(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, September 17, 2015

ஏன் இசையமைக்கவில்லை என்று அல்லாஹ் என்னிடம் கேட்டால்..!! -ஏ.ஆர்.ரஹ்மான்.

சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்..

சமீபத்தில் மீடியாக்களில் மிக பெரிய விவாத பொருளாக மாறியிருக்ககூடிய செய்தி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக மும்பையை சார்ந்த ராஸா அகாடமி' என்ற முஸ்லிம் அமைப்பு கொடுத்த ஃபத்வா (மார்க்க தீர்ப்பு).



அதவாது இரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கும்  முஹம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்’       ( நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறு) என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக மும்பையைச் சேர்ந்த 'ராஸா அகாடமி' என்ற முஸ்லிம் அமைப்பு ஃபத்வா கொடுத்திருந்தது.

அந்த அமைப்பு கொடுத்த ஃபத்வாவில் இந்த படத்தின் பெயரே எங்களுக்கு உடன்பட்டதில்லை, இந்த படத்தில் நபிகள் நாயகத்தை ஒருவேளை தவறாக சித்தரித்திருந்தால் பலர் கேலி செய்யும் நிலை ஏற்படலாம்..  எனவே இந்த படம் தடை செய்யபட வேண்டும் , இந்த படத்தை இயக்கிய  மஜிதி மற்றும் ஏ.ஆர்.,ரஹ்மான் மீண்டும் கலிமா சொல்லி இஸ்லாத்திற்குள் வர வேண்டும் என்று  அந்த அமைப்பு மார்க்க தீர்ப்பு கொடுத்துள்ளது.

இதற்க்கு ஏ.ஆர்.,ரஹ்மான் விளக்கமும் அளித்துள்ளார்.

இதில் பல விசயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்/

முதலில்  ராஸா அகாடமி என்ற மும்பையை சேர்ந்த இந்த அமைப்பிற்கு ஃபத்வா வழங்க தகுதி இருக்கிறதா.. இந்த அமைப்பு இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியா என்றால் கண்டிப்பாக இல்லை.. மேலும் இந்த அமைப்பு இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான சூபிசம் கொள்கையை பின்பற்றும் அமைப்பு.

சரி இவர்கள் ஃபத்வா கொடுக்கலாம் என்று வைத்துகொள்வோம். முறையாக இஸ்லாத்தை பின்பற்றும் அமைப்பு என்று வைத்துகொள்வோம். இவர்கள் ஃபத்வா வில் ஏதாவது உருப்படியான வாதம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை முரண்பாட்டின் மொத்த உருவமாகவே  இருக்கிறது. எப்படியெனில்...

**முஹம்மது - மெசஞ்சர் ஆஃப் காட் என்ற திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதனால் அதில் முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி தவறாக சித்தரிப்பு என்பது இவர்கள் அனுமானமே ஆகும் ஆகவே அனுமானங்களை வைத்து மார்க்க தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன.

**முஹம்மது என்ற பெயரில், முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி  படம் எடுப்பதே உடன்பட்டதில்லை  என்றால்.., ஏற்கனவே the message  - the story of islam என்ற படம் 1976ல் வெளியாகி உலகம் முழுவதும்  பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த படம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின்  தூதர் நபி(ஸல்) அவர்களை பற்றியது தான்.  அதற்க்கு எந்த எதிர்ப்பும் , இதுநாள் வரை இவர்கள் தெரிவிக்கவில்லை... முஹம்மது என்று திரைபடத்திற்கு பெயரிடுவதே மார்க்கத்தை விட்டு வெளியேற்றும் செயல் என்று எந்த அடிப்படையில் இவர்கள் மார்க்க தீர்ப்பு வழங்குகிறார் என்று தெரியவில்லை.

** மேலும் அந்த படத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உருவத்தை பிரதிபளிப்பது போன்ற ( நபி(ஸல்) இப்படி தான் இருப்பார்கள் என்பது போன்று வேறு ஒருவரை நடிக்க வைப்பது)  காட்சிகள் இருக்கிறது என்று இயக்குனரோ , அதன் தயாரிப்பாளரோ கூறியதில்லை...

