(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, November 6, 2013

நாகூர் கௌதியா மேல்நிலைபள்ளி ஆசிரியர் கைது...!

நாகூரில் பாரம்பரியமிக்க பள்ளியான கெளதியா மேல்நிலைப்பள்ளி நம்மில் பலருக்கு அடிப்படை கல்வியை போதித்த பள்ளிக்கூடம்  .. 

பல நல்ல மக்களை உருவாகிய இந்த பள்ளி இன்று சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு தற்போது அசிங்கபட்டு நிற்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகூர் கௌதிய்யா மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிவந்த நாகப்பட்டின மாவட்டம் விழுந்தமாவடியை சேர்ந்த செல்வராஜ் என்ற கணக்கு ஆசிரியார் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தற்போது அம்பலமாகி ஊர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட செல்வராஜ் 

கடந்த சில நாட்களாக இந்த செல்வராஜ் என்பவன் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதை எப்படி வெளியில் சொல்வது என்று தெரியாமல் , பொருத்துகொள்ளவும் முடியாமல் பள்ளிகூடம் செல்லமாட்டேன் என்று கூறியுள்ளது அந்த மாணவி... 

ஏன் என்று பெற்றோர்கள் விசாரித்தபோது தான்.. அந்த மாணவி நடந்த கொடுமையை விவரித்துள்ளது. ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ,அக்கம்பக்கதினருடன் சென்று விசாரிக்கும் போது பள்ளி தலைமை எடுத்த எடுப்பிலையே சமாதான முயற்சியில் இறங்கியதால் சமந்தபட்ட ஆசிரியர் வெளியில் இழுத்துவந்து அடித்து உதைக்கப்பட்டான் பிறகு கொன்றுவிட போகிறார்கள் என்ற பயத்தில் அந்த ஆசிரியரை HEAD MASTER ரூமில் வைத்து பூட்டினார்கள்.

அதன் பிறகு இந்த பிரச்சனை ஊர் மக்கள் அனைவருக்கும் தெரியவர ... நிலைமை மேலும் மோசமானது..
அனைத்து மீடியாக்களும் படமெடுக்க தொடங்கின...
சிலர் அந்த ஆசிரியரை மேலும் அடிக்க ஆவேசபட...
சிலர் நிர்வாகத்தின் அலட்சிய போக்கை எதிர்த்து குரல் கொடுக்க, 
சிலர் தலைமை ஆசிரியரோடு வாக்குவாதத்தில் ஈடுபட என சூழ்நிலை மோசமானதால் .. 

பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்து காவல்துறையை வரவழைத்தது..
முடிவு தெரியாமல் அந்த ஆசிரியரை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்ல கூடாது என்று மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சுமார் 3,4மணி நேரம் பிரச்சனை நீடித்தது..
பலகட்ட பேச்சுவார்த்தைகள் HEADMASTER ரூமில் நடந்தது அப்டி என்ன தான் பேசினார்களோ தெரியாது.

இறுதியில் கூடுதல் காவல்துறை வரவழைக்கப்பட்டு அந்த ஆசிரியரை கைது செய்வதாக சொல்லி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள்.

15நாள் காவலில் அவனை வைப்பதாகவும் , மேற்கொண்டு விசாரிப்பதாகவும் .. சம்மந்தபட்ட மாணவியிடமும் விசாரிக்கபடும் என்று காவல்துறை கூறியுள்ளது.



இந்த சம்பவம் பல விஷயங்களை நமக்கு வெளிக்கொண்டு வந்துள்ளது.         பல உண்மைகள் தற்போது வெளியே கசியத்தொடங்கியுள்ளன.

அதாவது இது போன்ற பாலியல் ரீதியான சீண்டல்கள்  சமீபமாக தொடர்ச்சியாக கௌதியா மேல்நிலைபள்ளியில் நடப்பதாகவும் , முன்னரே இது போன்ற சம்பவம் நிர்வாகத்தின் கவனத்திற்கு பெற்றோர்கள் கொண்டு சென்றதாகவும் அதை நிர்வாகம் பொருட்படுத்தவில்லை என்பது  பரவலாக பெற்றோர்களின் மனக்குமுறலாக இருந்தது.

