை அவ்வளவே.

கலாம்: சரி ஐயா, இருளைப் பற்றி கேட்கலாம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர்: கண்டிப்பாக. இருள் இல்லையென்றால் இரவு என்பது எப்படி இருக்கும்?

கலாம்: மறுபடியும் தவறு ஐயா. இருள் என்பது வெளிச்சம் இல்லாமை. உங்களால் குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பளிச்சிடும் வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம் என்று வரையறுக்க முடியும். ஆனால் வெளிச்சமே இல்லாததை? அதைத்தான் நீங்க[1] அதைத்தான் நீங்கள் இருள் என்று கூறுகின்றீர்கள் இல்லையா?

இருளை இன்னமும் இருண்டுபோக உங்களால் செய்யமுடிந்தால் செய்வீர்கள்தானே?

ஆசிரியர்: என்ன சொல்லவருகின்றாய் மகனே?

கலாம்: நான் கூற வருவது உங்களின் அறிவியல் கூற்றில் பிழையிருக்கிறது என்பதுதான்.

ஆசிரியர்: என்ன பிழை? விளக்கமாக சொல் பார்க்கலாம்?

கலாம்: ஐயா, உங்களின் அறிவியல் இருமை தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் வாழ்வும் சாவும் இருக்கிறது நல்ல கடவுள் கெட்ட கடவுள் என்று இருக்கிறதாகவும் வாதிடுகிறீர்கள்.

கடவுள் என்கிற விஷயத்தை நீங்கள் ஒரு ஆதாரபூர்வ (அளவெடுக்க முடிகின்ற) முடிவுபெற்ற விஷயமாக எதிர்பார்க்கின்றீர்கள்.

ஐயா, அறிவியலால் மனிதர்களின் எண்ணத்தை விளக்க முடியவில்லை.

மின்சாரத்தையும் காந்தத்தையும் வைத்துதான் அளவிடுகிறது. ஆனால் இந்த இரண்டில் ஒன்றையும் அது உண்மையில் பார்த்ததோ முழுதுமாக புரிந்துகொண்டதோ இல்லை.

இறப்பு என்பதை உயிரின் எதிர்ப்பதமாக பார்ப்பது இறப்பு என்பது ஒரு தனிப்பட்ட பொருளாக இருக்க முடியாது என்பதை மறந்துவிட்டுக் கூறுவது.

இறப்பு என்பது உயிரின் எதிர்ப்பதம் இல்லை ஐயா, இறப்பு என்பது உயிரில்லாதது அவ்வளவே. இப்போது என் கேள்விக்கு விடைதாருங்கள் ஐயா. உங்களின் மாணாக்கர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று பாடம் நடத்துகின்றீர்கள் அல்லவா?

ஆசிரியர்: மனிதன் உருவான விதம் பற்றிய டார்வின் கூற்றைப் பற்றி நீ கூறுகின்றாய் என்றால் ஆம் நான் அதை நடத்துகின்றேன்.

கலாம்: மனிதன் உருவான விதத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா?

(ஆசிரியர் விவாதம் எங்கே போகின்றது என்பதை உணர்ந்து புன்சிரிப்புடன் தலையாட்டிக்கொள்கிறார்)

கலாம்: ஆக இதுவரை எவரும் மனிதன் உருவான விதத்தை ஆதாரபூர்வமாக கண்டதில்லை. அதுமட்டுமின்றி உயிரியல் மாற்றம் என்பது இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒன்று என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆக நீங்கள் உங்களின் கருத்துக்களைத்தான் பாடமாக நடத்துகின்றீர்கள்

அப்படித்தானே? நீங்கள் ஆசிரியரா விஞ்ஞானியா?
(வகுப்பு முழுவதும் சலசலக்க ஆரம்பித்துவிடுகிறது)

கலாம்: இந்த வகுப்பில் இருக்கும் எவரேனும் நமது ஆசிரியரின் மூளையை பார்த்திருக்கின்றீர்களா?