**மாறாக அப்படியான எந்த காட்சியும் இருக்காது என்று தான் இந்த திரைபடத்தை துவங்குவதற்கு முன்பே அந்த திரைப்பட குழுவினரால் தெரிவிக்கபட்டது. மேலும் ஆதாரபூர்வமான வாழ்க்கை வரலாற்றை தான் திரைப்படமாக எடுக்க இருக்கிறோம் என்று கூறினார்கள்...ஏற்கனவே வந்த தி மெசேஜ் படத்திலும் நபி(ஸல்)அவர்களின் கண்ணோட்டத்தில் காட்சி நகர்வது போன்று தான் இருக்கும். தனியாக அந்த charaterல் யாரும் நடிக்க வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

**மஜிதி மற்றும் இசைஅமைப்பாளர் ஏ.ஆர் இருவரும் சினிமா துறைவில் பல காலமாக இருந்துவருபவர்கள் என்பதை அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சூபித்துவ கொள்கையில் இருக்கும் ராஸா அகாடமி என்ற அமைப்பை பொறுத்தவரை இசை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள். இதே நிலைப்பாட்டில் தான் ஏ.ஆர்.ரஹ்மானும் இருக்கிறார்.

** தர்கா, தர்காவாக  போகக்கூடிய ஏ.ஆர் ரஹ்மானை பற்றி எதுவும் பேசாத இந்த அமைப்பு , இசையை ஆதரிக்கும் இந்த அமைப்பு , முஹம்மது என்ற படத்திற்கு இசை அமைத்த காரணத்திற்காக மீண்டும் கலிமா சொல்ல வேண்டும் என்று மார்க்க தீர்ப்பு வழங்க என்ன அருகதை இருக்கிறது இவர்களுக்கு என்று தெரியவில்லை.

**ராஸா அகாடமி இந்த அமைப்பு கேலிக்கூத்தான மார்க்க தீர்ப்பை வழங்க காரணம் சுய விளம்பரத்திற்காக தான் என்பது தெளிவாக தெரிகிறது.  மேலும்
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க ராஸா அகாடமி ஃபத்வாவிற்கு மீடியா இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் வழக்கம்போல் மக்களின் சிந்தனை மாற்றத்திற்கும் TRPக்கும் தான்.
ஆகவே இதுபோன்றவை ஃபத்வா மார்க்கத்தை கேலிகூத்தாக்கும் செயல் எனவே இதை முஸ்லிம்களான நாம் புறந்தள்ளவேண்டும்.

இந்நிலையில் இந்த பத்வாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார்.



அதில் "முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்படத்தை நான் இயக்கவோ, தயாரிக்கவோ இல்லை. அதற்கு இசை மட்டுமே அமைத்தேன். அந்தப் பணியில் கிடைத்த ஆன்மிக அனுபவங்கள் பகிர விரும்பாத தனிப்பட்ட விஷயம்.

நான் இஸ்லாமிய மார்க்கத்தின் அறிஞர் அல்ல. பாரம்பரியத்தையும், பகுத்தறிவையும் ஒரே சீராக நான் பின்பற்றுகிறேன். இங்கும், மேற்கிலும் நான் பயணிக்கிறேன், வாழ்ந்து வருகிறேன். அனைவரையும் நேசிக்க முயற்சிக்கிறேன்.

நான் அல்லாஹ்வை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கப் பெற்று, மனித இனத்துக்கு சேவை செய்வது என்ற செய்தியை எடுத்துச் செல்லும் முகம்மதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று அல்லாஹ் என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வது...? என்று அப்பாவி தனமாக எதிர்கேள்வி கேட்டு தனது நிலைப்பாடு சரிதான் இதில் என்ன தவறை கண்டீர்கள் என்பது போல் விளக்கமளித்துள்ளார்.

அல்லாஹுடைய மார்க்கமான இஸ்லாத்தில் செய்யகூடாது என்று தடுக்கப்பட்ட ஒன்றை ஏன் செய்யவில்லை என்று அல்லாஹ் எப்படி கேட்பான் என்று  நாம் ரஹ்மானுடன் எதிர் கேள்வி வைக்கலாம். ஆனால் உண்மைய சொல்ல வேண்டும் என்றால் ஏ.ஆர்.ரஹ்மான் புரிந்துள்ள இஸ்லாத்தில் இசை ஹலால் தான். இவ்வாறு தான் அவர் புரிந்துள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மானை பொறுத்தவரை அவர் புரிந்துகொண்ட இஸ்லாத்தை அவர் நேசிக்கிறார் அதற்காக நேரம் ஒதுக்குகிறார் , மார்க்கத்திற்கு முக்கியதும் அளிக்கிறார் என்பதெல்லாம் சரி தான். எனினும் அவர் எந்த அளவிற்கு இஸ்லாத்தின் உண்மையான போதனைகளுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்பது விவாதத்திற்குறியதே.