பெண் பிள்ளையாக இருப்பதால் பகிரங்கமாக சொல்ல தயங்கி பல மாணவிகளும் , பெற்றோர்களும் இது போன்ற நிகழ்வுகளை பெரிதுபடுத்தாமல் இருந்து வந்துள்ளார்கள்.

தற்போது இந்த விசயம் அம்பலமானதுடன் தான் பல பெற்றோர்கள் இது பற்றி புகார் கொடுக்க முன்வந்துள்ளார்கள். சில மாணவிகளின்  பெற்றோர்கள் இது போன்ற கொடுமையால்  T.C வாங்கி சென்றது   தெரியவந்துள்ளது.
பாதிக்கபட்ட பெற்றோர்களிடம் விசாரித்தால் இன்னும் சில விஷயங்கள் வெளிவரலாம்.

தற்போது கௌதியா மேல்நிலை பள்ளியில் 10 வகுப்பு வரை தான் மாணவர்கள் படிக்க முடியும் . மாணவிகளுக்கு மட்டுமே 11ம்,12ம் வகுப்புகள் நடத்தபடுகின்றன என்பது குறிப்பிடதக்கது.

இந்த பள்ளிகூட நிர்வாகம் முறையாக செயல்பட வில்லை என்பது தெளிவாக தெரிகிறது .. இந்த பள்ளிகூட நிர்வாகத்தை , ஆசிரியர்களை , முழுவதுமாக மாற்றி அமைப்பதோடு..

மாணவ மாணவிகளுக்கு என தனி தனி வகுப்பரையும் .. மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களை நியமிப்பதும் தற்காலத்திற்கு தேவையாக ஒன்று. மேலும் பெண்கள் அதிகமாக படிக்கும் ஒரு பள்ளிகூடத்தில் ஏன் பெண் தலைமை ஆசிரியரை நியமிக்ககூடாது..?

இது போல் மீண்டும் ஓர் நிகழ்வு நடக்காதவண்ணம் ஓர் முடிவை நிர்வாகம் எடுக்குமா ? ..என்ன செய்ய போகிறது தற்போதைய பள்ளி நிர்வாகம்..?

நிர்வாகத்தில் இருப்பவர்கள் தன்னுடைய  பிள்ளைக்கு இவ்வாறு நடந்தால் என்ன செய்வார்களோ ... அதை செய்யட்டும் ....

பொருளாதார கஷ்டத்தில் தான் இந்த பள்ளியில் அதிகமான மாணவ , மாணவிகள் படிக்கிறார்கள் .. ஊருக்குள்ளே பாதுகாப்பாக இருக்கும் என்று தானே பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள்...
அதிலும் இந்த கொடுமைகள் நடந்தால் ... இதை காரணம் காட்டி பெண்களுக்கு படிக்கும் உரிமையை பெற்றோர்கள் மறுத்தால் ... மீண்டும் நம் பெண்கள் சமூகம் கைனாட்டாக உருவாகிகொண்டு தான் இருப்பார்கள் ...

இதற்க்கு நல்ல தீர்வை நாம் எட்டவேண்டும் ...

சமூகநலவிரும்பிகள் அனைவரும் ஆக்கபூர்வமாக செயல்பட  முன்வர வேண்டும்.  அதைவிடுத்து வீண் கூச்சல் , குழப்பங்களை சிலர் ஏற்படுத்தி சந்தோசபடுகிறார்கள் .. அவர்களை மக்கள் இனம்கண்டு புறம்தள்ள வேண்டும்.

இன்ஷாலலாஹ் அல்லாஹ் இந்த பள்ளிகூடத்திற்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திதர வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...