(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, December 31, 2012

உண்மையை சொன்னால் தேசதுரோகியா ?


பிரபல சமூக ஆர்வலரும் பத்திரிக்கை பிரமுகருமாகிய அருந்ததிராய் டெல்லி நடந்த  கற்பழிப்பு பற்றி கூறிய சில கருத்துக்களை மிகைப்படுத்தி சில ஊடகங்கள் அவர்மீது அவதூறுகளை பரப்பிவருகிறது...







அவர்கூறிய வார்த்தைகள்...

"கற்பழிப்பு எங்கு நடந்தாலும் அவை கண்டிக்கப்படவேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் எல்லாவிஷயங்களையும் போன்று இந்த விஷயத்திலும் நம்நாட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது.


குஜராத்தில் பலநூறு முஸ்லீம் பெண்களின் கற்புகள் காவிகொடூரர்களால் சூரயடபட்டப்போது இந்த ஊடகங்கள் ஏன் அமைதிகாத்தன?

காஷ்மீரில் அபலைபெண்கள் இந்தியரானுவத்தினரால் சீரழிக்கப்படும்போது அவர்களை தூக்கிலடவேண்டும் என்று கோரிக்கைவைக்கபடாதது ஏன்?

சட்டீஸ்கரில் ஆதிவாசிபெண் சோனி சோரிபோலீசாரால் கற்பழிக்கப்பட்டு அவளுடைய மர்மஉருப்பு கற்களால் சேதபடுத்தபட்டபோது ஏன் இவர்கள் வாயை திறக்கவில்லை?

இப்போது டெல்லியில் கர்ப்பழிக்கபட்டப்பெண் பஸ்சிலிருந்து நிர்வாணமாக தூக்கிவீசபட்டப்போது நூற்றுகனக்கானோர் வேடிக்கைபார்த்து கொண்டிருந்தனரே  தவிர அவளுக்கு தன்னுடைய சட்டையை கழட்டிதரக்கூட யாரும் முன்வரவில்லை..

கற்ப்பழிக்கபட்டது எந்த ஜாதியாகவும்,மதமாகவும் இருந்தாலும் பாகுபாடில்லாமல் அதனை எதிர்க்கவேண்டும் இதுவே என்னுடைய கோரிக்கை என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாக முஸ்லீம்களுக்கும்,ஆதிவாசிகளுக்கும்,தலித்துகளுக்கும் ஆதரவாக கருத்து தெரிவுக்கும் அருந்ததிராய்க்கு எதிராக
அவரை தேசதுரோகி எனவும் அவரை தாக்கவேண்டும் என்றும் ஏசியாநெட் போன்ற காவிஊடகங்கள் மக்களை உசுப்பெத்திவருகின்றன.



இன்று யாரேனும் நியாயத்திற்கு குரல்கொடுத்தாலோ , முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தாலோ அவர்கள் ஊடகங்களில் தேசத்தின் துரோகியாகவே சித்தரிக்கபடுவது வழக்கமாகிவிட்டது.

Friday, December 21, 2012

குஜராத் எதில் சாதித்துதிருக்கின்றது தெரியுமா? மோடியின் வண்டவாளத் தண்டவாளத்தில் ஏற்றும் கட்சு!


இந்தியாவிலேயே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மாநிலம் குஜராத். அதுவும் மோடியின் தலைமையில்.மோடியை அப்படியே தூக்கி பிரதமர் பதவியில்அமர்த்திவிட்டால் இந்தியா ஒரேயடியாக முன்னேறிவிடும் என்றொரு மாயை உருவாக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து குஜராத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு உண்மையை உடைத்து இருக்கிறார் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவர் மார்கண்டேய கட்ஜு.
அவர் தனது அறிக்கையில் குறிப்பிடுகையில்,
குஜராத்தில் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கிறதா அல்லது இல்லையா என்பதனை நாம் பார்க்க வேண்டும். குஜராத் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட மக்களின் வாழ்க்கை தரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது. நிலைமை இவ்வாறிருக்க, “குஜராத் மிளிர்கிறது” என்று மக்கள் மத்தியில் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி அதில் மோடி வெற்றி பெற்று விட்டார்.
2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தவிர்த்து வேறு என்ன சாதனை புரிந்து உள்ளார். பட்டியல் இதோ,.
குஜராத்தில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை 48%. இது மிகவும் ஏழ்மையான சோமாலியா நாட்டை விட அதிகம். சோமாலியாவில் வெறும் 33% மட்டுமே. இது குறித்து மோடி கருத்து தெரிவிக்கையில், குஜராத்தில் உள்ள பெண்கள் அனைவரும் உடல் குண்டாகி விடும் என்ற அச்சத்தில் பால் சாப்பிடுவதில்லை . எனவே தான் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என கூறுகிறார். இவையனைத்தும் முட்டாள்தனமான வாதமாகும். குஜராத் குழந்தைகள் தொழிற்சாலைகள், சாலைகள் மின்சாரத்தையா உண்ண முடியும்?
குஜராத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 48 ஆக உள்ளது. இந்த மோசமான பட்டியலில் குஜராத் இந்திய அளவில் 10ஆவது இடத்தில் உள்ளது.
குஜராத்தில் வயது வந்த ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் உடல் நிறை குறியீட்டு எண்(BMI) 18.5 க்கு கீழே உள்ளனர். இதில் குஜராத் இந்திய அளவில் 7வது இடம் பெற்றுள்ளது.
பேறுகால இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களை குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது.

