(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, November 4, 2009

மாவீரன் திப்பு சுல்தான்-உலகின் முதல் ராக்கெட்டு

மாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை - உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய விடுதலைப் போரின் விடிவெள்ளி- .

காந்திஜி ‘யங் இந்தியா’ 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்;




‘மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்றும் எழுதுகிறார்கள்.

ஆனால் அவர் அப்படிப் பட்டவரல்ல. அதற்கு நேர்மாற்றமாக அவர் இந்துக்களுடன் நல்லிணக்கத்தை கடைப்பிடித்திருந்தார். சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாருக்கு திப்பு எழுதிய 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மைசூர் அரசின் தொல்பொருள் ஆய்வு நிலையத்தில் இருக்கிறது.

அவை கன்னட மொழியில் எழுதப் பட்டவை. அவற்றில் ஒரு கடிதத்தில் திப்பு சங்கராச்சாரியாரின் கடிதம் தன்னிடம் கிடைக்கப்பெற்றதை தெரியப் படுத்தி, அவரை தனக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், மற்றும் உலக அமைதிக்காகவும் ஒரு யாகம் நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், நன்மக்கள் இருக்கும் இடத்தில்தான் மழை பெய்யும் என்பதைச் சொல்லி சிருங்கேரியிலிருந்த சங்கராச்சாரியாரை மைசூருக்கே திரும்ப வந்துவிடும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவரது இந்தக் கடிதம் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.’

மேலும் ‘திப்பு சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்‘ எனவும் காந்தி ‘யங் இந்தியா’வில் எழுதினார்.

விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்?

சாரதா கோவிலை மறுநிர்மாணம் செய்வதற்காக சிருங்கேரி மடத்திலிருந்து சங்கராச்சாரியார் திப்பு சுல்தானுக்கு கடிதம் எழுதினார். திப்பு சங்கராச்சாரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரங்களாக அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இருக்கின்றன.

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தனது ‘Present Cresis of Faiths’ என்ற நூலில் குறிப்பிட்டார், ‘திப்பு பல சந்தர்ப்பங்களில் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் நாட்டு நலனுக்காக பூசைகள் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்பாக, ஒருமுறை சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதல்படி சஹஸ்ர சண்டி ஜபம் நடத்தப்பட்டபோது திப்பு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.

’ கோழிக்கோட்டில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வந்தது போதாமல் கொச்சியில் உள்ளவர்களையும் இஸ்லாமை தழுவச் செய்வது தன்னுடைய ஜிகாத் என்று அறிவித்த ஒருவருக்கு இந்துக்களின் ஆன்மீகத் தலைவரான சங்கராச்சாரியார் ஏன் கடிதம் எழுதினார்?

இஸ்லாமிய மத வெறியரான ஒருவர் நாட்டு நலனுக்காக இந்துமத முறைப்படி யாகங்கள் செய்யும்படி ஏன் சங்கராச்சாரியாரிடம் கேட்டுக் கொண்டார்?

‘இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என்று வரலாற்று புத்தகத்தில் எழுதிய ஹரி பிரசாத் சாஸ்திரி அதற்கு ஆதாரமாக மைசூர் கெசட்டை காட்டினார்.

ஆனால் மைசூர் கெசட்டை ஆய்வு செய்து அதன் புதிய பதிப்பை எடிட் செய்த பேராசிரியர் ஸ்ரிகந்தையா, ‘3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை.

மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை‘ என்கிறார். மைசூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரிகந்தையாவின் கண்ணில் படாத ஒரு சம்பவம் கல்கத்தா பல்கலைக் கழக சம்ஸ்கிருத துறைத் தலைவரான ஹரி பிரசாத் சாஸ்திரி கண்ணில் எப்படி பட்டது?

இந்திய வரலாறு எந்த அளவிற்கு திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இவை மிகச்சிறிய உதாரணங்கள். வரலாற்றுத் திரிபுகளுக்கு மத்தியில் உண்மையைத் தேடுவது வைக்கோல் போருக்குள் ஊசியை தேடுவதை விட சிரமமானதாகியிருக்கிறது.

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். ‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு.

முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான ‘ஆயுதமான’ பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
*************
‘பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28

திப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை.
***************
திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து,

திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது ‘காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்?‘ என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா.

முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

‘திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர்.

சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்’ என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார். ‘திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக’ காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது. நன்றி: திண்ணை
ஆதாரச் சுட்டிகள்:Dr. K. Hussain - Prof Sheik Ali - http://www.tipusultan.org/index.htm About Dewan Purniah - http://www.kamat.com/jyotsna/blog/purnaiah.htm Dr. K.L. Kamat - http://www.kamat.com/kalranga/itihas/tippu.htm விடுதலை - http://viduthalai.com/20080106/news10.html கோபா வலைப்பதிவு - http://blackboards.blogspot.com/2007/01/blog-post_16.html சமண/பௌத்த மதங்களை அழித்த சைவம் - http://www.yarl.com/forum3/index.php?showtopic=16188&mode=threaded
நன்றி : http://ibnubasheer.blogsome.com/2008/02/15/p74/
----------------------------------------------------


The Sword of Tippu Sultan and Engravings on it

History of the SwordOn the verge of defeat, Tippu lay critically injured in the battlefield. But he still had his favorite sword with him. It is said a British soldier tried to snatch away the royal sword, but Tippu killed him with the same sword that he intended to possess!

After the war, the sword was sent to London with other loots. After India's independence, it was brought back to India, only to be smuggled out as a collectible. The federal authorities seized it in 1988 and retained in India.
திப்பு சுல்த்தானின் போர் வாள்
போரில் கடுமையாக காயமடைந்து தோல்வியின் விளிம்பில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையிலும் தனக்கு உகப்பான இந்த வாளைப் ப்றிக்க முயன்ற ஆங்கிலேய சிப்பாயை இந்த வாளாலேயே கொன்றார் மாவீரர் திப்பு.
----------------------------------------------------------------------

Tippu's Toy
The mechanical 'Tipoo's Tiger' was captured at Srirangapattana in 1799 and was exhibited at the East India Company's headquarters in Leadenhall Street. The tiger roars and the British officer screams. ---Picture Courtesy : The East India Company
இது தான் மா வீரர் திப்பு மிக பிடித்தமான விளையாட்டு சாமான்.சீறும் புலியின் கால்களில் சிக்கி கதறும் ஆங்கில படை வீரன். http://www.kamat.com/kalranga/itihas/tippu.htm
------------------------------------------------------------
மாவீரர் திப்பு சுல்தான் வரலாற்று மற்றும் உபயோகித்த பொருட்களின் புகைப்பட்ங்களை காண இத்தளத்திற்க்கு செல்லவும். http://www.tipusultan.org/gall.htm
------------------------------------------


உலகின் முதல் ராக்கெட் (ஏவுகணை) ஏவுகணையை ஏவியவர். திப்பு சுல்தான் -வ செங்கோ

சீதையின் தலை மயிரை ஒரு கையில் பற்றித் தூக்கித் தன் தொடையில் உட்கார வைத்துப் புஷ்பக விமானத்தில் ஏறிப் போனார் இராவணன் என இராமாயணம் கதைக்கிறது.

வானூர்தியில் சீவகன் பயணம் செய்தான் என சிந்தாமணி கூறுகிறது. வேங்கை மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த கண்ணகியை வானுலகத்தில் இருந்து வந்து இறங்கிய கோவலன் தன்னுடன் ஏற்றிக் கொண்டு வான்வழியே விண்ணுலகம் சென்றான் என்று சிலப்பதி காரம் சித்தரிக்கிறது. இவையெல்லாம் கதைகள், கற்பனைகள். அளப்புகள். நடப்புகள் அல்ல.

ஆனால் உலகின் முதல் ராக்கெட் (ஏவுகணை) இந்திய நாட்டின் தென் பகுதியில் இருந்துதான் ஏவப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருப்பது உண்மை. வெறும் புகழ்ச்சியல்ல. ஏவுகணையை ஏவியவர். திப்பு சுல்தான். மைசூர் புலி என வரலாறு போற்றும் அய்தர் அலியின் மகன்.

பொது ஆண்டு 1790+இல் பிரிட்டிஷ், பிரெஞ்ச் படைகளுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்தவர் திப்பு.

914 மீட்டர் தூரத்திற்குச் சென்று இலக்கைத் தாக்கும் ஆற்றல் இந்த ஏவுகணைக்கு இருந்தது. இதற்குக் காரணம் இதன் கூடு (வெளிப்பகுதி) கனத்த இருப்புத் தகட்டினால் செய்யப்பட்டது. வெடி மருந்தின் சக்தியைத் தாங்கும் ஆற்றல் பெற்றிருந்தது.
அய்ரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டவைபோல, மரக்கூடு அல்ல.
மராத்தா போர்களில் 18+ஆம் நூற்றாண்டில் கைப்பற்றப் பட்ட `ராக்கெட்’டின் உரு ஒன்று ஊல்விக் பகுதியில் ரோடுண்டாவிலுள்ள இராணுவ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் ஒரு அறிவியலாளர், பொறியாளர் என்பதை அறிவோம். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான `நாசா’வுக்கு அவர் சென்றபோது ஏவுகணையை எரிய வைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் படத்தைப் பார்த்தாராம்; அவர்கள் திப்புவின் சிப்பாய்கள் என்பதை எடுத்துச் சொன்னார்களாம்.

கருநாடகா மாநிலம் சிறீரங்கப் பட்டனத்தில் உள்ள அய்தர் அலி - + -திப்புசுல்தான் நினைவிடங்களில் உள்ள காட்சியகங்களில் அவற்றின் படத்தைக் காணலாம். >
நன்றி: http://viduthalai.com/20070505/snews07.htm

படிக்க:>>
Tipu's contribution to Rocket Technology.....By Dr. APJ Abdul Kalam

Tipu Sultan and the art of Rocketry.....NATURE / VOL 400 / 8 JULY, 1999 / www.nature.com

படிக்க:>>
3000 பார்ப்பனர்களை திப்புசுல்தான் வலுக்கட்டாயமாக மதம் மாற்றினாரா? அவர் நெருக்கடியால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா?
-------------------------------------------------------------------------
விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்
விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்
"கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்" திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது.
"இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?" என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு.
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.
1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32.
மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.
திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.
1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர்.
இந்த அவமானம் தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.மூன்றாவது மைசூர்ப்போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1792) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது.
தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.
எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.
"30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது" என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.
பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.
மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அதுவரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ்.
பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு.
1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.
"ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்" என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.
திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், 'பிளாசி'ப் போரில் பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள்.
அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள்.
இதைக் குறிப்பிட்டு, "இப்போது நாம் 'தைரியமாக' திப்புவின் மீது படையெடுக்கலாம்" என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.
இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு.
3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.
அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன.
தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு.
ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல்,
ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை அவர்கள் கண்டதில்லை.
ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.
துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார்.
"திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்" என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.
பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "அந்தப் படை தன் தலைமையில் தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது" என்றும் கூறுகிறார்.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.
பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை.
புரட்சி வெற்றி பெற்ற பின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, "குடிமகன் திப்பு' என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு 'மைசூர் அரசின் சார்பாக' உடனே நிதியனுப்பிய திப்பு,
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு "உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்" என்று செய்தியும் அனுப்புகிறார்.
ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம்.
வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர்.
பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், "பென்சன் ராஜாக்கள்" என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.
தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.
காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது.
ஆனால் அரசுக்கான வருவாயை விவசாயம் தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.
"எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்" என்று திப்பு பிரகடனம் செய்கிறார்.
இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார்.
இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.
சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.
"ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்" என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன.
விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.
1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை.
மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால்பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு.
1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும்,
இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப் படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.
"அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்'' என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார்
வரலாற்றாய்வாளர் தோழர். சாகேத் ராமன்.
நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும்,
நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக் கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.
பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார்.
அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.
இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார்.
இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.
அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.
அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, "மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மை யானதா?" என்று கேள்வி எழுப்புகிறார்.
கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் 'சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை' உருவாக்கியது.
அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு.
அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.
"எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை.
கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி" என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார்.
"எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது" என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.
கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்;
முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.
திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது.
"விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்" என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.
தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள்.
அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு.
ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.
"ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்பு தான்" என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:
"சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது."
1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: "இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள். தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்." இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.
தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன."நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.
"வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு.
"விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்" என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு.
இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?
திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய்.
செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள்.
'சதக்' என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.
காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு.
அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.
ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்?
'உயிர் பிழைத்தல்' என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை.
1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் "ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்" என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.
இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.
"மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்" என்று பதறுகிறான் அவருடைய பணியாள்.
"முட்டாள்... வாயை மூடு" என்று உறுமுகிறார் திப்பு. ஆம்!
"ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.
திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது.
அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:
"நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.
""மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா"இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.
-மருதையன் புதிய கலாச்சாரம் டிசம்பர் 2006
NANDRI TO : http://www.tamilcircle.net/Bamini/puthiyakalacharam/2006/nov_2006/03.htmlNANDRI TO:http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=726&Itemid=130
-----------------------------------------------------------

மாவீரன் திப்புவின் பன்முக ஆளுமை.

'எவன் போரிட அஞ்சுகிறானோ அவன் தன் படை வீரர்களை போரிடுக என்று சொல்லுவதற்கு யோக்கியமற்றவன்" என்று பேசியவர் திப்பு.
ஹைதர் அலிக்கும் பகீருன்னிசாவுக்கும் மகனாக திப்பு நவம்பர் 20, 1750ல் தேவனஹள்ளியில் பிறந்தார்.
தனது 17வது வயதிலேயே மைசூர் போரில் வெள்ளையரை எதிர் கொண்டார். ஹைதர் அலியின் கொள்ளு தாத்தா ஷேக் வாலி முகம்மது காலத்தில் தான் 17ம் நூற்றாண்டில் தில்லியில் இருந்து குல்பர்க்கா நோக்கி குடும்பம் நகர்ந்தது.
குடும்பம் அரண்மனை சுற்றிய வேலைகளில் படர்ந்தது. அமைச்சர்களாக குடும்பத்தினர் நுழைந்தனர். ஹைதர் முறையான கல்வி இல்லாதவர். ஆனால் திப்புவிற்கு கல்வி வாய்ப்பை மேம்படுத்தினார்.
ஹைதரின் தளபதி காசிகான் திப்புவிற்கு ராணுவப் பயிற்சி அளித்தார். தந்தையாரின் மரணத்திற்குப் பிறகு திப்பு பெத்தனூர் எனுமிடத்தில் 1783, மே 4ல் எளிய விழாவில் பதவியேற்றார். 400 மைல் நீளமும் 300மைல் அகலமும் கொண்ட ஆட்சிப் பரப்பு. தமிழ்நாட்டில் திண்டுக்கல் வரை வந்திருந்தார்.

போர் என்றால் போர்க்களத்துடன் மட்டுமே இருக்க வேண்டும். அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கக் கூடாது¢ எதிரியின் குடும்பத்தாரும், குழந்தைகளும் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்பது திப்புவின் கட்டளை.
மத சகிப்புத் தன்மை குரானின் அடிப்படை என்று பேசுவார். அனைவரும் ஓர் சமூகமாக மாற வேண்டும் என்பது அல்லாவின் விருப்பமெனில் அது நடைபெறும்.
அதற்குரிய நற்காரியங்களில் மனம் செலுத்து , செய் என்றவர் திப்பு.
மதவெறியன் திப்பு என்று தீட்டப்பட்ட சொற்சித்திரங்கள் ஆதார வலுவின்றி நொறுங்கி வீழ்கின்றன.
இந்துக்கள் தான் அவருடைய தலைமை அமைச்சரும், ராணுவத் தளபதியுமாக இருந்தனர். பல இந்துக் கோவில்களுக்கு ஆண்டு தோறும் திப்புவின் கருவூலத்தில் இருந்து கொடை முறையாகச் செல்லும். அவரைப் பற்றிய ஆங்கிலேயரின் வரலாற்றுக் குறிப்புகள் திரித்துக் கூறப்பட்டவை என வரலாற்றாய்வாளர் பி.என்.பாண்டே போன்றோர் நிறுவியுள்ளனர்.

திப்பு கூடுதல் மதப்பற்றாளராக இருந்தாலும் தந்தையின் அடியொற்றி மதசகிப்புத் தன்மையை பின்பற்றினார்.
சிருங்கேரி கோயிலின் தலைமைப் பீடத்திற்கு கன்னட மொழியில் அவர் எழுதிய 30 கடிதங்கள் மைசூர் தொல்லியல் துறையால் 1916ல் கண்டுபிடிக்கப்பட்டன.
பொதுவாக அரசர்களின் கடிதங்கள் தங்கள் பெயர் மேலே குவிக்கப்பட்ட வடிவத்தில் தான் அமைந்திருக்கும். ஆனால் இக்கடிதங்களில் 'சுவாமிஜி" என்று கடிதத் தலைப்பிலும் திப்புவின் பெயர் கடித இறுதியிலும் காணப்படுகிறது.