இசை இஸ்லாத்தில் ஹராம் என்பது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தெரியாதா , யாரும் சொல்ல வில்லையா என்றெல்லாம் நம்மில் பலர் பேசிகொள்வதுண்டு.

ஏ.ஆர்.ரஹ்மான் இஸ்லாத்தை தழுவ காரணமாக இருந்தது சூபிசம் கொள்கைவாதிகள் தான் எனவே அதன் அடிப்படையிலே தர்கா இசை பற்றிய பார்வை அவருக்கு இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானை விடுங்கள் நம்மில் பலருக்கு கூட இசை மார்க்கத்தில் அனுமதிக்கபட்டதா இல்லையா என்ற தெளிவு இல்லை...
காரணம் பெரும்பான்மையானவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இசை ஹலாலாக இருந்திருக்க கூடாதா என்றே எண்ணத்திலேயே இசைக்கு ஆதரவான ஆதாரத்தை இஸ்லாத்தில் தேடுகிறார்கள்.

சில விஷயங்கள் தெளிவாக இருந்தாலும் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை காரணம் நம் உள்ளம் சத்தியத்தின் பக்கம் இல்லை, மன இச்சைபடியே செல்கிறது என்பதே உண்மை.


அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

Wednesday, September 16, 2015

மக்கா விபத்து குறித்து மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்ட பா.ஜ.க நிர்வாகி கைது!

சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்.

சென்னை: மக்கா விபத்து குறித்து மகிழ்ச்சி தெரிவித்து ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வேல்முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று மாலை முஸ்லிம்களின் புனித நகரமான மக்காவில் கடும் மணல் காற்று மற்றும் பலத்த மழையின்போது கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் முறிந்து விழுந்தௌ சுமார் 107 ஹஜ் யாத்ரீகர்கள் சஹீதானார்கள்.

உலகையே அதிர்ச்சியடைய செய்த இச்சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற பா.ஜ.க நிர்வாகி, "மக்கா சம்பவம் சந்தோஷமான செய்தி" என்று பதிவிட்டிருந்தார். அதனை அவரது நட்பில் உள்ள சிலரும் ஆதரித்திருந்தனர்.


இந்த நிலையில் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மத ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாகவும் இருந்த இப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சில சமூக ஆர்வலர்கள் வேல்முருகனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தனர்.

இந்த நிலையில் திருமங்கலத்தைச் சேர்ந்த அஜ்மிர் அலி என்பவர் இந்த குரூர மனப்பான்மை கொண்ட பதிவு குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்தார்.


இந்த புகாரின் அடிப்படையில், வேல்முருகனை காவல்துறை கைது செய்தனர். மேலும் இவர் மீது 153,295,(505(1)(C) மற்றும் (505) (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tuesday, September 15, 2015

எங்கள் நிறுவனத்தின் மீதான குற்றசாட்டை நிரூபிக்க முடியுமா "Amma.com" சவால்.

சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்..

Nagore Lawyer என்ற முகநூல் கணக்கின் ஊடாக சகோதரர் ஒருவர் NAGORE WIFI (AMMA.COM ) நிறுவனத்தின் மீது பல குற்றசாட்டை சுமத்தியிருந்தார்.
அந்த குற்றசாட்டுகள் அனைத்தும் அபாயகரமானவை..

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தையும் அதாவது NAGORE WIFI சேவையை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் மொபைலும் , கணினியும் சேவை வழங்கும் அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். எந்த ஒரு DATAவையும் அவர்கள் திருடமுடியும். தவறாக பயன்படுத்த முடியும் என்ற குற்றசாட்டை முன்வைத்தமையால் அதை நம் தளத்தில் வெளியிட்டு சம்மந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

அதன்படி அந்த நிறுவனம் கீழ்காணும் விளக்கத்தை அளித்துள்ளது. 



மேற்கண்ட விளக்கத்தில் , இந்த குற்றசாட்டுகள் அனைத்தும் பொய்யென்றும் இது தொழில்போட்டி மற்றும் காழ்புணர்ச்சியினால் செய்யப்பட்ட பிரச்சாரம் என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் இந்த குற்றசாட்டை நிரூபித்து காண்பிக்க குற்றம் சுமத்தியவர்களால் முடியுமா ? என்றும் அந்த நிறுவனம் சவால்விட்டுள்ளது.