(வகுப்பில் இப்போது சிரிப்பலை ஆரம்பித்துவிட்டது)

கலாம்: இங்கே இருக்கும் எவரேனும் ஆசிரியரின் மூளையை கண்டோ, கேட்டோ, தொட்டோ, உணர்ந்தோ அல்லது ருசித்தோ இருக்கின்றீர்களா?

எவரும் அவ்வாறு செய்திருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஐயா, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உங்களின் மூளை இல்லையென்று கூறுகிறது.

தவறாயிருப்பின் மன்னித்துவிடுங்கள் ஐயா, நாங்கள் எவ்வாறு உங்களின் போதனைகளை நம்புவது?

(வகுப்பு அமைதியாகிவிட. ஆசிரியரின் முகம் இருண்டுவிட்டது)

ஆசிரியர்: எனக்கு மூளை இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும் மகனே…

கலாம்: அதேதான் ஐயா… மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான், நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது. (முடிந்தது…

நன்றி:
வாஞ்சூரார்

Monday, January 11, 2010

ஹிஜாப் விவகாரம் - பிரான்ஸ் சொல்வது என்ன











FOR BRIEF DETAILS ABT HIJAB SEE THIS CLIP :





NAGOREFLASH// THANKS 2 ONLINEPJ.COM

அநீதியால் நிகழ்ந்த அசம்பாவிதம் - ஏன் ?

6/01/10 காலையில் எழுந்ததும்"யாரையோ கொல செஞ்சிடாங்கலாம்"
என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு முதலில் ஒரு கனம் இது கனவோ? என யோசிக்க தோன்றியது..

யாருன்னு தெரியலையே என சொல்லிக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைதோம்.. போகும் போதே ஊர் மக்களின் பதிஷ்டமான மனநிலையை உணர முடிந்தது
எங்களுக்கும் தான்- இருக்காத பின்ன ) ஒரு வழியாக பெரும் கூட்டத்திற்கு மத்தியில் நுழைந்து பார்த்தால்,சடலம் ஒன்று சாக்கடையில் கிடக்க எல்லோரும் வேடிக்கை பார்க்க , போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையில் இருந்தார்கள்.

யாருங்க இது என்று விசாரித்தோம்:

இவர் fazulur rahman என்று சொல்லிக்கொண்டு அவரின் வீட்டை காட்டினார்கள் சிலர் -கேள்வி பட்ட பெயரா இருக்கே என்று நாம் யோசிக்கவும் " அது தாங்க ஒரு லேடீஸ் மேட்டரு பிரச்சனையா போனதே அதுல இவரு இன்வால்வாம் , அதற்க்கு பதிலடியாக யாரோ இந்த கொலையை செஞ்சி இருக்காங்க என்கிறார்கள் " என்றார்.



ஓவ் இவர் தான் சமீபகாலமாக அரசபுரசலாக பெயர் அடிபட்ட நபரா என்று சொல்லி கொண்டு இடத்தை நாம் காலி செய்ய, காவல்துறையும் சடலத்தை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி விட்டு கிளம்பினார்கள். பிரேதபரிசோதனை முடிந்ததும் அன்று மதியமே உடல் அடக்கம் செய்யப்பட்டது .

இது திட்டமிட்ட கொலை என்பதால் இந்த கொலை சம்மந்தமாக தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறது காவல்துறை பலரை விசாரித்து வருவதாக சொல்கிறார்கள். கொலையாளிகளை நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது .

இதுபோக பல நம்ப முடியாத கட்டுக்கதைகள் கொலை சம்மந்தமாக
உலா வருவது வேடிக்கையாக இருக்கிறது. பெரும்பாலும் இவை வெளிநாட்டு வாழ் நாகூரார்களிடம் உலாவுகிறது என்பது கூடுதல் செய்தி.