மூன்றாம் மைசூர் போர் காலத்தில் தேசுராம் பாவ் மரத்தா ராணுவம் சிருங்கேரியைக் கொள்ளையடித்தது. சாரதா தேவி சிலையை இடமாற்றியது.
இதை அறிந்ததும் திப்பு இருந்த இடத்திலேயே சாரதா தேவி சிலையை நிறுவிட பெத்தனூர் மாவட்ட அதிகாரிக்கு உத்தர விட்டார்.
தனது கடிதத்தில் 'சிரித்துக் கொண்டே தீயசெயல் செய்பவர்கள் பின்னொரு காலத்தில் அழுது கொண்டே அதற்காக வருத்தப்படுவார்கள்" என்ற வடமொழிக் கவிதையை சுட்டிக் காட்டி எழுதுகிறார்.
அக்கோவிலுக்கு இரண்டு பல்லக்குகள் திப்வுவால் பரிசளிக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்களுக்கு திப்பு கொடுத்த மரியாதையை இக்கடிதங்கள் மூலம் நாம் உணர முடிகிறது.
நஞ்சன் கூடு லட்சுமி காந்த கோவிலுக்கும், மேல்கோட்டின் நாராயணசாமி கோவிலுக்கும் யானை, நகை உட்பட ஏராளமான பொருள்களை வழங்கியுள்ளார்.
கோவில் மணிஓசைக்கும் மசூதியின் தொழுகை அழைப்பிற்கும் சம மரியாதை தந்தார்.
மசூதி அருகே அமைந்திருந்த நரசிம்ம கோயில், கங்காதரேசுவரர் கோயில் இரண்டிலும் தினசரி வழிபாடு எவ்வித இடையூறுமின்றி திப்பு ஆட்சிக் காலத்தில் நடந்தது.
சில இந்துக் கோயில்களில் ஏற்பட்ட உள்சச்சரவுகளைக் கூட திப்பு தலையிட்டு தீர்த்து அமைதிப்படுத்தியதாக அறிய முடிகிறது.
அவரது அரசாங்க உயர் பதவிகளில் ஏராள இந்துக்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். நிதி மற்றும் வருவாய் - பூர்ணய்யா, காசாளர் - கிருஷ்ண ராவ், சட்டம்ஒழுங்கு - சம அய்யங்கார், வெளி நாட்டுத் தூதரக அலுவல் சீனுவச ராவ், அப்பாஜி ராவ் என்று பட்டியல் நீள்கிறது. சாதி மதத்திற்கு அப்பாற் பட்டு பொருத்தமானவரைத் தேர்வு செய்தல் என்ற அணுகுமுறையை அவர் கடைபிடித்தார்.

'இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு திப்பு அடையாளமாகத் திகழ்கிறார். தனது சொந்த மக்களின் ஆதரவைப் பெறாத எவராலும் பலம் வாய்ந்த அய்ரோப்பிய சக்தியை எதிர்த்து தொடர்ந்து போர்களை நடத்தியிருக்க முடியாது. திப்பு இராணுவத்தினர் மற்றும் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினார். இஸ்லாமின் அற்புதமான சூபி இயக்கத்தின் ஆர்வலர். இந்துக்களை மதிக்கத் தெரிந்தவர். இந்து சோதிடர்களிடம் கலந்து பேசத் தயங்காதவர்" என்று தனது யங் இந்தியா பத்திரிகையில் ஜன 1930ல் பெருமிதம் பொங்க காந்தி எழுதுகிறார்.

பிரெஞ்சு நாட்டுடன் உறவை பலப்படுத்திக் கொண்டார். புரட்சிகரமான எண்ணத்திற்கு இடமளிக்கும் 'ஜாக்கோபின் கிளப்" என்பதை திப்பு தொடங்கினார். அதில் இருந்து 59 உறுப்பினர்களுள் அவரும் ஒருவர். சுதந்திர, சமத்துவ, சகோதரத்துவ எண்ணங்கள் அங்கே பரிமாறிக் கொள்ளப்பட்டன. பிரெஞ்சுக் குடியரசின் 5ம் ஆண்டு நினைவை ஒட்டி 1797ல் இக்கிளையை துவக்கினார்.
அம்மன்றத்தில் ஜனநாயகக் கோட்பாடுகள், அரசியலமைப்புச் சட்டம், சட்டமியற்றும் முறைமைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. சுதந்திரத்துக்கான விடுதலை மரக் கன்று ஒன்றையும் அவர் நட்டார். தன்னை மன்னன் திப்பு என்றழைப்பதை விட 'சிட்டிசன் திப்பு" என்று பெருமிதம் பொங்க அழைத்துக் கொண்டார்.

ஆங்கிலேயர் வரவு ஆபத்தின் அறிகுறி. ஆங்கிலேயரிடமிருந்து தங்களது அரசுகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை காலத்தே உணர்ந்தவர் திப்பு. அண்டை நாட்டு அரசுகளை ஆங்கிலேயே எதிர்ப்புக்காகத் திரட்டியவர்.
பிரெஞ்சு, துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக் கொண்டவர். கான்ஸ்டான்டி நோபிள், பாரீஸில் தூதரகங்களை நிறுவியவர்.
மாவீரன் நெப்போலியனுடன் கடிதத் தொடர்பு கொண்டதாக அறிகிறோம். உலக நாடுகளில் மைசூரை அறியச் செய்தவர். 17 வயதிலேயே அன்றைய மதராஸில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிகளைக் கலக்கியவர்.
மீர் காசிம் போன்றவர்களைத் தோற்கடித்த பக்சார் வீரன் என்று புகழ் பெற்ற மன்றோவை காஞ்சிபுரத்தில் ஓட ஓட விரட்டியவர் திப்பு. பின்நாட்களில் நெப்போலியனை வென்ற ஆர்த்தர் வெல்லெஸ்லி கூட திப்புவின் முன் நிற்க முடியாமல் போனது வரலாறு.

மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்து திட்டமிட்டவர். நாணய அச்சடிப்பு, நாள்காட்டி அளவையியல், நிதி மற்றும் வங்கி வர்த்தகம், விவசாயம், தொழில், ஒழுக்க நெறிகள் என்ற பன்முக சிந்தனை செயல்பாடு கொண்டவர். அரசு எந்திர முறையில் மேற்கத்திய வடிவங்களை புகுத்திய முதல் ஆட்சியாளர் என மதிப்பிடப்படுகிறார்.

முதன் முதலாக வங்கி நிர்வாக முறையை வர்த்தகத்திற்கு பயன்படுத்தியவர் திப்பு. கூட்டுறவு வங்கி சிறு சேமிப்பு முறையை ஊக்குவித்தவர்.
தொழில் வர்த்தகம் ஆகியவற்றில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தவர். பட்டு, சந்தனம், மிளகு, ஏலம், தேங்காய், தங்கம், யானை, தந்தம் ஆகிய அனைத்து வியாபாராங்களிலும் மைசூர் புகழ் பெற்று விளங்கியது.
மேற்கு நாடுகளில் இதற்கானச் சந்தையை ஒழுங்கமைத்தவர் அவர். அந்நிய நாட்டினர் எவர் கையிலும் மேற்கூறிய வர்த்தகம் சிக்கிவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தினார்.
ஏற்றுமதி, இறக்குமதி அரசாங்கக் கட்டுப்பாட்டில் நடந்தது. ராணுவத் தளவாடங்களுக்கு மட்டுமல்லாமல் துணி, காகிதம், கண்ணாடி, சர்க்கரை போன்ற பலவற்றிற்குமான தொழிற்கூடங்களை அமைத்தார்.
கப்பல் கட்டுமான தொழிலை சிறப்பாக்கிட வேண்டும் என்ற கனவை வைத்திருந்தார். 100 கப்பல் கட்டுவதற்கான ஆணையை 1793ல் வெளியிட்டிருந்தார். சீரங்கப் பட்டினத்தில் இரும்பு எஃகு தொழிற்சாலையை நிறுவினார். தாரமண்டல் என அதற்குப் பெயரிட்டார்.
பெங்களுர், சித்ரதுர்கா, பெத்தனூர், சீரங்கப்பட்டினம் ஆகிய நான்கு இடங்களில் கிளைகளை நிறுவினார். பதூல் முஜாஹிதீன் எனும் இராணுவ பத்திரிகையில் ராக்கெட் குறித்து திப்பு எழுதியிருப்பதாக நாம் அறிகிறோம்.
'தாரமண்டல்" என்று பெயரிட்டு அப்பகுதியில் ராக்கெட் மற்றும் வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டதாகவும் திப்புவின் வீழ்ச்சியின் போது 9000 எண்ணிக்கையில் ராக்கெட் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்துல் கலாம் 'இந்தியாவில் ராக்கெட் தொழில்நுட்பம்" குறித்து 1991ல் ஆற்றிய உரையில் திப்புவின் தொழில்நுட்பம் குறித்து வியந்து பேசினார்.

பல நாடுகளிலிருந்து விதை மற்றும் தாவர வகைகளைக் கொணரச் செய்தார். உழுபவர்க்கு தரிசு நிலங்களை தந்து விவசாயத்தை மேம்படுத்தினார். அதோடு அந்த நிலங்களை வாரிசுதாரருக்கு உரியதாக்கிடவும், யாரும் அவர்களிடமிருந்து அபகரிக்க முடியாதென்பதையும் சட்டமாக்கினார்.
ஜாகீர் வரியை நீக்கினார். விவசாயத்திற்குக் கடனுதவி கொண்டு வந்தார். கட்டாய உழைப்பைத் தடை செய்தார். அவசியமற்ற வழக்குகளில் கால விரயம் ஏற்பட்டு விடாமல் தடுத்திட கிராமத் தகராறு தீர்ப்பாயங்களை ஊக்குவித்தார். தண்டனை முறைகளைக் கூட மாற்றினார்.
அபராதம், கசையடி போன்றவற்றை மாற்றி மரங்களை நடவேண்டும், குறிப்பிட்ட தாவர வகைகளை நட்டு இவ்வளவு காலம் பராமரிக்க வேண்டும்¢ இந்த அளவுக்கு வளர்க்க வேண்டும் என்றெல்லாம் தண்டனை முறைகளை உருவாக்கினார்.
தனது மகன் ஃபதே ஹைதர் அனுமதியின்றி வேறொருவர் தோட்டத்தில் காய் பறித்ததற்கு தண்டனை வழங்கினார்.
கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டில் கீழ்க்கண்ட வார்த்தைகளை பொறிக்கச் செய்தார். 'அரசாங்கம் இந்த அணையைக் கட்டி வருகிறது. பயிர், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிற்கான பாசன வசதியை எவரும் பெறலாம்".

சீரங்கப்பட்டினத்தில் ஜாமி அல் உமர் என்ற பெயரில் பல்கலைக்கழகம் நிறுவ பெரு விருப்பம் கொண்டார். ஃபாஜி அக்பர் என்ற பெயரில் செய்தி பத்திரிகை தொடங்கினார்.
அதில் எழுதினார். பெர்ஷியன், அரபி, உருது போன்ற மொழிகளுடன் கன்னடமும் மராத்தியும் அறிந்திருந்தார். ஐரோப்பிய மொழிகளில் பிரெஞ்சு, ஆங்கிலம் கற்றறிந்தார். தனது ஆட்சிக் காலத்தில் 45 புத்தகங்களை வெளியிட வைத்தார்.
அவருடைய நூலகத்தில் ஒளரங்சீப்பின் கையெழுத்துப் பிரதியான குரான் இருந்தது. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. சூபி துறவிகளின் மாபெரும் ஆல்பம் ஒன்றை தொகுத்து வைத்திருந்தார்.

புகையிலைப் பழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் திப்பு. திருமணக் கொண்டாட்டங்களில் ஆடம்பர செலவினங்களுக்கு கட்டுப்பாடு விதித்தார்.
ஆதரவற்ற பெண்களையோ, குழந்தைகளையோ விற்பதை தடைசெய்தார் என்ற செய்தி ஆறுதல் தரும் வேளையில் அப்படிப்பட்ட நடைமுறை வழக்கத்தில் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
மதுவிலக்கை அமுல்படுத்தியவர் திப்பு. 'மது விலக்கை மதரீதியாகப் பார்க்க வேண்டியதில்லை. பொருளாதாரம் சார்ந்த ஒன்று. துவக்கத்தில் நமது கருவூலம் பாதிக்கப்படலாம். ஆனால் நமது மக்களின் நன்னெறி உயரும். . நன்னடத்தை மிகுந்த எதிர்கால இளைஞர்களை உருவாக்க வேண்டியது நமது பொறுப்பு. நமது கருவூலக் கவலையை விட நமது மக்களின் நன்னெறி மற்றும் ஆரோக்கியம் உயர்ந்ததல்லவா?" என்று மீர்சாதிக் என்பவருக்கு 1787ல் தந்த குறிப்பில் நாம் காண முடிகிறது.

மனித குலம் கண்ணீருடனும் செந்நீருடனும் எழுப்பக் கூடிய மாட மாளிகைகளும் பெரும் அணைக்கட்டுகளும் நமது சாதனைகளாக முடியாது, புகழையும் சேர்க்காது என்றார். 'நாம் வாழ்வதற்கும் சாவதற்கும் மாபெரும் நோக்கம் இருக்க வேண்டும்.
நமது தேசத்தின் ஆன்மா விவசாயத்தில் இருக்கிறது. நமது வளமான நிலத்தில் நாம் தரும் உழைப்பிற்கு பலன் உறுதி. பஞ்சமும் தேவையும் அறியாமையாலோ சோம்பேறித் தனத்தாலோ அல்லது லஞ்ச லாவண்யத்தாலோ வருகிறது" என்று 1788ல் சுற்றறிக்கை ஒன்றை தனது அதிகாரிகளுக்கு திப்பு அனுப்பினார்.

ஆங்கிலேயரிடம் இருந்து தனது அரசியல் விடுதலைக்காக, சுதந்திரத்தைக் காப்பதற்காக உறுதியாகப் போராடியவர். உயிர் நீத்தவர். நூறாண்டு குள்ளநரியாக வாழ்வதை விட ஒருநாள் சிங்கநிகர் வாழ்க்கை போதும் என்றார்.
உலகளாவிய திப்புவின் முயற்சிகளை முறியடிப்பதில் பிரிட்டன் முக்கிய பங்காற்றியது. ஆங்கிலேயர்கள் தனியாக திப்புவோடு போராடி வெல்ல முடியவில்லை. மராட்டிய மராத்தாக்களுடனும் அய்தராபாத் நிசாமுடனும் உடன்பாடு கொண்டனர்.
அவர்களின் உதவியுடன் மைசூர் சீரங்கப்பட்டினத்தில் திப்புவைத் தோற்கடித்தனர். 1792 மார்ச் 22ல் திப்பு ஆங்கிலேயருக்கு உடன்பட்டு கையெழுத்திட நேர்ந்தது. தனது ராஜ்யத்தில் பாதியை இழந்தார்.இருமகன்களை பிணை வைக்க நேர்ந்தது. கருணையில்லாமல் கார்ன் வாலீஸ் அவரது மகன்களை கல்கத்தாவிற்குக் கொண்டு சென்றார்.

திப்பு மைசூர் போர்கள் நான்கிலும் பங்கேற்றவர். கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடமிருந்த 'லீடன்ஹால் ஸ்டிரீட்" திப்பு குறித்த நடுக்கத்திலிருந்தது. முதல் இரண்டு போர்களிலும் ஆங்கிலேய ராணுவம் திப்பு மற்றும் இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டது. மைசூரில் போர் குதிரைகள் இறக்கை கட்டிப் பறந்தன போன்று போரிட்டதாக அலெக்சாந்தர் போப் என்பவர் பதிவு செய்கிறார்.

செப்.1780களில் 36 ஆங்கில ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்ட அய்ரோப்பிய வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். பிப்.1782ல் கர்னல் பிரைட்வொயிட் என்பவரை தஞ்சாவூருக்கு அருகில் திப்பு தோற்கடித்ததாக அறிகிறோம். 1400 சிப்பாய்களையும் 100 அய்ரோப்பியர்களையும் அவர்களது ஆயுதங்களுடன் கைப்பற்றியதாகத் தெரிகிறது.

ஆங்கிலேயரின் தொடர் வற்புறுத்தல்களுக்கு திப்பு உடன்பட மறுத்தார். நான்காவது மைசூர் போரில் மே 4, 1799ல் திப்பு வீர மரணம் எய்தினார். சாதாரண படை வீரனைப் போன்றே தனது தாய் நாட்டைக் காப்பதற்காக தெருவிறங்கிப் போராடினார்.
ஆங்கிலேய ராணுவத்தினன் ஒருவன் அவரது உடைவாளைப் பறிக்க முயன்ற போது திப்பு அவனை தன் வாளால் வீழ்த்தினார் என்று அறிகிறோம். புகழ் வாய்ந்த அவ்வாள் லண்டன் கொண்டு செல்லப்பட்டது. 1988ல் தான் இந்தியா அவ்வாளை மீண்டும் பெற்றது.
அவரது வாரிசுகள் திப்புவின் ஆட்சியை மீண்டும் கொணர்வோம் என்ற முழக்கத்தில் 1806 வேலூர் எழுச்சியில் முன் நின்றார்.