குஜராத்தின் கல்வி, பொது சுகாதாரம், வருவாய் இந்தியாவின் மற்ற 8 மாநிலங்களை விட பின் தங்கி உள்ளது. அதாவது குஜராத் 9ஆவது இடத்தில உள்ளது.
குஜராத்தின் கிராமப்புறத்தில் 51% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதில் 57% எஸ்.சி, 49% எஸ்.டி , மற்றும் 42% பொதுப்பிரிவினர் உள்ளனர்.
மோடி குஜராத்தில், பெரும் தொழிற்சாலைகளுக்கு மலிவான மின்சாரம் மற்றும் நிலங்களை தந்ததில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குஜராத்தில் அதிகமான வறுமை, மிகவும் குறைந்த அளவு மனித மேம்பாடு இவையே மிகைத்து நிற்கின்றன. அரசுக்கு நேரடி வருமானம் பெறுவது குறித்த நடவடிக்கைகளில் குஜராத் அரசு அதிகமான கவனம் செலுத்துகின்றது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற அளவில் குஜராத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.
இந்த உண்மையை கண்டிப்பாக ஒருநாள் குஜராத் மக்கள் உணர்வார்கள்,
என தனது கட்டுரையிலே மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்...
குஜாரத்தில் தேர்ததில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும் அரசியல் வாதிகள் பணம் கொடுத்து ஊடகங்களில் செய்தி வெளியிட வைத்தாகவும் பிரஸ் கவுன்சில் தலைவர் கட்சு குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனக்கு புகார் வந்ததும் இதை விசாரிக்க “உண்மை கண்டறியும் தனிக் குழுவை” அமைத்து அவர்களை இது குறித்து விரிவாக விசாரித்து தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு கட்சு உத்தரவிட்டுருந்தார்.
பிரஸ் கவுன்சில் உறுப்பினர் ராஜிவ் ரஜ்சன் தலைமையில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு இது குறித்து விசாரித்து முதல் கட்ட தகவலை கடந்த 17-12-2012 அன்று கட்சு அவர்களிடம் தெரிவித்துள்ளது.
பிரஸ் கவுன்சில் தலைவர் கட்சு அவர்கள் இது குறித்து கூறுகையில்:
”பத்திரிக்கை ஊடகங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி ஊடகங்களும் இதில் பெருமளவு ஈடுபட்டுள்ளது. பணத்தை வாங்கிக் கொண்டு குஜராத் தேர்தலில் அரசியல் வாதிகளுக்கு சாதகமாக செய்தி வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது” என பிரஸ் கவுன்சில் உறுப்பினர் ராஜிவ் ரஜ்சன் என்னிடம் முதல் கட்ட அறிக்கை அளித்துள்ளார்.
எனினும் இந்த புகார் குறித்த முழுமையான அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கின்றது. அது விரைவில் என்னிடம் சமர்பிக்கப்படும், முழு அறிக்கை எனது கைக்கு வந்ததும், தேர்தல் ஆணையத்திற்கு ”பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்த அனைத்து அரசியல் வாதிகளின் கேட்டிடேட்களையும் ரத்து செய்யுமாறு தெரிவிக்கப் போகின்றேன். சமீபத்தில் உபி தேர்தலில் ரத்து செய்யப்பட்டது போன்று!
எனக் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆனையத்திற்கு தெரிவிப்பதோடு சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரிகளிடமும் இது குறித்து பேசவிருக்கின்றேன் என தற்போது கட்சு கர்ஜித்துள்ளார்.
கட்சு ஒரு பிரச்சனையை கையில் எடுத்தால் அவன் எவ்வளவோ பெரிய ஆளாக இருந்தாலும் அவனை ஆட்டம் காண வைத்து விடுவார் என்பது மஹாராஷ்ட்ர முதல்வர் சவான் விசயத்தில் அனைவரும் அறிந்ததே!
மோடி கதி என்னா ஆகப்போகின்றது எனத் தெரியவில்லை..
மோடியின் வெற்றி செல்லாது எனத் தேர்தல் ஆணையம் அறிவிக்கப் போகி்ன்றதா? பொறுத்திருந்து பார்ப்பாம்.