பொதுவாக இது போன்ற கொலை சம்பவங்கள் எங்கு நடந்தாலும் ஏன் இந்த கொலை..?? என்ற உடன் பலர் பலவிதமாக காரணம் சொல்வார்கள்...

ஆனால் இது போன்ற கொலைகள் தடையத்தோடு சில செய்திகளையும் அதாவது காரணத்தையும் விட்டு செல்கின்றன...

" நான் அல்லது நாங்கள் பாதிக்கப்பட்டோம்-யாரால் பாதிக்க பட்டோமோ அவர்களை தண்டிக்கிறோம் "என்ற பதிவு செய்யா வாக்குமூலம் இது போன்ற கொலைகளில் தெரிகின்றது.

இதைதான் பொதுவாக தீவிரவாததிற்க்கு ஒரு அடிப்படை விளக்கமாக சொல்கிறார்கள் >

" எங்கு அநீதி இழைக்கபடுகிறதோ அங்கு தீவிரவாதம் தலைதூக்குகிறது "

இதை வேறு விதமாகவும் சொல்லலாம்

" எங்கு நீதி மறுக்கப்படுகிறதோ அங்கு தீவிரவாதம் தலைதூக்குகிறது"


ஒரு சாதாரண மனிதன் பாதிக்கபடும்போது அவன் தன்னை பாதிப்புக்குள்ளாகிய நபரை அவன் செய்த தவறுக்கு ஏற்ப அரசாங்கத்தால் தண்டனை வழங்க பட வேண்டும் என்று துடிக்கிறான். அரசாங்கம் செய்ய தவறும்போது தானே தண்டிக்க முன் வருகிறான்

இதனால்
1. பாதிக்கபட்டவன் மனம் ஆறுதல் பெறுகிறது

2. செய்த தவறுக்கு உடனடி தண்டனை வழங்கபட்டால்
மற்றவர்கள் இது போன்று தவறு செய்ய யோசிப்பார்கள்,இதனால் தவறுகள் குறையும்.

இப்படி எங்கெல்லாம் அரசாங்கத்தால் செய்த தவறுக்கு உடனுக்கு உடன் தண்டனை வழங்க படுகிறதோ அங்கெல்லாம் இது போன்ற எதிர் தாக்குதல்கள் இல்லாமல் போகும்.
(இதனால் நாமே அவனை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போகிறது)
இல்லையென்றால் இதுபோன்ற கொலைகளை உலகம் சந்தித்து கொண்டு தான் இருக்கும்.

சட்டம் கடுமையாக இருந்தால் மட்டும் போதாது அந்த சட்டம் பாரபச்சம் இல்லாமல் இருக்க வேண்டும் . தப்பு செய்வது யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்க பட வேண்டும் மிக முக்கியமாக உரிய காலத்திற்கு உள்ளாக தண்டிக்க பட வேண்டும் அப்போது தான் இது போன்ற கொலைகள் முடிவு பெரும் .

ஆனால் இப்போதைய காலங்களில் இந்தியாவில் இது சாத்தியமா ? குதிரை கொம்புதான் !!

நமதூரில் நடந்த கொலையை பொறுத்தவரை இதற்கு முன் நடந்த சில விரும்பதகாத நிகழ்வின் பின்னணில் தான் இந்த கொலை நடந்ததாக தெரிகிறது.

இதற்கு முன்பே இவர்கள் உரிய முறையில் தண்டிக்க பட்டிருந்தால் இந்த கொலையை இன்ஷாஅல்லாஹ் தடுத்திறுக்கலாம். இவர்கள் தண்டனையில் இருந்து தப்பியதால் இன்று யாராலோ தண்டிக்க பட்டிருக்கிறார்கள்

சிலர் இது தவறு என்கிறார்கள் ,சிலர் இது தேவை தான் என நியாய படுத்துகிறார்கள் ..