எளிய வாழ்க்கை முறையை விரும்பிய திப்பு பொதுவாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய உணவு வகைகளையே எடுத்துக் கொள்வார். கடிதங்களைத் தானே எழுதும் பழக்கம் உடையவர். மாபெரும் நாட்டுப்பற்றாளராக, குடிமக்களின் மேன்மை குறித்த சிந்தனையாளராக, படிப்பறிவு மிக்கவராக, போராடும் வீரனாக என்று பல்வேறு சிறப்புகளுடன் வாழ்ந்தவர் திப்பு. NANDRI TO : INTERNET.
------------------------------------------------------------------
பராமரிப்பற்ற நிலையில் திப்புவின் பீரங்கி!
http://www.tmmkonline.org/tml/others/108625.htm
-----------------------------------------------------------------------
கீழ் கண்ட தளங்களுக்கு சென்று மேலும் பல அறிய தகவல்களை தெரியலாம்.

Tipu Sultan A BiographyBy Prof. Sheik Ali(Former Vice Chancellor of Goa & Mangalore Universities)
Tipu's ReignChronology of EventsCrusader for FreedomFreedom Fighter par ExcellencePowerful System of Administration
Secular PolicySecular PolicyRestoration of Sringeri MuttOther temples patronised by TipuHindus in important civil postsHindus in important army postsFair policiesThe French alliancePolicy towards prisoners of warSome more on his impartiality...
Patriotic fervour The first freedom fighterHis efforts on gathering supportA model army...a dread for enemiesProgressive thinking & Modernisation
Development workTrade and CommerceHis interest in AgricultureSocial ReformsWestern political and economic development
ConclusionRevolutionary thoughtsHis message to convey to the posterity
Significance Of Tipu's LifeVision and mission in lifePolitical freedom from British Alliance of the indian powersTechnology, Commerce, Industry & EducationIndustry in Karnataka and Foreign tie upsEmbodiment of Hindu - Muslim unity Membership with Jacobin ClubTipu's contribution to Rocket Technology
International RelationsExternal PolicyExternal RelationsCommercial RelationsRelations with TurkeyRelations with France
Alliance against the EnglishFrench ConnectionFreindship with Louis XVITipu's dream of a RepublicRelations with AfghanistanRelations with Iran
http://www.tipusultan.org/biog.htm
---------------------------------------------------

LOOK AT THIS KID'S-SHAME ON US

Look at this kid ...... he is not a normal kid and he is thanking Allah for everything he has ..... look at us who are perfectly normal and we have forgotten Allah .... SHAME ON US !!!

pls forward it to as many as u can to wake them up from the life of darkness and come back to Allah and thank him for everything he has given us which others dream of ...

MAY ALLAH ACCEPT ALL OF US IN HIS WAY and live according to what he wants and what his PROPHET MUHAMMAD (s.a.w.s) said ... AAMEEN
may ALLAH forgive us all for what we did and may he protect us from doing it again AAMEEN !!!!









Dear Brothers - Please offer SALAAH (prayer/ namaz ) regularly, without giving any excuse. (Salah is the 2nd pillar of Islam, you and I very well know that Islam is based on 5 pillars and how can we miss one – Alhamdulillah!
Just think that when a person without legs can perfom Namaz then why can’t we?


It is a good motivation for us.


May Allah (swt) make things easy for us all and Grant us Janatul-Firdous – Aameen – Summa- Aameen!

Tuesday, November 3, 2009

வேடிக்கை என்றால் அது நாகூர் !!!

“வேடிக்கை” என்ற வார்த்தைக்கு நாகூர் அகராதியில் விதவிதமான அர்த்தங்கள் உண்டு.

வேடிக்கை என்றால் அது நாகூர் !!!

வேடிக்கை’ என்றால் வினோதம், விசித்திரம், ஆச்சரியம் என்ற அர்த்தமும் உண்டே என்று நீங்கள் வினவலாம். அதையும் தாண்டி எத்தனையோ அர்த்தங்களை எங்களூர் இயல்பாய் கற்பித்திருக்கிறது.

1.கந்துரி கப்பல் வேடிக்கை,
2.கொடி ஏற்றும் வேடிக்கை,
3.வாண வேடிக்கை,
4.சந்தன கூடு வேடிக்கை ,
5.சந்தன பூசும் வேடிக்கை
6.பீர் வேடிக்கை
7.கால் மாட்டு தெருவில் பொருட்கள் வேடிக்கை
8.கொடி இறக்கும் வேடிக்கை என்று எத்தனை(?) வேடிக்கை (!)


“வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?”

என்று மகாகவி பாரதி சொல்லும் வேடிக்கை மனிதர்கள் வீணர்கள்... இவர்கள் தான்

வேடிக்கை வேடிக்கை என்று .., உன் மறுமையும் வேடிக்கையாய் ஆகிவிடுமே சகோதரா?

நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் சற்று யோசி .. இஸ்லாத்திற்கும் வீண் வேடிக்கைகும் என்ன உறவு சொல் ?

நான் தற்போது மார்க்கம் பேசவில்லை - ஏன் என்றால் உன்னை வலிகேடுப்பவர்களும் மார்க்கம் என்ற போர்வையை தான் பயன்படுத்துகிறார்கள் .. உனக்கு இறைவன் வழங்கிய திருமறையை ஒரு முறை பொருள் உணர்ந்து படி சகோதரா !

இன்ஷாஅல்லாஹ் இறைவன் உனக்கு நேரான வழியை காண்பிப்பான்!
நான் உன் சகோதரன் என்ற முறையில் உன்னிடம் முறை இடுகிறேன் !
நீ என்னை அறியாமையால் திட்டி தீர்த்தாலும் , அப்போதும் உனக்காக இறைவனிடம் ...


NAGOREFLASH

சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் .

சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் .

ஷரீஅத் - (மார்க்கம் .)

தரீக்கத் -- ( ஆன்மீகப் பயிற்சி பெறல்)

ஹக்கீக்கத் -- ( யதார்த்தத்தை அறிதல் )

மஃரிபத் -( மெஞ்ஞான முக்தியடைதல் )


என இவர்கள் இஸ்லாத்தை நான்காக வகுத்திருப்பதை அறிந்து கொள்ள முடியும் . இவை பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது .

ஷரீஅத் .

ஸூபிகளிடத்தில் ஷரீஅத் எனப்படுவது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற சாதாரண மார்க்க அனுஷ்ட்டானங்களைக் குறிக்கும். இவர்களின் கருத்துப்படி ஆரம்ப நிலையிலுள்ள, உண்மை - யதார்த்தத்தை அறியாத பண்படாத சாதாரண பாமர மக்களுக்குரிய ஆத்மீகப் பயிற்சி நெறிகளே இவ்வகை வணக்கங்களாகும் . இவற்றால் மனிதனுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை , நெல்லை மூடியிருக்கும் உமி போன்றதே ஷரீ அத் சட்டங்கள். உள்ளேயிருக்கும் அரிசியைப் போன்றதுதான் ஹக்கீக்கத். ஆரம்பப் பருவத்தில் உள்ளிருக்கும் அரிசியைக் கெடாமல் காக்க உமி அவசியம்தான் . எனினும் காலப்போக்கில் கதிர் முற்றியதும் அறுவடையின் பின் உமியை நீக்கித் தூர வீசி விடுவது போன்று ஹக்கீக்கத்தை அறிந்தவுடன் ஷரீஅத்தை - மார்க்க அனுஷ்ட்டானங்களைத் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்பதே இவர்களின் கோற்பாடு . ஆரம்பத்தில் ஒரு பயிற்சி நோக்கிலேயே இவற்றை ஒருவன் செய்கின்றான். நெல்லின் உள்ளிருக்கும் அரிசியை அடைய விரும்புபவன் உமியைத் தூக்கி வீசி விடுவது அவசியம் போன்று ஒருவன் யதார்த்தத்தை அறிந்ததும் வெளிப்படையான அமல்களை - மார்க்க அனுஷ்ட்டானங்களை விட்டு விட வேண்டும் என்பதே இவர்களது கோற்பாடு.

பிரபல ஸூபியான கஸ்ஸாலி இமாம்தான் இவ்வாறான ஒரு கொள்கையை அப்பாவி சமூகத்தின் மத்தியில் புகுத்தி லட்சக் கணக்கான மக்களின் வழிகேட்டுக்குக் காரணமாயிருந்தவர் . இவர் ஒரு மார்க்க அறிஞரும் கூட . எனினும் ஸூபித்துவத்தால் கவரப்பட்டு இந்நிலைக்கு ஆளாகி விட்டார். இவர் இறுதித் தருவாயில் இவ்வழிகெட்ட கொள்கைகள் அனைத்தையும் விட்டு மீண்டு தவ்பாச் செய்து விட்டதாகவும், ஸூன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கைக்கு மாறி விட்டதாக வாக்குமூலம் கொடுத்ததாகவும் வரலாறு உண்டு என்பது தனி விடயம். இவர் எழுதிய' இஹ்யா உலூமுத்தீன்' எனும் நூல் பிரபலமானது. இதை இவர் நான்கு பகுதியாகப் பின்வருமாறு வகுத்திருக்கின்றார் .

அ- இபாதாத் - வணக்கங்கள் .
ஆ- ஆதாத் - பழக்க வழக்கங்கள் .
இ- முஹ்லிகாத்- மனிதனை அழித்துவிடத்தக்க பாவங்கள் .
ஈ- முன்ஜியாத் - நரகை விட்டும் பாதுகாக்கக் கூடியவைகள் .

இப்படி நான்கு பகுதிகளாகப் பிரித்து விட்டு நான்காவது பகுதி இருக்கின்றதே - அதாவது முன்ஜியாத் - நரகை விட்டும் பாது காக்கக் கூடியவைகளின் பட்டியலில் அவர் குறிப்பிடுவது என்ன தெரியுமா ? நரகை விட்டும் பாதுகாக்கும் ஒரே வழி தரீக்கத் மாத்திரமே !! தரீக்கத்தை -அதாவது ஆத்மீகப் பாதையை அடைய வேண்டுமா ? ஷைக்கிடம் பைஅத் செய் ,அவருக்கு அடிமையாகு , அவரிலே அல்லாஹ்வைக் காண் , அவர் சொல்வதைச் செய். அப்படி நீ தரீக்கத்தின் வழி நடந்தால்தான் உன்னால் ஹக்கீக்கத்தை அடைய முடியும் , ஹக்கீக்கத்தை அறிவதுதான் நரகை விட்டும் உன்னைக் காக்கும் என்பதே அதன் விளக்கம் . இதன் படி இபாதத்கள் , தொழுகை நோன்பு , ஹஜ் போன்ற வணக்கங்கள் செய்வது எதுவுமே ஒரு முஸ்லிமை நரகை விட்டும் காப்பாற்றாது . மாறாக ஹக்கீக்கத்தைத் தெரிந்தால்தான் சுவர்க்கம் என்பது தான் கஸ்ஸாலியின் கொள்கை என்பது தெளிவாகின்றது .

ஆனால் அல்குர்ஆனிலோ அல்லாஹ் கூறுகையில் ...
நரக வாதிகளைப் பார்த்து சுவர்க்க வாதிகள் நீங்கள் நரகத்துக்கு வரக் காரணம் என்ன என்று கேட்ட போது அவர்கள் என்ன பதில் கூறுவார்கள் என்று இவ்வாறு கூறுகின்றான் ..


சுவன வாதிகள் நரகுக்குச் சென்ற பாவிகளிடம் ' நீங்கள் நரகம் வரக் காரணம் யாது' என்று வினவுவார்கள் . அதற்கு அவர்கள் நாங்கள் தொழக் கூடியவர்களில் இருக்கவில்லை , ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை ,வீணர்களுடன் கூடித்திரிந்தோம், நியாயத் தீர்ப்பு நாளைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தோம்' என்பார்கள் . (ஸூரா முத்ததிர் 41)

நபி (ஸல் ) அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே.. நான் கடமையான தொழுகையைத் தொழுது ,ரமழானில் நோன்பு நோற்று, ஹலாலானவற்றை எடுத்தும் ,ஹராமானவற்றைத் தவிர்ந்தும் வாழ்கின்றேன் .இது தவிர வேறு எதுவுமே நான் செய்யவில்லை . இப்படியிருக்க நான் சுவர்க்கம் செல்வேனா? என்று கேட்க நபியவர்கள் ஆம் என்று கூறினார்கள் .
( ஆதாரம் முஸ்லிம் 18 )

இவ்விரு ஆதாரங்களின் மூலமாகத் தொழாதிருத்தல், இபாதத் செய்யாதிருத்தல்தான் ஒருவன் நரகம் செல்லக் காரணமாகின்றது என்பதும் தொழுவதும் இதர இபாதத்களைச் செய்வதும் சுவனம் சேர்க்கும் என்பதும் தெளிவாகின்றது . ஆனால் கஸ்ஸாலியோ தரீக்காவில் சேராவிட்டால் சொர்க்கமேகிடையாதுஎன்கின்றாரே ??

இவ்வாறே கஸ்ஸாலி இமாமவர்கள் அறிவை இரண்டு வகையாகப் பிரிக்கின்றார்கள். உலக அறிவு , மறுமையின் அறிவு என்று . மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் சரிதானே .. இதிலென்ன தவறு என்பார்கள் . ஆனால் கஸ்ஸாலி அதற்குக் கூறும் வியாக்கியானத்தைப் பாருங்கள்...

'உலக அறிவென்பது உலகில் செய்யும் இபாதத் ,நல்ல கெட்ட காரியங்கள் ஹராம் ஹலால் பற்றிய அறிவாகும் . மறுமையின் அறிவென்பது ஹக்கீகத்துடைய அறிவாகும். அதாவது அல்லாஹ் தான் இப்பிரபஞ்சமாக வெளியாகியுள்ளான் எனும் ஹக்கீக்கத்தை-யதார்த்தத்தை சூபித்துவப் பாசறையில் தரீக்காவின் வழியில் பயின்று அறிவதே மறுமையின் அறிவாகும் . இந்த அறிவு அதாவது(ஹகீக்கத்தை அறிதல்) மறுமை அறிஞர்களின் (சூபியாக்களின்) தீர்ப்புப்படி ஒவ்வொருவருக்கும் பர்ழு ஐன் - கட்டாயக் கடமையாகும் . எப்படி ஒருவன் உலக அறிவைச் சார்ந்த இபாதத்களைச் செய்யாதவிடத்து உலக உலமாக்களின் தீர்ப்புப் பிரகாரம் அப்பகுதி அரசனின் வாளுக்கு இரையாக நேரிடுமோ அதே போன்று மெஞ்ஞான அறிவான இவ்வறிவைக் கற்காது புறக்கணிப்பவர்கள் மறுமையில் அரசருக்கெல்லாம் அரசனான அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாகி அழிந்துவிட(நரகம் செல்ல)வேண்டியேற்படும் என்று கஸ்ஸாலி சொல்கின்றார்கள்.. (இஹ்யாஉலூமுத்தீன் பக்கம் 1-114)

இவ்வாறு முதல்க் கட்டமாக இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ள வந்த எதுவுமறியா அப்பாவி முஸ்லிமை அழைத்து அவனுக்குக் குழையடித்து , மூளையைச் சலவை செய்து இவ்வாறான ஷைத்தானிய சிந்தனைகளை ஊட்டி அவர்களைத் தமது தரீக்காவுக்குள்(தரீக்கத்துன்நார் - நரகத்துகின் பாதை என்பதே மிகப் பொருத்தம்) அழைத்துச் செல்கின்றனர் . இனி அங்கே என்ன நடைபெறுகின்றது என்று பார்ப்போம். ...


தரீக்கத் الطريقة


அன்றைய புராதன ஸூபித்துவ வாதிகள் முதல் இன்றுள்ள நவீன ஸூபிகள் உட்பட அனைவரிடமும் புரையோடிப் போயுள்ள ஒரு விடயம்தான் இந்ததரீக்காவாகும் .இதிலே பல படித்தரங்கள் உள்ளன . சுருங்கக் கூறின் யதார்த்தத்தை அறிந்து கொள்ள விரும்புபவர் முதலில் ஒரு ஷைக்கிடத்தில் பைஅத்செய்து அவர்சொல்லும் வழியில் நடை பயில்வதை இவர்கள் தரீக்கத் என்றழைக்கின்றனர் . அதாவது ஒரு ஆத்மீகப் பயிற்சி பெறும் சீடர் தனது உணர்வுகள் , புலன்களையெல்லாம் மரணிக்கச் செய்யுமளவு தன்னைச் சிரமத்துக்குள்ளாக்கி தன்னைத்தானே வருத்தி 'அதஹ்' எனும் பைத்தியம் போன்ற சுய நினைவிழந்த நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும் . இதற்கான பயிற்சிகளை அந்த தரீக்காவின் ஷைக்கே முன்னின்று சொல்லிக் கொடுப்பார் .