ஜசாகல்லாஹ் : tntj.net


Wednesday, December 5, 2012

குண்டூஸ் ஆக மாறிவரும் குட்டீஸ்: எச்சரிக்கை ரிப்போர்ட்


ஓடியாடி விளையாடாமல் டிவி, கம்யூட்டர் என அடைந்து கிடைப்பதாலும், அதிக அளவு பாஸ்ட் ஃபுட் உணவுகளை உட்கொள்வதாலும் 20 சதவிகித குழந்தைகள் உடல்பருமன் நோய்க்கு ஆளாகிவருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சிறுவயதிலேயே இதயநோய், நீரிழிவு நோய்க்கு ஆளாக நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
போர்ட்டிஸ் மருத்துவமனையின் மெட்டபாலிக் நோய்கள் மற்றும் எண்டோகிரைனாலஜி துறை சார்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.
இந்தியாவில் சராசரியாக 15 முதல் 21 சதவீத குழந்தைகள் குண்டாக உள்ளனர். ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் ஐட்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதாலும் உடலுக்கு பயிற்சி அளிக்காமல் அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதாலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஓடி விளையாடு பாப்பா
நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளில் 68% பேர் ஓடியாடி விளையாடுவதில்லை. வெளியே விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல், கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம் என்று அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கின்றனர்.
பதின்பருவ சிறுவர்களில் 9 சதவீதத்தினர் தொப்பையுடன் இருக்கின்றனர். இளம் வயதில் தொப்பை விழுவது இன்சுலின் சுரப்பை நேரடியாக பாதித்து சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.


ஜங்க் ஃபுட் கலாச்சாரம்
உணவு பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகள்தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம். இது பெரியவர்களை மட்டுமின்றி தற்போது சிறுவர்களையும் அதிகம் பாதிக்கிறது. உடலுக்கு ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை விடுத்து நகர்ப்புற குழந்தைகள் கொழுப்பு சத்து. இனிப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள், ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் நிறைய சாப்பிடுகின்றனர். இதுவே உடல்பருமனுக்கு காரணமாகிறது.
இதனால் சிறுவயதிலேயே இவர்களுக்கு நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். தவிர இன்னும் 20 ஆண்டுகளில் சராசரி ஆயுள்காலம் குறையும் அபாயமும் இருக்கிறது என்று ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
சத்தான உணவு கொடுங்களேன்
கொழு கொழுவென்று என்று இருக்கும் குழந்தைதான் ஆரோக்கியம் என்று கருதாமல் சத்தான உணவுகளை கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதோடு அவர்களுக்கு உடற்பயிற்சி செய்யவும் கற்றுக்கொடுங்களேன். ஆரோக்கியமான எதிர்காலத்தை இன்ஷாஅல்லாஹ் நம் குழந்தைகளுக்கு நாம் அமைத்து கொடுக்கலாம்.
( குறிப்பு : பிள்ளைகளுக்கு சொல்லும் முன்பு நாம் இதை பின்பற்ற வேண்டும் )
நன்றி: தட்ஸ்தமிழ் 

Saturday, December 1, 2012

கடமையை மட்டும் அல்ல கயமையையும் செய்யும் சட்டம்..!!

அஜ்மல் கசாப்பை தூக்கில் போட்டு விட்டார்கள்


அப்துல் நாசர் மதானியை சிறையில் பூட்டி விட்டார்கள்


அல் உம்மா பாஷாவுக்கு 'ஆயுள்' விதித்து விட்டார்கள்


அதிரை அன்சாரியிடம் 'அவர்கள் பாணியில்' வாக்குமூலம் பெற்று விட்டார்கள்...


அயோத்தியில் பாபர் மஸ்ஜி
தை இடித்தவர்கள் நாடாளுமன்றத்தில்..


குஜராத்தில் பல்லாயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்தவர்கள் 
சட்டமன்றத்தில்..

மும்பையில் வெறியாட்டம்  போட்ட தாக்கரேயின் உடல் ராணுவ மரியாதையில்...

சென்னையில் கூடிய ஆர்.எஸ்.எஸ். செயற்குழு உயர்பாதுகாப்பு வளையத்தில்...







காந்தியையே கொன்றாலும் அவர்கள் சுதந்திரமாக இயங்க அனுமதி உண்டு


குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டாலும் அவர்கள் கூடிப்பேச பாதுகாப்பு உண்டு


கொலைக் குற்றமே செய்தாலும் சங்கராச்சாரிக்கு ஜாமீன் உண்டு


காவிகளை எதிர்த்தால் செய்யாத குற்றத்துக்கு தண்டனை உண்டு...




எல்லோருக்கும் 'கடமை'யைச் செய்கிற சட்டம்

எங்களுக்கு மட்டும் 'கயமை'யைச் செய்கிறது!



நன்றி : ஆளூர் ஷாநவாஸ்
Related Posts Plugin for WordPress, Blogger...