அரசாங்கம் செய்யவேண்டிய செயலை தனிமனிதன் செய்தால் அது தவறு தான் ஆனால் அரசாங்கம் செய்யவேண்டியதை செய்ய வில்லை என்றால் ??
என்ன செய்வது என்ற பாதிக்கப்பட்டவர்கள் கேட்பதற்கு இன்னும்
பதில் இல்லை .. ஆனால் “ஒரு சரியான இலக்கை அடைய தவறான வழிமுறையை கையாள்வது தவறு” எல்லோரும் இது போல் சிந்தித்தால் என்ன ஆவது ??!!!

இவற்றுக்கு யாரை குறை சொல்வது என்றே தெரியவில்லை !!!!

எனவே தான் இயற்கை மார்க்கமாம் இஸ்லாம் குற்றவியல் சட்டங்களை கடுமையாக ஆக்கி இருக்கின்றது . இநத சட்டத்தை எந்த நாடு முறையாக பயன் படுத்துகிறதோ அங்கே இது போன்ற குற்ற செயல்கள் அரிதாக தான் இருக்கும் .

இஸ்லாமிய ஆட்சி மட்டுமே இவைகளை சாத்தியமாக்கும் அதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதை வேடிக்கை பார்க்கும் யோகம் நமக்கு என்று தான் என்ன தோன்றுகிறது .

ஒரு முஸ்லிம் பெயரளவில் இல்லாமல் முழு இஸ்லாமியானாக இஸ்லாத்தின் கடமைகளை தன் வாழ்வியல் நெறியாக ஏற்று அதன் படி நடந்தால் மட்டுமே அவன் இம்மையிலும் , மறுமையிலும் வெற்றி பெற முடியும்.இது போன்ற நிகழ்வுகளையும் தவிர்க்க முடியும் .

இன்ஷால்லாஹ் அல்லாஹ் நம்முடைய வாழ்க்கையையும் , நம் சமுதாயத்தின் வாழ்வையும் அமைதியாக்கி வைப்பானாக !

-அல்லாஹ்வே மிக அறிந்தவன்

Sunday, January 10, 2010

இன்டர்நெட்டில் உலா வரும் KOOBFACE என்ற கம்ப்யூட்டர் வைரஸ்

Koobface என்ற வைரஸ் தற்போது உருவாகி கம்ப்யூட்டர்களை பழுதாக்கி வருகிறது. சமூக உறவு இணையத்தளங்களான facebook, twitter மற்றும் my space ஆகிய தளங்களை இது அதிகமாக தாக்கி வருவதாக தெரிகிறது. Sky News தகவலின்படி face book இணையதளமே அதிகமாக பாதிப்புள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது.

இது 2008-ம் ஆண்டே கண்டுப்பிடிக்கப்பட்டாலும் இப்போது தான் விஸ்வரூபம் எடுத்து வருகிறது You tube இணையதளத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து வீடியோக்களில் இந்த வைரஸ் மறைந்து இருந்து யாரேனும் அந்த வீடியோக்களை கிளிக் செய்யும்போது கம்ப்யூட்டருக்குள் ஊடுருவி 3 நிமிடத்திற்குள் ஒரு புதிரை விடுவிக்கும்படி கேட்கும். அப்படி முடியாத பட்சத்தில் கம்ப்யூட்டர் வேலை செய்வதை நிறுத்தி விடும்.



I recently had an email from a friend on Facebook, with a link to a Secret Video by Tom. This takes the social engineering route of telling you that your Flash player is out of date, and asks you to download an update. It lies. It's an attempt to install the Koobface worm, which only affects Microsoft Windows. For details, see Koobface remains active on Facebook or W32/Koobface.worm
Don't install it: just delete the email. If you did install it, you need to run anti-virus software to remove it.
Apparently, a similar attack is being made on MySpace users.


NAGOREFLASH
Related Posts Plugin for WordPress, Blogger...