இது பற்றி கஸ்ஸாலி இவ்வாறு கூறுகின்றார் ...
'தரீக்கத்தினை அடைவதற்கு கல்வத் (தனித்திருத்தல்) , ஜூஉ (பசித்திருத்தல்), ஸஹர்(விழித்திருத்தல்), ஸூம்து மௌனமாயிருத்தல்) போன்றன அவசியமாகும் . ( இஹ்யா உலூமுத்தீன் 2-243 )

அத்துடன் தனது உடலைத் தானே சிலவேளை வதைத்துக் கொள்ளவும் வேண்டும் . இதற்காக நீண்ட நேரம் ஒற்றைக் காலில் நிற்றல் , தலைகீழாக நிற்றல் , முள்ளின் மீது அமர்தல் ,நெருப்பால் உடலைப் பொசுக்கல் போன்ற பயிற்சிகளையும் ஷைக்கானவர் மேற்கொள்வார் .
இவர் கூறும் அனைத்தையும் முரீது (சீடர்) எவ்வித மறுப்போ , வெறுப்போ இன்றி மேற்கொள்ள வேண்டுமென்பது ஸூபித் துவத்தின் பொது விதி. சுருங்கக் கூறின் அவர்கள் கூறுவது போல் 'ஒரு (முரீது) சீடனானவன் தனது ஷைக்கின் முன்னால் மய்யித்தைக் குளிப்பாட்டுபவன் முன் வைக்கப்பட்ட சடலத்தைப் போல் நடந்து கொள்ள வேண்டும் . அவனுக்கு எந்தவித விருப்பு வெறுப்போ சுய சிந்தனையோ இருக்கக் கூடாது . அவரின் முன் நின்றால் இவனுக்குப் பேச்சே வரக் கூடாது, அவரது அனுமதியின்றி இவன் (தன்மனைவீயுற்பட)எவரிடமும் தொடர்பு கொள்வதோ, குர்ஆன்ஓதல், திக்ர் , அறிவைத்தேடல் போன்ற எவற்றிலுமோ ஈடுபடக் கூடாது .(அல் அன்வாருல் குத்ஸிய்யா 1- 187)

அபூ யஸீத் அல் புஸ்தாமி எனும் ஸூபி கூறுகின்றார் ...
'ஒரு ஷைக்கானவர் தனது முரீதை ஒரு வேலையின் நிமித்தம் வெளியே அனுப்பினால் அவன் போகும் வழியிலேயே தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் - இந்த முரீதானவன் இப்போது உடனடியாகத் தொழுது விட்டு அதன்பின் அந்த வேலையை முடிக்கலாம் தானே என்று எண்ணிவிட்டால் கூட அவன் ஆழமறியாத ஒருபாதாளக் கிணற்றினுள் வீழ்ந்தவனைப் போலாவான் என்கின்றார் . ( ஸத்ஹாத்துஸ் ஸூபிய்யா ப 343 )

ஷைக் றிபாயிஃ கூறுவதைப் பாருங்கள் .
'ஒரு முரீதுக்கு இருக்க வேண்டிய பண்புகளிலொன்றுதான் தனது ஷைக் எப்போதும் நேரிலும், மறைவிலும் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக உணர வேண்டும். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஊழியஞ் செய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் . எந்த வேலையைச் செய்யும் போதும் அவரது நினைவு மனதில் வர வேண்டும் . அவர் செய்யும் எந்தவிதமான மோசமான காரியங்களையும் கண்டு அதைக் கண்டிக்கக் கூடாது . ஒரு முறை இப்படித்தான் ஒரு ஷைக்கின் வீட்டுக்கு அவரது முரீதானவர் சென்ற போது தனது ஷைக் ஒரு அழகிய பெண்ணிடம் சல்லாபித்து ,அவளைக் கட்டிப்பிடித்து , முத்தமிட்டு உடலுறவில் ஈடுபட்டிருக்கக் கண்டார். இதைக் கண்டதும் அதிர்ச்சியுற்ற அவர் அவசரப் பட்டு 'என்ன காரியம் பண்ணிவிட்டீர்'!! என ஷைக்கைக் கண்டித்து விட்டார்..உடனே அவர் ஷைக்கிடமிருந்து கற்ற அனைத்து நெறிகளும் அவரிடமிருந்து அந்த இடத்திலேயே பறிக்கப்பட்டுவிட்டன. . . (நூல் : கிலாததுல் ஜவாஹிர் ; பக்கம் :278)


பிரபல ஸூபி இப்னு அஜீனா கூறுகின்றார் ...
ஷைக்குக்கு சிஷ்யன் செய்யும் மரியாதை யாதெனில் அவன் ஷைக்கின் கைகளையும் கால்களையும் முத்தமிட வேண்டும் . அவரின் முன் இருக்கும் போது தலை தாழ்த்தி வாய்மூடியிருக்க வேண்டும் . முரீதுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டு விட்டால் அவனது மனக்கண் முன் ஷைக்கை முன்னிறுத்தி அவரிடமே தனது நோயை நீக்குமாறு முறையிட வேண்டும் . ஏனெனில் இவ்வாறு செய்தால் அல்லாஹ்வின்உதவியால் சந்தேகமின்றி நிச்சயம் சுகம்கிடைக்கும் . . (புதூஹாத்துல் இலாஹிய்யா : 308-309)

வழிகெட்ட ஸூபி ஸஃரானி சொல்வதைக் கேளுங்கள் ....
ஒரு ஷைக்கின் மீது உண்மையான அன்பு கொள்வது எப்படியெனில் அல்லாஹ்வுக்காகவே ஒன்றை நேசித்து அவனுக்காகவே ஒன்றை வெறுப்பது போன்றே இந்த ஷைகுக்காகவே எதையும் நேசிக்க வேண்டும் அவருக்காகவே எதையும் வெறுக்கவும் வேண்டும் . அவ்வாறே ஷைக்கின் கப்ரைத் தரிசிக்கச் சென்றால் அவர் மய்யித் , மரணித்து விட்டவர், நாம் பேசும் எதையும் செவியுற மாட்டார் என எண்ணிவிடக் கூடாது . எனினும் அவர் திரையுலகில் உயிருடன் இருப்பதாகவே நம்ப வேண்டும் . அப்போதுதான் அவரது பரக்கத் - அருளைப் பெற முடியும் . ஏனெனில் முரீதானவர் ஷைக்கின் கப்ரை ஸியாரத் செய்து அல்லாஹ்வை திக்ர் செய்தால் அந்த ஷைகும் கப்ரில் எழுந்து உற்கார்ந்து கொண்டு இவருடன் திக்ர் செய்கின்றார் . இதை நாங்கள் பல தடவைகள் நேரடியாகவே கணகளாலேயே பார்த்திருக்கின்றோம் . (அன்வாருல் குத்ஸிய்யா 1-169)


அப்துல் காதிர் ஜீலானி கூறுகின்றார் ...
ஷைக்- குருவானவர் வெளிப்படையாகச் செய்யும் எக்காரியத்துக்கும் முரீத் மாற்றஞ்செய்யக் கூடாது . மறைமுகமாகச் செய்யும் விடயங்களில் குறுக்கீடு செய்து எதிர்க்கேள்வி கேட்கவும் கூடாது . (அல்குன்யஹ் 2- 164 )


தொடர்ந்து முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கூறுகையில்...
'நிச்சயமாக ஷைக்கின் மூலம் ஒருவனுக்கு நன்மையுமுண்;டு , தீமையுமுண்டு. தனது ஷைக்கை நேசிப்பது மறுமையில் ஒருவன் நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்ந்து கொள்ளக் காரணமாகி விடும் இது அவரில் மூலம் கிடைக்கும் நன்மையாகும் , அவருடன் முறண்பட்டு வாதம் செய்வது அவனின் நாசத்திற்குக் காரணமாகி விடும் . இது அவரினால் ஏற்படும் தீங்கு . நீ என் கரத்தைப் பிடிப்பதன் மூலமாக வெற்றி பெறவில்லையென்றால் உனக்கு ஒரு போதும் வெற்றியே கிடையாது . ( அல்பத்ஹூர் ரப்பானி )

ஒரு தடவை ஷகீக் பல்கீ, அபூதுராப் ஆகிய இரு ஸூபிகளும் அபூ யஸீத் அல்புஸ்தாமி எனும் ஸூபியிடம் வந்தனர் . இரு வருக்கும் உணவு பரிமாறப்பட்டது . அங்கு ஒரு வாலிபன் அவர்களுக்குப் பணிவிடைக்காக இருந்தான் . அவ்விருவரும் வாலிபரே.. எம்முடன் வந்து சாப்பிடு என்று கூற அதற்கவன் 'நான் நோன்பு ' என்றான். அதற்கவர்கள் பரவாயில்லை ஒரு மாத நோன்பின் நன்மையைத் தருகின்றோம் வா .. எனக்கூற அதற்கும் அவன் மறுத்து விட்டான். சரி ஒரு வருடகால நோன்பின் நன்மையைத் தருகின்றோம் வா என்று கூறினர். அவன் அதற்கும் மறுத்து விடவே ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர் 'அல்லாஹ்வின் பார்வையை விட்டும் விழுந்து விட்ட அவனை அவன் பாட்டுக்கு விட்டு விடுங்கள்' என கோபத்துடன் கூறினார் . இதன் காரணத்தால் அவ்வாலிபர் திருட்டுக் குற்றமொன்றில் பிடிபட்டு அவன்கைதுண்டிக்கப்பட்டது. . . ( ரிஸாலா குஷைரிய்யா ப : 151 )

ஒரு சீடன் தன் ஷைக்கை நேசிப்பது சரத் - நிபந்தனையாகும் என்பது அனைத்து சூபிகளும் ஏகோபித்த விடயமாகும் . எந்தளவுக்கு நேசிக்க வேண்டுமென்றால் தனது ஷைக் அல்லாத எவரும் எதைக் கூறினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது செவிடனைப் போல நடந்து கொள்ள வேண்டும் . யார் விமர்சித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது . அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அனைவருமே ஒன்று கூடி முயற்சித்தாலும் அவர்களால் இவனை அந்த ஷைக்கை விட்டும் தடுக்க முடியாதளவுக்கு அவனது குருப்பற்று இருக்க வேண்டும். ஷைக்குடைய மகத்துவத்தை மனதில் நிறுத்தி மனக்கண்ணால் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தால் அவனுக்குப் பசி, தாகம் எதுவுமே ஏற்படக் கூடாது . ஒரு சீடருக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டது . அவர் எதுவும் உண்ணாமல் குடிக்காமல் சதா தன் ஷைக்கையே நினைத்துக் கொண்டிருந்தார் . ஆனாலும் அவர் இருந்ததை விடக் கொளுத்து விட்டார்.
( அன்வாருல் குத்ஸிய்யா 1-168 )

இது போன்ற ஸூபித்துவ வாதிகளின் தரீக்கத் விதிகளையும் நிப ந்தனைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம் . இவ்வாறான அபத்தமிக்க பைத்தியகாரத்தனமான இஸ்லாத்திற்கு முறணான , இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்தெறியக்கூடிய கதைகளையும் புராணங்களையும் லட்சக்கணக்கில் ஸூபித்துவ நூல்களில் நீங்கள் காணலாம் . விரிவஞ்சி அவற்றைக் குறைத்துக் கொள்கின்றேன் . இக்கட்டுக் கதைகளில் பொதிந்திருக்கும் அபத்தங்களை விமர்சிக்க , விபரிக்க முற்பட்டால் புத்தகம் நீண்டு விடும் . எனவே அதை வாசகர்களான உங்களின் ஆய்வுக்கு விட்டு விடுகின்றேன் . மிகக் குறைந்தளவு இஸ்லாமிய அறிவுடைய ஒரு பாமரன் கூட இக்கருத்துக்கள் இஸ்லாத்தைத் தகர்க்கக் கூடிய மிகப் பெரிய வெடி குண்டு , இதற்கும் இஸ் லாத்துக்கும் எள் முனையளவு கூட சம்பந்தம் கிடையாது என்பதை அடித்துச் சொல்வான் என்பது மட்டும் உண்மை .

சுருக்கமாகச் சொல்வதாயின் ஸூபிகளின் தரீக்கத் எனும் இந்த மாயையின் பின்னணியில் ஒரு பெரிய சதிவலையே பின்னப்பட்டிருக்கின்றது . அதாவது அப்பாவிப் பாமரர்கள் மத்தியில் தம்மை விலாயத் பெற்ற இறை நேசச் செல்வர்கள் , ஷைக்மார்கள் என அறிமுகப்படுத்தி அப்பாமரர்களை இஸ்லாத்தின் பெயரைக் கூறி ஏமாற்றித் தமது சீடர்களாக்கி ஆத்மீகம் எனும் பெயரில் பொய்களையும் புருடாக்களையும், அதிசயமிக்க கற்பனைச் சம்பவங்களையும் கூறி மூளைச்சலவை செய்து தன்னைப் பின் பற்றாவிட்டால் வழி கேட்டில் வீழ்ந்து நரகத்துக்குத்தான் செல்ல வேண்டும் எனும் அளவுக்குப் பயமுறுத்தி தாமும் வழி கெட்டு எதுவுமறியா அப்பாவி மக்களையும் வழிகெடுக்கும் ஒரு ஷைத்தானிய ஊடகம் தான் இந்த தரீக்கத் ஆகும்.


இதை விட முக்கியமான பயங்கர விடயம் யாதெனில் இந்தத் தரீக்கத் வாதிகள் அனைவரினதும் மிக முக்கிய குறிக்கோள் யாதெனில் இஸ்லாத்தையே அழித்து இடித்து வீழ்த்திவிடக் கூடிய இரு கொள்கைளின் பக்கம் தம் சீடர்களை அழைத்து அவற்றைப் போதித்து அதன் மூலம் சுய லாபம் தேடுவதே இவர் களின் அடிப்படை நோக்கமாகும். அவையாவன...


1- வஹ்தத்துல் வுஜூத் - அத்வைதக் கொள்கை -அதாவது படைப்பினங்களான நாமும் படைத்தவனான அல்லாஹ்வும் ஒன்றுதான். ,அவன்தான் பல வடிவங்களில் இப்பிரபஞ்சமாகவும், அதிலுள்ள வஸ்த்துக்களாகவும் காட்சி தருகின்றான் எனும் கொள்கை .
2- அல்ஹூலூல் வல்இத்திஹாத்: அதாவது இறைவன் படைப்பினங்களின் மீது இறங்கி சஞ்சரிக்கின்றான் பின் இறண்டறக் கலந்து விடுகின்றான் எனும் இந்துத்துவ , கிருஷ்த்தவக் கொள்ளை .


அல்லாஹ் கூறுகின்றான் ...


لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلاَّ إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ المائدة (73)


'அல்லாஹ் மூன்று கடவுள்களில் மூன்றாவது கடவுளெனக் கூறிய (அதாவது அல்லாஹ் இயேசுவிலும் அவர் தாயிலும் இறங்க அவர்களும் கடவுளாகி விட்டார்கள் எனக் கூறிய கிருஷ்த்தவர்கள்) காபிர்களாகி விட்டார்கள் . ( உண்மைக் ) கடவுள் ஒரே கடவுளேயன்றி வேறில்லை . அவர்கள் தாம் சொல்வதை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் அவர்களில் ( இக் கொள்கை மூலம் ) காபிர்களாகி விட்டவர்களை கடுமையான வேதனை பிடித்துக் கொள்ளும் . அவர்கள் அல்லாஹ்விடத்தில் (தமது இக்கொள்கையை விட்டு விட்டு ) தவ்பாச் செய்து பாவ மீட்சி பெற வேண்டாமா ? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனுமாகஇருக்கின்றான். . (அல்குர்ஆன் : மாயிதா 73 . )

எனவே சூபிகள் உருவாக்கிய தரீக்கத் எனும் ஷைத்தானியக் கோட்டையிலே ஷைக் எனப்படுபவர்தான் அல்லாஹ்வின் அனைத்து ஆற்றல்கள் , சக்திகள், வல்லமைகளும் பெற்றவராகக் கருதப்படுவார். அவரின் சீடர்களுக்கு அவர் குருநாதர் மாத்திரமல்ல கடவுளும் அவர்தான் . ஷைகுக்கு தெய்வீகத் தன்மைகள் - கடவுளின் சக்திகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளாத சிஷ்யன் நிச்சயமாக உண்மையான வெற்றிப் பாதையை அடைந்து கொள்ள மாட்டான். வெற்றிப் பாதையெனப்படுவது இவர்களிடத்தில் வஹ்தத்துல் வுஜூத்- கண்ணால் காண்பதெல்லாம் கடவுளே .. எனும் கொள்கையைக் குறிக்கும். ஆம் நரகத்துக்குரிய இலவச நுழைவுச் சீட்டை வென்று தரும் பாதை இதுதான் .. சந்தேகமேயில்லை . தனது ஷைக் கடவுளின் வல்லமைகள் பெற்றவர்,சக்திமிக்கவர் என எண்ணும் சீடனுக்குக் காலப் போக்கில் 'ஜத்பு ' (பைத்தியம் போன்ற சுய நினைவற்ற) நிலை ஏற்படும் .அதன் பின் அவன் தனது ஷைக்கையே கடவுளாகக் காண்பான் என்பதே தரீக்கத் போதிக்கும் தத்துவ மாகும். இந்தப் பேருண்மையை?? விளங்கிக் கொள்ளவே தரீக்காவிற்குப் பிரவேசிப்பது அவசியம் அங்கிருந்து நேரே நரகம்தான் !!!. .இதைப் பகிரங்கமாக மக்கள் மத்தியில் சொன்னால் ஷைக்மார்களுக்கு அவர்கள் பைத்தியக் கிறுக்கர்கள் என்று பட்டம் சூட்டி விடுவார்கள் என்பது மட்டும் உண்மை .