குற்றம் சுமத்தியவர்கள் நிரூபிக்க முன்வருவார்களா .. 

பொறுத்திருந்து பார்போம்...
=========================

இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் கண்ணியம் உயிர் உடமைகள் புனிதமானவை. ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடய இரத்தம் அவனுடைய சொத்து-செல்வங்கள் மற்ற முஸ்லிம்களுக்கு ஹராமாகும. (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 1652)
மனிதனின் கண்னியத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நகரத்தின் புனிதத்தன்மைக்கு இனையாக உவமித்திருப்பது மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது.

எனவே பிறரின் மீது வீண்பழி சுமத்தி , ஒரு முஸ்லீமின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிப்பவர்களும்...

ஒரு முஸ்லிமின்  மானத்தோடு விளையாடுபவர்களும் அல்லாஹ்வை அஞ்சிகொள்ளட்டும்.

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

Monday, September 14, 2015

Nagore wifi மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா.


சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்...

சமீபத்தில் AMMA.COM  என்ற பெயரில்  நாகூர் முழுவதும் WIFI INTERNET (Nagore wifi) சேவை  அறிமுகம் என்று விளம்பரம் செய்யப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம்.





இந்த கட்டண சேவையை பெறுவதற்கு முன்பாக அதன் தரத்தை  TRAIL செய்து பார்க்க விரும்புவோருக்கு  சில தினங்களுக்கு இலவசமாக இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு அதன்படி இலவச சேவை வழங்கப்பட்டது.


இந்நிலையில் NAGORE LAWYER என்ற முகநூல் கணக்கின் மூலம் சகோதரர் ஒருவர் அதிர்ச்சியான செய்தியை amma.com நிறுவனரின் புகைப்படத்தை போட்டு வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தி இது தான் : 



மேற்கண்ட செய்தியை படிக்கும்போது.. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது, 
எனினும் இந்த நிறுவனத்தின் மீதான குற்றசாட்டை அதன் நம்பகத்தன்மையை  நாம் கண்டிப்பாக ஆராய வேண்டும் அதன் பின்னரே நாம் எந்த ஒரு முடிவிற்கும் வர வேண்டும்.

ஏனெனில் இந்த நிறுவனம் இப்போது தான் ஆரம்பிக்கப்பட்டு வளர்ந்து வருகிறது ஆகையால் இது காழ்புணர்ச்சியினால் ஏற்படுத்தப்பட்ட குற்றசாட்டாக கூட இருக்கலாம்.. அல்லது அனுமானங்களாக கூட இருக்கலாம்.

தொலைத்தொடர்பு துறையில் இது போன்ற சந்தேகங்கள் வருவது இயல்பு தான் ஏனெனில் இதுபோன்ற இணையவழி திருட்டுகள் நடப்பதற்கு பல சாத்தியகூறுகள் இருக்கவே செய்கிறது.

அதே சமயம் இந்த குற்றசாட்டை முழுவதுமாக அலட்சியம் செய்ய முடியாது. காரணம் இது ஓவ்வொருவரின் அந்தரங்கத்தையும் எட்டிபார்க்கும் பாதகமான செயல்... ஆகவே நாம் என்ன சொல்கிறோம் என்றால்...

உடனடியாக அம்மா.காம் நிறுவனர் இந்த குற்றசாட்டிற்கு முறையான விளக்கத்தை அளிக்க வேண்டும். உங்கள் நிறுவனத்திற்கு எதிராக முகநூலில் செய்தி வெளியிடபட்டுள்ளது. வெளியிடப்பட்ட குற்றசாட்டு பொய்யாக , இட்டுகட்டபட்டதாக கூட இருக்கலாம் ஆனால் குற்றசாட்டப்பட்ட விஷயம் ஒவ்வொரு தனிநபர் சம்மந்தபட்டது  ஆகையால் நீங்கள் பகிரங்கமாக குற்றச்சாட்டிற்கான மறுப்பை வெளியிட வேண்டும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் விளக்கமளிக்க வேண்டும் அதுவே இந்த குற்றச்சாட்டிற்கு நீங்கள் வைக்கும் முற்றுபுள்ளியாக அமையும் என்ற கேட்டுகொள்கிறோம்.

உங்கள் மறுப்பை  nagoreflash@ymail.com என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்பினால், அதை நாகூர் பிளாஷ் தளத்திலும் உங்களின் மறுப்பாக வெளியிடுகிறோம்.

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
Related Posts Plugin for WordPress, Blogger...