الحقيقة ஹகீக்கத். (ரகசியம் )

ஹக்கீக்கத் எனப்படுவது சூபிகளின் ஷைத்தானிய அடிப்படை விதிகளில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றது . தன் வழியில் முஃமினாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மனிதன் மார்க்க விளக்கம் பெற ஷைத்தானிய தோழர்களாகிய சூபிகளை நாடும் போது முதலில் ஷரீஅத் சட்டங்களை முடிந்தளவு கடைப்பிடித்து முஸ்லிமாக இருந்த அவனை தரீக்கத் எனும் பாதாளக் குழியில்த் தள்ளி தம்மைத் தவிர வேறு யார் எது சொன்னாலும் கேட்கக் கூடாது எனும் பைத்திய நிலைக்கு அவனை ஆளாக்கி அவனிடம் பைஅத் - ஞான தீட்சை ? பெற்ற பின்னர் அவனுக்கு சூபிகள் கற்றுக் கொடுக்கும் ஒரு இரகசியம்தான் இந்த ஹகீக்கத் எனும் சமாச்சாரம் . அவர்களின் கருத்துப்படி இது ஒரு ரகசியம் இது தான் உண்மை - யதார்த்த நிலை . ஆனால் இவ்வுண்மை அனைவருக்கும் தெரிவதில்லை. அவர்களிடம் ஞானதீட்சைபெறாதவர்களுக்குத் தெரிவிப்பதுமில்லை . காரணம் இவர்கள் கூறும் பைத்தியகாரத் தனமான உளறல்களையும் , சாத்தானிய வசனங்களையும் , பகுத்தறிவுக்குப் பொருந்தாத கற்பனைக் கட்டுக் கதைகளையும் நம்பி ஏமாறும் நிலையில் எந்தப் பாமரனும் இல்லை . எனவே இவனால் எழுப்பப்படும் கேள்விகளுக்குக் கூட இவர்களால் விடையளிக்க முடியாது .ஒன்றுமறியாத பாமரனும் இவர்கள் கூறுவதைக் கேட்டால் இவர்களின் குடுமியைப் பிடித்து ஆதாரம் கேட்பான். ஆப்பிழுத்த குரங்கு போல அவனிடம் மாட்டித் தவிக்க நேரிடும் . ஆதாரம் இருந்தால் தானே சமர்ப்பிக்க முடியும் . இந்துப் புராணங்களில் , யூத கிருஷ்த்தவ , கிரேக்க தத்துவங்களில் வேண்டுமானால் ஆதாரம் கிடைக்கலாம் . குர்ஆன் ஹதீதில் கிடைக்குமா ? அதனால் தான் தமது சூபித்துவ வலையில் வீழ்ந்து தீட்சை பெற்று -- மூளையை அடகு வைத்து மூடனாகி விட்டவர்களிடம் மாத்திரமே இந்த ஹக்கீக்கத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் . அதுவும் அவனாக குருவின் அனுமதியின்றி எவரிடத்திலும் இது பற்றி வாய் திறக்கக் கூடாது எனும் நிபந்தனையுடன்...
அது என்ன ரகசியம் ? என்ன ஹக்கீக்கத் ? என்று பார்ப்போம் .

அதாவது இப்பிரபஞ்சமே அல்லாஹ்தான் அவனின் வெளிப்பாடே இப்பிரபஞ்சம் என்பதைத் தெரிந்து கொள்வதே ரகசியம். நாம் பார்க்கும் ,கேட்கும், தொடும் அனைத்துமே ,,, நான், நீ, அவன், அவள், அது, வானம் ,பூமி சந்திரன் சூரியன் ஆடு மாடு ஏன் நாய் பன்றி அனைத்துமே அல்லாஹ்தான். கடலிலுள்ள நீர்தான் அலையாகவும் , நுரையாகவும் ,உப்பாகவும் பரிணமித்திருப்பது போல் அல்லாஹ்தான் இப்பிரபஞ்சமாகத் தோற்றம் தருகின்றான் அனைத்துப் பொருள்களுக்கும் சேர்த்துத்துத்தான் அல்லாஹ் எனப்படும் என்பதே இப்பைத்தியர்களின் மஃரிபத் எனும் மூடத் தத்துவம் . இதை அறிந்தவர் தான் ஞானி - ஆரிப் என இவர்களிடம் அழைக்கப்படுவார் .

பிரபல சூபி கஸ்ஸாலி சொல்கின்றார் ...
அல்லாஹ்வை அறிந்து கொண்ட ஒரு ஞானி அனைத்துப் பொருட்களிலும் அல்லாஹ்வைக் காண்பார் . ஏனெனில் அனைத்து வஸ்துக்களுமே அவனிலிருந்தே , அவனை நோக்கியே , அவன் மூலமாகவே, அவனுக்காகவே உருவாகியிருக்கின்றன. தீர்க்கமான முடிவின்படி எல்லாம் அவனே ...( இஹ்யாஉலூமுத்தீன். 1—254 )

தொடர்ந்து கஸ்ஸாலி சொல்கின்றார் ..
மெஞ்ஞானிகள் ( ரகசியம் ) ஹகிக்கத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும் போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்துஒருமித்துத் கூறுகின்றனர் . எனினும் சிலருக்கு இந்நிலை தெட்டத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும் . (அவர்கள் இந்த ரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்) இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள் எல்லாம் ஒன்றே எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து ) غيرية ) வேறொன்று என்ற வார்த்தை - பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும் . அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் புலப்படாது . அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும் . இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒரு வகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் 'நான் தான் அல்லாஹ் ' என்றும் , வேறு சிலரோ ' நானே அல்லாஹ் நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன் ' என்றும் , வேறு சிலர் 'எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை ' என்றும் கூறியிருக்கின்றார்கள் .(மிஸ்காதுல் அன்வார் .ப : 122)


கஸ்ஸாலி சொல்கின்றார் ...
ஆரிபீன்கள் சொல்கின்றார்கள் 'நாங்கள் நரக நெருப்புக்குப் பயப்படவுமில்லை. சொர்க்கத்துக் கன்னியர்க்கு ஆசைப்படவுமில்லை எங்கள் நோக்கமே இறை தரிசனமே. அவன் எம் கண்களுக்குப் புலப்படாமல் கணப் பொழுதேனும் தடைப்படக் கூடாது என்றே நாங்கள் யாசிக்கின்றோம்'. ( அல் இஹ்யா 4--22 )


இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்...
ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார் . ஒவ்வொரு பொருமே அவருக்கு அல்லாஹ்வாகத்தான் தென்படும் . முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு ஞானிக்கு பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள்,விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி - வெளிப்பாடாகவே தெரியும். இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் - அல்லாஹ் என்றே அழைத்தார்கள் . அந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை ,பொற் சிலை , வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் - அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள் . ( புஸூஸூல் ஹிகம் - இப்னு அரபி ப: 192 )


இதுதான் வழிகெட்ட இந்த ஸூபிகள் சொல்லும் ரகசியம் .?? இது வழிகேட்டின் உச்சம் , இதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை. மாறாக இதை அழித்தொழிக்கவேதான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான் என்பதைப் பாமர மகன் கூட எடுத்துக்கூறாமலேயே அறிந்து கொள்வான் . இது சுத்த பைத்தியகாரர்களின் உளறல் . முற்றிய பைத்தியம் என்பதைச் சாதாரண பைத்தியகாரன் கூடச் சொல்வான் . அல்குர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இக்கொள்கை குப்ர்., கலப்பற்ற ஷிர்க் என்று விபரிக்கப்பட்டிருப்பதை அனைவருமே படித்தால் அறிந்து கொள்ள முடியும்

ஸூபித்துவம் என்றால் என்ன ?...

ஸூபித்துவம் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான வரைவிலக்கணத்தை ஸூபித்துவ வாதிகளின் நூல்களில் கூட விரிவாகக் காணமுடியவில்லை . எனினும் அவர்களது கருத்துக்கள் சிந்தனைப் போக்குகளிலிருந்து இவ்வாறு விளங்க முடிகின்றது.
ஸூபித்துவம் என்பது 'இஸ்லாமியப் போர்வையில் உருவாக்கப்பட்ட யூத .கிருஷ்த்தவ, கிரேக்கம் போன்ற மாற்று மத தத்துவங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்ட சித்தார்த்தங்களை அடிப்படையாக வைத்து துறவரம் பூண்டு ஆத்மீகவழி நடப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒரு கொள்கைக்கே ஸூபித்துவம் எனப்படும்' இதன் வழி நடப்பவர்கள் ஸூபிகள் என அழைக்கப்படுவார்கள்.


எனவே பாமர மக்கள் நம்புவதைப் போன்று உலக ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி ஆத்மீகப் பாதையின் பக்கம் அழைக்கும் ஒரு அமைப்பே ஸூபித்துவம், ஸூபிகள் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற இறைநேசச் செல்வர்கள் என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பான அப்பட்டமான மூடத்தனமான கருத்தாகும் . ஸூபித்துவம் பற்றி எடுத்துக் கூறிய தமிழ் நூல்கள் கூட இவர்களின் யதார்த்த நிலை பற்றிப் பெரிதாக ஆராயாது இதைப் பற்றி நல்லபிப்பிராயம் தெரிவித்திருப்பதன் விளைவே இந்த இறை மறுப்புச் சித்தாந்தம் இன்று பாமர மக்கள் மத்தியில் பரவி நன்மதிப்பைப் பெற்றுள்ளது . எனவே இதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதற்கும் நபிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை . மாறாக நபியவர்கள் கூறியது போல் சீரிய நபி வழியை விட்டும் நெறி தவறிய வழிகெட்ட கூட்டங்களில் மிகமிக வழிகெட்ட கூட்டத்தினரே இந்த ஸூபித்துவவாதிகள் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும் .



ஸூபித்துவத்தின் தோற்றம்

இவ்விடத்தில் முக்கியமான ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது அல்லாஹ்வின் பகிரங்க விரோதியான ஷைத்தான் மனித சமூகத்தை நேர்வழியை விட்டும் திசை திருப்பி நரகத்தில் வீழ்த்துவதற்காக இரண்டு விதமான யுக்திகளைக் கையாள்வான். ஓன்று இஸ்லாமியக் கோட்பாடுகள் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிப்பதில் வெறுப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கி வெளியேற்றி பாவச் செயல்களில் ஈடுபடச் செய்து வழிகெடுத்து விடுவான். கொஞ்சம் இறை பக்தி ஆத்மீகப் பற்று, வணக்க வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவேரை வழிகெடுப்பதற்கு மற்றொரு வழிமுறையைக் கடைப் பிடிப்பான் . அதாவது அவர்களின் மார்க்க அறிவின்மையைப் பயன்படுத்தி இஸ்லாத்தில் இல்லாத , இஸ்லாம் தடுத்த விடயங்களை – அவைதான் இஸ்லாமிய அனுஷ்ட்டானங்கள் என நம்ப வைத்து அதன் வழியில் நடக்க வைத்து வழிகெடுத்து விடுவான் . இந்த வகையில் ஷைத்தானால் சூழ்ச்சி செய்யப்பட்டு ஆத்மீகத்தின் பெயரால் வழிகெடுக்கப்பட்டவர்களே ஸூபித்துவ வாதிகள் எனும் உண்மை ஆரம்ப கால ஸூபிகளில் வரலாற்றைப் படிக்கும் போது தெளிவாகும் .

உண்மையைச் சொல்லப் போனால் ஸூபித்துவ வாதிகள் தமக்கு இருப்பதாக வாதிடும் மறைவான அறிவு, கஸ்பு, தரீக்கத், ஹக்கீக்கத், மஃரிபத் ஞானம், ஜத்பு ( தன்னை மறந்த நிலை), பனாஃ (கடவுளோடு சஞ்சரித்தல்) இவை போன்ற அனைத்து விவகாரங்களும் இவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தி இவர்களை வழி கெடுப்பதற்காக இவர்களின் சிந்தனையில் ஏற்படுத்தும் குழப்பங்களேயாகும் . இவையனைத்தும் அவனின் மாயாஜால யுக்திகளே என்பதை முதலில் தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


சரி விடயத்துக்கு வருவோம்.
ஸூபித்துவம் எப்போது ஆரம்பமானது என்று ஆராயும் போது நபி (ஸல்) அவாகளின் காலத்திலோ அவர்கள் உருவாக்கி விட்டுச் சென்ற ஸஹாபாச் சமூகத்தினர் மத்தியிலோ, அதன் பின் சிறந்த காலத்தினரென நபியவர்கள் விதந்துரைத்த தாபியீன்களது காலத்திலோ இவ்வாறான ஒரு வாசகமே உபயோகத்தில் இருந்ததில்லையென்று அடித்துச் சொல்ல முடியும் . ஆனால் நபியவர்களின் காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் கூட இன்றைய வழிகெட்ட ஸூபிகள் கொண்டுள்ள கருத்துக்களும், சித்தாந்தங்களும் அக்கால யூத, கிறிஸ்த்தவ, இந்து, கிரேக்க, யூனானிய தத்துவங்களில் நிறைந்து காணப்பட்டதையும், அவை அந்தந்த சமூகத்தில் உள்ள ஒரு பிரிவினரிடம் செல்வாக்குப் பெற்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்ததையும் தெளிவாக அறிய முடியும்.


எனினும் ஆரம்ப கட்டமாக இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் நபியவர்கள் ஏற்கனவே கூறி வைத்தது போல் பிரச்சினைகளும் குழப்பங்களும் ஏற்பட்ட வேளை இஸ்லாமிய சமூகத்தில் வாழ்ந்த சில நல்ல மக்கள் கூட இப்பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கி எவற்றிலுமே சம்பந்தப்படாமல் வாழமுற்பட்டது உண்மை . ஆனால் அவர்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய வரையறைக்குள் இருந்தார்கள் . இஸ்லாம் துறவரத்தைப் போதிக்கவில்லை . அதை எதிர்க்கின்றது .ஆனால் அதேவேளை உலக மாயைகளில் அதன் ஆசாபாசங்களில் வீழ்ந்து அதன் அலங்காரங்களில் மயங்கி தனது மறுமை வாழ்வை அழித்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கின்றது .


அல்குர்ஆன் கூறுகின்றது ...


اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الأَمْوَالِ وَالأَوْلادِ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرّاً ثُمَّ يَكُونُ حُطَاماً وَفِي الآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنْ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ ( الحديد 20)


அறிந்துகொள்ளுங்கள்!!. இவ்வுலக வாழ்க்கையானது வீண்விளையாட்டும், கேளிக்கையும், ஆடம்பர - அலங்காரமும், செல்வத்தையும் பிள்ளைகளையும் வைத்துப் பெருமையடித்துக் கொள்வதுமேயன்றி வேறில்லை . எப்படி ஒரு மழையின் மூலம் பயிர்கள் செழித்து வளர்வது கண்டு விவசாயிகள் ஆச்சரியப்பட்ட வேளை பின்னர் அது காய்ந்து மஞ்சள் நிறமாகி பின் சருகாகி விடுகின்றதோ .(இவ்வாறுதான் உலக வாழ்க்கையும்) . மறுமையில் (இவ்வுலகில் தீமை புரிந்தோருக்கு) மிகக் கடுமையான வேதனையும், (நல்லோருக்கு) அவனது கருனையும் மன்னிப்பும் காத்திருக்கின்றன. இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை . (ஸூரா அல்ஹதீத் : 20 )

நீ உலக வாழ்வில் ஒரு வழிப்போக்கனைப் போன்று அல்லது அநாதரவானவனைப் போன்று வாழ்ந்து கொள். எனக்கும் இவ்வுலக ஆடம்பரத்திற்கும் என்ன சம்பந்தம் ? நான் இளைப்பாறுவதற்காக ஒரு மரநிழலில் தங்கியிருக்கும் வழிப்போக்கனைப் போன்றே இவ்வுலகில் வாழ்கின்றேன் என் நபியவர்கள் இப்னு உமர் ( றழி )அவர்களுக்கு உபதேசித்திருக்கின்றார்கள் .


இப்னு உமர் அடிக்கடி இப்படிக் கூறுவார்கள் ... காலையில் நீ விழித்தெழுந்தால் மாலை வரை உயிரோடிருப்போமென்று உறுதி கொள்ளாதே . மாலைப் பொழுதை அடைந்து விட்டால் மறுநாள் காலை விழித்தெழுவோமென உறுதி கொள்ளாதே . இவ்வுலகில் வைத்தே மறுமைக்குத் தேவையானதைச் சேகரித்துக் கொள் . ( ஆதாரம் : புகாரி 5937 திர்மிதி 2299 இப்னு மாஜா 4099 )

எனவே இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் உதுமான் (றழி) அவர்களது படுகொலைக்குப் பின் குழப்பங்களும் பிளவுகளும், அரசியல் அராஜகங்களும் தோன்ற ஆரம்பித்தபோது ஸூபித்துவம் என்ற பெயரில்லாவிட்டாலும் - முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அறிமுகமான ஒரு இறை பக்தி மிகு கூட்டத்தினர் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட, இஸ்லாம் போதித்த விடயங்களை மாத்திரம் சமூகத்தின் மத்தியில் முன்வைத்து மக்களை உலக ஆசையிலிருந்து விடுவித்து ஆத்மீகத்தின் பக்கம் அழைத்துக் கொண்டிருந்தனர் என்பது உண்மை . அதன் காரணமாகவே அக் காலப் பகுதியில் வாழ்ந்த உலமாக்கள் இமாம்கள் கூட இந்தப் பிரிவினருக்கு ஆதரவு நல்கியதும் உண்மை. ஆனால் காலப் போக்கிலேதான் அதாவது நபியவர்கள் சிறப்பித்துக் கூறிய மூன்று தலைமுறையினரின் காலத்தின் பின்னரே அன்னிய இந்து , கிரேக்க , யஹூதிய நச்சுக் கருத்துக்கள் , விஷமத்தனமான சிந்தனைகளையெல்லாம் பின்வந்த ஸூபிகள் அவர்களது நூல்களின் மொழிபெயர்ப்பிலிருந்து இரவல் பெற்று அவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசி சமூகத்தின் மத்தியில் ஸூபித்துவம் எனும் பெயரில் உலவ விட்டு விட்டார்கள். தாம் கோர்வை செய்த நூற்களிலும் இந்த சிந்தார்த்தங்களை விபரித்து அதற்கு உரமூட்டும் விதமாக ஒரு சில குர்ஆன் வசனங்களையும் , நபி மொழிகளையும் அவற்றின் விளக்கத்தைத் திரிபுபடுத்திக் கூறி இந்த நச்சுக் கருத்துக்களும் அல்குர்ஆன் ஹதீதுகளில் கூறப்பட்டவைகள்தான் எனப் பாமரர்களையும் நம்பச் செய்து விட்டார்கள் .

இதன் பின்பு வாழையடி வாழையாக இந்த வழிகெட்ட கொள்கையைத் தத்தெடுத்த ஸூபித்துவ வாதிகள் அதிலுள்ள தவறான வழிகெட்ட சித்தார்த்தங்களை நியாயப்படுத்தி அதற்கு வலுவூட்டும் விதமாக குர்ஆன் ஹதீஸ் வசனங்களை வளைப்பதிலும் திரிபுபடுத்துவதிலுமே தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள் . அதுமட்டுமின்றி அப்பாஸிய ஆட்சியில் அனேக கிரேக்க தத்துவ நூல்கள் அறபியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இவற்றிலுள்ள தமது கொள்கைக்குச் சார்பான விடயங்களையும் அவற்றிலிருந்து திருடி அவற்றைத் தமது சொந்தக் கருத்துக்களாக மெஞ்ஞானம் என்ற பெயரில் பாமர மக்களுக்கும், தமது நூல்களிலும் அறிமுகப்படுத்தினார்கள் . இங்கு ஒரு கவலைக்குரிய விடயம் யாதெனில் உண்மையாகவே, சமூகத்தின் மத்தியில் மதிக்கப்பட்ட கஸ்ஸாலி போன்ற சில பேரறிஞர், உலமாக்கள் சிலரும் இந்த வழிகெட்ட சிந்தனையால் உந்தப்பட்டு – கவரப்பட்டு , சிந்தனைக் குழப்பத்துக்குற்பட்டு பின்னர் இக்கொள் கையை ஒருவகையில் அங்கீகரிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள் . அன்றைய முஸ்லிம் சமூகமே போற்றி வந்த இது போன்ற நல்ல உலமாக்களின் திடீர் மாற்றமே இவ்வழிகெட்ட கொள்கை மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கு உரமாக இருந்தது என்பதே உண்மை . கஸ்ஸாலி இமாம் சிந்தனைக் குழப்பத்தில் இருந்த காலப்பகுதியில் கோர்வை செய்த 'இஹ்யா உலூமுத்தீன் ' எனும் ஆத்மீகப் பயிற்சிக்குரிய விடயங்களை விளக்கும் இந்த நூலில் இந்த ஸூபித்துவ அத்வைதக் கொள்கை பற்றி ஆங்காங்கே பகிரங்கமாகக் குறிப்பிட்டிருப்பதையும், இக்கொள்கையுள்ள வழிகேடர்களுக்கு இடம் பெற்ற ஷைத்தானிய சேட்டைகள் சிலதைக் ' கராமத் ' எனும் பெயரில் தம் நூலில் குறிப்பிட்டிருப்பதையும் அவதானிக்க முடியும். எனவே சமூக ஆதரவுள்ள இவரின் இச்செயல் சமூகத்தின் வழிகேட்டுக்கே பாலம் அமைத்துக் கொடுத்து விட்டது . 'இஹ் யா உலூமித்தீன்' மார்க்க அறிவுகளுக்கு உயிரூட்டல் எனும் பெயரில் வெளி வந்த இந்நூல் தூய இஸ்லாமிய மார்க்கத்தையே சாவடிக்கக் கூடியதாக - நஞ்சாக ஆகி விட்டதென்றால் மிகையாகாது .


எனவே அக்கால ஸூபித்துவ வாதிகளின் வழிகெட்ட சித்தாந்தங்களைச் சுருக்கமாகச் சொல்லப் போனால் இவர்கள் தமது அடிப்படைக் கொள்கைகளை நான்கு பிரிவுகளாக வகுக்கின்றனர் இஸ்லாத்தை இவ்வாறு கூறு போட்டு எந்த ஷிர்க்கையும் பித்அத்தையும் அழித்தொழிப்பதற்காக நபியவர்கள் அனுப்பப்பட்டார்களோ அந்தக் குறிக்கோளையே இடித்துத் தரைமட்டமாக்கும் வகையில் இஸ்லாத்தில் விளையாடியிருக்கின்றனர். அவர்களது வழிகெட்ட கொள்கைப்படி பின்வருமாறு இஸ்லாத்தைக்கூறு போட்டிருக்கின்றார்கள் .

Monday, November 2, 2009

நாகூர போல வருமா?

என் நண்பர் ஒருவர் சென்னையில் தனது கல்லூரியில் அனுபவித்த சுவாரசியமான அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார் ..




ஒரு நாள் கல்லுரியின் முதல்வரை சந்திக்கும்போது , கல்லூரி முதல்வர் தற்செயலாக உங்கள் ஊரு என்ன என்று கேட்க... என் நண்பர் நாகூர் சார் என்று சொல்ல - சட்டென்று அவர் சொன்னாராம் – தம்பி பரகத்தான ஊரு தம்பி , டெய்லி எங்கயாவது ஒரு சாப்பாடு , தூக்கம் , வேலைவெட்டி செய்யவே தேவ இல்ல என்று நாகூரை பத்தி புட்டு புட்டு வைத்திருக்கிறார்... அரெண்டு பொய்விட்டாராம் என் நண்பர் , பொங்கிவந்த சிரிப்பை கட்டு படுத்தி கொண்டு எஸ்கேப் அகலாமானு நினைக்க.. முதல்வர் நண்பனிடம் – தம்பி உங்க ஊரு தர்காவுல ஒரு சில்வர் காது அல்லது காலு (சரியாக தெரியவில்லை ) உண்டியல்ல போட்டுடுங்கன்னு சொல்லி இருக்கிறார் .. என்ன டா படிச்சவரு இப்படி பேசுறாருன்னு திகைத்து பொய் நண்பர் நிற்க ..
எவ்ளோ காசுன்னு முதல்வர் கேக்க, சார் நான் வாங்கி போட்டுட்டு காசு வங்கி கிறேன்னு சொல்லிட்டு ... ஆளவிடுங்க எஸ்கேப் ஆகிவிட்டாராம்

Sunday, November 1, 2009

இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம்?! (பாகம் - 1)

இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம்?! (பாகம் - 1)

கிறிஸ்தவர்களால் புனிதமாக மதிக்கப்படும் பைபிள் மனித்தக்கரங்களால் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்பது பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு. குறிப்பாக அதில் இருக்கக்கூடிய முரண்பாடான, ஆபாசமான, நகைச்சுவையான, விஞ்ஞானத்திற்கு முரனான, வர்னாசிரமக் கொள்கைகளை வலியுறுத்தக்கூடிய, இறைத்தூதர்களை இழிவுபடுத்தக்கூடிய குறிப்பாக இயேசுவையே தரம் தாழ்த்தக்கூடிய, இப்படி எண்ணற்ற இறைவசனங்களாக இருக்க அறவே தகுதியற்ற வசனங்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்படுகின்றன.

குறிப்பாக மனிதர்களை நேர்வழிப்படுத்தும் முகமாக இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களை சகட்டுமேனிக்கு அவர்கள் மீது அபான்டமான எந்த வித ஆதாரமுமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுவது ஒருபுறமிருக்க, ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக எந்த இறைவன் இந்த வேதத்தை அருளினான் என்று சொல்லப்படுகின்றதோ அதே இறைவேதத்தில் - அந்த இறைவனின் மகத்துவத்திற்கும் அவனது கண்ணியத்திற்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் - அந்த இறைவனையே இழிவுபடுத்தியும் வசனங்கள் எழுதப்படிருக்கின்தே என்று பார்க்கும்போது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது. இப்படிப்பட்ட வசனங்களை எப்படி இறைவசனங்களாக இன்றைய கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்? அல்லது அவர்களுக்கு இப்படிப்பட்ட வசனங்கள் இருப்பது தெரியவில்லையா? அல்லது அவர்களுக்குத் தெரியாத அளவுக்கு மறைக்கப்படுகின்றதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் கண்ணிருந்தும் குருடர்களாயும் காதிருந்தும் செவிடர்களாயும் இருக்கின்றார்களா?

கர்த்தரையே இழிவுபடுத்தக்கூடிய வகையில் எப்படிப்பட்ட வசனங்கள் கிறிஸ்தவர்களின் புனிதவேதமான பைபிளில் இடம் பெற்றுள்ளது என்பதை இனி காண்போம்.

கர்த்தரின் குற்றவியல் சட்டங்கள் கேளிக்கூத்தானவையா?

தாவீது தீர்க்கதரிசி, உரியா என்ற போர்வீரனின் மனைவியுடன் கள்ள உறவின் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் தனது போர்வீரனான உரியாவையே நயவஞ்சகமாக கொண்றுவிட்டு, அவனின் மனைவியை பலவந்தமாக மணமுடித்துக்கொண்டதாகவும் பைபிளில் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியான தாவீதை இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளது. இது உன்மையாக நடந்த சம்பவமா? அல்லது தாவீதின் பெயரால் அவருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் யூத எழுத்தாளர்களால் இட்டுக்கட்டி எழுதப்பட்ட பொய்யான கதையா? என்பதை பைபிள் ஆதாரங்களுடன் ஏற்கனவே விளக்கியுள்ளோம்.

தாவீதின் இந்த அநாகரீகமான (?) செயலுக்கு கர்த்தர் ஒரு தண்டனை கொடுப்பதாக சொன்னாராம். அந்த தண்டனை என்ன? இதோ பைபிள் கூறுகின்றது:

'கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன், அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய், நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்' (2 சாமுவேல் 12: 11 - 12)

அதாவது தாவீது செய்ததாகச் சொல்லப்படும் அந்த ஈனச்செயலுக்கு (?) கர்த்தர் கொடுப்பதாக சொல்லப்பட்ட தண்டனை, அவருடைய பெண்மக்களை மற்றவர்கள் மூலம் அவர்களை கற்பழிக்க வைப்பாராம். அதுவும், தாவீதோ உரியாவின் மனைவியுடன் ரகசியமாகதான் விபச்சாரம் செய்தாராம். ஆனால் கர்த்தர் தாவீதுக்கு தண்டனையாக ஊரார் முன்பாக பட்டப்பகலிலே நடுரோட்டிலேயே வைத்து அவருடைய பெண்மக்களை அடுத்தவனை வைத்து கற்பழிக்கச் செய்வாராம். இந்த கற்பழிப்புச் சம்பவத்தை இஸ்ரவேலர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் செய்வாராம்.

இது உன்மையா? இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க அசிங்கமான ஒரு தண்டனையை கர்த்தர் கொடுப்பதாக சொல்லியிருப்பாரா? இப்படி பலருக்கு அடுத்தவனுடைய பெண்களை ஏற்படுத்திக் கொடுப்பது தான் கர்த்தரின் வேலையா? அப்படி பலர் பட்டப்பகலில் செய்யும் கற்பழிப்புக் காட்சிகளை இஸ்ரவேலர்களைப் பார்க்க வைப்பது தான் அவர் கற்றுத்தரும் நல்லொழுக்கமா? ஒருவனுடைய விபச்சாரத்திற்கான தண்டனையாக பல விபச்சாரகர்களை உருவாக்குவது தான் கார்த்தரின் நீதியா?

இப்படிப்பட்ட கேலிக்கூத்தான - அருவருக்கத்தக்க - ஒரு சட்டத்தை கடவுள் சொல்லியிருப்பாரா? என்றால் கண்டிப்பாக சொல்லியிருக்க மாட்டார் - சொல்லியிருக்கவும் முடியாது. மாறாக, கர்த்தரின் பெயரால் கர்த்தரின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் சில விஷமிகளால் இது போன்ற வசனங்கள் பைபிளில் தினிக்கப்பட்டிருக்கும் - திணிக்கப்பட்டிருக்க வேண்டும். இதை நாம் சுயமாக ஒன்றும் சொல்லவில்லை பைபிளின் மற்ற வசனங்களை ஒப்பிட்டுத்தான் இதை கூறுகின்றோம்.

காரணம், மோசேயின் காலம் தொட்டு, தாவீதின் காலத்திலும், இன்னும் இயேசுவின் கலத்திலும் கூட 'ஒருவன் அன்னியப்பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் அவன் கல்லால் அடித்துக்கொள்ளப்படி வேண்டும் (பார்க்க லேவியராகமம் 20:10) என்ற சட்டமே நடைமுறையில் இருந்தது என்று பைபிள் கூறுகின்றது.

அப்படிப்பட்ட சட்டம் - நீதி பரிபாலன் மிக்க கர்த்தரால் வழங்கப்பட்ட சட்டம் - நடைமுறையில் இருக்க, எப்படி தாவீது மட்டும் அந்த சட்டத்திலிருந்து தப்பிக்கும் வகையில் அவருடைய செலுக்காக கொடுக்கப்படவேண்டிய தண்டனையான, மரணத்தண்டனைக்கு மாற்றமாக வேறு ஒரு சட்டத்தை சொல்லியிருப்பார்? அதுவும் குறிப்பாக அவர் செய்த அந்த அநாகரீக செயலுக்குரிய தண்டணையை அவரை அனுபவிக்கவிடாமல், அவருடைய பெண்மக்களை அடுத்தவனுக்கு ஏற்படுத்திகொடுக்கும் இந்த அசிங்கமான தண்டனையை கொடுப்பதாக எப்படி கூறியிருப்பார்?

சாதாரண அப்பாவி ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுக்கு மரணதண்டனையும், அதே ஒரு அரசன் செய்தால் அவனுக்கு அதிலிருந்து விதிவிலக்கும் என்கிற அளவுக்கு பாரபட்சம் காட்டுபவரா கர்த்தர்? இப்படித்தான் கர்த்தரின் நியாங்கள் இருக்குமா? என்றால் கண்டிப்பாக இருக்காது என்றே பைபிள் சொல்கின்றது. ஏனெனில் உன்மையிலேயே தாவீது விபச்சாரம் செய்திருந்தால் அவருக்கு அன்றை காலத்தில் இருந்த மரணதண்டனைத்தான் கிடைத்திருக்க வேண்டும். அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. கர்த்தரும் அதிலிருந்து யாருக்கும் விதிவிலக்கு அளிக்கமாட்டார், ஏனெனில் அவர் நீதியுள்ளவர் என்று பைபிள் கூறுகின்றது:

அவர் கன்மலை அவர் கிரியை உத்தமமானது அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன் அவர் நீதியும் செம்மையுமானவர். - உபாகமம் 32:4

மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப் பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ? - யோபு 4:17

தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ? - யோபு 8:3

கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கைகளெல்லாம் சத்தியமுமாயிருக்கின்றது - (சங்கீதம் 33:4)

இப்படி பைபிளில் கர்த்தருடைய சட்டங்களைப்பற்றியும் அவரது நீதியின் செம்மையைப் பற்றியும் தெளிவாக சொல்லியிருக்க, எப்படி தாவீதுக்கு மட்டும் அதிலிருந்து விதிவிலக்கு அளித்து, அவருக்கு பதிலாக அவரது பெண்மக்களை - ஒரு அசிங்கமான சட்டத்தின் மூலம் - தண்டிப்பதாக சொல்லியிருப்பார்? கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?

விபச்சாரம் என்பது மிகவும் இழிவான செயல் என்று பைபிளின் பல இடங்களில் சொல்லப்படுகின்றது. அப்படி எவரேனும் விபச்சாரம் செய்தால் அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் பைபிள் வலியுறுத்துகின்றது. அந்த சட்டம் மோசேயின் காலத்திலிருந்து, தாவீதின் காலம் தொட்டு இயேசுவின் காலத்திலும் நடைமுறையில் இருக்க, அப்படிப்பட்ட இழிவான கேவலமான விபச்சாரத்தை கர்த்தரே மற்றவர்கள் செய்வதற்கு வழிவகுத்துக் கொடுத்தார் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதே விபச்சாரத்தை பற்றி பைபிள் கூறுவதை பாருங்கள்:

தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்தரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது அவர்கள் ஓட்டம் பொல்லாதது. அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது. - எரேமியா 23:10

விபச்சாரம் செய்பவன் கல்லால் அடித்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் பைபிள் கூறுவதைப்ப பாருங்கள்:

ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள். - லேவியராகமம் 20:10, உபாகமம் 22:22

இப்படி விபச்சாரத்தை பொல்லாதது - கொடியது என்று சொன்ன கர்த்தர் - ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று சட்டம் போட்ட - கர்த்தரா ஒரு விபச்சாரத்திற்கான தண்டனையாக பலரை விபச்சாரத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு சட்டததை சொல்லியிருப்பார்?

அதுமட்டுமல்ல, இந்த வசனம் கர்த்தரின் மீது கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சில யூத எழுத்தாளர்களால் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்பதை பைபிளின் இன்னும் சில வசனங்களும் தெளிவு படுத்துகின்றது. அதாவது, ஒருவன் பாவம் செய்தால் அதற்கான தண்டனையை அவன் தான் அனுபவிக்க வேண்டுமே யொழிய அவனது மகனோ அல்லது அவனைச்சார்ந்தவர்களோ அனுபவிக்க கூடாது என்றும் கர்த்தர் கூறியதாக பைபிளில் கூறப்படுகின்றது.

பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான் எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும். - எரேமியா 31:29-30

இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான். பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும் குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும். - எசேக்கியேல் 18:19-20

இப்படி தெளிவாக எவன் குற்றம் செய்தானோ அவன் தான் அதற்கான தண்டனையை அனுபவிக்கவேண்டுமே தவிர அதற்கு பகரமாக வேறு எவறும் அவனது பாவத்திற்காக தண்டனையை அனுபவிக்க முடியாது என்று பைபிளில் சொல்லியிருக்க, கர்த்தர் எப்படி தாவீது செய்த அந்த ஈனச்செயலுக்காக அவனது பெண்மக்களை அடுத்தவனுக்கு ஏற்படுத்திகொடுப்பதாக கூறியிருப்பார். எனவே மேலே எடுத்துக்காட்டப்பட்ட 2 சாமுவேல் 12: 11 - 12 ம் வசனங்கள் கண்டிப்பாக யூத எழுத்தாளர்களால் கர்த்தருக்கு கலங்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் - தாவீதை இழிவு படுத்தும் தீய எண்ணத்துடன் - பைபிளில் தினிக்கப்பட்ட வசனங்களே என்பதை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

இதனால் தான் வல்ல இறைவன் தனது இறுதித் திருமறையாம் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது, - அல்குர்ஆன் 29 : 68

சிந்தியுங்கள் எனதருமை கிறிஸ்தவர்களே!

இஸ்லாமிய நூற்கள் வாசிப்பது குறித்து-அ.மார்க்ஸ்

சென்ற ஏப்ரல் 22, 23 தேதிகளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் “மதங்கள், தத்துவங்கள் மற்றும் மனிதாயச் சிந்தனை களுக்கான” துறையின் சார்பில் “மதப் புனித நூற்களை வாசிப்பது மற்றும் விளக்கமளிப்பது” குறித்து ஆய்வரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் முனைவர் முத்துமோகன்.

வழக்கம்போல இஸ்லாமியப் புனித நூற்களின் பன்முக வாசிப்பு என்றே தலைப்பு எனக்கு அளிக்கப்பட்டது. சற்று எச்சரிக்கையோடும், மிகுந்த கவனமாகவும் செய்ய வேண்டிய பணி என்றபோதிலும் உவந்து அதை ஏற்றுக் கொண்டேன். ஏனெனில் இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் இங்கே நிலவுகிற அறியாமைகளில் ஒன்று – இஸ்லாம் இறுக்கமான ஒற்றைக் கருத்துடைய மதம் என்பது. ஆனால் முஸ்லிம்களுக்குள் எந்தப் பிரச்சினையிலும் ஒன்றைக் கருத்து கிடையாது என்பதும், ஏராளமான வாதங்கள் உள்ளுக்குள் நடைபெற்றுக்கொண்டுள்ளன என்பதும், பெண்ணியர்கள் தொடங்கி பின் நவீனத்துவவாதிகள் வரை ஏராளமான பல புதிய வாசிப்புகளை முயன்று கொண்டுள்ளனர் பலரும் பல முஸ்லிம்கள் உட்பட கவனத்தில் கொள்ளாத, கவனத்தில் கொள்ள விரும்பாத ஒரு உண்மை. இரண்டாண்டுகளுக்கு முன்னர் வட மாநிலம் ஒன்றில் இம்ரானா என்கிற பெண் தன் மாமனாராலேயே வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் அளிக்கப்பட்ட `ஃபத்வா’ குறித்து இங்கு எழுந்த விவாதங்கள் இதைப் புரிந்து கொள்வதற்கான ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு.

மிகவும் மதிக்கப்பட்ட ஆயத்துல்லாஹ் கோமெய்னி, புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு எதிராக அளித்த ஃபத்வாவை ஆதரித்த முஸ்லிம்களைக் காட்டிலும் எதிர்த்தவர்களே அதிகம் என்பதும் சிந்தனைக்குரியது.
எனினும் புனித நூற்கள் (Scriprures) வேதங்கள் என்பன பன்முக வாசிப்பிற்குரியவை அல்ல என்பதே மதவாதிகளின் இறுக்கமான கருத்து. ஆனால் யோசித்துப் பார்த்தால் மதங்கள் பன்முக வாசிப்பிற்குட்பட்டே வந்துள்ளமை விளங்கும். அதன் விளைவே மதங்களின் உட்பிரிவுகள். எந்த மதத்தில்தான் உட்பிரிவுகள் இல்லை? வேடிக்கை என்னவெனில் எல்லா மறு வாசிப்புகளும்கூட பன்முக வாசிப்பை மறுதலித்தே வரும். தமது வாசிப்பு ஒன்றே சரியான வாசிப்பு என்று வாதிக்கும் இந்த வகையில் மதங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஓர் ஒப்புமையைக் காண இயலும். இப்படிச் சொல்வதற்காக மதவாதிகளோ இல்லை அரசியல்வாதிகளோ கோபங்கொள்ளத் தேவையில்லை. .இறுக்கமான கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் (dogmatic) நிறுவனங்களின் தவிர்க்க இயலாத பண்பாக இதைக் கருதலாம்.

வாசிப்பின் பன்முகத் தன்மை என்பது நவீன இலக்கியக் கோட்பாடுகளால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. `அமைப்பியலுக்குப்’ பிந்திய உலகளாவிய கருத்தொருமிப்பு என்றுகூட இதனைச் சொல்லலாம். மொழியின் இடுகுறித் தன்மை (arbitraryren) சொற்களை அர்த்தங்களுடன் இறுக்கமாகக் கட்டிப் போட்டுவிட இயலாது என்கிற கருத்துக்களினடியாக உருவானதே பன்முகவாசிப்பு. வாசிப்பின் ஜனநாயகத்தை முன்வைக்கும் சிந்தனை என்று மட்டுமே இதை நாம் கருத வேண்டியதில்லை. இன்றும் முக்கியமான அறம் சார்ந்த ஒரு பிரச்சினையையும் இது எழுப்புகின்றது. பன்முக வாசிப்புகளில் எதுவும் முதன்மையான ஒன்றாக இருக்க இயலாது என்பதே அது. ஆனால் மாற்று வாசிப்பைச் செய்கிற ஒவ்வொருவரும் நம்முடையதே முதன்மையானது, சரியானது என்கிற கருத்தையே கொண்டுள்ளோம். “எல்லா வாசிப்புகளும் சமமானவைதான். ஆனால் என்னுடைய வாசிப்பு மற்றவற்றைக் காட்டிலும் ரொம்பச் சமமானது” என்கிற ஆர்வெலிய அபத்தத்திலிருந்து யாரும் விதிவிலக்கல்ல.

சில ஆண்டுகளுக்கு முன்னர், “அக்கினிக்குஞ்சொன்று கண்டேன். அதை அங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன். வெந்து தணிந்தது காடு. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?”- என்கிற பாரதியின் புகழ்பெற்ற `தத்துவப்’ பாடலுக்கு முற்றிலும் உடலுறவு சார்ந்த ஒரு விளக்கத்தை அளித்து நடைபெற்ற விவாதம் இங்கே கருதத் தக்கது.
சொல்லப்போனால் பிரதி மிகவும் இறுக்கமான அர்த்தங்களின் விளை நிலம்; வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லக் கூடியது என்கிற கருத்து மிகவும் நவீனமான ஒரு சிந்தனை. அறிவொளிக் காலத்திற்குப் பின் இது உறுதிப்பட்டது. ஆனால் புனித நூற்கள் தோன்றிய காலத்தில் அப்படியான கருத்து இருந்தது இல்லை. அருளப்பட்ட புனித நூற்களைக் கொண்டிருந்த யூதர், கிறிஸ்துவர், முஸ்லிம் என யாரும் தமது வேதங்கள் உருவாக (allegorical) விளக்கங்களுக்கு உரியன என்கிற கருத்தையே கொண்டிருந்தனர். இறை வார்த்தை அளவற்ற பொருள் நிரம்பியது. ஒற்றை விளக்கத்தில் அதைச் சிறையிட்டு விடக் கூடாது.

துல்லியமான விவரங்கள் நிரம்பியதாகவும், வரலாற்றுப் பெட்டகமாகவும், நவீன `விஞ்ஞான’ அளவுகோல்களுக்குரியதாகவும் பிரதிகளைக் கருதுவது இன்றைய வழக்கமே. தமது வேதங்களில் செய்யப்பட்டவை இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோடு பொருந்திப் போவதாகப் பெருமை கொள்ளும் மதவாதிகளைப் பார்க்கும்போது நம்மால் புன்னகைக்காது இருக்க இயலாது. இறை வாாத்தைகட்கு விஞ்ஞான அந்தஸ்து கோருவது எத்தனை முரண்?
இஸ்லாமின் முதன்மைப் புனித நூலாகிய திருக்குர்ஆன் இறைவனால் (அல்லாஹ்) நபிகள் நாயகத்தினூடாக இறக்கியருளப்பட்டது. திருக்குர்ஆனின் வாக்குகள் ஒவ்வொன்றும் `ஆயத்’துகள் என்றே அழைக்கப்படும். அதாவது `‘Parabler’ நீதிக்கதைகள், உருவகக் கதைகள். கவனம் (சொர்க்கம்), நரகம், இறுதித் தீர்ப்பு குறித்த எல்லா வாக்குகளுமே ஆயத்துகள்தான்.

என்றென்றைக்குமான உண்மைகளைச் சொல்லும் இவற்றை நேரடியாக அர்த்தப்படுத்திக் கொள்ளாமல் குறிகள், குறியீடுகள் மூலமாகவே உருவகித்துக்கொள்ள இயலும் என்பார் இஸ்லாம் குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்துள்ள கரேன் ஆர்ம்ஸ்ட்ராங்.
இன்னொன்றையும் அவர் சொல்வார். திருக்குர்ஆன் ஓதுதற்குரியது (recitation). அதை வாசித்து வரிக்கு வரி பொருள் சொல்வதைக் காட்டிலும் காதில் வாங்கி (listen) உள் வாங்குதலே உத்தமம். கவித்துவமிக்க மொழிநடையில் அருளப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதப்படும்போது வெளிப்படும் ஒலிப்பாங்கம் பிற இணையான வாக்குகளுடன் தொடர்பு கொண்டு மனத்தில் உருவாக்கும் உணர்வலைகளே முக்கியம். இப்படியாக உருவாகும் உணர்வலைகள் அமைதி, அன்பு, நீதி, பொறுமை, சகிப்புத்தன்மை மற்றமையை ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றையே காது கொடுத்துக் கேட்போரின் நெஞ்சில் நெகிழ்விக்கும். மாறாக வரிக்கு வரி பொருள் கொள்வோர் தமக்கு வேண்டிய எதையும் வாசித்துக் கொள்ள இயலும்.


இஸ்லாமின் முதன்மை ஆதார நூற்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:
1. திருக்குர்ஆன் – இறைவனால் நேரடியாக அருளப்பட்டது.
2. `ஹதீஸ்’ மற்றும் `சீறத்’கள். இவற்றில் `ஹதீஸ் என்பன நபிகளாரின் வாழ்வையும், வாக்குகளையும் தொகுத்துச் சொல்பவை. சங்கிலித் தொடராய் பின்னோக்கிச் சென்று யாரால் அறிவிக்கப்பட்டது எனக் கூறுபவை. இப்னு மிஜா (கி.பி.824-856), அல்புஹாரி (820-870), முஸ்லிம் (817-875), அபு தாவுத் (817-889), அத் திர்மிதி (இ.892), அந்நஸயி (830-915) என்பவர்களால் தொகுக்கப்பட்டவை முக்கிய மரபுகளாகக் கருதப்படுகின்றன. `சீறத்’கள் என்பன நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொன்னவை: இப்ன் ஸஅத், இப்ன் இஹ்ஹாக், அல்தபரி ஆகியன தொடக்க கால வரலாற்று நூற்களில் முக்கியமானவை.
3. `ஷரியத்’கள் எனப்படும் முஸ்லிம் சட்ட விதிகள். வளர்ச்சியின் இரண்டாம் கட்டத்தில்-அதன் விரிவாக்க காலத்திய-முக்கிய ஆவணங்கள் (634-925) இவை.
இஸ்லாமியப் புனித வழிபாட்டு ஆவணங்களின் உருவாக்கத்தை கீழ்க்கண்ட காலப் பாகுபாட்டிற்குள் அடக்கலாம்:
(அ) கி.பி.610-632; அருள் வெளிப்பாட்டின் தொடக்கத்திலிருந்து நபிகளின் மரணம் வரை.
(ஆ) 632-634 : முதல் கலீபா அபுபக்கர்- முந்தைய சூழலின் கிட்டத்தட்ட அதே தொடர்ச்சி.
(இ) 634-644 : கலிமா உமர் – இஸ்லாம் புதிய புவிப் பகுதிகளில் பரவத் தொடங்கிய காலம். மாற்றங்களின் தொடக்கம்.
(ஈ) 644-925: புதிய பகுதிகளுக்குப் பரவிய, கலாச்சாரப் பரிமாற்றங்கள் நிறைந்த காலம். இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் மதச் சட்டங்களுக்கும் இறுக்கமான வடிவு கொடுக்கப்பட்ட காலம்.
இதை எதற்காக இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் எனில் இத்தகைய வரலாற்றுப் போக்கினூடாக உருவாகிக் கையளிக்கப்பட்டுள்ளவையே இன்றைய புனித ஆவணங்கள். இந்த வரலாற்றின் எச்சங்கள் அவற்றில் படிந்திருப்பதையும் அவற்றினூடான மாற்றங்கள், ஒற்றைக் கருத்தின் சாத்தியமின்மை ஆகியவற்றையும் கவனத்தில் நிறுத்துவது அவசியம். இவற்றில் எவற்றை முதன்மைப்படுத்துவது என்கிற அடிப்படையிலேயே இன்று பல உட்பிரிவுகள் சாத்தியமாகியுள்ளன. சில முக்கிய மத உட்பிரிவுகள்: ஷன்னி (மைய நீரோட்டப் பிரிவு எனலாம்), ஷியா (இமாமி/ஸெய்தி), காரிஜ் (இயாதி). வெவ்வேறு `ஹதீஸ்’களை முதன்மைப்படுத்தும் இவர்கள் ஒருவரை ஒருவர் நம்பிக்கைபெற்றவர் (infidels) எனச் சொல்லத் தயங்குவதில்லை. இதற்குள்ளும் எந்தச் சட்ட மரபைப் (law school) பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொருத்த உட்பிரிவுகள் உள்ளன. ஷன்னி பிரிவில் மட்டும் நான்கு சட்ட மரபுகள் உள்ளன.

1. அபு ஹனீபா (கி.767) வால் உருவாக்கப்பட்ட ஹனபி சட்டம்
2. மாலிக்கால் (இ.795) உருவாக்கப்பட்ட மாலிகி சட்டம்
3. ஷாஃபி (இ.820) சட்டம்
4. கிப்ன் ஹன்ஸால் (கி.855) உருவாக்கப்பட்ட ஹனபாலி சட்டம்.

எனினும் இவர்கள் ஒருவரை ஒருவர் நம்பிக்கையற்றவர்கள் எனக் குற்றம்சாட்டிக் கொள்வதில்லை. இவை தவிர Technology அடிப்படையிலும் பிரிவினைகள் உள்ளன. சுருக்கம் கருதித் தவிர்ப்போம். இஸ்லாத்திற்குள் நிலவும் பன்மைத் தன்மையின் பால் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வளவும்.
இஸ்லாம் இன்று மிகக் கடுமையான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்துக் கொண்டுள்ளதை அறிவோம். இது இஸ்லாமிற்குள்ளும் மிகப் பெரிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இவை இஸ்லாமியப் புனித நூல்களை பல புதிய வாசிப்பிற்குள்ளாக்குகின்றன. இஸ்லாத்திற்குள் `ஜிஹாத்’திற்கு இடமுண்டு என வாதிக்கும் இஸ்லாமியவாதிகள் ஒருபுறம், `ஜிஹாத்’தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை, என `ஃபத்வா’ விதிக்கும் தியோபந்திகள் ஒருபுறம், திருக்குர்ஆனில் தந்தை வழி ஆணாதிக்கத்திற்கு இடமில்லை என வாதிடும் இஸ்லாமியப் பெண்ணியக்கம் ஒரு புறம் எனப் பல திசை விவாதங்கள் இடம் பெறுகின்றன. மூன்றாவது போக்கைப் பற்றி மட்டும் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம். தொழுகைத்தலத்தில பெண்களுக்கு இடமுண்டா, தற்காலிகத் திருமணம் (`முடா’) அனுமதிக்கப்படுகிறதா, `முத்தலாக்’ முதலானவை குறித்த விவாதங்களை சாத்தியமானால் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
ஃபாதிமா மெர்னிசி (மொராக்கோ), ஆமினா வதாத் (ஆஃப்ரோ அமெரிக்கர்), அஸ்மா பர்லாஸ் (பாகிஸ்தான்) ஆகியோர் திருக்குர் ஆனை மறுவாசிப்பிற்குள்ளாக்கும் பெண்களில் முக்கியமானவர்கள். தன்னைப் `பெண்ணியவாதி’ எனச் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்கிறார் அஸ்மா. இத்தகைய பெயர் சூட்டல் பல தவறான பொருட்களுக்கு இட்டுச் செல்லக் கூடும் என அவர் அஞ்சுவதை நாம் விளங்கிக் கொள்ளலாம். தன்னை இஸ்லாத்தை ஏற்கும் நம்பிக்கை வாதி, திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்கிற அதன் Ontological status ல் தனக்கு எந்த ஜயமும் இல்லை என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறார் இந்த `ஹிஜாப்’ அணியாத இஸ்லாமியச் சிந்தனையாளர். “நான் இஸ்லாத்தையும், திருக்குர்ஆனையும் முழுமையாக நம்புகிறேன் (beleive). ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை வாதம் (Optimism) என்னிடமில்லை. ஏனெனில் இஸ்லாத்திற்குள் உள்ள பிற்போக்கு சக்திகள் பலமுள்ளவர்களாக உள்ளனர்” என்கிறார் அஸ்மா.


திருக்குர் ஆன் குறித்த பன்முக வாசிப்புகளில், ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை வாசிப்பு தவறான ஒன்று (misreading) என்பது அவர் கருத்து. நாம் முன்பு குறிப்பிட்ட வரலாற்று ரீதியான மாற்றங்களினூடாக, இஸ்லாம் விரிவாகி, இறுக்கமான அரசாக, தந்தை வழிச் சமூகமாக உருவானபோது பரிணமித்த வாசிப்பு இது. இவ்வாறு பொருள் கோட்டியலுக்கும் (heroneneutics) வரலாற்றுக்கும் இங்கே ஒரு முரண் உருவாகிவிடுகிறது. ஆதிக்கம் செலுத்தும் வாசிப்பு வரலாற்று ரீதியானதே, காலத்தை விஞ்சியதல்ல. தமது கருத்துக்களை வலியுறுத்த வேண்டி திருக்குர்ஆனைப் புரிந்து கொள்ள மத வரலாற்றையும், மரபுப் பதிவுகளையும் (ஹதீஸ்கள் உட்பட) இவர்கள் அதிகம் சார்ந்துள்ளனர். இத்தகைய வரலாற்று அடிப்படையிலான அறிவு மனிதத் தவறுகளுக்கு உட்பட்டது. மத ரீதியாகவும் சரி, முறையியல் அடிப்படையிலும் சரி திருக்குர்ஆனை இப்படி வாசித்தலை ஏற்க இயலாது என்பது அஸ்மாவின் வாதம்.
அப்படியானால் திருக்குர்ஆனை எப்படி வாசிப்பது? திருக்குர்ஆனை திருக்குர்ஆன் மூலமாகவே வாசிக்க வேண்டும். (holistic reading) வேறு துணை அதற்குத் தேவையில்லை. திருக்குர்ஆனை முழுமையாக வாசித்து அதன் பொதுக் கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். தனித்தனியாகப் பிரித்து வாசித்து, தமக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொள்வதை திருக்குர்ஆனே கண்டிக்கிறது. `வஹி’ _ அதாவது இறைவாக்குகள் இறங்குதல் முற்றுப் பெறுமுன் அவசரமாகப் பொருள் கொள்ள வேண்டாம் என அது எச்சரிக்கிறது (20:114). பலவற்றை மறைத்து இவற்றை மட்டும் முன்னிறுத்தி வாசிப்பதை மறுக்கிறது (6:91).

வேதத்தைப் பல கூறுகளாகப் பிரித்து தமது தேவையைப் பூர்த்தி செய்து கொள்வோரை “நாம் நிச்சயமாக விசாரிப்போம்” என எச்சரிக்கிறது (15: 90_93). எல்லாவற்றிற்கும் மேலாக இறைவாக்குகளை அவற்றின் சரியான இடத்திலும் காலத்திலும் வைத்துப் பொருள்கோட வேண்டும் (5:4) என திருக்குர் ஆன் எச்சரிப்பது குறிப்பிடத் தக்கது. பன்முக வாசிப்பிற்கு ஒரு எல்லையுண்டு, பிரதிக்கும் செயல்படுகிற தர்க்கத்தைப் புறக்கணித்து மிகை விளக்கம் அளிக்கக் கூடாது என உம்பர்டோ ஈகோ எச்சரிப்பது (Interpretation and Over interpretation பார்க்க : எஸ். சண்முகம் நூலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரை) இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.
திருக்குர்ஆனை இப்படி ஒட்டு மொத்தமாக வாசிக்கும்போதுதான் மேலைச் சூழலில் ஆதிக்கம் செலுத்திய பெண் வெறுப்பும் (mysogeny) ஆணாதிக்கப் பார்வையும் அதில் கிடையாது என்பது விளங்கும். பைபிளில் சொல்லப்படுவது போல இறைவன் திருக்குர்ஆனில் தந்தையாக உருவகிக்கப்படுவதில்லை. அப்படி சொல்வதை வெளிப்படையாக மறுக்கிறது.

தந்தைமையையும் (Fatherhood) அது புனிதமாக்குவதை எதிர்க்கிறது. உடல் ரீதியான பாலியல் வேறுபாட்டின் (biological sex) அடிப்படையில் ஆண்களையும் பெண்களையும் எதிர் எதிராக நிறுத்துவதையும் அது ஏற்பதில்லை. பெண்களை வேறுபடுத்திப் பார்ப்பதே இல்லை எனச் சொல்ல வரவில்லை. உடல் ரீதியான வேறுபாட்டின் அடிப்படையில் (Sex) திருக்குர்ஆன் பெண்மைக்குரிய (gender) குறியீடுகள் எதையும் வகுப்பதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அது பாலியல் ரீதியாக வேறுபடுத்தினாலும்கூட இருபாலரையும் சமமற்றவர்களாகச் சொல்வதில்லை.அப்படியானால் ஆண்கள் பல பெண்களை மணந்து கொள்ளலாம் எனவும் தேவையானால் கணவன் மனைவியை அடிக்கலாம் எனவும் திருக்குர்ஆன் அனுமதிப்பதை எவ்வாறு பொருள் கொள்வது? இந்தக் குறிப்பான வசனங்களுடன்தான் `போராடி’ உருவாக்கிய பொருளை அஸ்மா கூறுகிறார்.

மனைவியை அடிப்பது என்பதற்கு திருக்குர்ஆன் பயன்படுத்தும் சொல்: `தராபா’. இதற்கு `அடிப்பது’ என்பது தவிர `பிரிப்பது’ என்பது உட்படப் பல பொருள்கள் உண்டு. தம்பதிகளுக்கிடையே அன்பை, பொறுமையை, கருணையை சகிப்புத்தன்மையைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே உள்ள திருக்குர்ஆனின் பொதுப் போக்கிற்கு ஏற்ப பொருள் கோடாமல் `அடிப்பது’ என்கிற சொல்லைத் தேர்வு செய்தது எங்ஙனம்? இதுகாறும் திருக்குர்ஆனை வாசித்தவர்கள் எல்லாம் ஆண்களாக இருந்ததுதானே இதற்குக் காரணம்?


`நுஷூஸ்’ என்கிற சொல்லுக்குக் `கணவனுக்கு மனைவி பணியாமை’ என இதுகாறுமான வாசிப்பில் பொருள் கொண்டாடப்படுகிறது. ஆனால் அதே சொல் `மனைவிக்குக் கணவன் பணியாதிருத்தலையும்’ குறிப்பிடுவதை அஸ்மா சுட்டிக் காட்டுகிறார். போரில் அனாதையாக்கப்பட்ட பெண்களுக்காகவே திருக்குர்ஆன் பல தார மணத்தை வற்புறுத்துகிறது.
இப்படி நிறையச் சொல்லலாம். அப்படியானால் திருக்குர்ஆனை ஒரு பெண்ணியப் பிரதி எனச் சொல்லலாமா? இது இன்னும் பெரிய அபத்தம். பெண்ணியம், ஜனநாயகம், மதச்சார்பின்மை என்பவையெல்லாம் ரொம்பவும் நவீனமான கருத்தாக்கங்கள். ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முற்பட்ட பிரதிகளில் இவற்றைத் தேடுவது அபத்தம். பேரரசர் அக்பரை மதச்சார்பற்ற (Secular) சிந்தனையாளர் என்கிற ரீதியில் அமார்த்திய சென் வரையறுத்தது விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது. இங்கே குறிப்பிடத்தக்கது. அக்பரின் மதப் பொறுமையை, மாற்று மதங்களை அனுசரிக்கும் தன்மையை வியப்பது வேறு, Secularism என்கிற நவீன கருத்தாக்கத்தை அவர் மீது சுமத்துவது என்பது வேறு.இஸ்லாத்தில் ஆணாதிக்கக் கருத்தர்கள் இல்லை என்பதல்ல.

ஆனால் அது வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்டதே. அத்தகைய கருத்துக்கள் என்றென்றைக்கு மானவையல்ல. ஒரு மாற்று வாசிப்பு இஸ்லாத் திற்குள்ளேயே, திருக்குர்ஆனிலேயே சாத்தியம் என்பதுதான் அஸ்மா பர்லாஸ் போன்றோரின் வாதம். `இஸ்லாம் பெண்களுக்கு எதிரானது’ என்பதாகச் சொல்லி வெளியே நின்று விமர்சிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் பின் உரையாடலுக்கே சாத்தியமில்லாமல் போய் விடும். மதத்திற்குள் நின்று உரையாடுவதற்குரிய ஒரு Textual Strategy யை அஸ்மா போன்றோர் உருவாக்குவது ஒரு மிக முக்கியமான போக்கு–நன்றி: குமுதம் தீராநதி.

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி அமைத்திட நிதியமைச்சர் வாக்குறுதி!

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி அமைத்திட நிதியமைச்சர் வாக்குறுதி!



இந்தியாவில் இஸ்லாமிய முறையிலான வங்கித் திட்டத்தைத் துவக்கும் முயற்சிகளில் குறிப்பிடத் தக்க மிகப் பெரும் முன்னேற்ற நிகழ்வாகக் கடந்த 25.10.2009 அன்று ஒரு சந்திப்பு நடந்தது. இஸ்லாமியப் பொருளாதார இந்திய மைய ICIF ( Indian Centre for Islamic Finance) அமைப்பின் தூதுக் குழுவினர், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜீ அவர்களைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, "வட்டியில்லா இஸ்லாமிய வங்கித்திட்டம் இந்தியாவில் துவங்கிடத் தேவையான சாத்தியக் கூறுகளைப் பற்றி இந்திய ரிசர்வ் வங்க்கியின் கவர்னருடன் வெகு விரைவில் விரிவாக விவாதிப்பேன்" என்று தூதுக் குழுவினரிடம் அமைச்சர் வாக்குறுதியளித்தார்.

நிதியமைச்சரைச் சந்தித்த பின்னர் தூதுக்குழுவின் பிரதிநிதி அப்துர் ரகீப், "நிதியமைச்சர் அவர்களிடம் நாங்கள் சமர்ப்பித்த மூன்று பக்க அறிக்கையை அவர் மிகவும் ஆர்வத்துடன் பொறுமையாகப் படித்துப் பார்த்தார். குறிப்பாக, 'வட்டியில்லாப் பொருளாதாரத்தைப் பரவலாக்கிடப் பெருமளவில் முயற்சிகளும் செயல்பாடுகளும் தேவை' என்றும் இது, 'நடைமுறையில் உள்ள வங்கிமுறைகளோடு ஒத்திசைவாக அமைய வேண்டும்' என்றும் குறிப்பிடப் பட்டிருக்கும் ரகுராம் ராஜன் அவர்களின் நிதித்துறை சீரமைப்புக் குழு(Committee on Financial Sector Reforms - CFSR)வின் வட்டியில்லா வங்கித் திட்டத்தின் பரிந்துரைப் பகுதிகளைக் கவனமாகவும் பொறுமையாகவும் நிதியமைச்சர் வாசித்தார்" என்று கூறினார்.

வட்டியில்லா வங்கி முறை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பயனளிப்பதாகும். மலேசிய வட்டி இல்லா வங்கிகளில் 40% வாடிக்கையாளர்கள் சீனர்கள் ஆவர். பிரிட்டன் வங்கிகளின் 20% வாடிக்கையாளர்கள் முஸ்லிம் அல்லாதவர்.
மேலும், "CFSRஇன் பரிந்துரை, 'புதுமையான வழிமுறைகளின் சேர்க்கைகள் மூலம் பொருளாதார வளர்ச்சி' எனும் குறிக்கோளுக்கு ஒத்துள்ளது. மேலும் முறையான ஆய்வுகள் செய்து அதன் பின்னர் திட்டம் வகுத்து, நடைமுறைப் படுத்தப்படும் செயல் திட்டங்களின் மூலம் எவ்விதப் பக்க விளைவுகளோ அபாயமோ இல்லாததும் எளிதில் சாத்தியமாகக் கூடியதுமே வட்டியில்லா வங்கித் திட்டம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அப்துர் ரகீப் தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்து குறிப்பிடுகையில், "வட்டியில்லா வங்கி முறை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பயனளிப்பதாகும். மலேசிய வட்டி இல்லா வங்கிகளில் 40% வாடிக்கையாளர்கள் சீனர்கள் ஆவர். பிரிட்டன் வங்கிகளின் 20% வாடிக்கையாளர்கள் முஸ்லிம் அல்லாதவர். மேலும், "இஸ்லாமியப் பொருளாதாரமும் அதன் கோட்பாடுகள் சார்ந்த சமூகநல நோக்கமும் பொறுப்பும் உள்ள முதலீகள் என்பன - அவை எதுவுமற்ற - நடைமுறையில் உள்ள வங்கித் திட்டத்திற்குச் சிறந்த மாற்றுவழியாகும்" என்று வாடிகன் ஆட்சி மன்றம் மேற்குலக வங்கிகளுக்குப் பரிந்துரைத்து இருப்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்" என்று கூறினார்.

கேரள அரசின் (Rs.1000 crore) ஆயிரம் கோடி ரூபாய் நிதியுடன் துவக்கப்பட்ட இதே அடிப்படையிலான இஸ்லாமிய முதலீட்டு நிறுவனம் பற்றியும், அதைப் பொருளியல் ஆய்வாளர்களான Ernst & Young நிறுவனத்தினரின் ஆய்வு அறிக்கைகளின் முடிவுகளுக்குப் பின்னர் உலகளாவிய இஸ்லாமிய வங்கியாக மாற்றும் திட்டமும், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைத் திருத்திய பின்னர் நிறைவேற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தேர்ந்து கொள்வதற்காக நிதியமைச்சரிடம் அளிக்கப் பட்ட மனுவில் குறிப்பிடப் பட்டுள்ள ஐந்து அம்சத் தீர்மானங்களுள் :

* நிர்வாக வழிகாட்டல்கள்

* நிதி ஒதுக்கீடு

* நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றல்

ஆகிய பகுதிகள் நிதியமைச்சரின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தன.

ரிசர்வ் வங்கியின் கவர்னரை அடுத்த வாரம் சந்தித்து இது விஷயமாகப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக நிதியமைச்சர் கூறினார். மேலும் அவர் விரைவில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அங்கிருந்து நவம்பர் இரண்டாவது வாரம் திரும்பிய பின்னர் இது விஷயமாக ICIF பிரதிநிதிகளும் நிதியமைச்சகச் செயலாளர்கள், மற்றும் வங்கித்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் அமர்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என்று நிதியமைச்சர் கூறியதாகவும் அப்துர் ரகீப் கூறினார்.

நன்றி : www.twocircles.net

தமிழாக்கம் : இபுனு ஹனீஃப்
Related Posts Plugin for WordPress, Blogger...